பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள் / சித்தர்களும் அஷ்டமா சித்துக்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சித்தர்களும் அஷ்டமா சித்துக்களும்

இந்த பகுதியில் நம் சித்தர்களை பற்றி தெரிந்து கொள்வோம்

அறிமுகம்

இல்லற வாழ்க்கையையும், அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்களை அறிந்து, உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று, தேவர்களுக்கு இணையாக உலகத்தில் வாழ்பவர்கள் சித்தர்கள்.

சிறப்பம்சங்கள்

சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு சாதி, மதம், மொழி, நாடு இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது இவர்களது கொள்கை.

நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர், வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடைமுடி தரித்து, அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும், ஓர் உருவம் நம் மனக்கண் முன் தோன்றுவது இயற்கை. ஆனால், சுத்தமான வெள்ளை உடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாகச் சிரித்துப் பேசிப் பழகி, அன்னதானம் இடைவிடாமல் சென்று, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்தும், ஜுவகாருண்ய ஒழுக்கத்தைப் போதித்த வடலூர் இராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே

சித்தர்களை, வெளித்தோற்றத்தைக் கொண்டு அடையாளங் காணமுடியாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன், இறைவனையே எப்போதும் நினைத்து, தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து 'நீயும் நானுமாய் ஏக போகமாய்' என்று இறைவனின் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள், இறைவனின் அருளால் பல சித்துகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தம் சக்தியை, ஆற்றலை வெளிப்படுத்துவர்.

சித்தர்களின் குணாதிசியங்கள்

பொதுவாக நம் ஊர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோயில் கருவறைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி எது வேண்டும் பார் என்பார். இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயா ஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறப்பதும், முனிவர்கள் போல வேஷமிட்டுத் திரிவதும், சித்தர்களின் செயல்கள் அல்ல.

இடைவிடாது பல காலம் யோக மார்க்கத்தில் ஈடுபட்டு மனத்தை ஒரு நிலைப்படுத்தி, படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்று படும் பயிற்சிகள் அடங்கியது இலய யோகம்) அஷ்டமா சித்துக்களை இறைவனருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்தச் சித்துக்களைத் தேவையில்லாமல் ஆடம்பரத்துக்காக அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வசாதாரணமாகச் செய்வார்கள்!

அஷ்டமா சித்தக்களையும் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள். கைவரப் பெற்ற போதிலும் அவற்றைச் சித்தர்கள் விரும்புவதில்லை, வெளிக் காட்டுவதில்லை, அந்த சக்தியைப் பயன்படுத்துவதும் இல்லை.

அஷ்டமா சித்துக்களின் வெளிப்பட்டால் இவை போன்ற நிகழ்ச்சிகள் நடக்குமா? அறிவுக்கு ஒத்துவராதவை போலத் தெரிகிறதே என்ற சந்தேகம் எழலாம். அறியாமை, அனுபவம் இல்லாமை, நம்பிக்கை இல்லாமை, மனப்பயிற்சி இல்லாமை, மனம், சொல், செயல்களில் தூய்மை இல்லாமை எல்லாம் பெற்றுள்ள நம்மால், சித்தர்களையும் அவர் தம் சக்தியையும் புரிந்து கொள்ள முடியாதுதான். கடைசி மனிதன் மோட்சம் பெறுகிற வரை நாங்கள் உலகத்தில் இருந்து கொண்டிருப்போம் என்று, ஆலயங்கள்தோறும் அருவ வடிவில் சூட்சும் நிலையில் இன்றும் வாழ்ந்து, மனிதர்களுக்கு சக்தியையும் அருளையும் வழங்கிக் கொண்டிருப்பவர் சித்தர்கள். அவர்கள் காட்டிய வழி உன்னதமானது. அவர்களுடைய கொள்கைகளைக் கடைப்பிடித்தால், மனித சமுதாயம் நிச்சயம் மேன்மை அடையும் என்பது உண்மை.

ஆதாரம் : சித்தர்கள் இராச்சியம் வலைதளம்

3.07407407407
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top