பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / உடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்

உடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் உள்ளார்ந்த விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் நோக்குடன் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குடியரசு தின / பாரதியார் தின குழுப் போட்டிகள், தடகளப் போட்டிகள் குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் மண்டல அளவிலான போட்டிகள் வரையும் மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவிலான போட்டிகள் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

குடியரசு தின / பாரதியார் தின குழுப் போட்டிகளில் கால்பந்து, வளைகோல் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கையுந்துப் பந்து, கோ-கோ, கபடி, பூப்பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ், எறிபந்து ஆகியனவும் மற்றும் புதிய விளையாட்டுகளில் ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, ஜூடோ, வாள்சண்டை, கேரம், வளையப்பந்து, கடற்கரைக் கையுந்துப் பந்து, ஸ்குவாஷ், சைக்கிளிங், நீச்சல் ஆகிய போட்டிகள் மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் வரை நடத்தப்படுகிறது. மேலும், சதுரங்கப் போட்டியானது தனிப்பட்ட முறையில் குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை நடத்தப்படுகிறது.

மேற்காண் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் முழுமையாகப் பங்கேற்கும் வண்ணம் குறுவட்டம் முதல் மண்டல அளவிலான போட்டிகள் வரை கலந்து கொள்வதற்காக, உணவுப் படியாக ரூ.125/-ம் மற்றும் உரிய பயணப்படியினைப் பள்ளி நிதியிலிருந்து பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.600/-, ரூ.400/- மற்றும் ரூ200/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. மாநில அளவிலான போட்டிகளுக்குச் செல்வதற்கான பயணப்படியும் மற்றும் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு உணவும், போட்டிகளை நடத்தும் மையங்களில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.1200/-, ரூ.800/- மற்றும் ரூ.400/- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் கால்பந்து, வளைகோல் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கையுந்துப் பந்து, கோ-கோ, கபடி, பூப்பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ், எறிபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, ஜூடோ, வாள்சண்டை, கேரம், வளையப்பந்து, கடற்கரைக் கையுந்துப் பந்து, ஸ்குவாஷ், நீச்சல், சதுரங்கம். யோகாசனம், கிரிக்கெட், ஸ்கேட்டிங், ரோப்ஸ்கிப்பிங், சாப்ட்டென்னிஸ், புட்பால் டென்னிஸ் மற்றும் சாய்வாங்டோ போன்ற போட்டிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் மாநில அளவில் தெரிவு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டிகளுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படுகின்றனர். இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க ஆகும் முழு செலவுத் தொகையான ரூ.6,870/- பள்ளிக் கல்வித் துறை மூலமாகவே வழங்கப்படுகிறது.

மேலும், இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தெரிவு செய்யப்படும் தமிழக பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு ஆகும் பங்கேற்புச் செலவினை பள்ளிக் கல்வித் துறை மூலமாகவே வழங்கப்படுகிறது.

மேற்காண் விளையாட்டுப் போட்டிகளில் கல்வி மாவட்ட / மண்டல / மாநில / தேசிய / சர்வதேச அளவில் வெற்றி பெறும் / பங்கேற்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்லூரிகளில் விளையாட்டுக்கான தனி இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

ஆதாரம் : தமிழக அரசு

2.97222222222
தா. சதிஷ்குமார் Aug 14, 2017 05:11 PM

நான் விளையாட்டில் ஆர்வம் உடையவன் நான் பல விளையாட்டு சான்றிதழை பள்ளியில் மற்றும் கல்லூரியில் மண்டல அளவில் பெற்றுள்ளேன் நான் கிராமத்து மாணவன் என்பதால் சரியான முறையில் விளையாட்டில் பயிற்று விக்க ஆசிரியர் யாரும் இல்லை எனக்கு யாராவது பயிற்று வைத்தால் என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல விளையாட்டு சான்றிதழை வாங்கி தருவேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்னை போன்ற வருக்கு வழிநடத்தவும் வாய்ப்புகளை பெற்றுத்தரவும் டீச்சர் தேவைப்படுகிறது எங்களுக்கு உதவுங்கள் *****@gmail.க ம் 99*****68

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top