অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அறிவியல் பொது அறிவு வினா விடைகள்

அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
  1. காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
  2. இரும்பின் தாது - மாக்னடைட்
  3. பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
  4. அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
  5. அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை
  6. நீரில் கரையாத பொருள் - கந்தகம்
  7. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
  8. நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
  9. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
  10. நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
  11. மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
  12. வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
  13. திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
  14. ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
  15. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
  16. ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
  17. கலவைப் பொருள் என்பது - பால்
  18. கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
  19. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
  20. தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
  21. போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
  22. அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
  23. கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
  24. 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்
  25. 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
  26. 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
  27. பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்
  28. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
  29. எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்
  30. செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
  31. கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்
  32. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
  33. அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
  34. பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
  35. சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+
  36. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
  37. ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
  38. எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
  39. எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  40. நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்
  41. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
  42. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  43. தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
  44. அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
  45. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
  46. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான்  (ஃபோம்மைட்)
  47. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  48. வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
  49. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
  50. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
  51. காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
  52. அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  53. காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
  54. குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
  55. சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்
  56. குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  57. சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்
  58. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு
  59. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்
  60. நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு
  61. நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்
  62. பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்
  63. சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்
  64. இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்
  65. வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்
  66. ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்
  67. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்
  68. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  69. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
  70. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  71. ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்
  72. இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்
  73. வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
  74. பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
  75. யூரியாவின் உருகு நிலை - 135o C
  76. இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்
  77. இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்
  78. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
  79. புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்
  80. நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்
  81. எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C
  82. கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
  83. நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்
  84. ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
  85. நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
  86. கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
  87. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
  88. ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
  89. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
  90. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
  91. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
  92. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
  93. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
  94. கன அளவின் அலகு - மீ3
  95. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
  96. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
  97. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
  98. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
  99. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
  100. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
  101. அடர்த்தி குறைவான பொருள் - வாயு
  102. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
  103. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
  104. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
  105. மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
  106. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
  107. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
  108. கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
  109. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
  110. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
  111. எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
  112. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
  113. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
  114. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
  115. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
  116. நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
  117. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
  118. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
  119. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
  120. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
  121. ஒரியான் என்பது - விண்மீன் குழு
  122. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
  123. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
  124. புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
  125. புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
  126. திட்ட அலகு என்பது - SI முறை
  127. அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
  128. நிலவு இல்லாத கோள் - வெள்ளி
  129. கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
  130. பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்
  131. உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
  132. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
  133. வேலையின் அலகு - ஜூல்
  134. 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
  135. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  136. அணு என்பது - நடுநிலையானது
  137. எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
  138. நியூட்ரானின் நிறை - 1.00867 amu
  139. பொருளின் கட்டுமான அலகு - அணு
  140. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
  141. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
  142. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
  143. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
  144. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
  145. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
  146. கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
  147. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
  148. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
  149. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
  150. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
  151. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
  152. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
  153. விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
  154. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  155. வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star டிங்க்ராம்
  156. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர்  அம்பேத்கார்
  157. 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 – 2010
  158. இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
  159. இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்
  160. சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்
  161. ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்
  162. உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா
  163. இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை
  164. தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி
  165. முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
  166. நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
  167. முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு
  168. கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா
  169. பின்னுகொடி தாவரம் - அவரை
  170. ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை
  171. பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்
  172. டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
  173. பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்டஸ்
  174. தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்
  175. பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.
  176. தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
  177. பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்
  178. இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
  179. டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்
  180. முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்
  181. நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்
  182. ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்
  183. படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
  184. மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
  185. அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்
  186. இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்
  187. பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
  188. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்
  189. 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று
  190. கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்
  191. மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
  192. ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
  193. மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
  194. வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
  195. ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
  196. எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
  197. முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
  198. பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
  199. முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு
  200. இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு
  201. பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்
  202. மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
  203. அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
  204. வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
  205. புவி நாட்டம் உடையது - வேர்
  206. இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
  207. யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
  208. டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
  209. முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
  210. நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
  211. மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
  212. அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
  213. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
  214. விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
  215. நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
  216. இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
  217. ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
  218. தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
  219. எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
  220. ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
  221. விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
  222. அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
  223. மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
  224. நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
  225. நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
  226. சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்
  227. நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
  228. கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
  229. மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
  230. செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்
  231. உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
  232. செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
  233. பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
  234. புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
  235. புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
  236. மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
  237. ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
  238. பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
  239. கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
  240. கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
  241. தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
  242. களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
  243. கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
  244. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
  245. புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
  246. தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
  247. தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
  248. தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
  249. நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்
  250. தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்
  251. தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்
  252. இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
  253. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
  254. உழவனின் நண்பன் - மண்புழு
  255. சிதைப்பவை - காளான்
  256. உயிர்க்காரணி - பாக்டீரியா
  257. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
  258. பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்
  259. வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்
  260. விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
  261. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
  262. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
  263. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
  264. சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
  265. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்
  266. வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்
  267. பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
  268. நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
  269. பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்
  270. இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு
  271. இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்
  272. கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்
  273. பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்
  274. செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்
  275. சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்
  276. மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி
  277. சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்
  278. சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்
  279. இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்
  280. இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்
  281. 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்
  282. மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
  283. கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
  284. மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
  285. கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
  286. கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
  287. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்
  288. புளோயம் ஒரு கூட்டு திசு
  289. வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
  290. நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
  291. பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
  292. கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
  293. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்
  294. பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
  295. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
  296. பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை
  297. கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
  298. தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்
  299. மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்
  300. குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா
  301. சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
  302. கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
  303. பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
  304. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT
  305. தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
  306. ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
  307. பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்
  308. ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்
  309. ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
  310. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
  311. குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
  312. மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்
  313. வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
  314. தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
  315. கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்
  316. தாவர உடல், ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate