অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொது அறிவுத் தகவல்கள் 1

பொது அறிவுத் தகவல்கள் 1
 1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
 2. உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
 3. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.
 4. திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.
 5. தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
 6. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.
 7. உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.
 8. உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.
 9. 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
 10. சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.
 11. 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
 12. 2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
 13. பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.
 14. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.
 15. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
 16. மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
 17. ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்.
 18. புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை
 19. முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்
 20. ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் - நாகலாந்து.
 21. பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 21
 22. தமிழில் `அ' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8
 23. அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.
 24. `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.
 25. சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.
 26. கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
 27. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
 28. உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.
 29. 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
 30. மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
 31. ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
 32. ஆமைக்கு பற்கள் கிடையாது.
 33. டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
 34. வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.
 35. பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.
 36. இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.
 37. ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.
 38. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.
 39. நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.
 40. ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.
 41. இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.
 42. ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.
 43. மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.
 44. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.
 45. மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.
 46. ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.
 47. உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு - இந்தியா
 48. பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு - இலங்கை
 49. உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி
 50. திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு - சீனா
 51. கண் இல்லாத உயிரினம் மண்புழு.
 52. தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.
 53. மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.
 54. மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.
 55. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.
 56. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.
 57. மைனா பறவையின் தாயகம் இந்தியா.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate