பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ் படித்தால் தரணி ஆளலாம்

தமிழ் படித்தால் கிட்டும் பலன்களை பற்றிக் காணலாம்.

தமிழ் மொழி

 • தமிழ் மொழி உலகின் தொன்மையான செம்மொழியாகத் திகழ்கிறது. ஆனால் தமிழில் கல்லூரிக் கல்வியைப் படிப்பது இன்னமும் பெருமைக்குரியதாக இல்லை என்பது வேதனை அளிப்பதாகும். ஆனால் தமிழில் பட்டம் பெறுபவர்கள் தரணியாள முடியும் என்பதற்கு தமிழகமே சான்றாக உள்ளது.
 • நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் தமிழ் இலக்கிய படிப்புக்கள் உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ.) முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை பயிலலாம். உடன் கல்வியியல் பட்டமும் படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
 • பி.ஏ, பி.எட், எம்.ஏ, எம்.எட். பயிலுவோருக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிகள் கிடைத்து வருகின்றன. அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழ் ஆசிரியர் தேவை உள்ளது.
 • இதேபோல கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு எம்.ஃபில், பிஎச்.டி. தமிழ் படித்தோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 • இவை தவிர பல்வேறு துறைகளில் தமிழ் பயிலுவோர் கோலோச்சுகின்றனர். குறிப்பாக அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிட்டுகின்றன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதாக வெற்றி பெற முடியும்.

எண்ணற்ற மாற்று வாய்ப்புகள்

 • தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய காலம். இன்றைக்கு பல நிலைகளில் தமிழ் படித்தால் சிறப்பான பணிகளைப் பெறலாம்.
 • ஊடகங்களில் வாய்ப்பு ஊடகங்கள் மொழியை நம்பியே இருக்கின்றன. எழுத்து, பேச்சு என்கிற இரு நிலைகளிலும் தமிழ் படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. குறிப்பாக, இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
 • பத்திரிகைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை - இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.
 • இன்று ஊர்தோறும் தனியார் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு ஆகிய பணிகளில் தமிழ்ப் பட்டதாரிகள் கோலோச்ச முடியும்.
 • பிரசித்தி பெற்ற பி.பி.சி, சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றறிந்தோருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன.தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பதிப்பகங்கள்

 • மேலும், கணினி அச்சுத் தொடர்பான நிலைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் போன்ற நிலைகளில் மரபார்ந்த செம்மையான தமிழறிவு பேரளவில் உதவும்.
 • தமிழோடு பிறமொழி அறிவும் இருப்பின் சிறப்பான ஊதியம் பெறலாம். மொழிபெயர்ப்பு பெரிய அளவில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது.
 • இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் பாடமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
 • மேலும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் ஓதுவார்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு சிறப்பான தமிழறிவு தேவைப்படுகிறது.

யுஜிசி ஊக்கத்தொகை

 • கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை பல்கலைக்கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது.
 • அதேபோல, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பில் சேருவோருக்கு என தனியாக கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் பணிவாய்ப்புகள்

 • தமிழர்கள் உலகம் முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர்.
 • அங்கு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
 • இவ்வாறாக, உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பான நிலை உள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்கள், இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு.


கல்வி

ஆதாரம் : தினமணி

2.94915254237
மீனாட்சி Mar 26, 2017 04:31 PM

இளங்கலை தமிழுடன் இளங்கல்வியியல் முடித்துள்ளேன்.
பேச்சாற்றலுடன் கவி புனையும் திறனோடு,கட்டுரைகள் வரைவதிலும் வல்லமை கொண்டவள். வேலை வாய்ப்பினை நாடி பல பள்ளிகளை பார்த்து வருகிறேன். இளங்கலைக்கும்
இளம் கல்வியியலுக்கும் வழிகாட்டுமாறு வேண்டுகிறேன்.

மா. சங்கர் Nov 27, 2016 06:45 PM

நான் BA., B ED tamil முடித்து உள்ளேன், மூன்று நூல்களை எழுதியுள்ளேன். ௭னக்கு வேலை கிடைக்குமா

சரோஜா தேவி Sep 30, 2016 06:19 PM

நான் தமிழ்த்துறையில் (MA ,M .Phil , B .ed , ) முடித்துள்ளேன் சிங்கப்பூரில் பணிபுரிய என்ன செய்ய வேண்டும்

சி . இராஜேஷ் Jul 20, 2016 01:04 PM

நான் தமிழ் பாடத்தில் முதுகலையும் முதுகலை கல்வியியலும் (MA.,M.Ed.,) முடித்துள்ளேன் வெளி நாட்டில் ஆசிரியர் பணிப்புரிய எவ்வாறான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்

விஜய் Sep 25, 2015 02:05 PM

தமிழ் இளங்கலை படித்ததபின் வேலைவாய்ப்பு தேடி அலைகிறோம் நாங்கள்! சிறந்த பேச்சாற்றலும், நல்ல தமிட்புலமையுமுண்டு, சோதித்து பின் வேலை தாருங்கள் போதும்!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top