பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நாணுத் துறவுரைத்தல்

நாணுத் துறவுரைத்தல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

களவியல்

நாணுத் துறவுரைத்தல்

1131. சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை.

விளக்கம்

(ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார்' இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்,' என்பது கருத்து.) ---

1132 'நாணுடைய நுமக்கு அது முடியாது,' என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது. நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாதா உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன, நாணினை நீக்கி நிறுத்து.

விளக்கம்

('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், அதனை விலக்குவதாய நாணினை அகற்றி, செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகு பெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. 'அதுவும் இது பொழுது நீங்கிற்று' என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதான் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற் குறை நேர்தல் நோக்கி.) -

1133. 'நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது. நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்;

விளக்கம்

(காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். நாண்: இழிவாயின செய்தற் கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன; இன்று உள்ளது இதுவேயாகலின், கடிதின் முடியும்,' என்பதாம்.) ---

1134. நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின், அதனால் 'அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது.

விளக்கம்

(அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்,' என்பதாம்.)

1135. (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும்,

விளக்கம்

மடலும் அதுபற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்,' என்பது கருத்து.)

1136. 'மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது.) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலை பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.

விளக்கம்

('பேதை' என்றது பருவம் பற்றி அன்று; மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.) ---

1137. 'பேதைக்கு என் கண் படல் ஒல்லா,' என்பது பற்றி, 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்' என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.

விளக்கம்

('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது; நீ அஃது அறிகின்றிலை,' என்பதாம். இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.) ---

1138 காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது. நிறை அரியர்

விளக்கம்

(என்னாது) - 'இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர்' என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - 'மிகவும் அளிக்கத்தக்கார்' என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று' என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனி, அறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று.) ---

1139. இதுவும் அது. எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர்; இனி அவ்வாறு நில்லாது யானை வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.

விளக்கம்

(மயங்குதல் அம்பலாதல்; மறுகுதல்; அலராதல். 'அம்பலும் அலருமாயிற்று. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.) ---

1140. செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை!' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது. யாம் கண்ணிற்கான அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு அவர் அங்ஙனஞ் செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான்.

விளக்கம்

('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகா நின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.78947368421
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top