பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அறிவியல் வினாடி – வினா

அறிவியல் வினாடி – வினா (Science Quiz) நடத்தப்படுவதன் நோக்கங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அறிவியல் கற்பதில் ஆர்வத்தை வளர்க்கவும், அகன்ற, ஆழமான அறிவைப் பெறவும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் ஆதாரமாக விளங்குவது வினாடி, வினா நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைக் கீழ்க்கண்ட நிலைகளில் நடத்தலாம்.

 1. வகுப்பறை வினாடி - வினா (Classroom Quiz Programme)
 2. பள்ளி வினாடி - வினா (School Quiz Programme)
 3. பள்ளிக்குள் நடைபெறும் வினாடி - வினா (Intra-school Quiz Programme)
 4. பள்ளிகளுக்கிடையே நடைபெறும் வினாடி - வினா (Inter-school Quiz Programme)
 5. மண்டல அளவிலான வினாடி-வினா
 6. மாவட்ட அளவிலான வினாடி- வினா
 7. மாநில அளவிலான வினாடி – வினா

அறிவியல் வினாடி- வினாவின் பொதுவான நோக்கங்கள்

 • அறிவியல் கற்பதில் ஆர்வத்தை வளர்த்தல்.
 • பாடப்புத்தகங்கள் தவிர பிற அறிவியல் புத்தகங்கள், வார, நாள் இதழ்களைப் படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டல்.
 • ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்தல்.
 • போட்டியில் வெற்றி பெறுபவர்களைப் பாராட்டும் உணர்வினை வளர்த்தல்.
 • சமூகப் பண்புகளை (Social Values) வளர்த்தல்.
 • பங்கேற்று கற்கும் ஆர்வத்தினை வளர்த்தல்.

வினாடி - வினா நடத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 • வினாடி - வினா நடத்தப்படுவதன் நோக்கங்களைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
 • நோக்கங்களை மையமாகக் கொண்ட அறிவியல் பாடப்பகுதிகளைத் தீர்மானித்தல் வேண்டும்.
 • வினாடி வினா நடைபெறும் இடம், நாள், நேரம், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை முடிவு செய்து கொள்ளவேண்டும்.
 • பங்கேற்பாளர்கள் தனித்துப் பங்கேற்பதா? குழுவாகப் பங்கேற்பதா? என்பதைத் தீர்மானித்த பின்பு, குழுக்களின் எண்ணிக்கை, குழுவிலுள்ளோரின் எண்ணிக்கை போன்றவைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
 • வினாடி - வினா நிகழ்ச்சியில் இடம் பெற வேண்டிய வினாக்களின் வகைகள், (சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், எழுத்துகளை விரிவாக்கல், படத்தை அடையாளம் கண்டுகூறுதல், ஓரிரு வார்த்தைகளில் விடை கூறுதல்) நடத்தப்பட வேண்டிய சுற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றிலும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் போன்றவைகள் சார்ந்து முடிவுகளை முன் கூட்டியே மேற் கொள்ள வேண்டும்.
 • வினாடி - வினா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் தன்மையைப் பொறுத்து பங்கேற்பாளர்களை வினாடி - வினா நடத்தும் பொறுப்பாளர் / மேலாண்மை செய்பவர் அமர வைத்துக் கொள்ளலாம். மதிப்பெண்களைப் பதிவு செய்பவர் பொறுப்பாளருக்கு உதவியாக இருந்து செயல்பட வேண்டும்.
 • பரிசுகளின் எண்ணிக்கை, பரிசுப் பொருள்கள், எதிர்பார்க்கப்படும் செலவுகள், பொருளாதார நிலைகள் ஆகியவைகளைச் சார்ந்து முடிவெடுத்தல் வேண்டும்.
 • வினாடி - வினா நிகழ்ச்சிகள் மாணவர்களின் அறிவியல் கற்கும் ஆர்வத்தினைத் தூண்டுவதால், எளிமையாக மாணவர்களே படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவியல் பாடப்பகுதிகளை வினாடி - வினா நடத்துவதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.69230769231
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top