பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்

குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கல்வியில் வெற்றி பெறுவது என்பது இன்று ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களும் நுழைவுத் தேர்வுகளில் பெறும் வெற்றியுமே நமக்குப் பிடித்த படிப்பையும் எதிர்காலத்தையும் அடைய வழி செய்கிறது. எனவே இன்று நல்ல மாணவர் என்ற பெயரெடுப்பதை விட மிகச் சிறந்த மாணவர் என்ற பெயர் பெறுவதே வெற்றிக்கான திறவு கோலாக மாறியுள்ளது.

மிகச் சிறந்த மாணவராவது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றல்ல. வெற்றிகளும் தோல்விகளும் கலந்த இந்த வாழ்க்கையில் சராசரி மற்றும் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத இந்த மாணவர்கள் கோபத்தாலும் விரக்தியாலும் மனச் சோர்வு நிலைக்கே தள்ளப்பட்டு விடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தேவையற்ற சிந்தனை தான். பிளஸ் 2 வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறமுடியாவிட்டாலும் இந்த பரந்த உலகம் உங்களுக்கான எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

தோல்வி என்பது முடிவல்ல. மற்றுமொரு புதிய தொடக்கம் தான் என்னும் மன நிலை தான் நமக்குத் தேவை. தோல்வியடைந்ததான மனநிலையில் குழப்பமுற்று துரித கதியில் தவறான முடிவுகளை எடுப்பதை இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதே உளவியலாளர்களின் அறிவுரை. தொழில் ரீதியான படிப்புகள் தற்போது முன்பு எப்போதும் இல்லாத அளவு வளர்ந்து வருவதோடு நல்ல ஊதியத்துடன் வளமான எதிர்காலத்தையும் இவர்களுக்குத் தர காத்துக் கொண்டிருக்கிறது. ஏமாற்றங்களும் பிரச்னைகளும் நிறைந்தது தான் வாழ்க்கை. எனவே திடமான மனதுடன் தோல்வியை மறந்து புதிய எழுச்சியுடன் வாய்ப்புகளைத் தேட ஆரம்பிக்க வேண்டும்.

நல்ல பணி எதிர்காலத்துக்கான திட்டமிடல் என்பது பள்ளிப் பருவம் முதலே தொடங்குகிறது. நம்மில் பலரும் இதனை காலம் கடந்தே உணரும் நிலையில் இருக்கிறோம். எனினும் தற்போது உலகளாவிய வேலை வாய்ப்புச் சந்தை மிகச் சிறந்த பணி வாய்ப்புகளை சேவை, தொழில் சார்ந்த துறை, திறன் அடிப்படையிலான பணி, கிரியேடிவ் துறை போன்ற பிரிவுகளில் கொண்டுள்ளது. குறைந்த மற்றும் சராசரி மதிப்பெண் பெற்றவர் கூட தற்போது எடுக்கும் சரியான முடிவின் மூலமாக கவர்ச்சிகரமான ஊதியம் தரும் நல்ல பணிகளைப் பெற முடியும் என்பதே நம் முன் நிற்கும் நிஜமாகும்.

ஏவியேஷன், ஷிப்பிங், டெலிகாம், மீடியா, என்.ஜி.ஓ., பி.பி.ஓ., ஐ.டி., இன்சூரன்ஸ், பிசியோதெரபி, ஆப்டோமெட்ரி, எக்ஸ் ரே டெக்னீசியன், செரிகல்ச்சர், பால்வள மேலாண்மை, விளையாட்டு மேலாண்மை, ஹார்ட்டிகல்ச்சர் போன்ற துறைகள் இவர்களுக்கானதே. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளாக வழங்கப்படும் ஒகேஷனல் பயிற்சிகளான டிராப்ட்ஸ்மேன்ஷிப், டாக்சேஷன் டி.டி.பி., லேபர் பிராக்டிஸ், கம்பெனி செகரடரி போன்றவை வளமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவை. கிரியேடிவ் துறைகளில் ஈடுபட மதிப்பெண்களை விட தனிநபரின் ஊக்க சிந்தனையே அடிப்படைத் தேவையாக உள்ளது.

உண்மையில் பல்வேறு துறைகளில் பணி புரியும் போது உயர்ந்த மதிப்பெண் பெற்றிருப்பதை விட சரியான நடத்தை, ஊக்க சக்தி, புதியவற்றைக் கற்கும் ஆர்வம், கடின உழைப்பு போன்றவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பள்ளிப் படிப்பு லாஜிக் ரீசனிங், பொது அறிவு போன்றவற்றில் குறைந்த கவனமே செலுத்தப்படுகிறது. இதனால் தான் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறைந்த மதிப்பெண்களையும் பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிக மதிப்பெண்களையும் பெறுவதைக் காண முடிகிறது.

வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம் தான். இடையில் ஏற்படும் தோல்விகளையும் சறுக்கல்களையும் சரியாகப் புரிந்து கொண்டு திருத்திக் கொண்டால் இழந்த இலக்கை விட உயர்ந்த சிகரங்களைத் தொட்டுவிட முடியும். எனவே நமது மனம் தான் அனைத்துக்கும் காரணம் என்று அறிந்து புதிய உத்வேகத்துடன் உங்களது பயணத்தைத் தொடங்குங்கள். உலகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

தாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு

2.61111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top