பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்!
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்!

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய உதவும் அடிப்படை விபரங்களைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலை

பள்ளிப் படிப்பின்போதே தங்களது இலக்கை நிர்ணயிக்கும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவருவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், எதிர்காலம் குறித்த எந்தவித எண்ணமும் இல்லாமல், என்னென்ன படிப்புகள் உள்ளன? எந்த படிப்பு தனக்கு உகந்தது? எந்த கல்லூரியை தேர்வு செய்வது? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் காண முடியாமல் தவிக்கும் மாணவர்களையும் காணமுடிகிறது. அத்தகைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராகவும் இருக்கலாம்.

பெரும்பாலும், பாடப்பிரிவை விட சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவே மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரிதும் திணறுகின்றனர். மதிப்பெண் மற்றும் தேவையைப் பொறுத்து, ஒரு கல்லூரியை தேர்வு செய்தாலும், சில முக்கிய அம்சங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

அங்கீகாரம்

பொதுவாக, கல்வி நிறுவனம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டுக்கும் தனித்தனியே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அது குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கவும் வேண்டும். கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு அங்கீகாரம் பெற்று அது சார்ந்த வேறு சில படிப்புகளையும் உரிய அங்கீகாரம் பெறாமல் வழங்க வாய்ப்பு உண்டு. எனவே, ஒரு கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்யும் முன்பாக மத்திய, மாநில அரசு மற்றும் அமைப்புகளால் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.

உதாரணமாக, தொழில்நுட்பப் படிப்பு எனில் ஏ.ஐ.சி.டி.இ., மருத்துவப் படிப்பு எனில் இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவம் எனில் இந்திய பல்மருத்துவக் கவுன்சில், கலை மற்றும் அறிவியல் படிப்பு எனில் உரிய பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள்

சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது நீங்கள் தேர்வு செய்யவிரும்பும் கல்லூரி மற்றும் துறையில், பிஎச்.டி., அல்லது எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை எத்தனை ஆசிரியர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவசியம் பார்க்க வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள்

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதிகள் போன்ற வசதிகளும் ஒரு கல்லூரியின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.

வேலைவாய்ப்பு

இன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோரும், மாணவர்களும் வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் கல்லூரிகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கல்லூரிகள் தங்களது பெருமைக்காக பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அந்நிறுவனங்கள் எப்போதோ, பெயரளவில் அங்கு வளாக நேர்காணலை நடத்தி இருக்கலாம்.

எனவே, ஆண்டுதோறும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்வது உகந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம். உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்கலாம்.

பாடத்திட்டங்கள்

ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். தொழில் நிறுவனங்களுடனான உறவு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், பிற திறன் வளர்ப்பு சார்ந்த பயிற்சி திட்டங்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்ற அம்சங்களையும் அறிந்து கொள்வது சிறந்தது.

இந்த அம்சங்கள் தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல். இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, வருங்காலத்தை வசந்தமாக்க வாழ்த்துக்கள்!

தனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்

வெளிநாடு மற்றும் உள்நாட்டிலுள்ள சில கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும், வேலை வாய்ப்பை அள்ளி வழங்கும் சில பயனுள்ள படிப்புகளைப் பற்றி இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்

ஸ்டாக் மார்க்கெட் துறையின் அம்சங்களை தனிமனிதர்களுக்கு கற்பிக்க மற்றும் அத்துறையில் அவர்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள, EIFS (Edge Institute of Financial Studies) கல்வி நிறுவனம், ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Investing in Stock Market என்ற பெயரிலான இந்தப் படிப்பு, செயல்படுத்தும் திறன், லாபம், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளின் விதிமுறைகள் ஆகியவைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும்.

இந்தப் படிப்பின் மூலமாக, வணிகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையில் புதிதாக நுழைவோர், பைனான்ஸ் மாணவர்கள் அல்லது போர்ட்போலியோ மேலாளர்கள் ஆகியோர் அனைவரும் சமஅளவில் பயன்பெறுவார்கள்.

இப்படிப்பின் காலஅளவு

மொத்தம் 32 மணிநேரங்களைக் கொண்டது இப்படிப்பின் காலஅளவு. ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படிப்பு நடத்தப்படும்.

தகுதி

ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக ஆர்வம்கொண்ட, அதேசமயம், 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட அனைவரும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

விரிவான விபரங்களுக்கு www.eifs.in

ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பு

நியூயார்க் பல்கலையும், பாரிஸ் நகரிலுள்ள HEC கல்வி நிறுவனமும், ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பை வழங்குகின்றன.

சில தேர்வுசெய்யப்பட்ட NGOs இணைந்து செயல்படுவதன் மூலமாகவும், லாபநோக்கமற்ற சட்ட ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும், நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஐரோப்பிய யூனியன் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள்.

பொது கலந்துரையாடல், ஆவணங்களைப் பெறுதல், ஐரோப்பிய குடிமகன்களின் முன்முயற்சிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலமாக அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட அறிவை, இப்படிப்பின் மூலம் பெரியளவில் வளர்த்துகொள்வதே இப்படிப்பின் நோக்கம்.

என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக, ஐரோப்பிய யூனியன் கலந்துரையாடல்கள் மற்றும் வரைவு சமர்ப்பித்தலில் பங்கேற்பார்கள்.

தகுதி

நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகிய கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் அனைவரும் இப்படிப்பை மேற்கொள்ள தகுதியுடையவர்கள்.

வலைதளம் - www.hec.edu.

மும்பை பல்கலையில் தோட்டக்கலை படிப்பு

மும்பை பல்கலையின் வெளிப்புற படிப்புகளுக்கான மையம், 3 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்டனிங், நர்சரி மற்றும் பண்ணை மேலாண்மை ஆகிய படிப்புகள் மராட்டிய மொழியிலும், சிறிய மற்றும் அலங்கார தோட்டக் கலைக்காக, கார்டன் கிராப்ட் படிப்பும் அவற்றில் அடக்கம். இந்த மையம், அலங்கார மீன் வளர்ப்பு துறையில் ஒரு புதிய படிப்பையும் வழங்குகிறது.

இப்படிப்பின் மூலம், ஒரு மாணவர், Aquarium அமைத்தல், அதைப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், நீரில் வளரும் தாவரங்கள் மற்றும் அலங்கார மீன்களை தேர்வு செய்வதற்கும், கடல்சார் மீன்வளர்ப்பை உருவாக்கி பராமரிக்கவும், மீன் உணவு தயாரிக்கவும் மற்றும் பல்வேறான மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.

காலஅளவு

மொத்தம் 6 மாதங்கள் இப்படிப்பிற்கான காலஅளவாகும்.

தகுதி

இப்படிப்பை மேற்கொள்ள, வயது வரம்பு அல்லது கல்வித் தகுதி என்று எதுவுமில்லை.

விரிவான விபரங்களுக்கு www.extramural.org.

லவ்லி புரபஷனல் பல்கலைகழகத்தில், உணவு தொழில்நுட்ப படிப்பு

உணவு அறிவியலைப் பயன்படுத்தி, உணவு செயல்முறை, உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி, இப்படிப்பு, மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.

உணவின், ரசாயன, பெளதீக மற்றும் மைக்ரோபயாலஜிகல் அம்சங்கள் மற்றும் அது எப்படி புராசஸ் செய்யப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது, pack செய்யப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுகிறது ஆகியவைப் பற்றியும் கற்றுக் கொள்ளலாம்.

உணவு தொழில்நுட்பம் அல்லது food processing படிப்பை முடித்தவர்கள், உணவு தொடர்பான தொழில் துறையில் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெற முடியும். உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள், உணவகங்கள், குளிர்பான தொழிற்சாலைகள், தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், ரைஸ் மில்ஸ், உற்பத்தி தொழிற்கூடங்கள், ஆல்கஹால் பானங்கள் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

மேலும், பேக்கேஜிங் டெக்னாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி மற்றும் அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளிலும் மேற்படிப்பை மேற்கொள்ள முடியும்.

காலஅளவு

செமஸ்டர் சிஸ்டம் முறையில், மொத்தம் 2 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது இப்படிப்பு.

தகுதி

லவ்லி புரபஷனல் பல்கலை, உணவுத் தொழில்நுட்ப படிப்பை, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் ஆகியோருக்கு வழங்குகிறது.

விரிவான விபரங்களுக்கு www.lpu.in.

3.01754385965
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top