பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதல்வரைப் பெறுதல்

புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இல்லறவியல்

புதல்வரைப் பெறுதல்

61 பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.

விளக்கம்

('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

62 பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.

விளக்கம்

('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.) ---

63 தம் மக்கள் தம் பொருள் என்ப-தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும்-அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.

விளக்கம்

('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.) ---

64 அமிழ்தினும் ஆற்ற இனிதே-சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்-தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.

விளக்கம்

(சிறுகையான் அளாவலாவது, "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்-நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்" (புறநா.188).] ---

65 உடற்கு இன்பம் மக்கள் மெய் தீண்டல்-ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல்-செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.

விளக்கம்

('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுபடச் 'சொல்' என்றார். 'தீண்டல்' 'கேட்டல்' என்னும் காரணப் பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.) ---

66 குழல் இனிது யாழ் இனிது என்ப-குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்-தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.

விளக்கம்

('குழல், யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச் சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.) ---

67 தந்தை மகற்கு ஆற்றும் நன்றி-தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல்-கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.

விளக்கம்

(பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.) ---

68 தம் மக்கள் அறிவுடைமை-தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது-பெரிய நிலத்து மன்னா நின்று உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.

விளக்கம்

(ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.) ---

69 ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்-தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.

விளக்கம்

(கவானின் மகற்கண்ட பொது உவகையினும் சால்புடையன் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், பெண்ணியல்பால் தானாக அறியாமையின் 'கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது, சான்றோன் என்றற்கு உரியார் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.) ---

70 தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி- கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது: இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும்சொல்-தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்.

விளக்கம்

('சொல்' என்பது நிகழ்த்துதல் ஆகிய தன் காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல்-அங்ஙனம் தோன்ற ஒழுகல். இதனால் புதல்வன் கடன் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top