பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விழாக்கள்

விழாக்கள் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

கடவுளின் சொந்த நாட்டில் உண்மையான கொண்டாட்டங்கள் விழாக்களாகும். கேரளா வாழ்க்கை முறையில் பகட்டு பரவியிருந்தாலும் விழாக்கள் எளிமையான முறையிலேயே கொண்டாடப்படும். ஓணம் அல்லது ஏதாவது உள்ளூர் திருவிழாக்களாக இருந்தாலும் புத்தாடை மற்றும் ஆடம்பர விருந்து ஆகியவை அவர்கள் விழாக்களில் கண்டிப்பாக இருக்கும்.

இவைதவிர விழாக்களின் போது மகிழ்ச்சியை உருவாக்குவதற்காக கேரள விழாக்கள் இந்த மண்ணின் பண்பாட்டை பாதுகாக்கும் பாரம்பரியம் கொண்டவையாக இருக்கும். மதம் அல்லது சமூகம், பாரம்பரியம் அல்லது நவீனம் என்று எந்த விழாவாக இருந்தாலும் 2000 வருடங்களுக்கு முன்பு உள்ள கலையான குடியாட்டம் தற்கால மேடை காட்சிகளில் கூட நடைபெறாமல் அந்த விழா முழுமை பெறுவதில்லை.

விழாக்களைப் பற்றி மேலும் அறிய விழா காலண்டர் வலைத்தளத்தைப் பார்த்தால் அவற்றின் சிறப்புகள் மற்றும் கொண்டாடப்படும் தேதிகளை அறியலாம். நீங்கள் இதைப் பற்றி மேலும் அறிய கேரள விழாக்கள் என்னும் சமூக வலைத்தளமான பெஸ்டிவல் விக்கிக்குச் சென்று அறிந்துகொள்ளலாம்.

முக்கிய விழாக்கள்

பாரம்பரிய விழாக்கள்

பாரிப்பள்ளி கஜமேளா

இடம் : கொடிமோட்டில் பகவதி கோவில் பாரிப்பள்ளி, கொல்லம் மாவட்டம்.

இந்தத் திருவிழா பயங்கர தோற்றத்தில் காட்சியளிக்கும் பெண் தெய்வமான பத்திரகாளி அம்மன்னுக்கு சிறப்பு செய்வதற்காக கொண்டாடப்படுவதாகும். இங்கு 50 யானைகள் விஷேச ஆடைகள் அணிந்து ஊர்வலம் செல்வது தான் கஜமேளா மற்றும் இறுதி நாளில் வெவ்வேறு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம், கொல்லம், 23 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம், பாரிப்பள்ளியிலிருந்து 48 கி.மீ தொலைவு.

ஆற்றுவேல மகோத்சவம்

இடம்: ஏலங்காவு பகவதி கோவில் வடயார், வைக்கத்திலிருந்து 3 கி.மீ தொலைவு

ஆற்றுவேல மகோத்சவம் ஒரு நீர்த்திருவிழா ஆகும். வரலாற்றுப்படி தனது சகோதரி ஏலங்காவு தேவியைப் பார்க்கவரும் கொடுங்கலூர் தேவியை வரவேற்கும், ஒரு திருவிழா ஆகும். இந்த சிறிய கோவிலில் தேவி பகவதி தெய்வமாக வீற்றிருக்கிறார். இரண்டுநாள் ஆற்றுவேல திருவிழாவின் போது அழகாக காட்சியளிக்கும் படகுகள், கோவிலின் பிரதிபலிப்பை சுமந்தபடி வண்ண வண்ணமாக அலங்கரிக்கப்பட்ட படகு கூட்டங்கள் கோவில் இசைவாத்தியங்கள் முழங்க நீரில் செல்வது கண் கொள்ளாக் காட்சியாகும். படகு ஊர்வலம் இந்தக் கோவிலிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள ஆற்றுவேல கடவு என்ற இடத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம்:எர்ணாகுளம், 30 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம், கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், 50 கி.மீ தொலைவு.

செட்டிக்குளங்கர பரணி

இடம் : செட்டிக்குளங்கர பகவதி கோவில், காயகுளம், ஆலப்புழா மாவட்டம்

மலையாள மாதமான கும்பத்தில் வருடந்தோறும் நடைபெறும் இந்த திருவிழா கேரளாவின் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒரு திருவிழா ஆகும். இந்த திருவிழா மற்றும் கோவில் யாவும் பகவதி தேவிக்கு உரியதாகும். பெரும்பாலும் தென் கேரளாவில் உள்ள அனைத்துக் கிராமியக் கலைகளும் இந்தக் கோவிலில் நடைபெறும். இரவு முழுவதும் நடைபெறும் கதக்களி நடனம் கதக்களி பிரியர்களுக்கு நல்ல விருந்தாகும்.

கெட்டுகழச்ச ஊர்வலம், குத்தியாட்டம், படையானி, கோல்களி மற்றும் அம்மன் குடம் ஆகிய பிற கலை நிகழ்ச்சிகளும் கண்டு இன்புறத்தக்கவை ஆகும். கெட்டுகழச்ச விழா ஊர்வலத்தில் நல்ல முறையில் அலங்கரிக்கப்பட்ட உருவங்கள் அதாவது பெரிய மற்றும் உயரமான உருவம் குதிரைகளாகவும், சிறியவகை ரதங்களாகவும். பாரம்பரிய கலை நடனங்களோடு நடைபெறுவது அழகுக் காட்சியாக இருக்கும். இது பெருமளவில் பக்தர்களைக் கண்கவருவதாக இருக்கும்.

அங்கு சென்றடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம் காயகுளம், 5 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம், கொச்சின் பன்னாட்டு விமான நிலையம்:ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு

கொடுங்கல்லூர் பரணி

இடம் : கொடுங்கல்லூர், பகவதி கோவில், கொடுங்கல்லூர், திரிச்சூர் மாவட்டம்.

கொடுங்கலூரில் உள்ள பகவதி தேவிக்கு நடத்தப்படும் வருடாந்திர பரணி திருவிழா மிகவும் புகழ் வாய்ந்ததாகும். உண்மையில் இது சிவன் கோவில் என நம்பப்படுகிறது. அதனால் பகவதி தேவிக்கு பூஜை செய்யும் முன் சிவனுக்கே முதலாவது பூஜை செய்யப்படுகிறது. கொடுங்கல்லூர் கோவிலிலுள்ள பகவதி சிலை ஒரே பலா மரத்தில் செதுக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. தேவி சிலையின் முகம், முகமுடியால் மறைக்கபட்டும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் காணப்படும்.

வருடாந்திர பரணி திருவிழாவின் போது கொடுங்கல்லூர் பகவதி கோவில் களைக்கட்டி காணப்படும். நடைபெறும் நிகழ்ச்சிகளுள் காவு தீண்டல் மிகவும் பார்க்கத்தகுந்த நிகழ்ச்சியாகும். இந்த விழாவின் போது கடவுளின் தூதர்கள் என்று பக்தர்களால் கருதப்படும். நூற்றுக்கணக்கான குறி சொல்லும் பெண்களும் கையில் வாளை வைத்தபடி (வெளிச்சப்பாடு என உள்ளூரில் கூறப்படும்) வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கொடுங்கலூர் பரணி திருவிழா இரத்தம் மற்றும் நம்பிக்கை இரண்டும் கலந்த ஒன்றாகும். இந்த திருவிழா மலையாள மீனம் (மார்ச்/ஏப்ரல்) மாதத்தில் நடைபெறுகிறது. காவு தீண்டல் ஆயிரங்கணக்கானோர் பங்கு கொள்ளும் ஒரு முக்கிய கொண்டாட்டமாகும். தேர்ப்பாட்டு என்பது கோவிலின் தேவியைப் பார்த்து பாடப்படும் ஒரு விதமான பாடல் ஆகும்.

ஒவ்வொரு வருடமும் கொடுங்கல்லூர் பகவதி கோவிலில் மலையாள மாதம் மீனத்தில் நடைபெறும் திருவிழாவின் ஏழாம் நாளில் ஏராளமான யாத்ரீகர்களும் பார்வையாளர்களும் வந்து குவிவர். காவு தீண்டல் என்ற பரணி திருவிழாவின் ஒரு பகுதி கொடுங்கல்லூர் அரசர் முன்பு நடைபெறும். நூற்றுக்கணக்கான குறிசொல்லும் பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோவிலைச் சுற்றி வருதல், கைகளில் இருக்கும் வாளை உயர்த்தி அசைத்தபடி கோவிலைச் சுற்றி பரவச நிலையில் ஓடுவர்.

இந்த விழாவிற்குப் பின்னர் ஒரு வாரம் கோவில் மூடியிருக்கும். காவு தீண்டலின் போது ஏற்பட்ட கறைகளைச் சுத்தம் செய்து புனிதப்படுத்தும். சடங்குகள் முடிந்த பின்னர் கோவிலின் நடை திறக்கப்படும்.

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம்:இரிஞ்சாலகுடா 20 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் 30 கி.மீ தொலைவு.

மச்சாட்டு மாமாங்கம்

இடம்: மச்சாட்டு திருவாணிக்காவு கோவில், வடக்கன்சேரி, திர்ரிச்சூர் மாவட்டம்

மச்சாட்டு வேளா திருவிழா பகவதி கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் ஆடம்பரமான வேடிக்கையான கண்கவர் திருவிழா ஆகும். திருவிழாவின் இறுதி நாளில் முக்கியமாக சடங்கு நடைபெறும். நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைகோலம் (குதிரைகள்) பக்தர்களால் கோவிலுக்கு வேண்டுதலுக்காக படைக்கப்படுகிறது. மாலையில் செண்டமேளம் முழங்க வரும் குதிரைகள் அணிவகுப்பு கோவில் வளாகம் முழுவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருவிழா நாட்களில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம் : திரிச்சூர் 21 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் திரிச்சூரிலிருந்து 58 கி.மீ தொலைவு.

மலனாட கெட்டுகழச்சா

இடம் : போருவழி மலனாட கோவில், அடூர், கொல்லம் மாவட்டம்

மகாபாரத கதாநாயர்களான பாண்டவர்களின் எதிரியான துரியோதனுக்கான இந்த கோவிலில் நடைபெறும் திருவிழா தனித்தன்மை வாய்ந்ததாகும். ஒரு வேளை இந்த வகையான ஒரு கோவில் இந்தியாவில் ஒன்று மட்டுமே இருக்க கூடும்.

இந்த திருவிழாவில் வெவ்வேறு வகையான நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கெட்டுகழச்சா ஊர்வலம் மற்றும் காலவேல ஆகியவை உச்சகட்ட நிகழ்ச்சியாக இருக்கும். அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

அங்கு சென்று அடைவதற்கு :

செங்கானூர் இரயில் நிலையத்தில் இருந்து நீங்கள் அடூர் பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் செல்ல முடியும் (பத்தனம்திட்டா மாவட்டம்) அங்கிருந்து வேறொரு பஸ் பிடித்தோ அல்லது டாக்சி மூலமோ மலநாடவுக்குச் செல்லலாம்

அருகிலுள்ள இரயில் நிலையம் : செங்கனூர் மலநாடவுலிருந்து 30 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம்:திருவனந்தபுரம் விமான பன்னாட்டு நிலையம் அடூரிலிருந்து 92 கி.மீ தொலைவு.

தைப்பூய மகோத்சவம் ஹரிப்பாடு

இடம் : ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில், ஹரிப்பாடு, ஆலப்புழா மாவட்டம்.

தைப்பூய மகோத்சவம் சிவபெருமான் பார்வதி தேவியின் மகனான சுப்பிரமணிய சாமிக்கு கேரளா முழுவதும் உள்ள கோவில்களில் கொண்டாடப்படும் ஒரு நாள் திருவிழா ஆகும். விழா நாளில் பக்தர்கள் நன்கு அலங்கரிக்கப்பட்ட வெவ்வேறு வடிவங்களிலான கம்பு வளைவுகளைத் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்குச் செல்வர். இந்த மதப்பாரம்பரிய நடனம் காவடியாட்டம் எனப்படும்.

அங்கு சென்று அடைவதற்கு :

இந்த கோவில் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு என்ற டவுனிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள இரயில் நிலையம் : ஹரிப்பாடு, 5 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு.

தைப்பூச மகோத்சவம், கூர்க்கன்சேரி

இடம்: கூர்க்கன்சேரி, ஸ்ரீ மகேஷ்வரர் கோவில், திரிச்சூர் மாவட்டம்

இந்தக் கோவிலின் முக்கிய தெய்வம் மகேஷ்வரா (சிவன்) ஆக இருந்தாலும் இந்த தைப்பூச மகோத்சவம் அவருடைய மகன் சுப்பிரமணிய சுவாமிக்காகவே 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே மதப்பாரம்பரிய நடனமான காவடியாட்டத்தில் பத்துக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 30 அம்பலகாவடி மற்றும் 60 பூக்காவடி பங்கேற்கும். அம்பலக்காவடி என்பது வெவ்வேறு அலங்கரிக்கப்பட்ட கோவில் மாதிரிகள் ஆகும். ஆறு முதல் 10 அடி உயரம் வரை உள்ள இதனை ஆண் பக்தர்கள் தோள்களில் சுமந்து செல்வர். பூக்காவடி வில் வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். காவடியாட்டம் யானை அணிவகுப்பு தொடர மதியம் வரை நடைபெறும். பின்னர் மறுபடியும் இந்தத் திருவிழாவின் இறுதி நாளில் கண்ணைக்கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம் : திரிச்சூர், 2 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், திரிச்சூரிலிருந்து 58 கி.மீ தொலைவு.

திருனங்கர ஆராட்டு

இடம் : திருனங்கர மகாதேவ கோவில், கோட்டயம் மாவட்டம்.

திருனங்கர கோவில் வருடம் தோறும் 10 நாட்கள் நடைபெறும். ஆராட்டு கொண்டாட்டங்கள் மிகவும் கவர்ச்சியான ஒரு திருவிழா ஆகும். வழக்கமான 9 அலங்கரிக்கப்பட்ட யானைகள் மதியத்திலிருந்து ஊர்வலமாக வரத்தொடங்கும் இந்த ஆராட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளும். கிராமியக்கலையான மயிலாட்டம், வேளக்களி போன்றவை கோவில் வளாகத்தில் வைத்து மாலையில் நடைபெறும். மூன்றாம் நான்காம் நாள் நிகழும் கதக்களி நடனம் இரவு முழுவதும் நடைபெறும் ஒரு முக்கியமான கவர்ச்சி நிகழ்ச்சியாகும்.

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம் : கோட்டயம், இந்த கோவிலிலிருந்து ஒருசில நிமிட பயணத் தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், கோட்டயத்திலிருந்து 76 கி.மீ தொலைவு.

பாருமல பெருநாள்

இடம் : பாருமல தேவாலயம், பத்தன்னம்திட்டா மாவட்டம்.

கேரள மாலங்காரா பழைய தேவாலயத்தில் புனிதராக அறிவிக்கப்பட்ட பிஷப் மார் கிரிகோரியசின் நினைவு நாள் வருடந்தோறும் பெருநாள் அல்லது விழாவாக பாருமல தேவாலயத்தில் நடைபெறுகிறது. பிஷப் உருவம் இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரும பெருநாள் அல்லது நினைவு நாளின் போது சிறப்பு தொழுகைகள் மற்றும் மதச்சடங்குகள் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்ளும் ஒரு ஊர்வலமும் டவுனில் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம் : திருவெல்லா, 11 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், 105 கி.மீ தொலைவு.

காஞ்சிராமாட்டம் கொடிக்கூத்து

இடம் : காஞ்சிராமாட்டம் மசூதி, எர்ணாகுளம் மாவட்டம்.

காஞ்சிராமாட்டம் மசூதி ஷேக்ஃபாரிதுதின் நினைவாக கட்டப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. ஜனவரி 13 லிருந்து 14 வரை ஒவ்வொரு வருடமும் இங்கு ‘கொடிகூத்து’ திருவிழா நடைபெறுகிறது. சந்தனக்குடச் சடங்கு இரவில் நடைபெறும் போது பக்தர்கள் சந்தனம் பூசப்பட்ட குடங்களை எடுத்துக் கொண்டு புனித யாத்திரையாக மசூதிக்கு ஊர்வலமாக்ச் செல்வர். அந்த ஊர்வலத்தோடு அலங்கரிக்கப்பட்ட யானைகள் மற்றும் கிராமிய நடனங்களும் நடைபெறும். முகமதியர்களின் பாரம்பரிய கலைவடிவங்களான டஃப்முட்டு மற்றும் கோல்களி ஆகியவை திருவிழாவின் போது நடைபெறும்.

அருகிலுள்ள இரயில் நிலையம் : எர்ணகுளம், 25 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், 45 கி.மீ தொலைவு.

ஆர்த்துங்கள் பெருநாள்

இடம் : புனித செபஸ்டியன் தேவாலயம், ஆலப்புழா மாவட்டம்.

ஆர்த்துங்கள் பெருநாள், புனித செபஸ்டியன் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் சில நேரங்களில் இது ஜனவரி மாதம் நடைபெறும். இந்தத் திருவிழாவின் இறுதிநாளில் பக்தர்கள் தேவாலயத்தின் அருகிலுள்ள கடற்கரையிலிருந்து தேவாலயம் வரை முழங்காலினால் ஊர்ந்து சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது இந்தத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். அதன் பிறகு ஒரு கடற்கரைக்கு ஒரு விழா ஊர்வலம் செல்லும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : ஆலப்புழா, 22 கி.மீ தொலைவு. அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு.

எடத்துவா பெருநாள்

இடம் : புனித ஜார்ஜ் தேவாலயம், எடத்துவா, ஆலப்புழா மாவட்டம்.

எடத்துவா தேவாலயம் புனித ஜார்ஜ்க்காக 1810 –ஆம் ஆண்டு பம்பா நதிக்கரையில் நிறுவப்பட்ட புனிதத்துவம் வாய்ந்த தேவாலயம் ஆகும். பெருநாள் அல்லது திருவிழாவின் போது புனிதரின் திரு உருவச்சிலை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று பாசிலிக்காவின் மையப் பகுதியில் வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் தொடக்கநாளிலிருந்து இறுதி நாள் வரை கண் கவர் வாண வேடிக்கைகளும் ஊர்வலங்களும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்தத் திருவிழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : ஆலப்புழா, 24 கி.மீ தொலைவு அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு.

மன்னார்காடு பெருநாள்

இடம் : புனித மேரி தேவாலயம், மன்னார்காடு, கோட்டயம் மாவட்டம்.

மன்னார்காட்டிலுள்ள புனித மேரி தேவாலயத்திலுள்ள மேரிக்காக வருடந்தோறும் எட்டு நாட்கள் பெருநாள் அல்லது திருவிழா நடை பெறுகிறது. இது உபவாசம் மற்றும் ஜெபத்திற்கான நேரமாகும். இந்த எட்டு நாள் சமயச்சடங்கு உள்ளூரில் எட்டு நோம்பு என அழைக்கப்படுகிறது. இறுதி மூன்று நாட்கள் பக்தர்கள் தங்கச்சிலுவையைச் சுமந்து கொண்டும் அழகான குடைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் செல்லும் வண்ணமயமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : கோட்டயம், 10 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், கோட்டயத்திலிருந்து 76 கி.மீ தொலைவு.

பாட்டம்பி நேர்ச்சா

இடம் : பாட்டம்பி டவுனின் முக்கிய டவுனின் முக்கிய சாலையில் உள்ள மசூதி, பாலக்காடு மாவட்டம்.

பாட்டம்பி நேர்ச்சா மலபாரின் புனிதரான ஆலூர் வலிய போக்குஞ்சிகோயா நடைபெறும் திருவிழா ஆகும். இந்த விழாவின் உச்சக்கட்டத்தின் நிகழ்வாக 100 நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆண் யானைகள், வண்ணமயமான தெப்பங்கள், பஞ்சவடியம் (5) ஊதுகுழல்கள் மற்றும் (டிரம்ஸ்) தாயம்பகா (டிரம்ஸ்குழ) மற்றும் கிராமப்புரக்கலைகள் நடைபெறும். இந்த ஊர்வலம் பரதப்புழா ஆற்றங்கரையில் பஞ்சவடியம் இசைக்க சென்றடைவதும் கலைநிகழ்ச்சிகளும் என்று அன்று இரவு முழுவதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : பாட்டம்பி இரயில் நிலையம் மசூதியிலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது.

அருகிலுள்ள விமான நிலையம் : அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம், பாலக்காட்டிலிருந்து 55 கி.மீ தொலைவு.

ஹோலீ கிராஸ் ஆலயத் திருவிழா

ஹோலீ கிராஸ் ஆலயம் மாப்ராணம், திரிச்சூர் கேரளாவின் மிக முக்கியமான புனித்தலமாகும். இந்தத்தலத்தின் சிலுவைப்பாடு செப்டம்பர் 12 லிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெறும் ஒரு வருடாந்திரத் திருவிழாவில் ஆடவர் (எட்டாம் நாள்) கொண்டாட்டங்கள் செப்டம்பர் 21 –இல் நடைபெறும். இந்த திருநாளின் மிகவும் மங்கலகரமான நாள் செப்டம்பர் 14 – இல் நடைபெறும் திருவிழாவாகும்.

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக ‘திரித்தெலிக்கள்’ (பெரிய மெழுகுவர்த்தி விளக்கு) 0.25 கி.கி முதல் 300 கி.கி வரை எடையுள்ளது, ஹோலீ கிராஸ் மற்றும் ஏசு கிறிஸ்துவின் திரு இரத்த வண்ண ஊர்வலம், வான வேடிக்கைகள் ஆகிய வழிபாட்டு நிகழ்ச்சிகளால் தேவாலயம் ஜொலித்துக் கொண்டிருக்கும். இந்தத் திருவிழா உலகம் முழுவதும் அதே நாளில் கொண்டாடப்படும்.

ஓணம்

இடம் : ஓணம் பண்டிகை மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு மாநிலத் திருவிழா ஆகும்.

ஓணம் பண்டிகையின் போது மகிழ்ச்சி, ஆர்வம் உற்சாகம் ஆகியவை நிரம்பியிருக்கும். இயற்கை முழுவதும் மலர்ந்து, காற்றில் விழாக்கோலமும் மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியும் வேடிக்கையும் மலர்ந்திருக்கும். இந்த ஓணம் பண்டிகையை கேரளத்தினர் தங்கள் சொந்தப் பண்டிகை எனக் கொண்டாடி மகிழ்வர்.

ஓணம் பண்டிகை மலையாள மாதமான சிங்கத்தின் அதாவது ஆகஸ்ட்/ செப்டம்பரில் வரும் அந்த அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த வேளையில் கேரளம் முழுவதும் யானை ஊர்வலங்கள், பாரம்பரிய மற்றும் கிராமியக்கலை நிகழ்ச்சிகள், இசைக்கச்சேரிகள், பண்பாட்டு நிகழ்வுகள், படகுப் போட்டிகள் இன்னும் ஏராளமான நிகழ்வுகளின் மூலம் கேரளா முழுவதும் களைக்கட்டிக் காணப்படும்.

தீபாவளி

இடம் : தீபாவளி, கேரளா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி (தீவாளி) அல்லது ஒளித்திருவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கவர்ச்சிகரமான ஒரு திருவிழா. கிருஷ்ண பகவானால் நரகாசுரன் கொல்லப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.

கேரளாவின் சில மதத்தினர் இந்த திருவிழாவை பெரும் ஆரவாரத்தோடு கொண்டாடுகின்றனர்.தீபாவளி புத்தாடை அணிந்து, வீடுகளில் விளக்கேற்றியும் தெருக்களிலும் எண்ணெய் விளக்குகள் ஏற்றியும் இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

இது கிருஷ்ண பகவானால் நரகாசுரன் கொல்லப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.

கல்பதி ராதோல்ச்சவம்

இடம் : ஸ்ரீ விஸ்வநாத சுவாமி கோவில், கல்பதி, பாலக்காடு மாவட்டம்

கல்பதி ராதோல்ச்சவம் அல்லது ரதத் திருவிழா விஸ்வநாதர் அல்லது சிவனுக்கு வருடந்தோறும் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். கேரளாவின் கல்பதி அதாவது பழைய பிராமணர்கள் குடியிருக்கும் இந்த இடம் தெற்கு காசி அல்லது தெற்கிலுள்ள வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. திருவிழாவில் முதல் பத்து நாட்கள் சமயக்கச்சேரிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை இந்த 700 வருட பழைமையான கோவில்களில் நடைபெறும். இறுதி மூன்று நாட்கள் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட இரதங்களை வீதிகளில் இழுத்துச் செல்வர். இந்த ஊர்வலத்தில் கடலென மக்கள் திரண்டு பரவச கோஷம் எழுப்புவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : பாலக்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம், பாலக்காட்டிலிருந்து 55 கி.மீ தொலைவு.

புலிக்களி

இடம் : சுவாராஜ் மைதானம், திரிச்சூர்

புலிகள் ஒரு மகிழ்ச்சியான மனநிலை தரும் நடனமாகும். இதனை நாம் காடுகளில் கேட்கவும் பார்க்கவும் முடியாது. ஆனால் திரிச்சூரின் சுவாராஜ் மைதானத்தில் பரந்த பகல் வெளிச்சத்தில் இவை நிகழ்வதை நாம் காணலாம். ஓணம் வருவதை எதிர்கொள்ளும் முகமாக பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் நிகழ்த்தி கேரளா களைகட்டத் தொடங்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றான இது தொடர்ந்து மகிழ்ச்சியையும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழுத்தும் புலிக்களி அல்லது புலிகள் நடனம் ஆகும்.

ஓணம் பண்டிகையின் போது கேரளா முழுவதும் புலிக்களி நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், இவை யாவற்றையும் விட திரிச்சூரில் நடைபெறும் புலிக்களி மிகவும் பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக ஆண் கிராமியக் கலைஞர்கள் புலிகளைப் போன்ற வண்ணங்களை உடல் முழுவதும் தீட்டி இருப்பர். அவர்கள் கூட்டங்களாகச் சென்று ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல வேட்டைக்காரனிடமிருந்து புலி தப்பிக்கும் நடனத்தை மேளத்தோடு அரங்கேற்றுவர். இவை தவிர உடல் முழுவதும் புலி போல கறுப்பு மஞ்சள் வண்ணம் தீட்டியும் பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவர்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : திரிச்சூர் ஒரு கிலோ மீட்டருக்குள்.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், திருச்சூரிலிருந்து 40 கி.மீ தொலைவு.

அடூர் கஜமேளா

இடம் : பார்த்தசாரதி கோவில், அடூர் (KSRTC பேருந்து நிலையம் அடூர்) பத்தனம்திட்டா மாவட்டம்.

கஜமேளா அல்லது யானை வேடிக்கை காட்சி ஸ்ரீபார்த்தசாரதி கோவில் வருடாந்திர திருவிழாவின் 10-வது நாளான இறுதி நாளின் கண்கவர் நிகழ்வாக இருக்கும். இந்தக் கோவில் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்காக கட்டப்பட்டது. இது இங்கு பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறது (பார்த்தனின் தேரோட்டி பார்த்தன் (அர்ஜூனன்) பாண்டவ இளவசர்கள் ஐவரில் ஒருவன் புராண கதாநாயகர்கள் மகாபாரதம்) ஒன்பது யானைகள் கம்பீரமாக விசேஷ ஆடைகளை அணிந்துக் கொண்டு ஊர்வலத்தில் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

அங்கு சென்றடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் செங்கன்னூர், இங்கிருந்து 25 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம், திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் 92 கி.மீ தொலைவு.

பூரம் திருவிழாக்கள்

ஆராட்டுபுழா பூரம்

இடம் : ஆராட்டுபுழா கோவில், திரிச்சூர்

  • ஆராட்டு புழா  கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கிராமம் ஆகும். திரிச்சூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்தக் கிராமம் இந்த வருடாந்திர விழாவின் காரணமாக ஆராட்டுபுழா பூரம் எனப் பெயர் பெற்றது. இது ஐயப்ப சுவாமிக்காக சாஸ்தா கோவிலில் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவின் போது அங்கு வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை பக்கத்து ஊரிலுள்ள தேவர்களும் தேவதைகளும் பார்க்க வருவார்கள் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
  • ஆராட்டுபுழா வருடாந்திர திருவிழா முற்றிலும் மாறுபட்ட முறையில் முழு கம்பீரத்தோடு கொண்டாடப்படுவதால் அனைத்துப் பூரம் திருவிழாக்களின் தாய் என இது அழைக்கப்படுகிறது. சாஸ்தா கோவில் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. மற்றும் இந்த விழாக்கள் கோவில் வளாகத்திலேயே நடத்தப்படுகிறது.
  • இந்த ஆடம்பரமான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தக் கிராமத்தின் அருகிலும் தொலைவிலும் வாழும் மக்கள் இந்தக் கிராமத்திற்கு வருவர். விழாவின் உச்சகட்டம் உண்மையிலேயே கடைசி இரு நாட்களாகும். கடைசி நாளுக்கு முந்தைய நாள் மாலையில் அலங்கார யானைகள் ஊர்வலம் மற்றும் பத்தி பஜனை கச்சேரிகள் சாஸ்தா விந்தி மேளம் யாவும் இந்த விழாவின் ஒரு பகுதியாகும்.
  • சாஸ்தா விந்தி மேளத்தின் போது பல பாரம்பரிய விளக்குகளையும் தீவெட்டிகளையும் சுமந்தபடி செல்வது ஒரு நல்ல அழகு சூழலாக இருக்கும். இந்தத் திருவிழா முடிந்ததும் பக்கத்து ஊரிலிருந்து சுமந்து வந்த கடவுள்களோடு அருகில் உள்ள நெல் வயல்களில் 61 யானைகள் வரிசையாக மக்கள் கூட்டத்திற்குள் நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். விடியற்காலையிலேயே அந்த இடம் முழுவதும்  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பஞ்சவடியம், பஞ்சாரிமேளம் மற்றும் பாண்டிமேளம் ஆகியவை தமது நல்ல இசையை தர இன்னொரு புறத்தில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் முத்துக் குடைகளையும் (முத்துக்களால் மின்னும் குடைகள்) மற்றும் வெண்சாமரம் (வெள்ளை விசிறி) ஆகியவற்றை வீசியபடி வருவது கண்ணைக் கவரும் காட்சியோடு கூட்டத்தை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.
  • விடியற்காலையில் பக்கத்து ஊர் கோவில்களிலிருந்து சுமந்து வந்த தெய்வங்களை சுமந்தபடி யானைகள் அருகிலுள்ள ஆற்றிற்கு ஆராட்டு விழா நிகழ்ச்சிக்காகச் செல்லும்.
  • இந்த விழாவில் மூர்த்தியை முழுவதுமாக ஆற்றில் மூழ்க வைத்து மந்திரங்களையும் பூக்களையும் காணிக்கையாகப் படைத்து புனிதப்படுத்தும் சடங்கு நடைபெறும் இறுதி இரண்டு நாளில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டுவிழா நடைபெறும்.
  • ஆராட்டு பூரம் அனைத்துத் தேவர்களையும் தேவியரையும் ஒன்று சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உண்மையிலேயே மக்களை ஈர்ப்பதற்காகவே இந்த விழா ஆடம்பரமான முறையில் நடைபெற்று வருகிறது.
  • அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : திரிச்சூர் 14 கி.மீ தொலைவு.
  • அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், திருச்சூரிலிருந்து 58 கி.மீ தொலைவு.

திரிச்சூர் பூரம்

இடம் : தேக்கின்காடு மைதானம், திரிச்சூர் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திரிச்சூர் பூரம் கேரளாவின் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழா என்பதைத் தனது ஆடம்பரம் மற்றும் அழகு காட்சி மூலம் நிரூபிக்கிறது. ஆயிரங்கணக்கான மக்கள் அனைத்து நிலையில் உள்ளவர்களும் திருச்சூரின் தேக்கின் காடு மைதானத்திற்கு பூரம் விழாவைக் கொண்டாட வந்துவிடுவார்கள். இந்தத் திருவிழா வடக்கும்நாத கோவிலின் வளாகத்தில் நடைபெறும். இந்தத் திருவிழா பிற நிகழ்ச்சிகளுக்கிடையில் 30 அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பு குடமாட்டம், படகுப் போட்டி, செண்டமேளம் மற்றும் பஞ்சவடியம் ஆகிய இசைக்கருவிகளை  இசைக்கலைஞர்கள் தங்கள் உன்னதமான திறனோடு இசைத்து இசைவிருந்து வழங்கப்படுவது மனதிற்கு நல்ல விருந்தாக அமையும். கண்கவர் வாண வேடிக்கை விண்ணை முட்ட கடைசி இரண்டு நாட்கள் பழங்கால பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக வழங்கப்படும்.

அங்கு சென்று அடைவதற்கு :  அருகிலுள்ள இரயில் நிலையம் : திரிச்சூர் ஒரு கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், திரிச்சூரிலிருந்து 58 கி.மீ தொலைவு.

உத்ராலிக்காவு பூரம்

இடம் : ஸ்ரீ ருத்திர காளி காவு தேவி கோவில், பருதிப்பரா, வடக்கன்சேரி, திரிச்சூர் மாவட்டம்.

காளி தேவியின் ஸ்ரீ ருத்திர மகாகாளி காவு கோவில் வருடாந்திர திருவிழா இப்பகுதியில் புகழ்வாய்ந்த உத்ராளி காவு பூரம் என்று அழைக்கப்படுகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது இரவும் பகலும் யானை அணிவகுப்பு நடைபெறும். இறுதிநாள் பூரம் நாள் எனக் கொண்டாடப்படும். அப்போது 21 யானைகள் பாரம்பரிய அலங்கார ஆடைகள் அணிந்து வண்ணமயமான குடைகளை தூக்கியபடி வெண் சாமரம் வீசிக்கொண்டு (விசிறி வெள்ளைக்கலரில் வீசுதல்) மற்றும் ஆலவட்டம் (மயில் இறகு விசிறி) வீசியபடி அணி வகுத்து வரும். பஞ்சவடியம் மற்றும் பாண்டிமேளம் போன்ற பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்க கலை நயத்தை வெளிப்படுத்தும். விழாவின் போது கலாச்சார திருவிழாவான கிராமியக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு :  அருகிலுள்ள இரயில் நிலையம்: திரிச்சூர் 20 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், திருச்சூரிலிருந்து 58 கி.மீ தொலைவு.

நன்மாற வள்ளங்கி வேளா

இடம் : நெல்லிக்குளங்கற பகவதி கோவில் நன்மாற, பாலக்காடு மாவட்டம்.

நன்மாற வள்ளங்கி வேளா திரிச்சூர் பூரம் விழாக்களும் இரண்டாவது பிரசித்திப் பெற்ற விழாவாகும். நன்மாற மற்றும் வள்ளங்கி கிராம மக்கள் நெல்லிக்குளங்கற பகவதிக்குச் செய்யும் கூட்டுப்பிராத்தனை இவ்விழாவாகும். கும்மாட்டி, காரிமேளா, ஆண்டிவேளா மற்றும் வெவ்வேறு வகை கிராமியக்கலைக் காட்சிகள் இங்கு நடைபெறும். வேளாவின் கடைசி நாள் 30 அலங்கரிக்கப்பட்ட யானைகள் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு குடையின் கீழ் சேர்ந்து நிற்பது கண்கொள்ளா காட்சியாகும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : பாலக்காடு 40 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம், பாலக்காட்டிலிருந்து 55 கி.மீ தொலைவு.

பரியனம்பேட்டா பூரம்

இடம் : பரியனம்பேட்டா பகவதி கோவில், காட்டுகுளம், பாலக்காடு மாவட்டம்.

பூரம் கடவுளான பகவதிக்கான கோவிலில் 7 நாட்கள் நடைபெறும் வருடாந்திர விழா இதுவாகும். பூரத்தின் இறுதிநாள் 21 அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலம் நடைபெறுவது இந்தத் திருவிழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

காலமெழுத்து பாட்டு (இசை சூழ தேவி சிலையைத் தரைக்கு கொண்டு வரும் சடங்கு) எல்லா விழாக்களிலும் நடத்தப்படுகிறது. மதச் சம்பந்தமான மற்றும் கிராமிய கலைகளான காலவேளா (காளை அணிவகுப்பு) மற்றும் குதிரைவேளா (குதிரை அணிவகுப்பு காட்சி) பூத்தானம் திறயும் ஆகியவை இறுதிநாளில் நடைபெறும்.

திருவிழாவின் போது கலாச்சார கலைகளான கதக்களி மற்றும் சாக்யார் கொட்டு ஆகியவையும் இடம் பெறும். விழா நாட்களில் அனைத்து இரவுகளிலும் பொம்மலாட்டம் எனப்படும் தோல் பாவைக் கூத்து என்னும் பழைமையான கிராமியக்கலை நடத்தப்படும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : பாலக்காடு 45 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம், பாலக்காட்டிலிருந்து 55 கி.மீ தொலைவு.

சின்னகாத்தூர் பூரம்

இடம் : ஸ்ரீ சின்னகாத்தூர் பகவதி கோவில், பலப்புறம், பாலக்காடு மாவட்டம்.

நெடுநாட்களாக நடைபெற்றுவரும் சின்னகாத்தூர் பகவது கோவிலின் சிறப்பம்சம் 33 நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் மாலையில் ஊர்வலமாக செல்வது ஆகும்.

இந்தப் பாரம்பரியக் கோவில் பஜனைக் கச்சேரி ஒரு அற்புத காட்சியாகும். 16 நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் மற்றும் எட்டு காளைகள் பக்தர்களால் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்படும். கோவிலுக்குக் கொண்டு வரப்படும். வெள்ளாட்டு பூத்தானம் திறயும், ஆண்டி வேடன், கரிவேளா, கும்பம்களி (குடத்துடன் ஆடும் நடனம்) முதலியவைகளோடு தோல்பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) பூரத்திற்கு முந்தைய 17 நாட்கள் மாலை வேளையில் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : ஓட்டப்பள்ளம் கோவிலிலிருந்து 5 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம், கோவிலிலிருந்து 85 கி.மீ தொலைவு.

படகு போட்டிகள்

சம்பக்குளம் படகுப் போட்டி

இடம் : சம்பக்குளம் ஆலப்புழா மாவட்டம்.

படகுப் போட்டி காலங்களில் கேரளத்தின் சம்பக்குளம் வள்ளம்களி அல்லது படகுப் போட்டி, மாநிலத்தில் புகழ்பெற்ற படகு போட்டிகளுள் ஒன்றாகும். இந்த நிகழ்வின் சிறப்பம்சம் ஆச்சரியமான நீர் மிதவைகள் அலங்கரிக்கப்பட்ட படகுகள், ரீகல், சுண்டன்வள்ளம் (பாம்பு படகுகள் அவை பாம்பு போன்று வளைந்து நெளிந்து செல்வதால்) ஆகியவையாகும். ஒவ்வொன்றும் 100 அடி நீளமாக இருக்கும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : ஆலப்புழா 26 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு.

நேரு கோப்பை படகு போட்டி

இடம் : புன்னமாட காயல்கள் , ஆலப்புழா மாவட்டம்.

நேரு கோப்பை படகு போட்டி கேரள காயல்களில் நடைபெறும் ஒரு சிறப்பான போட்டியாகும். இந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் இரண்டாம் சனிக்கிழமை நாளில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். மயிர்கூச்செறியும் படகுப்போட்டிக்கான பரிசுகள், இந்திய முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு பெயரில் வழங்கப்படுகிறது. இது தவிர சுண்டன்வள்ளம் போட்டி (பாம்பு படகுகள்) போட்டிகள் மற்றும் நாட்டுப்படகுகள் போட்டிகள் படகுகளின் அணிவகுப்பு செய்யப்பட்ட படகுகள் ஆகியவை நீரில் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அங்கு சென்று அடைவதற்கு :  அருகிலுள்ள இரயில் நிலையம் : ஆலப்புழா 8 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு.

ஆரன்முளா வள்ளம்களி

அழகிய படகுப் போட்டியான ஆரன்முளா வள்ளம்களி (பாம்பு படகுப் போட்டி) ஒரு பாரம்பரிய படகுப் போட்டி, மிகவும் கவர்ச்சிகரமான மயிர்க்கூச்செறியும் படகுப் போட்டி என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கம்பீரமான பாம்பு படகுப்போட்டி பம்பா ஆற்றின் தெளிந்த நீரில் சுற்றி சுற்றி ஊர்ந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த நிகழ்ச்சி அரன்முளா பார்த்த சாரதி கோவில் மற்றும் சில சமய தோற்றங்களோடு மிகவும் தொடர்புடையது. பண்டையகாலத்தில் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் அரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு சில சடங்குகளைச் செய்வதற்கு திருஓண சத்யா (ஓணம் பெருவிருந்து) வுக்காக தேவையாக இருந்தது. அவை பாம்புப் படகுகள் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த பாரம்பரியப்பயணம் (பிரசித்தி பெற்ற) வள்ளம்களி மூலம் நடத்தப்பட்டது.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : செங்கானூர் 10 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம், 117 கி.மீ தொலைவு.

பாயிப்பாடு படகுப் போட்டி

இடம்: பாயிப்பாடு ஆறு, பாயிப்பாடு அருகில் ஆலப்புழா.

பாயிப்பாடு ஆற்றில் வருடந்தோறும் உண்மையான குழு உணர்வோடு நடக்கும் படகுப்போட்டி பார்வையாளர்களைக் கவர்வதாக இருக்கும். இதில் வேகத்தைப் பற்றி பிரச்சனை இல்லை. போட்டியின் போது பார்வையாளர்கள் எழுப்பும் மகிழ்ச்சி ஆரவாரம் கழி வலிப்பவர்களிடையே ஒரு எழுப்புதல் உணர்வைத்தூண்டி போட்டி முழுவதும் அதே உணர்வுடன் செல்ல தூண்டுகோலாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் வசீகரம் பாம்புப் படகுப் போட்டி, நீர் மிதவைகள், மிதமிஞ்சிய அழகுக்காட்சி, அலங்கரிக்கப்பட்ட படகுகள் மற்றும் பல கிராமிய நடன நிகழ்ச்சிகளும் ஆகும்.

அங்கு சென்று அடைவதற்கு :  அருகிலுள்ள இரயில் நிலையம் : ஹரிப்பாடு 5 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து 85 கி.மீ தொலைவு.

படையானி திருவிழாக்கள்

கடம்மனிட்டா படையானி

இடம் : கடம்மனிட்டா தேவி கோவில் , பத்தன்னம்திட்டா மாவட்டம்.

கடம்மனிட்டா என்பது தேவி கோவிலில் நடைபெறும் பிரசித்திபெற்ற படையானி திருவிழா ஆகும். படையானி என்பது தாய் தெய்வத்திற்கு வழங்கப்படும் நேர்த்திக் கடனாகும். இது உற்சாகம் மற்றும் அழகுமிக்க ஒரு வண்ணமயமான வழிபாடு ஆகும். இது ஒவ்வொரு வருடமும் மலையாள மாதமான மேடம் (ஆரிஷ்) த்தின் முதல் நாளில் இருந்து 10 –ஆம் நாள் வரை கொண்டாடப்படும் இந்த திருவிழா பத்தாமுடையம் எனப்படுகிறது.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : திருவெல்லா, பத்தன்னம்திட்டாவிலிருந்து 30 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் , திருவெல்லாவி லிருந்து 105 கி.மீ தொலைவு

நீலம்பேரூர் பூரம் படையானி

இடம் : பள்ளி பகவதி கோவில், நீலம்பேரூர் (ஆலப்புழா மாவட்டம்) கோட்டயத்திலிருந்து 16 கி.மீ தொலைவு.

மலையாள மாதமான சிங்கம் (ஆகஸ்ட் / செப்டம்பர்) தின் பூரம் நாளில் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள நீலம்பேரூர் பள்ளி பகவதி கோவில் வளாகம் படையானி திருவிழாவால் களைகட்டிக் காணப்படும். இந்த அழகிய சிற்றூரில் நடைபெறும் திருவிழா முதன் முறை பார்ப்பவர்களைப் பல வழிகளில் கவருவதாக இருக்கும்.

படையானி என்பது வீரர்களின் வரிசை எனப் பொருள்படும்.  நீலம் பேரூரில் கொண்டாடப்படும் படையானி கேரளாவின் மற்றப் பகுதியில் நடைபெறுவதை விட சற்று மாறுபட்டிருக்கும். இது ஏராளமான அன்னப்பறவைகளின் உருவங்களை குறிப்பதாகும். அதை உருவாக்குவதை உள்ளூரில் அன்னம்கெட்டு என்று அழைப்பர். இந்த வண்ண மயமான ஊர்வலத்தில் புராணக் கதாபாத்திர கதாபாத்திரங்களும் இரவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : கோட்டயம் 16 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் பன்னாட்டு விமான நிலையம், 76 கி.மீ தொலைவு.

தேயம் திருவிழாக்கள்

கானத்தூர் நால்வர் பூதாஸ்தானம்

இடம் : கானத்தூர் நால்வர் பூதாஸ்தானம் ,  காஸர்கோடு மாவட்டம்.

தேயம் கேரளாவின் வண்ணமயமான பாரம்பரிய நடனம். இந்தியாவின் மிகப் பழைமையான கலைவடிவமாகும். இதில் நடனம், நையாண்டி மற்றும் இசை ஆகியவற்றோடு பழங்கால நாடோடி கலாச்சாரத் தத்துவங்கள் அதாவது தலைவர்களை வணங்குதல் மற்றும் முன்னோர்களின் ஆவிகளை வணங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கொண்டதாகவும் இது இருக்கும். சாமுண்டி தேயம், விஷ்ணுமூர்த்தி தேயம் போன்றவற்றோடு கன்னூரின் கவர்ச்சிகரமான நடன வடிவமான ஆரோ ஆப் தேயமும் இந்த விழாவில் நடைபெறும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : காஸர்கோடு 20 கி.மீ தொலைவு

அருகிலுள்ள விமான நிலையம் : மங்களூர் 50 கி.மீ தொலைவு.

குட்டிக்கோல் தாம்புரட்டி தேயம்

இடம் : குட்டிக்கோல் தாம்புரட்டி பகவதி கோவில், குட்டிக்கோல் இரிங்கிபுழா அருகில் , காஸர்கோடு.

குட்டிக்கோல் தாம்புரட்டி தேயம் திருவிழா பெரும்பாலான முக்கிய தேயங்களின் கவர்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும். இந்த விழாவின் பிரம்மிக்க வைக்கும் வண்ணம் மற்றும் அலங்கார மேடை ஆகியவை மறக்க முடியாத ஒன்றாகும்.

அங்கு சென்று அடைவதற்கு : அருகிலுள்ள இரயில் நிலையம் : காஸர்கோடு 28 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : மங்களூர் , 50 கி.மீ தொலைவு.

பெரும்திட்டா தாரவாடு குட்டம்குழி

இடம் : பெரும்திட்டா, சந்திர புரம் அருகில், காஸர்கோடு மாவட்டம்.

கேரளாவின் அழகிய கலைவடிவமான தேயத்தை பாருங்கள். இதனுடைய ஆடம்பரம் மற்றும் வகை ஆகியவற்றை பெரும்திட்டா தாரவாடு கொண்டிருக்கும்.

அங்கு சென்று அடைவதற்கு :

அருகிலுள்ள இரயில் நிலையம் : காஸர்கோடு 26 கி.மீ தொலைவு.

அருகிலுள்ள விமான நிலையம் : மங்களூர் 50 கி.மீ தொலைவு.

கலை திருவிழாக்கள்

நிஷாகாந்தி திருவிழா

நிஷாகாந்தி கலை மற்றும்  இசைத் திருவிழா - திருவனந்தபுரம், கேரளா, இந்தியா

ஹேய் திருவிழா

இலக்கியம் மற்றும் கலைகளின் திருவிழாவான ஹேய் திருவிழா உலகின் மிகப்பெரிய இலக்கியத் திருவிழா ஆகும். இது முதன் முதலாக இந்தியாவில் உள்ள கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள கனகாக்குன்னு அரண்மனையில் நவம்பர் 12 முதல் 14 வரை 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இலக்கிய படைப்புகளுக்காக மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா முன்னோட்டக் காட்சிகள் யாவும் நடைபெறும் ஒரு மாறுபட்ட திருவிழாவாகும். 1988 –இல் பீட்டர் பிளாரன்ஸ் மற்றும் நார்மன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்த விழா சிறந்த பாரம்பரிய நிகழ்ச்சியாக இன்று வரை நல்ல முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹேய் ஆன் வை, போவேஸ், வேல்ஸ் –இன் திருவிழா மே மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆதாரம் : கேரளா சுற்றலாத்துறை

Filed under:
2.9512195122
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top