பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / சிறந்த செயல்முறைகள் / அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு

அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இன்றைய யுகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கின்றி வாழ்வே ஸ்தம்பித்து விடும் நிலை உள்ளது. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அறிவியலின் பயன் இடம் பெற்றுள்ளது. எனவே, நம் அறிவியல் கல்வி குழந்தைகளையும், இளைஞர்களையும், அறிவியல் விதிகளை, கண்டுபிடிப்புகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

வீட்டில் அறிவியலின் பயன்பாடு

மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வை நினைத்துப் பார்க்க இயலாத நிலைக்கு நாம் பழகிவிட்டோம். வீட்டில் அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் பயன்படுத்தும் சாதனங்களையும், அவற்றில் செயல்படும் அறிவியல் தத்துவங்களையும் இங்கு காண்போம்.

 • மின் விளக்குகள் (Electric Lamps), மின் சமிக்ஞைகள் (Elecric Signals) மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றுகின்றன.
 • வானொலியில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது
 • துணி துவைக்கும் இயந்திரம் (Washing Machine), மின்சார மோட்டார் (Electric Motor) மாவு அறைக்கும் இயந்திரம் (Wet Grinder) போன்றவற்றில் மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது.
 • மின் சமைப்பான் (Electric Cooker), மின் சலவைப் பெட்டி, (Iron Box) போன்றவற்றில் மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் ஆற்றல் அழிவிண்மை விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன.
 • நீராவி குளிர்விக்கப்படுவதால் நீர்மமாகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் குளிர் சாதனப் பெட்டி (Refrigerator) செயல்படுகிறது.

பள்ளியில் அறிவியலின் பயன்பாடு

 • அறிவியல் வளர்ச்சியினை பள்ளியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளித்திட வேண்டியது அவசியம். ஏனெனில் அறிவியல் அறிவை பெருக்கிக் கொள்ளவும், அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளவும், அவற்றின் சிறப்பைக் கண்டு வியந்து அதனைப் போல ஏதேனும் கண்டுபிடிப்பு நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தை தூண்டவும் முடியும்.
 • பள்ளியில் உள்ள தொலைக்காட்சியில் கல்வி நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். இதில் மின் ஆற்றல் ஒளி மற்றும் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
 • பள்ளியில் நாம் பயன்படுத்தும் குடிநீர் சுத்திகரிப்பான் (Water Purifier) பிரித்து வடித்தல் என்ற விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
 • ஆய்வகங்களில் பயன்படும், தூய நீர் கலன் (Distilled Water Plant) காய்ச்சி வடித்தல் தத்துவத்தில் செயல்படுகிறது.
 • ஒளிப்படக்கருவி (Camera) ஒளி பிரதிபலித்தல் தத்துவத்தில் செயல்படுகிறது.
 • நுண்ணோக்கி (Microscope) லென்சு தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு பொருள்களின் அளவைப் பெரிதாக்கிக் காட்டுகின்றது.

பொது இடங்களில் அறிவியலின் பயன்பாடு

பொதுமக்களும் அன்றாட வாழ்வில் பல பொது இடங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்களை அடைந்து வருகின்றனர். பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்புகளும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

 • டிராக்டர் (Tractor), மிதிவண்டி (Bicycle) போன்றவை எளிய எந்திரங்களின் தத்துவத்தில் செயல்படும் கூட்டு எந்திரங்கள் ஆகும்.
 • லாரிகளிலும், டிரக்குகளிலும் பெரிய பொருள்களை ஏற்றுவதில் சாய்தளத்தின் தத்துவம் பயன்படுகிறது.
 • கத்தரிக்கோல், இடுக்கி, பாக்கு வெட்டி, திறப்பான் போன்றவற்றில் நெம்புகோல் தத்துவங்கள் பயன்படுகின்றன.
 • மின் தூக்கி (Electric Lift), பளு தூக்கி (Crains), போன்றவற்றில் கப்பியின் தத்துவம் செயல்படுகிறது.
 • செய்தித் தொடர்புத் துறையில் (Telecommunication), ராடார் (Radar), சோனார் (Sonar) இவற்றின் தத்துவங்கள் செயல்பட்டு வியக்கத்தக்க வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளன.

இன்னும் பல்வேறு துறைகளில் பல்வேறு அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று மனிதனின் வேகத்தையும் செயல்பாடுகளையும் அதிகரித்துள்ளன. அறிவியல் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. வணிக வளாகங்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் அறிவியலின் பயன்பாடு மிக அதிகமே.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.22222222222
Adhi Apr 27, 2020 02:06 PM

Super

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top