অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொது அறிவு - வரலாறு

பொது அறிவு - வரலாறு
 1. சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் - கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை
 2. நைல் நதியின் நன்கொடை எனப்படுவது - எகிப்திய நாகரீகம்.
 3. யூப்ரடீஸ், டைகரீஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது - மெசபடோமிய நாகரீகம்.
 4. மஞ்சள் நாகரீகம் என்பது - சீன நாகரீகம்
 5. தேநீரை உலகிற்கு அளித்த நாகரீகம் - சீன நாகரீகம்.
 6. ரிக்வேதம், நீங்கலாக ஏனைய பிறவேதங்கள் இயற்றப்பட்டது - பிற்கால வேதகாலம்.
 7. ரிக்வேத கால நாகரீகம் - கிராம நாகரீகம்.
 8. கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி.
 9. பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி.
 10. ரோமானிய நாகரீகம் - உலகிற்கு அளித்த மாபெரும் நன்கொடை - குடியரசுத் தத்துவம்.
 11. உலகின் மிகப் பெரிய கண்டம் - ஆசியா.
 12. உலகின் மிகச்சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா.
 13. இருண்டகண்டம் எனப்படுவது - ஆப்பிரிக்கா.
 14. பாலைவனங்களே இல்லாத கண்டம் - ஐரோப்பா.
 15. நாடுகளே இல்லாத கண்டம் - அண்டார்டிக்கா.
 16. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட கண்டம் - ஆசியா.
 17. மிகக்குளிரான கண்டம் - அண்டார்டிக்கா.
 18. பூமியின் நுரையீரல் எனப்படும் அமேசான் ஆறு அமைந்துள்ள கண்டம் - தென் அமெரிக்கா.
 19. ஐரோப்பா, ஆசியா ஆகிய இருகண்டங்களாக பரவியுள்ள நாடு - ரஷ்யா.
 20. உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா.
 21. மிக அதிகமான நாடுகளுடன் எல்லையைப் பங்கிடும் நாடுகள் - ரஷ்யா, சீனா (14 நாடுகள்)
 22. ஹெலனிக் குடியரசு எனப்படும் நாடு - கிரீஸ்
 23. அன்னை தெரசா பிறந்த நாடு - யூகோஸ்லேவியா.
 24. யூதர், இஸ்லாமியர், கிருத்தவர் ஆகியோருக்கு பொதுவான புனிதத் தலம் - ஜெருசலேம்.
 25. உலகின் முதன் முதலாக காகித கரன்சி பயன்படித்திய நாடு - சீனா.
 26. கிருத்துவ சமத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடு - அர்மீனியா.
 27. ஆஸ்திரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை - தி லாட்ஜ்.
 28. பிரிக்ஸ் நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா.
 29. கருணைக்கொலைக்கு சட்டபூர்வ ஆங்கீகாரம் வழங்கிய உலகின் முதல் நாடு - ஆஸ்திரேலியா.
 30. இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு - பூடான்.
 31. ஐ.நா. சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு - லீக் ஆஃப் நேஷனல்
 32. ஐ.நா. சபை நடைமுறையில் வந்த நாள் - 1945, அக்டோபர் 24.
 33. ஐ.நா. அலுவல் மொழிகள்: சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபி.
 34. ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நகரம் - நியூயார்க்.
 35. தற்போது ஐ.நா. உறுப்பினர் எண்ணிக்கை - 193
 36. ஐ.நாவில் மிகக் கடைசியாக உறுப்பினரான நாடு - தெற்கு சூடான் (2011)
 37. இந்தியாவில் ஐ.நா. தகவல் மையம் அமைந்துள்ள நகரம் - புதுதில்லி.
 38. ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரம் - டோக்கியோ
 39. கின்னஸ் சாதனைப் புத்தகத்தின்படி மிக அதிகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஐ.நா. ஆவணம் - சர்வதேச மனித உரிமைகள் பற்றிய அறிவிப்பு
 40. ஐ.நா. சபையில் உறுப்பினராகாத ஆசிய நாடு - மங்கோலியா.
 41. ஐ.நா.வின் முதல் சிறப்புக் கழகம் - சர்வதேச தொழிலாளர் கழகம் (ஐஎல்ஒ).
 42. உலக வாணிபக் கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனீவா
 43. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு - யுனெஸ்கோ.
 44. சர்வதேச அணுசக்தி அமைப்பின் முத்திரைச் சொல் - அமைதிக்கு அணு
 45. சார்க் அமைப்பின் நிரந்தர தலைமையகம் அமைந்துள்ள இடம் - காட்மண்டு.
 46. சார்க என்ற கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளியிட்டவர் - வங்காளதேச அதிபர் சியாவுர் ரஹமான்.
 47. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு - ASEAN.
 48. ஆம்தெனஸ்டி இன்டர்நேஷலின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - லண்டன்.
 49. ஐ.நா. சபைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான நாடுகளை கொண்டது - அணிசேரா இயக்கம்.
 50. காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் - 54.

ஆதாரம் : கல்விச்சோலை© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate