অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வரலாறு

வரலாறு

ஒரு கண்ணோட்டம்

கேரளா 14 செயலாட்சி பிரிவுகள் அல்லது மாவட்டங்களைக் கொண்ட இந்திய குடியரசின் ஒரு மாநிலமாகும். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளுக்காக இம்மாநிலத்தில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.

இம்மாநிலத்தில் பிரயாணம் செய்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சில உடனடித் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

(i) அமைவிடம் : இந்தியாவின் தென்மேற்கு முனை

(ii) பரப்பு   :   38,863 சதுர கி.மீ

(iii) மக்கள் தொகை   :   31,84,1374

(iv) தலைநகர்   :   திருவனந்தபுரம் (ட்ரிவேண்ட்ரம்)

(v) மொழி   :   மலையாளம், ஆங்கிலம் பரவலாக பேசப்படுகிறது

(vi) சமயம்   :   இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்

(vii) நேரம்  :  GMT +5.30

(viii) நாணயம்  :  இந்திய ரூபாய்

(ix) காலநிலை   :   அயனமண்டல காலநிலை

(x) கோடை  :  பிப்ரவரி - மே (24-33°C )

(xi) மழைக்காலம்   :   ஜூன் - ஆகஸ்ட் (22 - 28°C) அக்டோபர் - நவம்பர்

(xii) குளிர்காலம்   :   நவம்பர் – ஜனவரி (22 - 32°C)

(xiii) மாவட்டங்கள் : பழைய பெயர்

xiv. காசர்கோடு

xv. கன்னூர்  :  கன்னனூர்

xvi. வயநாடு

xvii. கோழிக்கோடு : காலிகட்

xviii. மலப்புரம்

xix. பாலக்காடு  :  பால்காட்

xx. திரிசூர்  :  டிரிச்சூர்

xxi. எர்ணாகுளம்

xxii. இடுக்கி

xxiii. கோட்டயம்

xxiv. ஆலப்புழா  :  ஆலெப்பி

xxv. பத்தனம்திட்டா

xxvi. கொல்லம் :  கொய்லோன்

xxvii. திருவனந்தபுரம் : ட்ரிவேண்ட்ரம்

முக்கிய நகரங்கள் : பழைய பெயர்

திருவனந்தபுரம் : ட்ரிவேண்ட்ரம்

கொச்சி  : கொச்சின்

கோழிக்கோடு : காலிகட்

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்

தொலைபேசி : + 91 471 2501424

உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல் / வரை :  டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை

பன்னாட்டு விமான நிலையங்கள் (நேரடி) : முதல் / வரை :  கொழும்பு, மாலத்தீவுகள், துபாய், ஷார்ஜா, பக்ரைன், டோபா, ராஸ்-அல்-ஹைமா, குவைத், ரியாத், பிஜ்யாய்ரா, சிங்கப்பூர்.

ஏர் இந்தியா தொலைபேசி : + 91 471 2310310

இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2318288

ஜெட் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2500710, 2500860

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2471810

கல்ஃப் ஏர் தொலைபேசி : + 91 471 2728003, 2501206

ஓமன் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2728950

குவைத் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2720013

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2723141

கத்தார் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 3919091, 3919092

பாரமெளண்ட் தொலைபேசி : + 91 99954 00003

கிங்பிஷர் தொலைபேசி : + 91 471 2508822

ஜெட்லைட் தொலைபேசி : + 91 471 4010033

கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் (CIAL), நெடும்பசேரி

தொலைபேசி : + 91 484 2610113

உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : மும்பை, சென்னை, கோவா, அகாத்தி, பெங்களூரு

பன்னாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : ஷார்ஜா, துபாய், அபுதாபி, டெக்ரான், பக்ரைன், ரியாத், மஸ்கட்

ஏர் இந்தியா தொலைபேசி : + 91 484 2610050

இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2371141

ஜெட் ஏர்வேல்ஸ் தொலைபேசி : + 91 484 2610037

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2352689

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2358131

குவைத் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 484 2382576

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2361263

எமிரேட்ஸ் தொலைபேசி : + 91 484 40844444

கத்தார் ஏர்வேஸ் (கால் சென்டர : 0124 – 4566000)

ஜெட்லைட் தொலைபேசி : + 91 484 2611340

ஏர் டெக்கான் தொலைபேசி : + 91 484 2610289

பாராமெளண்ட் தொலைபேசி : + 91 484 2610404

காலிகட் பன்னாட்டு விமான நிலையம், காரிபூர்

தொலைபேசி : +91 483 2710100

உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை :  மும்பை, சென்னை, கோயம்புத்தூர்

பன்னாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : ஷார்ஜா, பக்ரைன், துபாய், தோஹா, ராஷ்-அல்-கைமா, குவைத், ரியாத், ஃபுஜாரியா

ஏர் இந்தியா தொலைபேசி : + 91 483 2766669

இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 483 276643

ஜெட் ஏர்வேல்ஸ் தொலைபேசி : + + 91 483 2740052

காவலர் உதவிக்கு

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது + 91 98461 00100

இரயில் பயணங்களின் போது + 91 98462 00100

பருவகாலங்கள்

கேரளா, கீழ்நோக்கி நீளவாக்கில், முழுவதும் கடற்கரையைக் கொண்ட வெப்ப மண்டல நிலத்தையும் வடக்கிலிருந்து வரும் உலர்ந்த காற்றை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு அரணாக மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதாலும் ரம்மியமான மற்றும் சீரான காலநிலையை ஆண்டு முழுவதும் பெற்றிருக்கிறது. மழைக்காலம் (ஜூன்-செப்டம்பர் மற்றும் அக்டோபர் - நவம்பர்) மற்றும் கோடைகாலம் (பிப்ரவரி - மே) ஆகியவை குறிப்பிடத்தக்க பருவங்களாகும். குளிர்காலத்தில் வெப்பநிலை இயல்பான அளவை விட சற்று குறைந்து 28–32°C வரை இருக்கும்.

புவியியல்

மேற்கில் அரபிக்கடல், கிழக்கில் 500-2700 மீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலை, மற்றும் நாற்பத்து நான்கு ஆறுகள் ஆகியவற்றை கொண்டிருப்பதன் காரணமாக கேரளா மாறுபட்ட புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. உயர்ந்த மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் முடிவில்லா காயல்கள் மற்றும் பரந்த கடற்கரை என்று கேரளா அனைத்து புவியியல் கூறுகளையும் பெற்றிருக்கிறது.

மக்கள்

இந்தியாவின் மிகவும் படிப்பறிவுள்ள மற்றும் சமூகத்தில் முன்னேறிய நிலையில் கேரள மக்கள் இருப்பதால் அவர்கள் ஒரு தனித்தன்மையான பரந்தநோக்குக் கொண்டுள்ளனர் என்பது, அவர்களது பொறுமை மற்றும் சகிப்பு தன்மை மூலம் பிரதிபலிக்கிறது. இதன் மூலம் கேரளாவின் பண்பாடு உலகெங்கிலும் உள்ள பல இடங்கள் மற்றும் இனங்களோடு இணைந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துவருகிறது.

புதிய மரபுகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மனித சிந்தனை மற்றும் முயற்சி ஆகிய மதிப்பு மிக்க குணங்களை ஏறத்தாழ ஒவ்வொரு நிலையிலும் கொண்டிருத்தல் ஆகியவை காலங்கடந்து நிற்கும் கேரள மக்களின் குறிப்பிடத்தக்க திறன்களாக இருக்கின்றன. இந்த நேர்மறை எண்ணம் மாற்றத்தைத் தந்ததோடு கேரள மக்கள் எத்தகையவர்கள் என்பதையும் காட்டுவதோடு, சமூகத்திலிருந்து அவர்களை தனித்தன்மை உடையவர்களாகவும் காட்டுகிறது.

கேரளத்தினர் அதிக விழிப்புணர்வும் அரசியல் உணர்வும் மிக்கவர்கள். கல்வித் துறையிலும் கேரளத்தினர், ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே பெண்கள் கல்வி அறிவு விகிதம் கேரளாவில்தான் அதிகமாக உள்ளது. ஒரு வேளை, இது, குடும்பத்திலும் சமூகத்திலும் இம்மாநில பெண்கள் தனி உரிமையை பெற்றிருந்தமையால் கூட இருக்கலாம்.

வரலாறு

கேரளாவின் வரலாறு வணிகத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இன்றும் நறுமணப் பொருட்கள் வணிகம் தொடர்ந்து வருகிறது. இந்தியாவின் நறுமணப் பொருட்கள் வியாபார மையமாக இருந்ததோடு, கிரேக்கம், ரோமானியம், அரேபியா, சீனர், போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர் மற்றும் பிரிட்டீஷ்காரர்கள், யாத்ரீகர்கள் வணிகர்கள் என உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு விருந்தளிக்குமிடமாகவும் பழங்கால கேரளா இருந்துள்ளது. அநேகமாக அனைவரும் தம் நாட்டின் கட்டடக்கலை, சமையற்கலை, இலக்கியம் யாவற்றின் சுவட்டினையும் ஏதோ ஒரு வடிவில் இங்கு விட்டுச் சென்றுள்ளனர்.

வாழ்க்கைத்தரம்

“கேரளா வளர்ந்த நாடுகளுள் விநோதமான முரண்பட்ட கொள்கையும், வருங்காலத்தில் மூன்றாம் உலகத்தை படைக்கும் என்ற உண்மையான நம்பிக்கை தரும் மாநிலமாகவும் உள்ளது. பெரும்பாலான நிலப்பகுதி நெற்பயிரால் சூழப்பட்ட சமவெளிகளை கொண்டது, புள்ளி விவரப்படிப் பார்த்தால் கேரளாவின் சமூக வளர்ச்சி எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது” என்று பில் மிக்கிபென், தேசிய புவியியல் பயணி என்ற வெளியீட்டில் அக்டோபர் 1999-இல் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலம் மற்றும் தரமான வாழ்க்கை என்ற நிலையில் பார்க்கும் போது கேரளா இந்தியாவின் மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் பிற குறைந்த வருவாய் நாடுகளிலிருந்தும் மாறுபட்டு கேரளத்தினர் கல்வியிலும் உடல் நலத்திலும் மேலை நாடுகளுக்கு இணையான நிலையை அடைந்துள்ளனர். இந்தியாவின் அதிகப்படிப்பறிவு விகிதம், உயர்வான வாழ்க்கைத்தரம், குறைந்த குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை இம்மாநிலத்தின் வரமாகும்.

கேரளாவின் அனைத்து சமுதாய நிலையில் உள்ள மக்களுக்கும் பெருமளவில் சேவைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதோடு, பெருமளவில் கட்டுப்பாடு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாநிலம் நகரமயமாக்கலில் முதன்மையாகவும் சட்டம் ஒழுங்கு பராமரித்தலை நல்ல முறையில் கடைபிடிக்கும் மாநிலமாகவும் உள்ளது.

பொறுப்பு சுற்றுலா

சுற்றுலாவின் நேர்மறை விளைவுகளை அதிகப்படுத்தி எதிர்மறை விளைவுகளை குறைப்பதற்கு பொறுப்பு சுற்றுலா (RT) ஒரு நல்ல வழி என்று உலகெங்கிலும் பெருமளவில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கேரள மாநிலம் இந்த RT முறையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் முன்னோடியாக உள்ளது. இந்த மாநிலத்திலுள்ள குமரகோம் இந்தியாவிலேயே முதன்முதலாக RT –ஐ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டிய இடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுதல், அங்குள்ள மக்கள் மற்றும் அங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு சுற்றுலா மூலம் இயலக் கூடிய விதத்தில் ஆதாயம் பெற முடிகிறது. சுற்றுசூழலிக்கு உதவும் விதத்தில் இயற்கையாக அல்லது சமுதாய சீர்கேடு நடைபெறாவண்ணம் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுலா உருவாக்கமாக இது உள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க உண்மை யாதெனில் RT உள்ளுர் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைச்சூழலை அமைத்து தருகிறது என்பதுவே ஆகும்.

கேரள புதுப்பிக்கப்பட்ட பொறுப்புசுற்றுலா

பொறுப்பு சுற்றுலா(RT) கேரள சுற்றுலா துறையின் ஒரு புதுமையான மற்றும் தொலைநோக்குக் கொள்கையாகும். இது தனது கட்டத்தின் ஒரு செயலை முடித்திருப்பது குறிப்பிடத்தகுந்த மைல் கல்லாக உள்ளது. ஒரு முன்னோடி பக்கமாக இந்த முயற்சிகள் கோவளம், குமரகோம், தேக்கடி மற்றும் வயநாடு ஆகிய நான்கு சுற்றுலாத்தலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து இடங்களிலும் குமரகோம் பொறுப்பு சுற்றுலாவை நடைமுறைப்படுத்துவதில் ஒரு வெற்றி பெற்ற மாதிரி இடமாக உள்ளது. இது கேரளாவின் சிறந்த பொறுப்பு சுற்றுலாமுயற்சி இடம் என்று இந்திய சுற்றுலா அமைச்சகத்தால் பெருமைப் படுத்தப்பட்டுள்ளது.

தரிசு நில வேளாண்மை மற்றும் வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல்

 • மீன் பண்ணைகள் மற்றும் தாமரை பயிரிடுதல்
 • ஹோட்டல் தொழில்களுக்கிடையே உறவை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் உற்பத்திகளுக்கு கிராக்கியை ஏற்படுத்துதல்
 • நினைவுப்பொருள் தொழிலை மேம்படுத்துதல்
 • சமூக அடிப்படையிலான சுற்றுலா தயாரிப்புகள்
 • உள்ளூர் கலைவடிவங்கள் மற்றும் கலாச்சார மேம்பாடு
 • கலாச்சார சுற்றுலா மற்றும் பாரம்பரிய  சமையல்வகை
 • சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுலா மேலாண்மை
 • சுற்றுச் சூழல் பாதுகாப்பு
 • ஆற்றல் சேமிப்பு அளவுகள்
 • விரிவான ஆற்றல் வரைபடம் இடுதல்

பாரம்பரிய உணவு கார்னர்கள்

இது வயநாட்டிலுள்ள ஒரு மாடல் முயற்சியாகும். எடக்கல் குகைகள் மற்றும் போக்கெட் ஏரி பகுதியில் RT செல் இரண்டு பாரம்பரிய உணவு கார்னர்களை தொடங்கியுள்ளது. எடக்கல் குகைகளுக்கு அருகிலுள்ள கடை வயநாட்டிலுள்ள பழங்குடி சமுதாய மக்களால் நடத்தப்படுகிறது. போக்கெட் ஏரியில் உள்ள கடை குடும்பஸ்ரீகளால் நடத்தப்படுகிறது. எடக்கலில் உள்ள பாரம்பரிய உணவு கார்னரில் பழங்குடி, பாரம்பரியம் மற்றும் சுவையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கு உள்ளாக 1.25 லட்சம் வரை வருவாய் இதன் மூலம் ஈட்டப்பட்டுள்ளது.

இதை நடைமுறைப் படுத்தும் போது உள் பகுதிகளின் சமூகப் பொறுப்பும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த செயல்பாட்டினை மேலும் மெருகூட்டும் வகையில் புனித தளங்களோடு தொடர்புடைய விழாக்கள் மற்றும் திருவிழாக்கள், சுற்றுலாவோடு தொடர்புடைய முதன்மை சமுதாய சிக்கல்கள், பாதுகாப்பு சிக்கல்கள் தொடர்பான அறிவினை உருவாக்குதல் பாரம்பரிய உணவு, உள்நாட்டு படகு பயணம், உள்கட்டமைப்பு இடைவெளி கணக்கீடு, ஒழுங்கு நடவடிக்கையை உருவாக்குதல், சமூக அடிப்படையிலான சுற்றுலா உற்பத்திகளை கண்டறிதல் வயநாடு நினைவுப் பொருட்கள் மேம்பாடு சுற்றுலாத் தல கையேடு, வளங்களின் வரைபடம், சமூக ஆய்வு, உள்ளக சுற்றுலாதல ஆய்வு மற்றும் தொழிலாளர் கையேடு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எல்லா பிரிவுகளிலும் RT செல் விரிவான அறிக்கைகளையும் திட்டங்களையும் அளித்துள்ளது.

சுற்றுலாத்தல வளம் பற்றிய கையேடு

வயநாடு மாவட்டத்தின் முக்கிய வளங்கள் மற்றும் கிடைக்கும் முக்கிய பொருட்கள் ஆகியவை அடங்கிய கையேடு ஒன்றினை RT செல் தயாரித்துள்ளது. இந்த கையேட்டினை உருவாக்குவதற்கு முன்பாக RT செல் அப்பகுதி பற்றிய விரிவான தகவல்களை திரட்டி உள்ளது. இது அடிமட்ட அளவில் இருந்தது மொத்தமாக அனைத்து வளங்களின் வரைபடத்தையும் கொண்டதாக உள்ளது. இயற்கை பாரம்பரியம், வரலாறு, புவியியல், சமுதாயம், முதலியவற்றை உள்ளடக்கியதாக இந்த கையேடு உள்ளது.

விழா காலண்டர்

கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக RT செல் வயநாட்டிலுள்ள முக்கிய புனித தளங்கள் அடங்கிய விவரமான விழா காலண்டர் ஒன்றினை தயாரித்துள்ளது. இதில் வரலாறு, திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், கோவில் கலைகள் ஆகியவை பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு சமுதாயத்தினரின் நம்பிக்கை மற்றும் வழிபாடுகள் ஆகியவற்றைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள உதவுகிறது.

நினைவுப் பொருள் மேம்பாடு

உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த சுற்றுலா தலம் பற்றிய புதிய பக்கத்தை தருவதற்கான தூண்டு கோலாக இந்த நினைவுப் பொருட்கள் உள்ளது. மூன்று வகையான நினைவு பொருட்கள் மூட்டைகள், எடக்கள் குகைகளின் சித்திரம் மற்றும் காப்பி கொழுந்து தயாரிப்புகள் ஆகியவை ஆகும். இப்போது இந்த நினைவு பொருட்கள் யாவும் சாம்ருதி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

எடக்கல் குகைகளுக்கான பார்வையாளர் மேலாண்மை திட்டம்

வயநாட்டிலுள்ள மிகவும் அழகான மிகவும் பழைமையான பாறை குகையான எடக்கல் குகைகள் அதிக மக்கள் வந்து போகும் சுறுசுறுப்பான இடங்களுள் ஒன்றாகும். சுற்றுலாத் தலத்தில் வந்து குவியும் பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து தருவதற்காக ஒரு பயனுள்ள பார்வையாளர் மேலாண்மை திட்டத்தை RT செல் தயாரித்துள்ளது.

வயநாட்டின் கிராமப்புற வாழ்க்கை அனுபவம்

வயநாட்டின் கிராமப்புற வாழ்க்கை அனுபவத்தை அனுபவிப்பதற்காக RT செல் இரண்டு தொகுப்புகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று ஃப்ராக்னெண்ட் ஹில் மற்றது இயற்கை ஆன்மாவிற்கான பயணம் ஆகியவை ஆகும். பொழுத்தானா கிராமப் பஞ்சாயத்தில் சுகந்தகிரியில் ஃப்ராக்னெண்ட் ஹில் –க்கான சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை வடிவங்களான மூங்கில், களிமண் மற்றும் கோரைப்புல் ஆகியவற்றால் செய்யப்பட்ட உள்ளூர் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.

ஆத்மார்த்தமான இயற்கையை காண கோட்டத்தாரா கிராம பஞ்சாயத்தின் காரியம்குட்டிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்தச் சுற்றுலா தொகுப்பு பழசிராஜாவின் வீரர்களின் அரச கலாச்சார குரிச்சியஸ்யை வழங்குகிறது. இங்குள்ள கூட்டுக் குடும்ப முறையில் அவர்களின் வாழ்க்கை முறையின் தனித்துவம், பாரம்பரியம், சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நாட்டுப்புற வேளாண்மை மற்றும் மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொகுப்பின் மற்றுமொரு கவர்ச்சிகரமான அம்சம் யாதெனில் பட்டு தயாரிப்பின் ஒவ்வொரு நிலையையும் விளக்கும் காட்சிகள் உள்ள பட்டுத் தயாரிப்பு மையம் மற்றும் காப்பி, கழுகு, தென்னை, வாழை, இஞ்சி, மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் போன்றவற்றின் காட்சிகளாகும். மற்றுமொரு முக்கியமான கவர்ச்சி யாதெனில் மீன்கள் உள்ள குளம். இங்கு பாரம்பரிய முறை மீன்பிடி முறைகளை கண்டு மகிழலாம்.

இந்தத் தொகுப்புகளின் மூலம் சுற்றுலா பயணிகள் உள்ளூர் விவசாயிகள், குழந்தைகள், பாரம்பரியமிக்க மருத்துவ பயிற்சியாளர்கள் முதலியவர்களிடம் பழகும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரத்தியேக தொகுப்பு அரிய அனுபவம் மற்றும் கவரும் விதத்திலுள்ள கிராமங்கள் ஆகியவற்றிற்கு சுற்றுலாத்துறையின் பயனை பரிந்துரை செய்து உள்ளூர் சமூகம் அதனை நகரும்படி செய்கிறது.

இவற்றோடு சேர்த்து RT பிரிவானது சமூக கள ஆய்வு மற்றும் உள்ளக சுற்றுலா தள ஆய்வு என அவற்றை நன்கு ஆய்வு செய்து உள்ளூர் மக்களின் அறிவு மற்றும் தொழில்களை அடையாளம் கண்டு அதனைச் சுற்றுலாத்துறையை நோக்கி ஈர்க்கிறது. இது சுற்றுலாத்தலங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தரத்தை கண்டறிய உதவியாக இருக்கும். பாதுகாப்பு முறைகள், நடத்தை நெறி, துண்டு பிரசுரங்கள், சமூக பிரச்சனைகளைக் குறைத்தல் போன்றவற்றையும் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை இந்தப் பிரிவு வழங்குகிறது.

சுற்றுச்சூழல் பொறுப்பு

பிற முக்கிய பொறுப்பான செயல்களைப் போல சுற்றுச்சூழல் பொறுப்பு வேலையும் RT பிரிவு மூலம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. வயநாடு தூய்மை சோச்சி பாரா திட்டம், பூக்கோட் ஏரியில் பிளாஸ்டிக்கால் மாசுபடுவதைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் ஆய்வு, தெருவிளக்கு ஆய்வு மற்றும் அரிய மரங்கள் பற்றிய தலையீட்டின் மூலம் நடைபெறும் சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

தூய்மை சோச்சிபாரா

சோச்சிபாரா வயநாட்டிலுள்ள மிகவும் கவர்ச்சியான ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும்.

பூக்கோட் ஏரி

பூக்கோட் ஏரி வயநாட்டிலுள்ள சுத்தநீர் ஏரியாகும். இது ஒவ்வொரு வருடமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆய்வு

RT செல் வயநாட்டில் 17 பொருட்கள் பற்றிய சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இது அடிப்படைத் தகவல், சுற்றுச் சூழல் கொள்கைகள் மற்றும் ஆற்றல் மேலாண்மை ஆகியவற்றை ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

தெருவிளக்கு ஆய்வு

வைத்திரி பஞ்சாயத்தின் தெருவிளக்குகளை நல்ல முறையில் மேளாண்மை செய்வதற்கு RT செல் அந்தந்த பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பற்றி ஆய்வு நடத்தி தெரு விளக்குகள் பற்றி பஞ்சாயத்து அலுவலகத்தில் அரிக்கை சமர்பிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பஞ்சாயத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

ரிய மரங்கள் பற்றி கற்றல்

மனிதனால் சீராக்கப்பட்ட நில அமைப்புகளில் அரிய மர வகைகளை இயற்கை முறை பயிரிடுதல் மூலம் பயிரிடப்படுகிறது. அவற்றிற்கு பிரத்தியேக இயல்வு மற்றும் பல்லுயிர் பரவல் வளமான இடமாக இடம் தேவைப்படுவதால் அவை நன்றாக பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை பின்புலமாகக் கொண்டு இந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து அரிய வகை மரங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான கற்றலுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பூஜ்யம் சகிப்பு பிரச்சாரம்

பொறுப்புள்ள சுற்றுலாத்துறை என்ற குடையின் கீழ் கோவளத்தில் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். இது உண்மையான நிலவரம், சூழல், ஆதாரம் மற்றும் இந்தச் சமூக சீர்கேட்டிற்கான காரணம் ஆகியவற்றை உற்றுநோக்கிய பின்னர் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் விவரகையேடு

சுற்றுலா பிரிவில் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கோடு கோவளத்திலுள்ள வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களின் விவரங்களை RT செல் திரட்டியது. இது தேவைக்கு ஏற்ப வெவ்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் பற்றி முன் கூட்டியே அறிய வைக்கிறது.

கிராம வாழ்க்கை அனுபவ தொகுப்புகள்

கடற்கரை மற்றும் ஏரிப்பகுதியில் ஒரு முழுநாள் சுற்றுலா சென்றுவந்த பின்னர் கோவளத்தில் பார்க்கத்தக்க அரைநாள் சுற்றூலா சென்றுவர கிராம வாழ்க்கை அனுபவ (VLE) தொகுப்புகள் உள்ளன. VLE தொகுப்பு கேரள சுற்றுலாத்துறை மூலம் வரைவு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற வாழ்க்கை அனுபவத் தொகுப்பு என்னும் தனிப்பட்ட மிகவும் புதுமையான வெகு தொலைவு வரை சென்றடையும் பொறுப்பு சுற்றுலா(RT) என்ற முத்திரையில் இது நடைபெற்றது. சுற்றுலா செயல்பாடுகளை புதிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தவும் பொருளுள்ள மற்றும் ஒருவருக்கொருவர் பயனுள்ள சுற்றுலாவாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து புதிய கோணங்களில் அவற்றை உருவாக்கி வந்தது. இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் நடத்துவோர் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை வைத்துள்ளனர். கிராமப்புற வாழ்க்கை அனுபவத் தொகுப்புகள் என்னும் கருத்தை சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக அளித்துள்ளது.

ஒரு சுற்றுலாத் தலத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வாழ்க்கைத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாக்க் கொண்டு கிராமப்புற வாழ்க்கை அனுபவத் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. VLE தொகுப்புகள் என்று அழைக்கப்படும் இந்த தொகுப்புகளின் முக்கிய அம்சம் யாதெனில் ஈட்டப்படும் வருவாயில் அதிக பங்கு சமுதாயத்திற்கே சென்றடைவதாகும். இந்தத் தொகுப்புகளின் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட அதன் மூலம் 65-70% இலாபம் உள்ளூர் மக்களுக்கு அதாவது இந்த தொகுப்பில் பங்காளர்களாக இருப்பவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களின் திறமையை மதிக்கவும் அவர்கள் தங்கள் பாரம்பரிய தொழில்கள் மூலம் தமது தேவைகளை நிறைவு செய்யவும் சுற்றுலா மூலம் கூடுதல் வருமானம் ஈட்டச்செய்யும் வகையில் VLE ஆனது உள்ளூர் மக்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து தமது பாரம்பரிய தொழிலைச் செய்ய வைக்கிறது.

குமரகோம் - கேரளாவின் முதல் RT ஆய்வு களம்

ஒரு குறிப்பிட்ட குறைந்த கால அளவிற்குள் இந்த கருத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இந்த மாநிலத்தில் ஒரு வெற்றிகரமான வளர்ச்சியை கண்டு வருகிறது. நான்கு முக்கிய சுற்றுலாத்தலங்களான குமாரகோம், வயநாடு, கோவளம் மற்றும் தேக்கடி ஆகியவை கேரளாவின் பொறுப்பு சுற்றுலாமையங்களாக புகழ்பெற்று வருகின்றன. பொறுப்புச் சுற்றுலா மூலம் இந்த இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

குமரகோம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலா கிராமம் ஆகும். இந்த இடம் பல்வேறு வகையான வெப்ப மண்டல காலநிலைக்கு நன்றாக ஈடுகொடுத்துவரும் ஒரு இடமாக இருப்பதால் இது உலக சுற்றுலா வரைபடத்தில் ஒரு அருமையான சுற்றுலாத்தலம் என்னும் இடத்தை பிடித்துள்ளது.

சுற்றுசூழலின் சிறப்புத் தன்மைகள்

 • பறவைகள் சரணாலயத்தில் 90 வகை உள்ளூர் பறவைகள் மற்றும் 50 வகை இடம்பெயர்ந்து வந்த பறவைகள் உள்ளன.
 • 1970 மற்றும் 1980 –இன் ஆரம்ப காலத்தில் நைட் ஹெரான்ஸ் –இன் இனப்பெருக்க பகுதியாக மட்டும் இருந்தது.
 • எண்ணற்ற வகை மீன்களுக்கு உணவூட்டம் மற்றும் இனப்பெருக்க தலமாகும்.
 • ஏராளமான சதுப்புநில காட்டு வகைகளுள் குமரகோமில் மூன்று மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புமிக்க சுற்றுலா - குமரகோம்

பொறுப்பு சுற்றுலா குமரகோமில் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. ஆனால் அது மார்ச் 2008 லேயே அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

a. பெண்கள் மேம்பாடு

பொறுப்பு சுற்றுலாமூலம் பெண்கள் பணம் பண்ணும் வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இது உதவுவது மிகவும் பாராட்டதக்க ஒரு விசயமாகும்.

b. வேலைவாய்ப்பு

குமரகோம் பொறுப்பு சுற்றுலா அப்பகுதியை வருவாய் ஈட்டும் தொழிலின் சுவர்க்க பூமியாக மாற்றியுள்ளது. சிறுதொழில் உற்பத்தி மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் விற்பனை ஆகியவை மூலம் உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்க்கைகான வருவாயை ஈட்டிக்கொள்கின்றனர். இவ்வாறு பொறுப்பு சுற்றுலா உள்ளூர் மக்களை நேரடியாக சுற்றுலா பொருள் விற்பனை சொந்தக்காரர்களாக்கி வெறுமனே சேரிட்டிகள் லாபம் ஈட்டுவது போல் அல்லாமல் பொருளாதார பங்களிப்பை உள்ளூர் மக்கள் வழங்க உதவுகிறது. உள்ளூர் அமைப்புகளும் லாபம் ஈட்டும் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைகளை குமரகோமில் வெற்றிகரமாக செய்து வருகிறது.

c. திட்டமிடப்பட்ட வளர்ச்சி

மாநில சுற்றுலாத்துறை மற்றும் குமரகோம் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றோடு இணைந்து பொறுப்புமிக்க சுற்றுலாகுழு பல ஹோட்டல்களையும் ஓய்வு விடுதிகளையும் நடத்தி வருகிறது. இந்த கூட்டு முயற்சியினால் பாரம்பரிய பொருட்களுக்கான விற்பனை சந்தையின் கதவுகள் திறந்துள்ளன. பொறுப்பு சுற்றுலா சாதாரணமாக லாபம் ஈட்டும் மற்ற சுற்றுலா தலங்களில் இருந்து குமரகோம் இந்த பிரிவில் முதல் நிலையைப் பெறுகிறது.

d. பொறுப்பு சுற்றுலாத்தல செல் மற்றும் அதன் பணிகள்

பொறுப்பு சுற்றுலா சேவையை ஆதரிக்கவும் அதன் செயல்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாகவும் செப்டம்பர் 2009 –இல் பொறுப்பு சுற்றுலாத்தல செல் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து கூடுதல் தேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த சம்ருதி குழுக்களின் செயல்திறனானது உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விற்பனை சவால்களுக்கு ஒப்பானதாக இருக்கிறது. நிலையான வருமானமும் ஈட்டபட்டது. இந்த குழுக்கள் மக்களுக்கு குறைவான விலையில் திறந்தவெளி சந்தை மூலம் தமது பொருட்களை விற்று வருகின்றன.

e. தயாரிப்பு பிரிவு

விற்பனையில் தடை ஏற்படாமல் இருக்க விற்பனை தளங்கள் தோரும் குடும்பஸ்ரீ குழுக்கள் திறக்கப்பட்டது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி காய்கறி பயிரிடுதல் மாபெறும் வெற்றி பெற்றது. இதன் மூலம் விற்பனை வரைபடமும் நல்ல ஒரு முன்னேற்றம் கண்டது. தரை மட்டத்தில் இருந்து உற்பத்தியை சீர் செய்வதற்காக குமரகோமில் ஒன்பது சமிதி குழுக்களும், அறுகாமையில் உள்ள மன் ஜாடிக்கரையில் ஒன்றும் அமைக்கப்பட்டது. சிறிய அளவிலான 250 நபர்களை கொண்ட குடும்பஸ்ரீ குழுக்களும் 512 குடும்பங்களை கொண்ட குடிசை தொழில் அமைப்பும் மற்றும் 450 நபர்களை கொண்ட கர்ஷா சமிதியும் குமரகோமில் இருந்து பொறுப்பான விற்பனையை மேலாண்மை செய்து வருகிறது.

f. தேவையும் வழங்கலும்

கிராமவாசிகளிடமிருந்து உணவகங்கள் மற்றும் தங்கும் தலங்களுக்கு தேவையான காய்கறிகள், கனிகள், முட்டை, பால் மற்றும் இறைச்சி முதலானவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வழங்கப்படும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க குடும்பஸ்ரீ குழுக்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் மூலம் குடும்பஸ்ரீ மற்றும் ஹரிதா ஸ்ரீ குழுக்கள் லாபம் ஈட்டத் தொடங்கின. விலை நிர்ணய குழு (DLRTC நியமித்த விலை நிர்ணய குழு கிராம பஞ்சாயத்து குடும்பஸ்ரீ, DTPC மற்றும் உணவகங்களின் கொள்முதல் தொழிலாளர்களை கொண்டது) மற்றும் தர நிர்ணய குழு (கிராம பஞ்சாயத்து, குடும்பஸ்ரீ, DTPC, உணவக சமையல் தொழிலாளர், கால்நடை மருத்துவர், வேளாண்மை அலுவலர் மற்றும் உடல்நிலை ஆய்வாளர் ஆகியோரை கொண்டது) பொருட்களின் தரத்தை ஆராய்கிறது.

ஆதாரம் : கேரளா மாநில சுற்றுலா வலைதளம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate