অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

திருக்குறள் அருஞ்சொற்பொருள்

திருக்குறள் அருஞ்சொற்பொருள்

திருக்குறள் அருஞ்சொற்பொருள்

அருஞ்சொல் பொருள்

அகடு

வயிறு

அகப்பட்டி

உள் அடங்குவர், தம்மினும் கீழோர்

அகம்

உள்ளம்

அகற்றும்

விசாலப்படுத்தும்

அகழ்வார்

தோண்டுபவர்

அங்கணம்

முற்றம்

அசாவாமை

அசராமல்

அசையியற்கு

மெல்லிய சாயலையுடையவளுக்கு

அசைவின்மை

முயற்சி

அஞர்

துயர்

அஞர்

துன்பம்

அடல்

போர்க்குணம்

அடு

அழிதல்

அடு நறவு

காய்ச்சப்பட்ட மது

அடுப

வெற்றி

அடுபுற்கை

சிறு அரிசிக் கஞ்சி

அடும்

கொல்லும்

அடும்

கொல்லும்

அட்டிய

வார்த்த

அணங்கு

பெண்

அணி

அழகு

அண்ணாத்தல்

வாய் திறத்தல்

அனையர்

ஒப்பர்

அன்மை

இல்லாமை

அமரகத்து

போர்க்களத்து

அமரகம்

போர்க்களம்

அமர்த்தன

மாறுபட்டிருந்தன

அமிழ்தம்

சாவா மருந்து

அரங்கம்

ஆடுமிடம்

அறுதொழிலோர்

ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈட்டல் ஆகிய ஆறுவகையான தொழில் செய்வோர்

அற்கா

நிலையில்லாத

அற்றம்

அழிவு

அற்றம்

அழிவு

அற்றம்

கெடுதல், குறைகள்

அற்றல்

சீரணித்தல்

அற்று

அவ்வாறு

அற்று

உவமஉருபு(போன்றது, ஒத்தது)

அலகு

கருவி, ஆயுதம்

அலந்தார்

அழிந்தவர்

அலர் அறிவுறுத்தல்

ஊரார் கேலி புரிதல்

அலர், கவ்வை, கௌவை

பழிச்சொல்

அல்லல்

துன்பம்

அல்லல்

துன்பம்

அளறு

நரகம்

அழல்

நெருப்பு

அழுக்காறாமை

பொறாமை கொள்ளாமை

அவம்

வீண்,கேடு

அவர்வயின் விதும்பல்

காதலரைக் காணத்துடித்தல்

அவா

ஆசை

அவா அறுத்தல்

பேராசை விலக்கல்

அவி உணவு

வேள்வியில் இறைவனுக்கு அளிக்கப்படும் உணவு, அவிர்பாகம

அவிதல்

ஒழிதல்

அவித்து

நீக்கி

அவை

உலக நடைமுறைக்கு மாறாக, தீய வழி

பசு

ஆக்கம்

நன்மை

ஆக்கம்

செல்வம்

ஆங்கு

அயலார்

ஆங்கு

அவ்வகையே

ஆசு

குற்றம்

ஆசு

குற்றம்

ஆண்டு

மேலுலகம்

ஆதும்

மென்மேலும் உயர்தல், மேலாகக் கடவோம்

ஆன்ற

நிறைந்த

ஆன்ற

நிறைந்த

ஆம்

உண்டாகின்ற

ஆயம்

சூது

ஆயம்

ஆதாயம்

ஆரா

நிறைவுறாது

ஆரார்

நிறைவுபெறார்

ஆர்க்குங் கயிறு

கட்டும் கயிறு

ஆறு

வழி

ஆறு

வழி

ஆற்றார்

அறிவில்லாதவர்

ஆற்றுதல்

செய்தல்

ஆழி

பெருங்கடல்

ஆழி

கடல்

இகந்து

நீங்குதலால்

இகல்

மாறுபடும் இயல்புடைய

இகல்

மாறுபாடு-பகை

இகல்

மாறுபாடு

இகவா

நீங்கா

இகவாவாம்

நீங்காவாம்

இசை

புகழ்

இசை

புகழ்

இடனறிதல்

ஏற்ற இடம் அறிதல்

இடுக்கண் அழியாமை

துன்பத்திற்குக் கலங்காமை

இடும்பை

துன்பம்

இடும்பை

துன்பம்

இட்டிது

சிறியது

இணர்

கொத்து

இணர்

பல சுடர்களையுடைய

இனன்

தோழியர்

இனன்

சுற்றம்

இனமுறையர்

இன்ன முறையினர்

இனையர்

இளையவர்

இன்னா

துன்பம்

இன்னா செய்யாமை

துன்பம் செய்யாமை

இமையார்

தேவர்

இயையா

இயலாத

இரவச்சம்

இரத்தலுக்கு அஞ்சுதல்

இரவு

இரத்தலின் தன்மை

இரீஇ

காத்தல்

இருள்

துன்பம்

இருவினை

நல்வினை, தீவினை

இறந்த

அடங்காத

இறந்த

புக இயலாத

இறப்பு

மிகுதி

இறல்

அழிவு

இறவா

கழலா நின்ற

இறை

அரசன்

இறை

வரி

இறைஞ்சினாள்

நாணித் தலை குனிந்தாள்

இறைபுரிந்து

அனைவருக்கும் பொதுவாக, நடுநிலையாக

இறைமாட்சி

அரசின் சிறப்பு

இறைவன்

மன்னன்

இலங்க

விளங்க

இலங்கிழாய்

ஒளிவீசும் அணி

இல்

வீடு

இளி

பரிகசிப்பு

இளி

இழிவு

இழுக்கல்

வழுக்கல்

இழுக்கு

தவறுதல்

இழுக்கு

மறதி

இழைத்துணர்ந்து

நுட்பமாக ஆய்ந்தறிந்து

இவறல்

பேராசை

இவறி

ஆசைப்பட்டு

இவறியார்

கைவிடாதவர்

ஈட்டம்

பொருளீட்டல்

ஈண்டிய

செறிந்த

ஈண்டு

இப்பிறப்பில்

ஈண்டு

இம்மை

ஈரம் அளைஇ

அன்போடு கலந்து

ஈரும்

அறுக்கும்

உக்க

வீழ்ந்த

உடற்றும்

வருத்தும்.

உட்கம்

அச்சம்

உட்கும்

அஞ்சுவதற்கு ஏதுவாகும்

உணக்கல்

உலர்த்துதல்

உணங்க

வாட

உண்கண்

மை எழுதிய கண்கள்

உயல்

இருத்தல்

உய்யா

மீளா

உரன்

அறிவு

உரவோர்

மனவலிமையுடையோர்

உரவோர்

ஊக்கமுடையோர்

உறவரினும்

மிகவரினும்

உறா

நீங்காத

உறாதவர்

அயலார்

உறாதவர்

விரும்பாதவர்

உறாமை

வாராதபடி

உறுகண்

துன்பம்

உறுப்பு நலன் அழிதல்

அழகு குலைதல்

உறை

பருவ மழை

உற்றவை

தடைகள்

உற்று

விரும்பி

உல்கு

தீர்வை

உளி

விதிமுறை

உள்ளல்

எண்ணுதல்

உள்ளான்

நினையான்

உள்ளியது

எண்ணியது, குறிக்கோள்

உழந்து

வருந்தி

உழப்பது

படுவது, துய்ப்பது

உழி

நிலம்

உழை

இடம்

உவப்பு

மகிழ்ச்சி

உவரி

கடல்

ஊங்கு

மேற்பட்ட

ஊண்

உடல்

ஊதியம்

பேறு

ஊர

அடர

ஊருணி

ஊர் மக்கள் நீரருந்தும் குளம்

ஊழி

உலகம் நீரில் அமிழ்தல்

ஊழ்

பழவினை

ஊழ்த்தும்

மலர்ந்திருந்தும்

எஃகு

கூர்மை, நுண்ணிய, சிறப்பு

எச்சம்

சந்ததியார்

எஞ்சாமை

குறைவின்றி

எஞ்ஞான்றும்

எந்த நாளும்

எண்குணம்

தன்வயம், தூயஉடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் (பற்று) இன்மை, பேரருள், முடிவிலா ஆற்றல், வரம்பில் இன்பம்

எண்பதம்

எளியவராய் இருத்தல்

எனைத்தொன்றும்

எத்தகைய பொருளையும்

என்

என்ன

என்னை

(என்+ஐ) என் தலைவன்

என்பு

எலும்பு

எற்று

எவ்வாறு

எற்று

எத்தகையது

எற்றெற்றென்று

(எற்று +எற்று+என்று) என்ன செய்தோம், என்ன செய்தோமென்று

எள்ளப்படும்

இகழப்படும்

ஏதம்

நோய்

ஏதம்

குற்றம்

ஏதம்

குற்றம்

ஏதம்

துன்பம்

ஏதின்மை

பகைமை

ஏதில

பழுது

ஏதிலர்

அன்பற்றவர்

ஏதிலார்

பகைவர்

ஏதிலார்

அயலார்

ஏதிலார்

அந்நியர்

ஏமம்

பாதுகாவல்

ஏமரா

காவலற்ற

ஏமாப்பு

பாதுகாப்பு

ஏமாப்பு இல்

காவலற்ற

ஏமுற்றவர்

பித்துப் பிடித்தவர், பித்தன்

ஏர்

அழகு

ஏர்

ஒத்த

ஏர்

அழகு

ஏறு

ஆண்சிங்கம்

ஏற்றா

தீராத

தலைவன்

ஐம்பொறி

ஐம்புலன்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி)

ஒட்டார்

பகைவர்

ஒட்டு

அற்பம்

ஒட்பம்

அறிவு

ஒட்பம்

அறிவு

ஒண்ணுதற்

ஒளி பொருந்திய நெற்றி(ஒள்+நுதல்)

ஒன்னார்

பகைவர்

ஒன்னார், புல்லார்

பகைவர்

ஒப்புரவறிதல்

சமுதாய நலம் நாடுதல்

ஒரீஇ

விலக்கி

ஒரீஇ

நீங்கி

ஒருதலையா

உறுதியாக

ஒருவந்தம்

உறுதியாக

ஒருவு

தவிர்

ஒருவுதல்

ஒழித்தல்

ஒறுத்தல்

தண்டித்தல்

ஒறுத்தல்

தண்டித்தல்

ஒற்கம்

தளர்ந்த, வறுமை

ஒற்றாடல்

ஒற்றர்களின் சிறப்பு

ஒல்கார்

குன்றார், சுருங்கார்

ஒல்கார்

தளராதவர்

ஒல்கார்

தளரார்

ஒல்லா

இயலாதது

ஒல்லா

உடன்படாமல்

ஒல்லாது

பொருந்தாது

ஒல்லும் வாய்

எல்லைவரை, இயன்ற வரை

ஒல்லை

விரைந்து

ஒல்லை

விரைவில்

ஒல்வது

இயன்றது

ஒளி

புகழ்

ஒள்பொருள்

நல்வழியில் வந்த சிறந்த பொருள்

ஒள்ளியவர்

அறிவுடையவர்

ஒள்வாள்

கூரிய வாள்( ஒளிபொருந்திய வாள்)

ஒழுகும்

நடக்கும்

ஓதல்

ஒழித்தல்

ஓம்பல்

ஒழித்தல்

ஓம்பல்

தவிர்த்தல்

ஓம்பு

காப்பாற்று

ஓம்புதல்

காப்பாற்றுதல்

ஓரார்

கேளாமல்

ஓவாது

இடையறாது

ஓவாது

இடைவிடாது

கடன்

கடமை

கடப்பாடு, ஒப்புரவு

உபகாரம்

கடாக்களிறு

மத யானை

கடிந்த

நீக்கிய

கடிந்து ஓரார்

விலக்கார்

கடுத்தது

சினந்தது

கடுத்தபின்

சந்தேகித்த பின்

கடை

இழிவு

கட்டு

கண்கள்

கட்படாம்

முகப்படாம்

கணிச்சி

உளி

கணை

அம்பு

கண் விதுப்பழிதல்

கண் படுத்தும் பாடு

கண்டனை

(வேண்டாமெனத்) தள்ளுதல்

கண்ணோடாது

இரக்கப்படாமல்

கண்ணோட்டம்

இரக்கம்

கண்ணோட்டம்

இரக்கம் காட்டும் பண்பு

கண்பாடு

தூக்கம்

கதம்

சினம்

கதுப்பினாள்

கூந்தலையுடையவள்

கந்தா

வழியாக, அடிப்படையாக

கந்தா

வழியாக, அடிப்படையாக

கயமை

கீழ்மை

கரத்தல்

மறைத்தல்

கரப்பாக்கு

மறைதல்

கரப்பு

மறைத்தல்

கரவாது

மறைக்காது

கரவு

வஞ்சனை

கரி

சான்று

கரி

சான்று

கருவி

காரணம்

கலன்

தோளில் அணியும் நகை

களன்

சபை

கள்ளாமை

திருடாமை

கழகம்

களம்(ஆடுமிடம்)

கழாஅ

கழுவாத

கழிநல்குரவு

மிகுந்த வறுமை

கழிய

மிகவும்

கவறு

சூது

கா

காவடி

காடி

கஞ்சி

காதன்மை

அன்புடைமை

காதன்மை

அன்புடைமை

காதன்மை

ஆசை

காதல்

விருப்பம்

காம்பு

மூங்கில்

காரிகை

பெண், அழகு

காரிகை

பெண், அழகு

கார்

இருள்

காலை

பொழுது

காழ்

வித்து

காழ்த்த

முதிர்ந்த

காழ்ப்ப

மிகுதியாக

காவா

காவடித் தண்டு

கிளவா

சொல்லாத

கிழமை

உரிமை

கிழவன்

உரிமையாளன்

கீழ்ந்திடா

சிதைந்திடாத

குடங்கருள்

குடிசைக்குள்

குடம்பை

கூடு

குடிமை

குடிச்சிறப்பு

குன்றி

குன்றி மணி (குண்டு மணி), நுண்ணிய அளவு

குன்று

சிறிய மலை

குன்றுதல்

குறைதல்

குறுகுதல்

குறைதல்

குறுகும்

நெருங்கும்

குழாத்து

கூட்டம் கூடுதல்

கூம்பல்

சுருங்குதல்

கூற்றம்

யமன்

கூற்று

எமன்

கூழ்

செல்வம்

கூழ்

பொன், உணவு

கெடுஆக

வறுமையாக

கெழுதகைமை

உரிமை

கேண்மை

நட்பு

கேள்வி

கேட்டல்

கைப்ப

அலங்காரமான

கைம்மாறு

பிரதியுபகாரம்

கையிகந்து

கைமீறி

கொடிறு

கன்னம், கதுப்பு

கொட்கின்

வெளிப்படுமாயின்

கொட்பு

வேறுபாடு, எல்லை

கொண்கன்

தலைவன்

கொண்கன்

தலைவன்

கொல்

தெய்வம்

கொழுநன்

கணவன்

கோடாமை

சாயாமை

கோட்டம்

கோணுதல்

கோட்டிக் கொளல்

சொல்லாதிருத்தல்

கோட்டு

கொம்பு

கோட்டுப் பூ

வளைந்த மாலை

கோமான்

அரசன்

கோறல்

கொல்லுதல்

கோறல்

கொல்லுதல்

கோள்

கொள்கை

சலம்

வஞ்சனை

சாகாடு

வண்டி

சாக்காடு

மரணம்

சாக்காடு

மரணம்

சார்வாய்

ஆதரவாய்

சால

மிகவும்

சால்பு

மேன்மை

சாவா மருந்து

அமிழ்தம்

சிமிழ்த்தல்

பிடித்தல்

சிறை

காவல்

சிற்றினம் சேராமை

சிறுமையாளருடன் சேராமை

சிவிகை

பல்லக்கு

சீர்

புகழ்

சீர்த்த

வாய்த்த

சுற்றந் தழால்

சுற்றத்தாரைச் சேர்த்துக் கொள்ளல்

சூழாது

எண்ணாது

சூழ்வார்

ஆய்ந்து கூறுவோர்

சூழ்வார்

கலந்து பேசுபவர்

செப்பம்

சட்டம், ஒழுங்கு

செம்பாகம்

சரிபாதி

செயிருடம்பு

நோயுடம்பு

செய்ந்நன்றியறிதல்

பிறர்செய்த உதவியை மறவாமை

செய்யவள்

திருமகள்

செய்யாள்

திருமகள்

செரு

பகை

செருக்கி

களித்து, மகிழ்ந்து

செருக்கு

செல்வம்

செருக்கு

மயக்கம்

செறார்

பகையாதவர்

செறிதோறும்

புணரப்புணர

செறிவு

அடக்கம்

செறு

சினம்

செறு

வெற்றி

செறுப்ப

அடக்குதல்

செறுவார்

வருத்துவோர்

செற்றார்

பகைவர்

செற்றார்

வெறுத்தவர்

செற்றார்

விலகியவர்

செல

மனங்கொள்ள

செல

ஏற்க

செவ்வி

தகுந்த காலம்

செவ்வி

காலம்

செவ்விது

செம்மையானது

சேண்

தூரம்

சேண்

தொலைவு

சேண்

உயர்வுள்ள

சேயிழை

செம்பொன் ஆபரணம்

சேறி

செல்

சேறி

போகிறாய்

ஞாட்பு

போர்க்களம்

ஞாலம்

உலகம்

தகர்

செம்மறி ஆட்டுக் கிடா

தகை

ஆடல் பாடல்

தகை அணங்குறுத்தல்

காதலியை நினைத்து உருகுதல்

தகைமை

உயர்வு

தகையால்

குணங்கள்

தஞ்சம்

எளிது

தணந்தமை

பிரிந்தமை

தனிப்படர் மிகுதி

தனிமைத் துயரம்

தமர் நீர

தழுவ வேண்டிய சுற்றத்தாரின் இயல்புகள்

தமியன்

தனித்தவன்

தமியர்

தனித்தவர்

தமியள்

தனியாய் இருப்பவள்

தருக்கி

மேற்கொண்டு

தலைப்பட்டார்

முக்தியடைந்தவர்

தலைப்பிரிந்த

நீங்கிய

தள்ளும்

தவறிப்போகும்

தழீஇ

தழுவுதல்

தவல்

அழிவு

தவாது

முடிவில்லாமல்

தவாவினை

நல்வினை

தவ்வென்னும்

சுருங்கிப் போகும்

தவ்வை

தமக்கை(அக்காள்)

தானை

சேனை

தானை

சேனை

தாளாற்றி

முயற்சி செய்து

தாள்

முயற்சி

தாவில் விளக்கம்

கெடுதலில்லா புகழ்

தினை

ஒரு வகை தானியம்

திரு

செல்வம்

திரு நுதல்

அழகிய நெற்றி

திறப்பாடு

செயல்திறன்

து

துஞ்சுதல் (உண்ணுதல்)

துகில்

ஆடை

துச்சில்

ஒதுக்கிடம்

துனி

வறுமை

துனி

வெறுத்து

துனிதல்

வெறுத்தல்

துன்னற்க

செய்யாதிருக்க

துன்னி

அடைதல், சேர்தல்

துன்னியார்

சேர்ந்தவர்

துன்னியார்

நெருங்கிய நண்பர்

துப்பு

துன்பஞ்செய்தற்குரிய பகைமை

துப்புரவு

உணவு, மருந்து, உறைவிடம்

துறைவன்

தலைவன்

துலையார்

தமக்கு ஒப்பில்லாதவர், தம்மிலும் தாழ்ந்தவர்

துளக்கற்ற

அசைவற்ற

துவற

முழுமையாக

துவ்வாதவர்

உணவுக்குத் துப்பில்லாதவர் (வறுமைப் பட்டவர்)

துவ்வாமை

வறுமை

துவ்வாய்

துய்க்க மாட்டாய்

துவ்வுதல்

நீங்குதல் (துவ்வா என்பதன் எதிர்ப்பதம்)

தூக்கின்

ஆராயின்

தூற்றாகொல்

அறிவியாவோ

தூவா

பற்றுக்கோடு, சார்பு

தூவாத

இன்னாத

தென்புலத்தார்

பிதிரர்

தெரிந்து செயல்வகை

ஆராய்ந்து செய்தல்

தெருளாதான்

ஞானமில்லாதவன்

தெறல்

கெடச்செய்தல்

தெறு

திறை, வரி

தெறும்

சுடும்

தெறும்

கெடுக்கும்

தெள்ளியர்

அறிவுடையோர்

தெவ்விர்

பகைவர்

தெவ்வோர்

பகைவர்

தேயம்

இடம்

தேற்றல்

தெளிவித்தல்

தேற்றாதவர்

அறியாதவர்

தேற்றாதவர்

அறியாதவர்

தொகச்சொல்லி

தொகுத்துச்சொல்லி

தொக்கு

சேர்ந்து, கூடி

தொடி

வளையல்

தொடிப்புழுதி

ஒரு வகை அளவு முறை

தொல்கவின்

பழைய அழகு

தொல்வரவு

பழைய உறவு

தோடு

மலர்

தோட்கப்படாத

துளைக்கப்படாத

தோட்டி

துறட்டி(அங்குசம்)

தோய்வன்ன

தழுவினாற் போன்ற

தோல்

சொல்

நகச்சொல்லி, செலச்சொல்லி

மனமகிழச்சொல்லி

நகலான்

நட்பில்

நசை

ஆசை

நசை

ஆசை

நடுஆக

நடுவாக

நடுவு நிலைமை

பொதுவாக இருத்தல்

நடுவு, செப்பம்

நடுவு நிலைமை

நட்டார்

நண்பர்

நட்டார்

நண்பர்

நண்ணார்

எதிர்த்தவர்

நத்தம்

பெருக்கம்

நனைகவுள்

நனைந்த கன்னமுடைய யானை

நன்றியில் செல்வம்

பயனற்ற செல்வம்

நயன்

நீதி

நயவற்க

விரும்பாதிருக்க

நயவாதவன்

விரும்பாதவன்

நற்றாள்

நல்ல(தூய) பாதம்; இறைவனின் திருவடி

நல்குரவு

வறுமை

நல்கூர்ந்தார்

வறியவர்

நவில்

கற்றல்

நாச்செற்று

நாவை அடக்கி

நாணுத்துறவு (உரைத்தல்)

நாணத்தை மீறுதலைக் கூறுதல்

நாமநீர்

கடல்(உப்பு) நீர்

நார்

அன்பு

நார்

அன்பு

நிச்ச

நாள்தோறும்

நிணம்

நெய், கொழுப்பு

நிரந்தவர்

கூடியவர்

நிரப்பு

வறுமை

நிரப்பு

இரந்து

நிறை யழிதல்

மன அடக்கம் குலைதல்

நிலைமையான்

இயல்புடையவன்

நிலையாமை

நிலையில்லாமை

நீத்தார்

ஆசைகளைத் துறந்தவர்

நீத்தார் பெருமை

துறவின் பெருமை

நீர்த்து

தன்மை

நுசுப்பு

இடை

நுணங்கிய

நுட்பமாகிய

நூல்

சூழ்ச்சி செய்தல்

நெஞ்சொடு கிளத்தல்

மனத்தோடு பேசல்

நெஞ்சொடு புலத்தல்

மனத்தோடு ஊடுதல்

நெருநல்

நேற்று

நெருநல்

நேற்று

நெருநல்

நேற்று

நேரா

கூடாமல், நிகழாமல்

நொந்து

வருந்தி

நோ

துன்பம்

நோன்றல்

பொறுத்தல்

நோற்கிற்பவர்

பொறுப்பவர்

பகவு

பிளவு

பக்கு

பிளந்து

பசந்து

நிறம் வேறுபட்டு

பசப்பு

பசலை நோய்(பிரிவுக் காலத்தில் மகளிரின் அழகைக் குன்றச் செய்யும் நோய்)

பசப்புறு பருவரல்

பசலைத் துயரம்

பசையினள்

இரங்கினள்

படர் மெலிந்திரங்கல்

நினைவுத்துயர்

படல்

உறக்கம்

படாஅ

ஒலியா

படிறு இலஆம்

வஞ்சனை இல்லாத

படிற்றொழுக்கம்

மறைந்த ஒழுக்கம்( பொய்யான நடத்தை)

படைச் செருக்கு

படைத்திறம்/படையின் ஆற்றல்

பணை

பெருமை

பண்டு

கண்டு

பண்டு

முன்பு

பதடி

பதர்

பனுவல்

நூல்

பயம்

பயன்

பரிந்தோம்பி(பரிந்து ஓம்பி)

வருந்திக் காத்து

பரியது

பெரியது

பரியினும்

வருந்திக் காப்பாற்றினாலும்

பருவந்து

வருந்துதல் (வறுமையால்)

பருவரல்

நோய்

பருவரல்

துன்பம்

பல்லார்

பலர்

பள்ளி

படுக்கை

பழைமை

பழம் பெரும் நட்பு

பாடிலர்

ஆண்மையற்றவர்

பாடு

பெருமை

பாத்தூண்

பகுத்துண்

பாரிக்கும்

வளர்க்கும்

பாரித்து

விரித்து

பார்வல்

பார்வை

பாற்று

உரித்தானது

பால்

ஊழ்

பிறனில் விழையாமை

மற்றவன் மனைவியை விரும்பாமை

பில்லினேன்

தழுவுதல்

பீடு

வலிமை, பெருமை

பீடு

பெருமை

பீழை

துன்பம்

பீழை

துன்பம், வருத்தம்

புக்கில்

நிலையான இருப்பிடம்

புணரின்

கூடுமாயின்

புணர்ச்சி மகிழ்தல்

கூடுதலின் இன்பம்

புணர்ச்சி விதும்பல்

கூடுவதற்கான துடிப்பு

புணை

தெப்பம்

புத்தேளிர்

கடவுளர்

புத்தேள் உலகம்

தேவருலகம்

புத்தேள் உலகு

தேவருலகம்

புனை

தளை, கால் விலங்கு

புன்மை

குற்றம்

புரைதீர்ந்த

குற்றமில்லாத

புலந்து

வெறுத்து

புலப்பல்

பிணங்குதல்

புலம்

ஐம்புலன்(மெய், வாய், கண், மூக்கு, செவி)

புலவி

காதலர் பிணக்கு

புலவி நுணுக்கம்

பிணக்கின் நுணுக்கம்

புலைவினையர்

இழிதொழிலார்

புல்லறிவாண்மை

சிற்றறிவுடைமை

புல்லறிவு

அற்ப அறிவு

புல்லுதல்

புணர்தல்

புள்

பறவை

பூசல்

பலரும் அறிய (வெளிப்படையாக)

பூரியார்

இழிந்தவர்

பூரியார்

கீழ்மக்கள்

பெட்டக்க

விரும்பத்தக்க( பெள்+தக்க)

பெட்டு

இச்சித்து

பெட்ப

விரும்பியவை

பெட்பு

விருப்பம்

பெண் வழிச் சேறல்

பெண் பித்தராதல்

பெய்

ஏற்றுதல்

பெய்தாள்

சூடினாள்

பெருக்கம்

செல்வம்

பெருமிதம்

பெருகும்

பெற்றம்

பசு

பெற்றியார்

தன்மையுடையவர்

பெற்றியார்

தன்மையுடையவர்

பெள்

விருப்பம்

பேணல்

மதித்தல்

பேதைமை

அறியாமை

பேதைமை

அறிவிலி, அறியாமை

பேதைமை

அறியாமை

பேதைமை

ஒன்றுந் தெரியாமை

பேரமர்

பெரிய வாய்

பேரா

நிலையான

பேராண்மை

மானம்

பைதல்

துன்பம்

பைதல்

நோய்

பைந்தொடி

வளையல்

பொச்சாந்தும்

மறந்தும்

பொச்சாந்தும்

மறந்தும்

பொச்சாப்பு

மறதி

பொச்சாப்பு

சோர்வு

பொச்சாவாமை

மறவாமை

பொதிந்து

இடைவிடாது

பொத்துப்படும்

தவறாக முடியும்

பொன்றா

நீங்காத

பொன்றாது

அழியாது

பொன்றாமை

இறவாமை

பொன்றி

கெடுத்து

பொன்று

இறப்பு

பொன்றுங்கால்

இறுதிக்காலம்

பொருத

தேய்க்கப்பட்ட

பொருள் செயல் வகை

பொருளீட்டல்

பொறை

பொறுமை

பொறை

சுமை

பொறை

பாரம்

பொறையுடைமை

பொறுத்துக் கொள்ளல்

பொழுது கண்டு இரங்கல்

மாலை மயக்கம்

போற்றல்

காத்தல்

போற்றி

காத்து

போற்று

காப்பு

போழ

நுழைந்த

போழப்படா

இடையறுக்கப்படாத

மடலேறுதல்

பனை மடலால் செய்யப்பட்ட குதிரை

மடி

ஆடை

மடி

சோம்பல்

மடி இன்மை

சோம்பலில்லாமை

மன்னிய

நிலைப்பெற்ற

மன்ற

நிச்சயமாக

மன்று

பொதுவில்

மயலாகும்

மயக்கத்துக்கு ஏதுவாகும்

மரப்பாவை

மரப்பாச்சி பொம்மை

மரீஇயவனை

பழகியவனை

மருங்கு

நெருங்கிய, உடன் இருத்தல்

மருண்டு

மயங்கி

மருளான்

அறிவு மயக்கம்

மருள்

மயக்கம்

மருவு

தழுவு

மறம்

வீரம்

மறு

களங்கம்

மறுகில்

வீதியில்

மறுகும்

சுற்றுகின்றது(திரிகின்றது)

மறுத்து

மீண்டு

மறை

ரகசியம்

மற்று

பற்றுகள் அறாதபொழுது

மல்லல்

வளமான

மா

பெரிய

மாசு

இருள்

மாசு

குற்றம்

மாசு

குற்றம்

மாசூர

மாசு ஊர

மாட்டு

பெண்

மாணா

அளவில்லா

மாணா

மாட்சிமையற்ற

மாணார்

சிறப்பில்லாத பகைவர்

மாண்

மாட்சிமை

மாண்ட

சிறந்த

மாதர்

மானுடப்பெண்

மாத்திரையார்

அளவுடன் இருப்பவர்

மாந்தர்

மக்கள்

மாலும்

மயங்கும்

மாலை

இயல்பு

மாழ்கும்

கெடுதற்குக் காரணமாகும்

மிகல் ஊக்கும்

வெல்ல நினைக்கும்

மிச்சில் மிசைவான்

மிகுதியை(எஞ்சியதை) உண்பவன்

மீக்கூறுதல்

உயர்த்திச்சொல்லல்

முகடி

மூதேவி

முகை

அரும்பு

முட்டா

முட்டாது, தடை இல்லாமல்

முதுக்குறைந்தது

அறிவுமிகுந்தது

முத்தம்

முத்து

முந்து

முற்பட்டு

முனிய

வெறுக்க

முயக்கு

புணர்ச்சி

முயங்க

வியர்க்க

முரிந்தார்

முடியாது நின்றார்

முறி

தளிர் வண்ணம்

முறுவல்

பல்

மெய்யுணர்தல்

உண்மையறிதல்

மைந்து

வலிமை

மையல்

மனநிலை தவறியவன், பித்தன்

மையாத்தி

மயங்குகின்றாய்

மொய்ம்பு

வலிமை

யாக்கை

தேகம், உடல்

யாண்டு

எவ்வுலகில்

யாண்டும்

எந்த நாளும்

யாப்பு

கட்டுதல், அணிதல்

யாமம்

இரவு

வசை

பழிச் சொல்

வடுமாற்றம்

தாழ்வான வார்த்தை

வட்டாடுதல்

சூதாடுதல்

வன்கணவன்

வலிமையுடையவன்

வன்கணவர்

அருளிலாதவர்

வன்கணார்

கொடியவர்(இரக்கமில்லாதவர்)

வன்கண்ணார்

வலிமை மிகுந்தவர்

வன்பாற்

காய்ந்த பாலை நிலம்

வருத்தம்

முயற்சி

வருவந்த

அஞ்சத்தக்க

வரைவின் மகளிர்

விலை மகளிர்

வறக்கு

வறுமை

வற்றல் மரம்

காய்ந்த மரம்

வலி அறிதல்

வலிமையை அறிதல்

வல்லை

விரைந்து

வளி

காற்று

வளி முதலா மூன்று

வாதம், பித்தம், சிலேத்துமம்

வழிபாடு

பின்பற்றுதல்

வானோர்

தேவர்கள்

வாலறிவன்

பேரறிவுடையவன், மிகுந்த ஞானமுடையவன்

விக்குள்

விக்கல்

விசும்பு

வானம்

விசும்பு

வானம்

விதுப்பு

விரைதல்

வித்து

விதை

வினை செயல்வகை

செயல்திறம்

வினைத் திட்பம்

(செய்கையில்) மனஉறுதி

வினைத் தூய்மை

நற்செயல்

வியன்புலம்

விரிந்த நூற்பொருள்

வியவற்க

மதியாதிருக்க

விரிநீர்

கடல் நீர்

விருந்தொக்கல்

விருந்தினர், சுற்றத்தார்

விறல்

வெற்றி

விளிந்தது

கலைந்து போகுதல்

விளிந்தவர்

உயிரற்றவர்

விளியாது

அழியாது

விழுப்பம்

சிறப்பு, மேன்மை

விழுப்பு

சிறப்பு

விழுமம்

துன்பம்

விழுமம்

துன்பம்

விழுமியார்

மேலோர்

வீயாது

நீங்காமல்

வீயாது

விடாது வந்து

வீறு

சிறப்பு

வீழுநர்

அன்புடையவர்

வீழும்

விரும்பும்

வீவர்

கெடுவர்

வெஃகாமை

பிறர் பொருளைக் கவர நினையாமை

வெஃகின்

விரும்பின்

வெகுளாமை

சினங் கொள்ளாமை

வெகுளி

கோபம்

வெகுளி

சினம் (கோபம்)

வெகுளும்

பகைக்கும்

வெரூஉம்

வெருளும்

வெறிநாற்றம்

இனிய மணம்

வெறுக்கை

மிகுதி

வெறுத்தக்க

நெருங்கத்தக்க

வெளிறு

அறியாமை

வெளிறு

அறியாமை

வேட்ட

விரும்பிய

வேட்டல்

யாகஞ்செய்தல்

வேட்பன

விரும்புவன

வேய்

மூங்கில்

வேர்

சினம்

வேளாண்மை

உபகாரம்

வேள்வி

ஐம்பெரும் வேள்வி
1. பிரமயாகம் - வேதமோதுதல்
2. தேவயாகம் - ஓமம் வளர்த்தல்
3. மானுடயாகம் - விருந்தோம்பல்
4. பிதிர்யாகம் - நீர்க்கடனாற்றல்
5. பூதயாகம் - பலியீதல் (பூத உடலைக் காணிக்கையாக்குதல்)

வைத்தூறு

வைக்கோல்

வைப்பு

உலகம்

வைப்புழி

வைக்குமிடம்

வையகம்

உலகம்

வையகம், ஞாலம்

உலகம்

ஆதாரம் : அகரமுதலி குழுமம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate