பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள் / காவல் துறை பதவிகளும் பதவிச் சின்னங்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

காவல் துறை பதவிகளும் பதவிச் சின்னங்களும்

காவல் துறை பதவிகளும் பதவிச் சின்னங்களும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம். காவல் துறை அலுவலர்களின் உடையிலுள்ள வேறுபாடுகளை சிறிது காண்போம்.

வேறுபாடுகள்

காவல் துறை தலைமை இயக்குநர்(Director General of Police)

 • காவல் துறை தலைமை இயக்குநர் தன் சீருடையில் தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும் தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐ.பி.எஸ்., சின்னம் மற்றும் காலரில் ரிப்பன் இருக்கும்.

காவல் துறை கூடுதல் இயக்குநர்(Additional Director General of Police)

 • காவல் துறை கூடுதல் இயக்குநர், தன் சீருடையின் தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐ.பி.எஸ்., சின்னம் இருக்கும்.

காவல் துறை தலைவர் (Inspector General of Police)

 • காவல் துறை தலைவர், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், ஐந்துமுனைத் தாரகை, அதன் அடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் இருக்கும்.

காவல் துறை துணைத் தலைவர்(Deputy Inspector General of Police)

 • காவல் துறை துணைத் தலைவர், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் முக்கோணவடிவில் மூன்று தாரகைகள் இருக்கும்.

தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police, Selection grade)

 • தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர் சீருடையின் (10 ஆண்டுகளுக்கு மேல் தேர்வு நிலை) தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் முக்கோண வடிவில் இரண்டு தாரகைகள் இருக்கும்.

காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police)

 • காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ் அல்லது டி.பி.எஸ், அசோக சின்னம், அதன் அடியில் ஒரு தாரகை இருக்கும்.

இணை காவல் கண்காணிப்பாளர் (Joint Superintendent of Police)

 • இணை காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம் இருக்கும்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(Additional Superintendent of Police)

 • கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், அசோக சின்னம் இருக்கும்.

உதவி காவல் கண்காணிப்பாளர்(Assistant Superintendent of Police)

 • உதவி காவல் கண்காணிப்பாளர் சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ், மூன்று தாரகைகள், துணை கண்காணிப்பாளர்கள், தோள் பட்டையில் டி.பி.எஸ் மற்றும் மூன்று தாரகைகள் இருக்கும்.

உதவி கண்காணிப்பாளர்(பயிற்சி)(Assistant Superintendent of Police(Probationer)

 • உதவி கண்காணிப்பாளர் (பயிற்சி) சீருடையின், தோள் பட்டையில் ஐ.பி.எஸ் மற்றும் ஒரு தாரகை இருக்கும்.

துணை காவல் கண்காணிப்பாளர்(பயிற்சி)(Deputy Superintendent of Police(Training)

 • துணை காவல் கண்காணிப்பாளர், சீருடையின், தோள் பட்டையில் டி.பி.எஸ் மற்றும் ஒரு தாரகை இருக்கும்.
 • மேலே குறிப்பிட்ட  அனைத்து அலுவலர்களும் கரு நீல ஊதல் கயிறு(Dark blue whistle cord) இடது தோள் பட்டையில் அணிந்திருப்பார்கள்.

காவல் ஆய்வாளர் (Inspector of Police)

 • காவல் ஆய்வாளர், சீருடையின், தோள் பட்டையில் டி.பி., கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் மூன்று தாரகைகள் இருக்கும்.

காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police)

 • காவல் சார்பு ஆய்வாளர், சீருடையின் தோள் பட்டையில் டி.பி., கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் இரண்டு தாரகைகள் தாலுகா காவல் ஆய்வாளர்களும், சார்பு ஆய்வாளர்களும் காக்கி நிற ஊதல் கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் கரும்பச்சை நிற ஊதல் கயிறு அணிகிறார்கள்.

காவல் சார்பு ஆய்வாளர்(பயிற்சி) (Sub-Inspector of Police) Probationer)

 • காவல் சார்பு ஆய்வாளர்(பயிற்சி) சீருடையின், தோள் பட்டையில் டி.பி., கருநீல சிகப்பு ரிப்பன் மற்றும் ஒரு தாரகை, தாலுகா  காவல் ஆய்வாளர்களும், சார்பு ஆய்வாளர்களும் காக்கி நிற ஊதல் கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் கரும்பச்சை நிற ஊதல் கயிறு அணிகிறார்கள்.
 • சார்பு ஆய்வாளரிலிருந்து காவல் துறை தலைமை இயக்குநர் வரை உள்ள அலுவலர்கள் தங்கள் பதவிக்கேற்ப அசோக சின்னமுடைய தவிட்டு அல்லது பழுப்பு நிற இடைக்கச்சைகளும் (Belt) அதே நிறமுடைய காலணிகளும் அணிகிறார்கள். தலை அணி தொப்பி (Pea cap)அல்லது பெரே(Bere) ஆகும்.

தலைமை காவலர்(Head Constable)

 • தலைமை காவலர்(Head Constable) சீருடையின் மேற்கையில் 3 பட்டை அணிய வேண்டும்.

முதல் நிலை காவலர்(Police constable Grade-1)

 • முதல் நிலை காவலர் சீருடையின் மேற்கையில் 2 பட்டை அணிய வேண்டும்.
 • தலைமை காவலர் நீல நிற செர்ஜ் தொப்பியில், வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப் பட்டிருக்கும். முதல் நிலை காவலரும் தலைமை காவலரும்  பக்கிள் உடைய நீல நிற இடைக்கச்சையும் அணிகின்றனர். காலணி அனைவருக்கும் கறுப்பு நிறமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு காவல்துறை

3.12121212121
Rajesh. A Jul 01, 2020 01:11 AM

இதில் cp, acp, jcp, dcp (commisioner of police)இவற்றை பற்றி சொல்லவில்லை

Mani shankar Jun 10, 2020 11:35 AM

Super now i am clear

Dineshkumar Mar 23, 2020 05:02 PM

இதில் கூறியபடி அனைத்தும் உண்மை நான் மேலும் விரிவாக தெரிந்து கொள்ள நினைக்கிறேன் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தான் உதவ வேண்டும். இதில் கூறியுள்ளபடி ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் கடமைகளும் பொறுப்புகளும் பற்றி இன்னும் விரிவாக கூறியிருந்தாள் நன்றாக இருந்திருக்கும்..
அவர்களின் அடையாளங்களை தெரிந்துகொள்வது நன்றாக இருந்தாலும் கூட அவர்களின் கடமைகளை மற்றும் பொறுப்புகளை பற்றி தெரிந்து கொள்வது மேலும் மக்களுக்கு உதவியாக இருக்கும். அதைப் பற்றி விரிவாக தெரிந்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
*****@gmail.com

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top