ஆரியன் என்ற சொல் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதலாக ரிக் வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது என்கிறார் தேவநேய பாவாணர்.
ஆரிய வார்த்தை ஏர் உழுதல் என்று சொல்லப்படுகிறது. அது லத்தீன் மொழியில் arare என்றும், கிரேக்க மொழியில் அர்டோ(ardo) என்றும் மேலும் ஆங்கிலத்தில்”வரை” (to till) என்ற பொருளிலும் உள்ளது.
ஆர்யன் சாந்தாக்ரோய் (xanthochroi) இனத்தவர், அதாவது மங்கோலிய இனத்தின் வழிவந்த ஒரு வகைப்பாடு ஆகும் என்கிறார் மானுடவியலாளர் J. W. ஜாக்சன் (J. W. Jackson). இவர்கள் வெண்ணிற தோல் மற்றும் அலையும் பொன்னிற முடி கொண்ட மனித மக்களின் ஒரு பிரிவு. இவ்வின மக்கள் இந்தோ-ஐரோப்பியர்(Celts), ஸ்லோவேனிய (Slavonians) இந்திய மக்களுடன் கலந்துவிட்டனர்.
1507-ஆம் ஆண்டில் மார்டின் வால்ட்ஸெமுல்லரால் (Martin Waldseemüller) சித்தரிக்கப்பட்ட ஆரிய பகுதி பிரெஞ்சு, ஜோசப் ஆர்தர் டி கோபினோ (Arthur de Gobineau) 1848-ஆம் ஆண்டு புரட்சியின் உடனடிப் பின்னணியில், 1400 பக்கங்கள் கொண்ட, மனித இனத்தின் சமத்துவமின்மை பற்றிய ஒரு கட்டுரை (An Essay on the Inequality of the Human Races) என்ற புத்தகத்தை பிரஞ்சு மொழியில் எழுதினார். ஆரிய இனம் பற்றிய பல தகவல்களைப் பதிவு செய்துள்ளார். பெர்ஷிய மற்றும் ஆர்மேனிய மலைநாட்டு அக்சஸ்(Oxus), ஓரேக்சஸ்(Oraxes), யூஃரேட்ஸ்(Euphrates) பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறார் U.J.பர்க்கி.
1879 ஆம் ஆண்டு அக்டோபர், 23 அன்று பாரிஸ் மானிடவியல் கூட்டமைப்பின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆரியனின் பூர்வீகம் ஆகும். இதில் பிரஞ்சு மானுடவியலாளர்கள் கிராட் டி ரிலையெல் (Monsieur GIRRAD De Rialle) ஈரானிய நாகரிகத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். சார்லஸ் டி உஜ்ஃபால்வி (Monsieur Charles De Ujfalvy) ஆரியர்கள் தற்போதைய தஜிகிஸ்தான்(Tajikistan) நாட்டில் ஜராப்ஷான் பள்ளத்தாக்கு Zarafshan Valley (Galchas), நொஸ்கு பள்ளத்தாக்கு Nouksou Valley (Karategins) துர்க்மெனிஸ்தான் (Turkmenistan) ஓக்சஸ் (Oxus) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
பெர்கானா (Ferghana), கோஹிஸ்தான் (Kohistan) மற்றும் வாகன்(Wakhan) பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் கல்காஸ்(Galchas) மற்றும் தாதர்(Tatar) ஆரியர்களே ஆவர். உஜ்ஃபால்வி ஆரியர்கள் கருப்பு அல்லது மாநிறம் மற்றும் சிகப்பு, சில நேரங்களில் சிவப்பு முடி, பழுப்பு, நீலம் அல்லது சாம்பல் கண்கள், சாய்வான, நன்கு வடிவமைக்கப்பட்ட, சற்று வளைந்த மூக்கு, மெல்லிய உதடுகள், ஓவல் முகம் மற்றும் சுற்று தலை என்கிறார்
கருநிற ஆரியர்கள் (brunet Aryan) ஐரோப்பாவை வென்றிருக்கிறார்கள், இந்தியாவிற்கு வந்த பொன்னிற ஆரியர்கள் (Blond Aryan) தாழ்வாகவே மதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில்(Kermanshah) பிஹிஸ்டன் மலையில் Mount Behistun, கி.மு. 6 ஆம் நூற்றாண்டு பிஹிஸ்டன் கல்வெட்டில் (Behistun inscription), "ஆர்யன்” என்ற வார்த்தை குறிப்பு உள்ளது.
ஓப்பர்ட்(Oppert), ஹோவெலாக்(Hovelacque), மற்றும் பல மொழியியலாளர்கள் ஆரிய மொழிகள் ஒரு பொதுவான வம்சாவளியை நிரூபிக்கவில்லை, ஆயினும் ஒரு குறிப்பிட்ட மொழியின் வழியே பரவியுள்ளது என்கின்றனர்.
பழங்கால ஆரிய இனத்தை ஒரு உயர்ந்த இனம் என்று கருதுவதே நாசிசத்தின் சித்தாந்தம் அடிப்படையாக இருந்தது, இன வரிசைமுறைக்கு மிக உயர்ந்த நிலைப்பாட்டை வைத்திருந்தது, மேலும் ஜெர்மனிய மக்களை ஆர்ய இன ரீதியிலான தூய்மையான மக்களாக குறிப்பிட்டனர். ஆர்யன் இனம் பற்றிய நாஜி கருத்துருவானது ஆர்தர் டி கோபினோ மற்றும் ஹூஸ்டன் ஸ்டீவர்ட் சேம்பர்லெய்ன் (Houston Stewart Chamberlain) ஆதரவாளர்களிலிருந்து எழுந்தது.
ஆதாரம் : C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475