பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

கண்விதுப்பழிதல்

1171. 'நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி?

விளக்கம்

('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது?' என்பதாம்.)

1172. தெரிந்துணரா நோக்கிய வுண்கண்

விளக்கம்

இதுவும் அது. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? விளைவது: பிரிந்து போயவா வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல். முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம். ---

1173. இதுவும் அது. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.

விளக்கம்

('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.) ---

1174. இதுவும் அது. உண்கண் - உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன; என் கண் நிறுத்து - அன்று யான் உய்வ மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்ல த நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.

விளக்கம்

(நிறுத்தல்: பிரிதலும் பின்கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன'' என்பதாம்.) ---

1175. இதுவும் அது கடல் ஆற்றாக் காமநோய் செய்த என்கண் - எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காமநோயைச் செய்த என் கண்கள்;

விளக்கம்

படல் ஆற்றா பைதல் உழக்கும் - அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது. ---

1176. இதுவும் அது. எமக்கு அந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது - எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒஇனிதே - மிகவும் இனிதாயிற்று!

விளக்கம்

('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச் சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்.) ---

1177.  இதுவும் அது. விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக - இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக.

விளக்கம்

(அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது.) ---

1178. காதலர் பிரிந்து போயினாரல்லர், அர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணாது பெட்டார் உளர் - நெஞ்சால் விழையாது வைத்துச் சொல் மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க் கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?

விளக்கம்

(செயலாற் பிரிந்து நின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமம் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை 'யான் ஆற்றவும், கண்கள் அவரைக் காண்டற்கு விருமபாநின்றன: என்பதாம். இனிக 'கொண்கனை' என்று பாடமாயின், 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை; இவ்வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ?' என்று உரைக்க. இதற்கு மன் அசைநிலை) ---

1179. 'நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன - ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய.

விளக்கம்

('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்.) ---

1180. 'காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்போலும் அறைபறையாகிய கண்ணினையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.

விளக்கம்

('மறை' என்றது, ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்கு அறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை உண்மையின், 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top