பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை

பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களின் சேர்க்கை விதிமுறைகளும் மற்றும் அதன் தொடர்புள்ள இணையங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஜவஹர் நவோதயாவில்(JNVST) ஆறாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு

சேர்க்கை விதிமுறைகள்

சிபிஎஸ்இ நடத்தும் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மூலம் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது, ஆறாம் வகுப்பு முதல் குழந்தைகள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கும் பிராந்திய அளவிலான தேர்வு மற்றும் முந்தைய வகுப்பில் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். நவோதயா பள்ளிகளில் கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. கிராமப்புற குழந்தைகளுக்காக 75% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் குறைந்தது 33% இடங்கள் பெண்குழந்தைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி குழந்தைகளுக்கு முறையே 15% மற்றும் 7.5% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளிகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களைப் பெற, சேர்க்கை விதிமுறைகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய இணையதளம்: http://navodaya.gov.in

கேந்திரிய வித்யாலயாக்கள்

கேந்திரிய வித்யாலயாக்கள் 2007-08 ஆம் வருட கல்வியாண்டு விதிகளின்படி கேந்தரிய வித்யாலயாக்களில் மாணவர்கள் சேர்வதற்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சேர்க்கை விதிமுறைகள்

பிப்ரவரி முதல் வாரத்தில் அந்தந்தப் பிராந்திய அலுவலகங்கள் அங்கு வெளிவரும் பத்திரிகைகளில் சேர்க்கை விவரங்கள், பதிவு செய்தல் குறித்தத் தொகுப்பை விளம்பரமாக வெளியிடும். கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்வதற்காக மாணவர்கள் பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இந்த விளம்பரம் கேந்திரிய வித்தியாலயாக்களில் சேர்க்கை மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்தே உள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒருசில முன்னுரிமைகள் மட்டுமே அதாவது, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் அந்தந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் இடங்கள் கிடைக்கும் என்பதும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி குழந்தைகளுக்கு மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

மத்தியக் கல்வி அமைப்பு

மத்தியக் கல்வி அமைப்பு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தி நாட்டின் மிகச்சிறந்த பள்ளிகளுக்கு இணையாக இந்தப் பள்ளிகளை உயர்த்த முயன்றுவருகிறது. பிராஜெட்டுகள் மற்றும் ஆய்வுத் திட்டங்கள் போன்ற கல்வித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அறிவு தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வழிவகுக்கிறது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய இணையதளம்: http://www.centralacademyschools.org/index.php

ஆன்லைன் பாடப் புத்தகங்கள்

2.93333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top