பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடுக்கணழியாமை

இடுக்கணழியாமை எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்

இடுக்கணழியாமை

621. பிறிதில்லையாகலான்.

விளக்கம்

(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான் 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.) ---

622. வெள்ளத்து அனைய இடும்பை-வெள்ளம்போலக் கரையில வாய இடும்பைகள் எல்லாம், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்-அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.

விளக்கம்

(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ் வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.) ---

623. இடும்பைக்கு இடும்பை படாஅதவர்-வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்-அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.

விளக்கம்

(வருந்துதல்-இளைத்துவிட நினைத்தல். மனத்திட்பமுடையராய் விடாது முயலவே வினைமுற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம். ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் அதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.) ---

624. மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்-விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து-வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.

விளக்கம்

('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. ''பகடு மருங்கு ஒன்றியும் மூக்கு ஊன்றியும் தான் தகவழ்ந்தும்' [சீவக. முத்தி. 186] அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார். 'பகடு அன்னான்' என்றார்.) ---

625. அடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.

விளக்கம்

(ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.) ---

626. அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?

விளக்கம்

(பெற்றவழி இவறாமை நோக்கி அற்ற வழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.) ---

627. உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று-நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறக் கொள்ளாதாம் மேல்-தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.

விளக்கம்

(ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப் பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல்; இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம..) ---

628. இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்-தன் முயற்சியால் துன்பமுறான்.

விளக்கம்

(இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.) ---

629. இன்பத்துள் இன்பம் விழையாதான்-வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்-துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.

விளக்கம்

(துன்பம்-முயற்சியான் வரும் இடுக்கண், இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.) ---

630. இன்னாமை இன்பம் எனக்கொளின்-ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும்-அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய் உயர்ச்சி உண்டாம்.

விளக்கம்

(துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின்; அதனை மாறுபடக்கொள்ளவே, அதற்கு அழிவு இன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தேவிடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top