অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

விண்வெளி ஆராய்ச்சிகள்

விண்வெளி ஆராய்ச்சிகள்

அறிமுகம்

மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்திய விண்வெளி திட்டம் சுமார் 20 ஆண்டுகால தாமதத்துடன் துவங்கியது. இருந்தாலும், இந்தியா இன்று விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் முதன்மை ஆறு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. வெளி நாட்டு உதவி அதிகம் இல்லாத நிலையில் இந்தியா இந்தத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. பூமியை ஆய்வு செய்வதற்கும், தொலைதொடர்புக்குமான செயற்கைக் கோள்களையும், ஏவுகணைகளையும் உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா முழுமையாக பெற்றுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களுக்கு இணையாக உள்ளன.

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்தி செலுத்தப்பட்ட, பூமியை சுற்றி செயல்பட்டு வரும் செயற்கைக் கோள்களினால் விண்வெளி ஆய்வில் புரட்சி ஏற்பட்டுள்ளது. பூமியைச் சுற்றி வளிமண்டலம் இருப்பதால் பூமியிலிருந்து விண்வெளியில் உள்ள கோள்களை ஆய்வு செய்வதில் குறைபாடுகள் உள்ளன. ஆனால், வான் மண்டலத்திற்கு உயரே செலுத்தப்படும் விண்கலங்களில் பொறுத்தப்பட்டிருக்கும் கருவிகள் மூலம் பல கோள்களை நாம் துல்லியமாக பார்க்க முடியும். பூமியைச் சுற்றிவரும் செயற்கை கோள்களிலிருந்து விண்வெளியை மிகத்துல்லியமாக நாம் பார்க்க முடியும். அதேபோல், அங்கிருந்து பூமியையும் நம்மால் பார்க்க முடியும். இந்த செயற்கை கோள்களின் உதவியால் மனித இனம், இந்த பிரபஞ்சத்தை நன்றாக அறியவும், பூமியிலுள்ள சாமானிய மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்கவும் உதவுகின்றன.

ஏவுகணைகளின் சரித்திரம் ஆறாவது நூற்றாண்டிலிருந்தே துவங்கியது. அப்போது சீனப் பட்டாசுகளின் அம்சமாக, ஒரு சிறு வடிவமாக ஏவுகணை இருந்தது. பிறகு 1782ல் திப்பு சுல்தான் ஆங்கிலேயர் படைகளை எதிர்த்து ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஏவுகணைகளை பயன்படுத்தினார். அங்கிருந்து அது ஐரோப்பாவிற்கு பரவியது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் ரஷ்யாவும், அமெரிக்காவும் மிகவும் திறமையான ஏவுகணைகளை உருவாக்கினர். அமெரிக்காவின் திரு.ஒவர்த் அவர்களும் முந்தைய சோவியத் யூனியனின் சியோல்காவ்ஸ்கி அவர்களும் ஏவுகணையின் என்ஜின்களையும் எரிபொருள்களையும் அறிவியல் பூர்வமாக உருவாக்கினார்கள்.

போர்க்கால தேவைகளினால் ஏவுகணைகள் சிறப்பாக இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனி உருவாக்கிய V2 ஏவுகணைகளைக் கண்டு எதிரணி நடு நடுங்கியது. உலகப்போருக்கு பின்பு ஜெர்மனி நாட்டு ஏவுகணை நிபுணர்களை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் கவர்ந்து கொண்டனர். தங்களுடைய இராணுவ பலத்தை அதிகரிக்க இந்த இரண்டு நாடுகளும் கடுமையாக போட்டியிட்டன. இதனால், மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அவர்கள் தயாரித்தார்கள். 1957 அக்டோபர் 4ஆம் தேதி, விண்வெளியில் ஸ்புட்னிக் ஏவுகணையை செலுத்தி அது எடுத்துச் சென்ற, மனிதனால் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோளை பூமியைச் சுற்றி வரவைத்தது. இதையடுத்து அமெரிக்கா ஜெமினி ஏவுகணைகளை செலுத்தியது. இதன்பிறகு, இந்த ஏவுகணைகளில் மனிதர்களை அனுப்பி, பிறகு மனிதன் சந்திரன் மீது, கால் வைத்தது ஆகியவை, பெரிய நிகழ்வுகளாகும்.

வளர்ந்த நாடுகளில் ஏவுகணை வடிவமைப்பு மேம்பாடு சிறப்புப் பெற்று பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களை செலுத்தவும், சூரிய மண்டலத்தின் தொலைதூர பகுதிகளுக்கு விண்கலங்களை அனுப்பவும், தொழில்நுட்பம் உயர்ந்தது. அதிநவீன கருவிகளை ஏந்திச் செல்லும் இந்த செயற்கை கோள்களினால், நாம் விண்வெளியை மிக நேர்த்தியாக ஆய்வு செய்ய முடிந்தது. இதன் பிறகு ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் பின் தொடர்ந்தன. அமெரிக்க உதவியோடு, ஜப்பானும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்தியா மட்டுமே, இராணுவம் அல்லாத அமைப்பில் தன்னுடைய விண்வெளி மேம்பாட்டை துவக்கியது. நம்முடைய அறிவியல் முன்னோடி Dr. விக்ரம் சாராபாய், விண்வெளி தொழில்நுட்பத்தின் சாத்தியக் கூறுகளை மட்டுமல்லாமல், அவற்றை சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் அறிந்திருந்தார். 1960களின் பிற்பகுதியில் அவர், இந்திய விண்வெளி திட்டத்தை உருவாக்கினார். அதுவே, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அடிப்படையாயிற்று.

இந்திய விண்வெளி திட்டம்

இந்திய விண்வெளி திட்டங்கள் 1963ல் தும்பாவில் தொடங்கியது. அங்கிருந்து செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணை எடுத்துச்சென்ற கருவியின் மூலம், வான்வெளியில் காற்று சம்மந்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு, நாம் வெகுதூரம் கடந்து விட்டோம். விண்வெளியை ஆய்வு செய்வதற்காக நாம், தகுந்த ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும் என்று உணர்ந்த Dr. சாராபாய் வான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை தும்பாவில் நிறுவினார். இதுவே பிறகு விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாக மாறியது. அங்குதான் செயற்கைக்கோளை செலுத்தும் விண்கலங்கள் உருவாக்கப்பட்டன. ஜூலை 1980ல் முதன்முதலாக SLVI என்ற ஏவுகணையை செலுத்தி பூமியை சுற்றி வரும் 50 கிலோகிராம் ரோஹினி செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது. அந்த நிகழ்வின் மூலமாக இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இணையாக விண்வெளி நாடுகளின் அணியில்சேர்ந்தது. அங்கிருந்து நாம் நெடும் பயணம் சென்று இன்று நாம் PSLV ஏவுகணைகளையும் 2.5 டன் எடைகொண்ட விண்கலங்களை செலுத்தும் GSLV ஏவுகணைகள் மூலம் பூமிக்கு மேல் நிலைத்து நிற்கும் படியான செயற்கைக் கோள்களையும் செலுத்துகிறோம்.

இதனுடைய பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் நவீன விண்கலங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நம்முடைய விண்கலன் தொழில்நுட்பத்தை நிரூபிக்கும் வகையில் முதன் முதலாக, ஆரியபட்டா மற்றும் பாஸ்கரா என்ற இரண்டு செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டன. இந்த 500 கிலோ எடை கொண்ட செயற்கை கோள்கள் ரஷ்யாவின் ஏவுகணை எரிமையத்திலிருந்து செலுத்தப்பட்டன. அதே சமயம், அமெரிக்காவின் ஃபோர்டு ஏரோஸ் பேஸ் நிறுவனத்தின் கூட்டோடு (இன்சாட் 1 வரிசை) தொலைதொடர்பு செயற்கைக் கோள்கள் தயாரிப்பு துவங்கியது. இந்த செயற்கைக் கோள்களோடு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தொலை தொடர்பில் ஒரு புரட்சியை உருவாக்கி ஒரே செயற்கை கோளை பயன்படுத்தி தொலை பேசி, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் நிலவளத்திற்காக பூமியை ஆய்வு செய்யும் வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்படி இன்சாட் செயற்கைக் கோள் மூலம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாடெங்கிலும் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதே செய்கோளை பயன்படுத்தி தூர்தர்ஷனின் 1000 ஒளிஒலிபரப்பு சாதனங்கள் இணைக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், இந்த செயற்கைக் கோள் மூலம், நடமாட்டம் மற்றும் புயல் நடமாட்டத்தை கண்காணித்து துல்லியமான வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த வகையில், மேலும் முன்னேற்றமாக, பூமிக்கு மீது நிலைத்து நிற்கும் செயற்கைக் கோள்களை செலுத்தி தொலைதூர பகுதிகளுக்கும் தொலை தொடர்பு வசதி அளிக்கப்பட்டது.

மேக சாமானிய மக்களின் அன்றாட தேவைகள் பலவற்றை அளிக்கும் வகையில், இந்திய விண்வெளி திட்டம் அமைந்திருப்பது அதன் தனித்தன்மையாகும். விண்வெளியிலிருந்து பூமியை பல கோணங்களில் மிகத்துல்லியமாக ஆய்வு செய்யும் வசதியால் கனிம வளங்களை அளவிட்டு, இயற்கை நிலம், காடு, மீன் வளம் ஆகியவற்றின் மேலாண்மையும் சிறப்பாக நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல், இந்த துல்லியமான கணிப்பால், தினசரி வானிலையையும், பருவ நிலை மாற்றங்களையும், வெள்ளம், சுனாமி மற்றும் பூகம்பங்களினால் ஏற்படும் பாதிப்பு களையும் கணக்கிட முடியும். பூமியை கண்காணிக்கும் IRS வளங்கள்சார் செயற்கைக் கோள், காட்டோசாட் மற்றும் கடல்களுக்கான செயற்கைக் கோள்கள் தற்போது தேசிய அளவில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.

வளங்களான நீர், சிறப்பாக பயிரிடப்பட்டுள்ள பகுதியில் பயிர்களின் வளர்ச்சியை கண்காணிப்பதன் மூலம், வறட்சி மற்றும் பூச்சிகளினால் தாக்குதல் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுக்கமுடியும். இதனால், செயற்கை உரங்களை தேவையான பகுதிக்கு அனுப்பவும், விவசாயிகள் தகுந்த திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பயிர் காப்பீட்டிற்கும் பயனளிக்கிறது. பயிர் பகுதிகளையும், அவற்றின் செழுமைகளையும் ஆராய்வதன் மூலம் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிய முடியும். இந்த தகவல்களின் அடிப்படையில் விளை பொருட்களை கொள்முதல் செய்வது மற்றம் விற்பனை செய்வது ஆகியவற்றை சிறப்பாக செய்ய முடியும்.

காடு வளம், ஒரு நாட்டின் முக்கிய சொத்தாகும். இவைகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், காட்டுத்தீ போன்றவைகளால் இவர்களுக்கு மனிதர்களாலும், இயற்கையாலும் ஏற்படுகின்ற இழப்புகளை உரிய காலத்தில் கண்டறிய முடியும். குளங்கள், ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகளிலிருக்கும் ரின் அளவையும், தரத்தையும் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் நீர் மேலாண்மை மேம்படும். இந்த வகையில் ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் துவக்கியிருப்பது சிறப்பான ஒன்றாகும். செயற்கைக் கோள் காட்சி களிலிருந்து எந்த பகுதிகளிலிருந்து நீர் நிலைகளை உருவாக்கலாம் என்பதை நிர்ணயிக்க முடியும். இந்த தகவல்களை பயன்படுத்தித்தான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ஆழ்கிணறுகள் அமைக்கப்பட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் போடப்பட்ட ஆழ்கிணறுகளில் 70 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாகவும், இந்த தகவல்கள் அல்லாத வகையில் அமைக்கப்பட்டவைகளில் 30 சதவிகிதம் வெற்றியடைந்ததாகவும் கூறப்படுகிறது. நீர் கிடைக்காத ஆழ்கிணறுகளால் பல கோடி ரூபாய் வீணாகிறது.

ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறந்த மீன்பிடி பகுதிகளை கணிக்கவும் இந்த தகவல்கள் உதவுகின்றன. ஒசியன்சாட் செயற்கை கோள் மூலம் கடலின் நிறம், தரைமட்ட வெப்பம் மற்றும் காற்று வீசும் திசை ஆகியவைகளை அறிந்து கணிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளில் மீன்கள் கூடியுள்ளன என்பதை கணிக்க முடியும். அப்படிப்பட்ட தகவல்கள், மீன்பிடி கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தத் தகவலின் அடிப்படையில் மீனவர்கள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்லமுடியும், மீன் பிடிப்பும் இருமடங்குக்கு மேலாக கிடைக்கிறது. இதனால், நேரமும், செலவும் குறைகின்றன. இப்படிப்பட்ட தகவல்கள், குஜராத், கேரளம் மற்றும் ஆந்திரபிரதேச மாநில கடலோர மக்களுக்கு கிடைக்கிறது.

தொலைதூர கணிப்பின் மூலம், நீர் வளங்களையும் நாம் மேலாண்மை செய்யலாம். பெரும்பான்மையான கிராமங்கள், சிறிய பெரிய நீர்நிலைகளின் அருகிலேயே கர்நாடகத்தின் ஆறுடங்களின் செயற்கை கோள் தகவல்படி உள்ளன. LDTG)I நீர்நிலைகளைச் சுற்றி குடியமைப்புகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. அதுபோலவே, நிலங்களின் தன்மையும் அளவிடப்பட்டு அவை விவசாயத்திற்கு அல்லது சமூக காடு வளர்ப்பிற்கு உகந்தவை என்று நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி தகுந்த தகவல்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு எந்த வகையான பயிர்களை வளர்ப்பது என்று அறிவுரை அளிக்கப்படுகிறது. மழை நீரை சேமிப்பதன் மூலம் அவை வீணாவதை தடுத்து, கிராம மக்களுக்கு பயனளிக்கப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் மக்களின் வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள் தகவல்களின் மூலம், பாசனத்தின் அடிப்படையிலுள்ள விவசாய நிலங்கள், சாலைகள், மின் தொடர்புகளை ஒழுங்குபடுத்துதல், மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு நிலங்களை பயன்படுத்துதல் ஆகியவை ஏற்பட்டுள்ள பயன்களாகும்

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையாக கருதப்படும் Dr. விக்ரம் சாராபாய் நாடெங்கிலும் 33 கோடி சதுர கிலோ மீட்டர் அளவிற்கு எல்லா தொலைதூர இடங்களுக்கும் உட்பட தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தும் பயனை அறிந்திருந்தார். இதற்காக, நாடெங்கிலும் 3000கிமீ அளவிற்கு, தொலை தொடர்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வேறு எந்த வகையிலும், இவ்வளவு பெரிய பகுதிக்கு, சீரான தொலை தொடர்பு வசதிகளை அளிக்க முடியாது. 1960களில் அவர், பூமியின் மீது நிலைத்து நிற்கும் செயற்கை கோள்களை உருவாக்கி செயல்படுத்துவது பற்றி திட்டமிட்டார். அமெரிக்காவின் நாசா நிறுவனத்தோடு தனக்கிருந்த தொடர்பைப் பயன்படுத்தி, இந்தியாவின் மத்திய பகுதியில் தொலை தூரங்களில் இருந்த 2000 கிராமங்களுக்கு செயற்கைக் கோள் சேவையை உருவாக்கினார். Sie (செயற்கைக் கோள் சார்ந்த தொலைக் காட்சி முயற்சி) என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில் தொலைதூரங்களிலுள்ள கிராம மக்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் சிறப்பான விவசாயம் சார்ந்த தகவல்கள் அளிக்கப்பட்டன. இந்த திட்டம் ஒரளவு செயல்பட்ட போது சமுதாய மேம்பாட்டிற்கான மிகச்சிறந்த திட்டம் என அதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கருதியது.

பூமியின்மீது நிலைத்து நிற்கும் செயற்கைக் இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொலை தொடர்பு வசதிகளை அளிக்க முடியும். வீடுகளுக்கு நேரடியாக, தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அளிப்பதில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களும் கூரை மீது, ஒரு கருவியைப் பொருத்தி நூற்றுக்கணக்கான தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை செயற்கை கோள் வழியாகப் பெறமுடியும். பேரிடர் காலங்களில், எளிதாக அணுக முடியாத தொலை தூர பகுதிகளிலும் பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த செயற்கைக் கோள்கள் உதவுகின்றன. இந்த செயற்கைக் கோள்கள் மூலம் எளிதாக அணுகமுடியாத கிராம மக்களுக்கும் தொலைக்காட்சி மூலம் கல்வி அளிக்க முடியும்.

கோள்கள் மூலமாகத்தான் பூமியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது. இந்த வகையில், தொலை தொடர்பு மருத்துவம், தொலை தொடர்பு கல்வி மற்றும், கிராம ஆதார மையம் ஆகியவைகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்த செயற்கைக் கோள்களை சமுதாயத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாதனை தொலைதொடர்பு மருத்துவம் மூலம் எளிதாக அணுக முடியாத கிராமங் களிலும் மக்களின் வீட்டிலேயே, மருத்துவ வசதி அளிக்க முடியும் என்பதை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நிரூபித்து இருக்கிறது. தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்கள் ஒரு சிறப்பு மருத்துவரின் சேவையை பெற வேண்டு மானால், அவர் பல நூறு கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியுள்ளது. அங்கு போக பல நாட்களும் ஆகும். இந்த தொலைதொடர்புகளாகும்.

சாதாரணமாக, மருத்துவம் மூலம் ஒரு நோயாளியின் தகவல்கள் செயற்கைக் கோள்கள் மூலம் ஒரு சிறப்பு மருத்துவருக்கு அனுப்பப்படுகிறது. அந்த தகவல்களை ஆராய்ந்தபின் மருத்துவர், நோயாளியோடு தொடர்பு கொண்டு தேவையான பரிந்துரைகளை அளிப்பார். இப்படிப்பட்ட வசதிகளை நம் நாட்டிலுள்ள பெரிய மருத்துவமனைகள் செய்கின்றன. தற்போது, கிராமப்புறங்களில் உள்ள 382 மருத்துவமனைகள் பெரு நகரங்களில் உள்ள 60 பன்சிறப்பு மருத்துவமனைகளோடு இணைக்கப்பட்டுள் இது அல்லாமல் 16 தானியங்கி மருத்துவ ஊர்திகளும், தொலை தொடர்பு மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டொண்டிற்கு மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த தொலைதொடர்பு வசதிகளை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சேவைகளை இந்திய இராணுவத்தின் அடிப்படை மருத்துவமனைகளும், தொலைதூர பகுதிகளுக்கு வழங்குகின்றன.

இந்த SITE (செயற்கைக் கோள் சார்ந்த தொலைக்காட்சி முயற்சி) மாதிரி திட்டம் செயற்கைக் கோள் மூலம் செயற்கை கோளை கல்வி திட்டத்திற்கு எப்படி செயல்படுத்த முடியும் என்று நல்ல அனுபவங்களை கொடுத்துள்ளது. சிறப்பு ஆசிரியர்களின் பற்றாக்குறை நமக்கு எப்போதுமே உண்டு. இந்த இழப்பை போக்க, சிறப்பு ஆசிரியரின் பாடத்தை ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஒளிபரப்ப முடியும். தொலை தொடர்பு மூலம் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மாணவர்கள் ஆசிரியரோடு பேச முடியும். இந்த திட்டத்தின்படி பல மாநிலங்களில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், ஆசிரியர் பள்ளிகளிலும் பயன்பெறுகிறார்கள். இதுபோலவே, இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள், இந்திய மேலாண்மை கல்வி நிலையங்கள் ஆகியவை மற்ற நிலையங்களில் உள்ள சிறப்பு ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. இதன்படி தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளுக்கும் சிறப்பு ஆசிரியர்களின் பங்களிப்பு கிடைக்கிறது. இதற்காக, 2004ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், Edusa என்ற கல்விக்கான செயற்கைக் கோளை செலுத்தியது. இந்த செயற்கைக் கோள் மூலம், தொலைதூர பள்ளிகளுக்கு கல்வி வசதி கிடைக்கிறது. இதன்படி ஆரம்ப, நடுநிலை மற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டங்களில் கிராமப்புற மற்றம் சிறு நகரங்களில் உள்ள சுமார் 60,000 வகுப்புகள் Edusat செயற்கை கோள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மையில், விண்வெளித் திட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் போது, ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் இந்த செயற்கைகோள்கள் அளிப்பதால் நாம் உடனடியாக துயர் மீட்புப் பணிகளை எடுக்க முடிகிறது. தீவிர பருவநிலைக் காலங்களிலும், புயல் காலங்களிலும் செயற்கைக் கோள்கள் பெருமளவு உபயோகமாக உள்ளன. மேக மூட்டங்களின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை அளிக்க முடிகிறது. வங்கக் கடலிலும், அரபுக் கடலிலும் உருவாகும் புயல் சின்னங்களை முன்பாகவே அறிந்து அவை எந்த திசை நோக்கிச் செல்கின்றன என்பதை ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே அறிந்து கொள்ளமுடியும். இந்த தகவல்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் தேவைப்பட்டால் மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்றவும், சேதத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முடிகிறது. முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்ட நிலைமை மாறி சேதங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. வேறு வகையான தொலை தொடர்புகள் முற்றிலும் பழுதடைந்த நிலையில் வெள்ளம் மற்றும் புயல் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு செயற்கைக் கோள் மூலமே தகவல் பரிமாற்றம் நிச்சயமாக கிடைக்கிறது.

கிராம ஆதார மையங்கள்

கிராம ஆதார மையங்களை இந்த செயற்கைக் கோள்கள் மூலம் இணைக்கும் ஒரு மாதிரி திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன்படி தரை மட்டத்தில் உள்ள அனைத்து நீர், நில வளங்கள் மற்ற தகவல்கள் செயற்கைக் கோள் மூலம் ஆராயப்பட்டு கணிணிகள் மூலம் அளிக்கப்படுகிறது. இதனால், திட்டமிடுதல் மேம்படுகிறது. விவசாய நிபுணர்களோடும், வருவாய் அதிகாரிகளோடும் இணைப்பு ஏற்படுத்தப்படுவதால் பலவகையான பொருட்களையும், சேவைகளையும் வழங்குபவர்கள் சிறப்பாக வியாபாரம் செய்ய முடிகிறது. இது அல்லாமல், இந்த மையம் தொலை தொடர்பு மருத்துவ சேவைகளையும், தொலைத் தொடர்புக் கல்வியையும் அளிக்கக்கூடிய வகையில் இணைக்கப்பட்டுள்ளது. 21 மாநிலங் களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 475 கிராம ஆதார மையங்களில் ஒரு சாளர முறை மூலம் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

தற்போது, ஒரு இடத்திற்கு போகும் வழியை கண்டுபிடிக்கும் GPS முறையை பயன்படுத்த நாம் அமெரிக்காவை நம்பியிருக்கிறோம். இதனை சரிசெய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தானே ஒரு IRNS எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் ஒரு இடத்திற்கு செல்லும் பாதையை அறியும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கு பூமியின்மீது ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் ஏழு செயற்கைக் கோள்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இந்த செயற்கைக் கோள்கள் மூலம் பாதுகாப்புத்துறையும் தன்னுடைய அன்றாட பணிகளை செய்ய ஏதுவாகும்.

இன்சாட் செயற்கைக் கோள்கள் மூலம் கடலில் ஆபத்தில் இருக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்து அவசர செய்தியை அனுப்பி தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட முடியும். செயற்கைக் கோள்களின் தகவல்களோடு தரையில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வானிலை ஆய்வு நிலையங்களின் தகவல்களும் பயன்படுத்தப்படு கின்றன. பூமியின் மீது ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் செயற்கை கோள்களிலிருந்து பூமியின் தரை உஷ்ண அளவு, காற்றின் திசை, வேகம், ஈரப்பதம், கதிர் சிதறல் மற்றும் பூமியின் ஈரம் ஆகியவை நேரடியாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த செயற்கைக் கோள்களின் மூலம் தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்கள் மற்றும் பங்கு மார்க்கெட்டுகள் தடையில்லாமல் செயல்படுகின்றன.

சாமானிய மக்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நம்முடைய பிரபஞ்சத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அளிக்க மறக்கவில்லை. அதனால்தான் நாம், நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் பயணம் முடிந்தது. சந்திராயண் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம் நமக்குசெய்ய மிக அரிய தகவல்களை அளித்துள்ளன. இதன்படி, நிலவில், நீர் இருப்பதை முதலாக அறியமுடிந்தது. அதைப்போலவே, அங்கு அதிக அளவில் ஹீலியம் படிமங்கள் இருப்பதும் முக்கியமான கண்டுபிடிப்புகளாகும். விண் வெளி தொழில்நுட்பத்தால் ஏற்படும் பலன்கள் பலவகையானவை. விண்வெளி தொழில் நுட்பத்தால் நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடித்தல், கணித்தல், சிக்கலான மூலக் கூறுகளின் தன்மைகள் ஆகியவை கண்டறியப் பட்டுள்ளன. மருத்துவத் துறையில் இந்திய கண்டுபிடிப்புகளான இதய வால்வுகள், இதயம் செயல்படும் பம்புகள், ஸ்டென்டுகள் மற்றும் போலியோ பாதித்தவர்களுக்கு இடுக்கிமானி, ஆகிய கண்டுபிடிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களுக்கான சிக்கலான தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் Drசாராபாயின் கனவை நனவாக்கியுள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளது. விண்வெளி ஆய்வுக்கு செய்யப்பட்ட செலவைவிட அதனால் விளைந்துள்ள பயன்கள் மிக அதிகம் என்று ஒரு தனி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக விளங்குகிறது

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : மாதவன் நாயர், முன்னாள் தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate