பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளியின் செயல்பாடுகள்

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றிய தகவல்.

பாட இணைச் செயல்பாடுல்கள்

01 விழுமக் கல்வி நீதிக்கதை, நீதிபோதனை, நன்னெறிக் கதை, தேசியச் சின்னங்கள், தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, சமத்துவ சமுதாயம்
02 உடல்நலம் மற்றும் சுகாதாரக் கல்வி எளிய மற்றும் சத்தான உணவுகள், தொற்று நோய்கள், தன் சுத்தம் அறிதல், உடற் பயிற்சியும் ஆரோக்கியமும்.
03 காலைக் கல்வி நாட்டுப் புறக் கலைகளைப் பற்றிக் கூறுதல், இயல் இசை நாடகத்தைப் பற்றிக் கூறுதல்
04 பணி அணுபவம் பொம்மை செய்தல், பூ வேலைப்பாடு, மணிவேலைப்பாடு, காகித வேலைப்பாடு, (ஒரிகமி) வாழ்க்கைக் கல்வி, தன்னைப் பிறர்நிலையில் வைத்துப் பார்த்தல், சிக்கலுக்குத் தீர்வு காணுதல், சுமுகமான நட்புறவு, கூர் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், மன அழுத்தத்தைத் தவிர்த்தல், தன்னை அறிதல்.
05 சுற்றுச்சூழல் கல்வி மாசு கட்டுப்படுத்துதல் (நிலம், நீர், காற்று) மரங்கள் வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தலின் அவசியம், பிளாஸ்டிக் பயன்படுத்துதலைத் தவிர்த்தல், ஓசோன் மண்டலத்தைப் பாதுகாத்தல், நன்னீரின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
06 முதலுதவி மற்றும் தற்காப்பு விதிகள் முதலுதவி, சாலைவிதிகள் அறிதல், பேரிடர் மேலாண்மை, வெள்ள்ச்ம், தீ, நிலநடுக்கம், விபத்து போன்ற காலங்க்ளில் தற்காத்துக் கொள்ளுதல் பற்றி அறிதல், அவசரக் காலத் தொடர்பு எண்களை அறிதல்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்

  1. வாய்பாட்டைச் சொல்லுதல்
  2. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை, சொல்வதை எழுதச் சொல்லுதல்.
  3. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்கள் சொல்வதை எழுதச் சொல்லுதல், வாக்கியமாக அமைத்தல்.
  4. 9ஆம் வகுப்பிற்குத் தமிழ், ஆங்கிலத்தில் 2 நிமிடம் பொது அறிவு சம்பந்தமாகப் (பிழையின்றி) பேசுதல், பேச்சு மற்றும் குழு உரையாடல்.

பள்ளி இறுதி மணி ஒலித்த பின்பு நாட்டுப்பண் பாடப்பட வேண்டும்.

வார இறுதி நாள் செயல்பாடுகள்

ஒவ்வொரு வாரமும் வார இறுதி வேலை நாளான வெள்ளிக் கிழமையன்று இறுதி ஒரு மணி நேரம் கீழ்க்கணட செயல்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் பன்முகத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழிகள் கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகளை ஒவ்வொரு மாணவரும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாதச் செயல்பாடுகள்

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் வெள்ளிக் கிழமையில் கடந்த மாதத்தில் மாணவர்கள் தயாரித்த தனித்திறன், படைப்பாற்றல்கள் மற்றும் வகுப்பு மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்களை மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்துக் கலந்தாய்வு செய்தல்.

இதர இணைச் செயல்பாடுகள்

கீழ்க்கண்ட செயல்பாடுகள் குறித்த நாட்களில் மாலை நேரங்களில் (பள்ளி வேலை நேரத்திற்குப் பிறகு) நடைபெறுதல் வேண்டும்.

திங்கட் கிழமை - தமிழ்மன்றம், செஞ்சுருள் மன்றம்

செவ்வாய்க் கிழமை - ஆங்கில மன்றம், தேசிய மாணவர் படை

புதன் கிழமை - கணிதமன்றம், சாரண சாரணியர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை

வியாழக் கிழமை - அறிவியல் மன்றம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்

வெள்ளிக் கிழமை - சமூக அறிவியல் மன்றம், தொன்மைப் பாதுகாப்பு மன்றம், கூட்டு உடற்பயிற்சி.

ஆதாரம் : தமிழக அரசு - பள்ளிக் கல்வித் துறை

3.0
சரவணன் May 29, 2019 12:18 PM

தகவல் உதவியாக இருந்தது. நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top