பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

படைச்செருக்கு

படைச்செருக்கு எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கவியல்

படைச்செருக்கு

771. தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-பகைவீர், இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்-நீவிர் அதன்கணின்றி நும் உடற் கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின்.

விளக்கம்

('என் ஐ' எனத் தன்னோடு தொடர்பு படுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்-நடுகல். ''நம்பன் சிலை வாய் நடக்குங்கணை மிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை [சீவக காந்தருவ. 317] எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி' [பு.வெ.மா.வஞ்சி. 1 ---

772. கான முயல் எய்த அம்பினில்-கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று

விளக்கம்

('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்பதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக் குத்தக எறிதலம் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் சொல்லுற்றானது கூற்று.) ---

773. தறுகண் பேராண்மை என்ப-பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு [என்ப]-அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.

விளக்கம்

('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை-உபகாரியாம் தன்மை. அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின் தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி. [பு.வெ.மா. வஞ்சி. 3]) ---

774. கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்-கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும்-தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.

விளக்கம்

(களிற்றோடு போக்கல்-களிய்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றை யல்லது எறியான் என்பதூஉம், சின மிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. [பு.வெ.மா. தும்பை. 16]) ---

775. விழித்த கண்-பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ- அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.

விளக்கம்

(அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.) ---

776. தன் நாளை எடுத்து-தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்-அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன்,

விளக்கம்

(விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத ---

777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்-துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து-கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து.

விளக்கம்

('வையத்தைச் சூழும்' எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல்- அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.) ---

778. உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இவர்-தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார்.

விளக்கம்

(போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்" [புறநா. 31] என்றும், "புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம்யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" [புறா. 68] என்றும் கூறினார்.) ---

779. இழைத்தது இகவாமைச் சாவாரை-தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்-அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?

விளக்கம்

(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னானாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்' என்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற் சிறப்பு கூறியவாறு.) ---

780. புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.

விளக்கம்

(மல்குதலாகிய இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளிவார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால், துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top