অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தெரிந்துக் கொள்ள வேண்டியவை

தெரிந்துக் கொள்ள வேண்டியவை

1. கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

2. கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

3. தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

4. சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

5. மலைகளில் பெரியது இமயமலை.

6. ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

7. ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

8. பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

9. பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

10. வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.

11. மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

12. மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

13. மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

14. மிக வெப்பமான கோள் வெள்ளி.

15. உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

16. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

17. அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

18. இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

19. ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

20. ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

21. இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

22. பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

23. செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

24. எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

25. தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.

அவை,

  1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
  2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
  3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
  4. புதுக்கோட்டை அரண்மனை
  5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
  6. சிவகங்கை அரண்மனை
  7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
  8. பத்மனாபுரம் அரண்மனை
  9. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை

26. ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.

27. நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.

28. செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.

29. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை. 300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

30. தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

31. இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

32. இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

33. உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.

34. ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.

35. இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.

36. தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.

37. பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.

38. இந்தியாவின் தேசிய விலங்கு புலி.

39. சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.

40. சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.

41. சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.

42. 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

43. 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.

44. 1927 - அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

45. 1959 - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.

46. 1966 - கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

47. 1970 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

48. 1972 - இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

49. 1997 - கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

50. 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

51. 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

52. நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

53. இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.

54. சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

55. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.

56. இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.

57. ஆண்டுதோறும் உலகில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் 'வல்கானிக்' என்றும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவுடன் தோன்றும் சிலநடுக்கம் 'டெக்டானிக்' என்றும், கடலுக்கடியில் உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ' சம்மாரின்' என்றுஇம் அழைக்கப்படுகிறது.

58. 1906 - ம் ஆண்டு பசிபிக் கடலில் கொலம்பியாவிற்கு அருமே ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகின் மிகக் கடுமையான நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.9 ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

59. ஜூன் 19 - ம் தேதி உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.* அமெரிக்காவில் வேர்க்கடலையை விட பாதாம் பருப்பின் விலை மலிவு. இதனால் அங்குள்ள இந்துக் கோயில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

60. ஏப்ரல் 23 - ம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.

61. ஏப்ரல் 7 - ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.

62. இந்தியாவில் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸாண்டர்.

63. தாமோதர் நதி வங்காளத் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

64. அண்டார்டிகா வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

65. சாக்பீஸின் வேதிப் பெயர் கால்சியம் கார்பனேட்.

66. ரைட்டர்ஸ் பில்டிங் என்ற கட்டடம் கொல்கத்தாவில் உள்ளது.

67. ஹெபடைடிஸ் - பி என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.

68. மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது. பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும் போதுதான் மின்மினி பிரகாசிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சிகள் வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம். மின்மினியின் பிரதான உணவு நத்தைகள் தான்.

69. இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூரு.

70. ப்ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.

71. தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.

72. சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.

73. இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

74. வெளவால்களில் மொத்தம் 2000 வகைகள் உள்ளன.

75. கொசுவில் 2700 வகைகள் உள்ளன.

76. யானையின் தும்பிக்கையில் 40000 தசைகள் உள்ளன.

77. குரங்குகளில் அழகானது மர்மோசைட் என்ற வகை குரங்கு.

78. நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.

79. ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்க்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்த குறையை ஈடு செய்ய தன் தலையை 180டிகிரி வரை சுற்றி பார்க்க முடியும்.

80. மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்துவயதிற்கு மேற்பட்டது.

81. எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழக்கின்றனர்.

82. ரிசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

83. பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.

84. கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் கொட்டுக்கள் வரை இருக்கும்.

85. ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காணமுடியாதாம்.

86. ஆஸ்திரேலிய மலரான கேண்டில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

87. இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா விருது.

88. ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால் மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.

89. இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலாகப் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.

90. ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.

91. இந்தியா பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.

92. நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.

93. தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.

94. தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.

95. 22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.

96. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

97. பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

98. இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.

99. லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிகிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.

100. தென் அமேரிக்காவைச் சேர்ந்த நஞ்சற்ற பாம்பான அனகொண்டா ஒன்பது மீட்டர் நீளம் கூட வளரும். இது ஒரு மானையே முழுமையாக விழுங்கும் வலிமை கொண்டது.

101. 1989 - முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.

102. பாம்புகளின் நுகர்ச்சி உறுப்பு மூக்கல்ல. அதன் பிளவுபட்ட நாக்கு போன்ற உறுப்பே மூக்காகச் செயல்படுகிறது.

103. பாம்பு குளிர்ந்த ரத்தம் கொண்ட உயிரி.

104. பாம்பின் நஞ்சில் பலதரப்பட்ட நச்சுப் பொருள்கள், புரதங்கள் மற்றும் என்சைம்மன்கள் நிறைந்துள்ளன.

105. ம்மபாள், பூம்சிலாங், பஃப் ஆடர்ஸ் ஆகியவை கொடிய விஷமுள்ள ஆப்பிரிக்க பாம்புகள்.*நச்சுப் பாம்புகளில் மிகச் சிறியது சுருட்டை விரியன்.

106. மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 3 0நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.

107. ஒவ்வோரு மிருகத்திலும் பல்வேறு இனங்கள் உள்ளன.

108. ஆனால் சிங்கம் மட்டுமே ஃபெலிஸ் லியோ என்ற ஒரே இனத்தை உடையது.

109. இப்போது கிரிக்கேட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டை முதன்முதலாக பயன்படுத்தி ஆடியவர் ராபர்ட் ராபின்சன் என்பவர் தான். இவர் 1792 மற்றும் 1819 ம் ஆண்டுகளில் இன்றைய பேட்டை முதன்முதலாகப் பயன்படுத்தி விளையாடினார்.

110. சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

111. உலகிலே அதிக வேகத்தில் பாயும் ஆறு அமேசான் ஆறு தான். இது ஒரு நொடிக்கு 63 லட்சத்து 50 ஆயிரம் கன அடிகள் வீதம் பாய்கிறது.

112. பக்ராநங்கல் அணையைக் கட்டிமுடிக்க 15ஆண்டுகள் ஆயின. இதன் உயரம் 740 அடி.

113. அமெரிக்காவின் முத்ல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 200 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பைபிள் மீது கை வைத்து ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ அதே மைபிளின் மீதுதான் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate