பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்

பன்னாட்டுப் பலவகைப் பயணிகள்- ஒர் கண்ணோட்டம்

முன்னுரை

கிறித்து பிறப்பதற்கு முன்பே தமிழர் சுமேரியா, கீரிசு, உரோமம், எகிப்து, சீனம், பாலத்தீனம், மெசபொடேமியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டுள்ளனர். யூதர்களின் தலைவர் மோசசு, தாம் நடத்திய வழிபாட்டில் தமிழகத்து ஏலக்காயைப் பயன்படுத்தியுள்ளார். அக்காலம் கி.மு. 1490 என்பவர். சுமோரியாவிலுள்ள சந்திரன் கோயில் சிதைவுகளில் சேர நாட்டுத் தேக்கு மரத்துண்டுகள் காணப்பெறுகின்றன. "அரேபிய, கிரேக்கக் கப்பல்கள் முசிறியில் நிறைந்திருந்ததாகப் பெரிப்புளுக் கூறுகின்றது.

பண்டைத் தமிழர் சமயத்தின் பொருட்டும் பயணம் செய்துள்ளனர். குடமலை நாட்டிலுள்ள மாங்காட்டு மறையோன் திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய இடங்களில் உள்ள திருமாலை வணங்குவதற்காகச் சென்றான். இந்திர விழாவைக் காண விரும்பிய மணிமேகலா தெய்வம் பூம்புகாரில் இருக்கின்ற ஒரு பெண் வடிவத்துடன் வந்தது என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.

மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன் திருமகளும் விரும்பும் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்றவனாகிய பூமாலையை யுடையவனும், மணிமாலையை யுடையவனும், பொற்பூணினை யுடையவனும், பூமியிலுள்ளோர் காணலாகாத பலரும் தொழும் தெய்வ வடிவினை யுடையவன் என்றும் சீத்தலைச் சாத்தனார் பகருகின்றார். சங்ககால மக்கள் இவ்விரு காரணங்களுக்காக வெளியிடங்களுக்குச் சென்று பேரவையில் 1277-ல் அரசியல் அலுவலராக நியமிக்கப்பெற்றார். பின்னர் ஒரு பெரும் நகரத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பெற்றார்.

அவர் எழுதிய நூலின் பெயர் 'பயணங்கள்' (வழிச்செலவு) என்பதாகும். அந்நூலில் அவரது பயணத்தைப் பற்றிய முறையான வருணனையைக் காண முடியவில்லை. அவர்கள் செல்லும் வழியில் நிகழ்ந்த சுவையான பகுதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. அவர் தமது வீரச் செயலை விளக்க அந்நூலை எழுதவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் அறியாத, அறியவேண்டிய செய்திகளைத் தேர்ந்தெடுத்து எழுதினார். அது பூகோள நோக்கில் அமைந்துள்ளது. மார்க்கோ போலோவைப் புகழ்வதுபோல அமையவில்லை. மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதைக் காட்டிலும் அறிவூட்டுவதே அவருடைய குறிக்கோளாக இருந்தது இருப்பினும் அவர் சுவையுடன் கூறுவதால் மகிழ்ச்சியூட்டுகிறார்.

மெகஸ்தனிஸ்

யவன நாட்டவரான மெகஸ்தனில் 'வரலாற்று நூல்', 'உலகநூல்' என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். சிரியா நாட்டுப் புரவலரான செலுக்கஸ் நிகாடோர் என்பவர் சார்பாகக் கி.மு. 311-ம் ஆண்டு அயல்நாட்டு அரசியல் தூதுவராக இந்தியா வந்து சில ஆண்டுகள் தங்கினார்.

மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்பே தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்புகளுள் முதலில் எழுதப்பட்ட குறிப்பாகும். அவர் பாண்டி நாட்டைப் பற்றி எழுதிய குறிப்பு கவர்ச்சியுடையது. அந்தக் குறிப்பில் உண்மையும் அப்பொழுது நிலவிய கட்டுக்கதைகளும் கலந்து காணப்பெறுகின்றன. "இந்திய மக்கள் மரத்தால் ஆன வீடுகளில் கிராமங்களில் வாழ்கிறார்கள். சில வீடுகள் நாணல், புல் முதலியவற்றாலும் கட்டப்பெற்றுள்ளன. கடலில் வாழும் ஆமை ஓடுகளை வீட்டுக் கூரைகளாகப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஓடும் 15 முழ நீளமுள்ளது. இங்குள்ள தென்னந்தோப்புகளில் தென்னை மரங்கள் வரிசையாகவும் ஒழுங்காகவும் வளர்க்கப் பெற்றுள்ளன. இங்குள்ள யானைகளைப் பிடித்துக் கலிங்க நாட்டு மன்னனுக்கு விற்கின்றனர். கடற்கரையில் வாழும் பரதவர் மீன் பிடிப்பதிலும் விலங்குகளை வேட்டையாடுவதிலும் வல்லவர். இங்குள்ள மீன்கள் சிலவற்றிற்குச் சிங்கத் தலையும், சிறுத்தைத் தலையும், ஆட்டுக்கிடாய்த் தலையும் இருக்கின்றன. சில மீன்கள் சாட்டிரின் (குதிரைக்காது வால், மனித வடிவு) உருவைப் பெற்றுள்ளன. சில மீன்கள் பெண்களைப்போல இருக்கின்றன. ஆனால் அவற்றிற்குத் தலைமயிர் இல்லை. அதற்குப் பதிலாகப் பொடிமுன் கற்றைகள் இருக்கின்றன. கடலில் திமிங்கிலங்களும், கடற் பன்றிகளும் காணப்பெற்றன என்று வந்துள்ளனர். சங்க காலப் பயணிகள் எழுதி வைத்த குறிப்புகள் கிடைக்கவில்லை.

தாலமி

தாலமி யவன நாட்டைச் சார்ந்தவர். அவர் கி.பி. 2-ம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தார். எகிப்தில் துறைமுகப்பட்டினமாக உள்ள அலெக்சாந்திரியாவில் நெடுங்காலம் வாழ்ந்தவர். எட்டுத் தொகுதிகளை உடைய உலக நூலையும், நிலவியலுக்கு வழிகாட்டி என்னும் நூலையும் எழுதியுள்ளார். அவர் ஒரு வான நூலறிஞர். பூம்புகாரைத் தாலமி கபேரிஸ் என்று வழங்குகிறார். தமது நூலில் காவிரிப் பூம்பட்டினத்தையும், காவிரியாற்றையும் குறிப்பிட்டு உள்ளார்.

பிளினி

பிளினி இத்தாலி நாட்டிலே வெரொன் நகரிலே கி.பி. 23-ல் பிறந்தார். திபேர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். ஸ்பெயினில் அரசிறைக் காவலராகப் பணியாற்றியவர். மிசோன் மேட்டு முனையின் கப்பல் பகுதித் தலைவராய் இருந்து கடல் பயணத்தில் அனுபவம் உள்ளவர். வெசூவியஸ் எரிமலைக்காட்சியை நேரில் பார்க்கச் சென்றவர் எரிமலையின் நச்சுப்புகையைச் சுவாதித்து இறந்தார். அப்பொது அவருக்கு வயது 56. பிளினி ஏறத்தாழ கி.பி. 75-ம் ஆண்டில் 'இயற்கை வரலாறு (17 தொகுதிகள்)' என்னும் நூலை இயற்றினார்.

தமக்கு முன் வாழ்ந்த ஆசிரியர்களது நூல்களின் வாயிலாக அவர் இந்தியாவைப் பற்றிய செய்திகளைத் பற்றியும், அதன் விளைவாக மிகுதியான தங்கம் உரோமிலிருந்துப் பற்றியும், அதன் விளைவாக மிகுதியான தங்கம் உரோமிலிருந்து வெளியேறியதைப் பற்றியும், அவர் எழுதிவைத்துள்ள குறிப்புகள், அவர் இயற்கை வரலாற்றை எழுதிய காலத்தில் உரோமில் தான் நேரில் கண்ட நிலைமையைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்கோ போலோ

மார்க்கோ போலோ இத்தாலி நாட்டிலே வெனிஸ் நகரிலே கி.பி. 1254 இல் பிறந்தார். தந்தையின் பெயர் நிக்கோலோ போலோ. சிற்றப்பன் பெயர் மாப்பிலோ போலோ. அவருடைய அன்னை இறந்து விட்டதால் அவரும் அவருடைய தந்தையும் 1271-ல் வழிப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெனீசியக் குடும்பத்தைச் சார்ந்த வணிகர்கள். அவர்கள் இருவரும் மங்கோலியாவிலும், சீனத்திலும் பல ஆண்டுகள் தங்கியிருந்தனர்.

சீனாவில் 17 ஆண்டுகள் தங்கியிருக்கும் பொழுது குப்ளாய்கானின் பேரவையில் 1277-ல் அரசியல் அலுவலராக நியமிக்கப்பெற்றார். பின்னர் ஒரு பெரும் நகரத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பெற்றார். அவர் எழுதிய நூலின் பெயர் 'பயணங்கள்' (வழிச்செலவு) என்பதாகும். அந்நூலில் அவரது பயணத்தைப் பற்றிய முறையான வருணனையைக் காண முடியவில்லை. அவர்கள் செல்லும் வழியில் நிகழ்ந்த சுவையான பகுதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. அவர் தமது வீரச் செயலை விளக்க அந்நூலை எழுதவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் அறியாத, அறியவேண்டிய செய்திகளைத் தேர்ந்தெடுத்து எழுதினார். அது பூகோள நோக்கில் அமைந்துள்ளது. மார்க்கோ போலோவைப் புகழ்வதுபோல அமையவில்லை. மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதைக் காட்டிலும் அறிவூட்டுவதே அவருடைய குறிக்கோளாக இருந்தது இருப்பினும் அவர் சுவையுடன் கூறுவதால் மகிழ்ச்சியூட்டுகிறார்.

ஸ்ட்ராபோ

ஸ்ட்ராபோ சற்றேறக்குறைய 2000 ஆண்டுகட்கு முன்னர்ச் சிற்றாசியாவிலே ஆர்மேனிய நாட்டுக்கு அண்மையில் பிறந்தார். பழைய பெருநிலப் பிரிவுகளைச் சுற்றிப் பார்த்து 17 தொகுதிகளாலான 'உலக நூல்' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தம்முடைய காலத்தில் வாழ்ந்த உரோமனியர்கள் இந்தியாவைப் பற்றித் தங்களுடைய முன்னோர்களைக் காட்டிலும் மிகுதியான செய்திகளை அறிந்திருந்தார்கள் என்று ஸ்ட்ராபோ எழுதி வைத்துள்ளார். இந்திய வாணிகத்தில் ஈடுபட்ட உரோமனியர்கள் ஏடன் செங்கடல் வழியையே மிகவும் விரும்பினார்கள். ஆனால் அந்த வழியை ரோமானியப் பேரரசின் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்காகக் காலிஸ் என்னும் தளபதியின் தலைமையில் கி.மு. 25 ஆம் ஆண்டில் அகஸ்டஸ் ஒரு கடற்படையை அனுப்பினார். அந்தப் படையெடுப்பு வெற்றி பெற்றது. இந்தச் செய்தியையும் ஸ்ட்ராபோ எழுதி வைத்துள்ளார்.

பெரிப்ளுஸ்

பிளினியின் இயற்கை வரலாறு வெளிவந்த சில ஆண்டுகளுக்கு முன்னரோ பின்னரோ பெரிப்ளுஸ் என்னும் நூல் எழுதப் பெற்றிருக்கலாம். இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த வாணிக மையங்களைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் திருத்தமாக உள்ளன.

"இந்தியாவில் பல ஆறுகள் இருக்கின்றன. வட இந்தியாவில் ஒயின், செம்பு, வெள்ளீயம், ஈயம், பவளம், புட்பராகம், துணி, கச்சை, குங்குலியம், சக்கிமுக்கிக்கல், கண்ணாடி , அஞ்சனக்கல், நறுமணப்புயல், பொன், வெள்ளி நாணயங்கள் ஆகியவை இறக்குமதியாகின்றன. இங்கிருந்து எலுமிச்சை, யானைத் தந்தம், மணிக்கற்கள், பருத்தித் துணிகள், பட்டுத்துணி, நூல், மிளகு போன்றவை ஏற்றுமதியாகின்றன. தக்காணத்தில் சிறுத்தை, புலி, யானை, பெரும்பாம்பு, கழுதைப்புலி, பெருங்குரங்கு போன்ற மிருகங்கள் காணப்பெறுகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகியான்

கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சார்ந்த பாகியான் இரண்டாம் சந்தரகுப்தர் காலத்தல் இந்தியாவிற்கு வந்துள்ளார். பாகியான் சீனநாட்டைச் சார்ந்தவர். பாகியான் புத்த புண்ணிய இடங்களை வழபடவும், புத்த நூல்களைத் திரட்டவும், புத்த சமயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் இந்தியாவிற்கு வந்தார் (கி.பி. 399 - 414). பாகியான் இரண்டாம் சந்தரகுப்தரின் அரசியல் திறமையைப் புகழ்ந்துள்ளார்.

பாகியான் தென்னிந்தியாவிற்கு வரவில்லை. அவர் தென்னிந்தியாவைப் பற்றியும், புறாமடாலயத்தைப் பற்றியும் (புத்த மடம்) எழுதி வைத்துள்ள குறிப்பு 'ஓர் உயர்தர வம்பளைப்பு' என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். இலங்கையில் தான் கண்ட அபயகிரி விகாரம், புனித மரம்(போதி மரம்), கருவூலம், சமயப்பிரச்சாரம், துறவிகளின் உணவு, திருப்பல் விழா, ஆருகதர் ஒருவரின் ஈமக்கடன் ஆகியவற்றைக் குறித்துள்ளார்.

யுவான் கவாங்

இந்தியாவுக்கு வந்த சீனப் பயணிகளுள் யுவான் சுவாங்கே (கி.பி. 625 - 645) முக்கியமானவர். பிற சீனப் பயணிகளைக் காட்டிலும் அவர் இந்தியாவில் அதிகமான இடங்களுக்குச் சென்றார். அவர் பிற துறவிகளைப் போல் ஒதுங்கி வாழவில்லை. மற்றவர்களைப் போலவே அவரும் புத்தமத நூல்களைத் திரட்டி ஆராய்வதிலும், புகழ் பெற்ற புத்த விஹாரங்களைக் காண்பதையும் தம்முடைய அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தார்.

"அவருடைய சமயக்கோட்பாடு பரந்த மனப்பான்மையை அடிப்படையாய்க் கொண்டது. இயல்பாகவே அவர் சமரச நோக்குடையவர். அவருடைய பக்தி கடுநோன்பின் தன்மையைப் பெறவில்லை. அவரிடத்தில் போதுமான உற்று நோக்கும் ஆற்றல் இல்லை. பார்த்தவற்றை விழிப்புடன் அலசி ஆராயும் பயிற்சியும் இல்லை. தெரிந்து கொண்ட செய்திகளை உளநிறைவு தரும் முறையில் எழுதி வைக்கும் திறனும் இல்லை. அதனால் சொல்ல வேண்டிய செய்திகள் பலவற்றை அவர் சொல்லாமல் விட்டு விட்டார்” என்று வாட்டர்ஸ் கூறுகிறார்.

சங்கவர்மி

பாகியானுக்குப் பின்னர், தொடர்ந்து பல பௌத்தர்கள் தென்னிந்தியாவற்கும் சீனாவிற்கும் இடையில் பயணஞ் செய்வதற்குக் கடல் வழியையே தேர்ந்தெடுத்தனர். சங்கவர்மி என்னும் இலங்கைத் துறவி சீனாவுக்குக் கி.பி. 402-ம் ஆண்டில் போய்ச் சேர்ந்தார். அங்கு அவர் மகிசாசகவிநயம் என்னும் நூலைச் சீன மொழியில் பெயர்த்தெழுதினார்.

குணவர்மர்

குணவர்மர் சங்கவர்மியைக் காட்டிலும் புகழ் பெற்றவர். அவர் சாவாவில் புத்த சமயம் பரவுவதற்குப் பெரிதும் காரணராய் இருந்தார். சீனாவில் பௌத்தப் பெண் துறவிகளின் அமைப்பு ஒன்றை நிறுவினர். அந்த அமைப்பை நிறுவுவதற்கு அவர் இலங்கையிலிருந்து பெண் துறவிகள் சிலரைச் அவர் இலங்கையிலிருந்து பெண் துறவிகள் சிலரைச் சீனாவுக்கு வரவழைத்தார். அவர் பல பௌத்த நூல்களைச் சீனமொழியில் பெயர்த்து எழுதினார். அவர் இலங்கை நாட்டினர். சங்கவர்மிக்குப் பின் சீனா சென்றவர்.

தருமகுப்தர்

அவர் குசராத்திலிருந்த லாட்டா நகரைச் சேர்ந்தவர். பௌத்த சமயத்தைச் சார்ந்தவர். அவர் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் புத்த சமயத்தின் வளர்ச்சிக்குத் துணை புரிவதற்காகச் சீனா சென்றார். தருமகுப்தர் தம்முடைய சொந்த ஊரைவிட்டு வெளியேறி, முதலில் மைய இந்தியாவுக்குச் சென்று, பின்னர் சிறிது சிறிதாக நடந்து, கபிசர், படக்ஷன், காஷ்கார், டர்பான் முதலிய ஊர்களின் வழியாக ஏறத்தாழ கி.பி. 590 ஆண்டில் சீனத் தலைநகரையடைந்து அங்கேயே தங்கிவிட்டார். அங்கு அவர் இந்திய நூல்களைச் சீன மொழியில் பெயர்த்தெழுவதிலும், மேற்கு நாடுகளைப் பற்றிய குறிப்புக ைஎழுவதிலும் தம் வாழ்நாளைச் செலவிட்டார்.

வச்சிரபோதி

வச்சிரபோதி தென்னிந்தியாவில் கி.பி. 661 ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் நாலந்தாவில் தமது 26 ஆம் வயது வரையில் கல்வி கற்றார். கி.பி. 689 இல் கபிலவாஸ்துக்குப் புனிதப் பயணஞ் செய்தார். அதன்பின் அவர் தென்னிந்தியாவிற்குத் திரும்பினார். அப்பொழுது அலோகிதேச்வரச் சமயக் கோட்பாட்டு முறைக்குத் தென்னிந்தியா மையமாய் இருந்தது.

பான்கூ

அவர் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் ஒரு சீன எழுத்தாளர். அவர் எழுதிய நூலின் பெயர் 'இட்சியன் ஹான்சூ' என்பதாகும். அவர் இந்தோசீனா, காஞ்சி போன்ற இடங்களுக்கும் சென்றுள்ளார். கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தென்னிந்தியப் பண்டங்கள் கடல் வழியாகச் சீனாவிற்குச் சென்றன என்று கூறியுள்ளார்.

புதிய நாடுகளைக் கண்டுபிடித்தல்

உலகில் மத்திய கிழக்கு நாடுகளில் இசுலாமிய நாகரிகம் பரவியது. சீனாவில் கன்பூஷிய புத்தசமய நாகரிகம் இருந்தது. இந்தியா இந்து நாகரிகத்தின் தாயகமாக விளங்கியது. தென் அமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் மாயன் நாகரிகம் பரவியிருந்தது. ஆப்பிரிக்காவில் நீக்ரோ மக்களும், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களும், பசிபிக் கடலின் தீவுக்கூட்டங்களில் பழங்குடி மக்களும் வாழ்ந்து வந்தனர்

வாஸ்கோடகாமா

வாஸ்கோடகாமா போர்த்துக்கீசிய நாட்டைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடித்தவர் ஆவார். அவர் போர்த்துக்கல்லில் உள்ள துறைமுகப் பட்டினமான சைன்சிஸ் பிறந்தார். இந்தியாவின் செல்வத்தைப் பெற மேற்கு நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு ஆப்பிரிக்காக் கிழக்குக் கடற்கரையிலிருந்து கிழக்கு முகமாகச் சென்று இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அவர் ஐரோப்பாவிலிருந்து தூரக் கிழக்கு நாடான இந்தியாவிற்குப் புதிய கடல்வழி கண்டுபிடித்ததன் நினைவாகச் சலவைக் கற்றூண் ஒன்றை அங்கு நாட்டினார்.

அப்பொழுது கள்ளிக்கோட்டையில் ஜாமரின் மன்னர் ஆண்டு வந்தார். ஜாமனின் மன்னர் கடற்படை பலம் பெற்றவர். வாஸ்கோடகாமா அவரிடம் வாணிகம் செய்ய அனுமதி வேண்டினார். மன்னர் அதற்கு இசைந்தார். வாஸ்கோடகாமா வாணிகத்திற்குச் சுங்கவரி செலுத்த மறுத்தார். அதனால் பல இடையூறுகளுக்கு ஆளானார். மூர்கள் வாணிகத் துறையில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் வாஸ்கோடகாமாவுக்குப் பொறாமையைக் கிளறிவிட்டன. மூர்களை எதிரிகளாகக் கருதினார்.

கொலம்பசு

கொலம்பசு கி.பி. 1451 ஆம் ஆண்டில் இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் வணிகர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் கம்பள நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பணக்காரர்களின் தெய்வமான கிறிஸ்தோபரின் பெயர் அவருக்கு இடப்பெற்றது. கொலம்பசு இளமையில் இலத்தீன் மொழியையும் புவியியலையும் படித்தார். சிறு கப்பல்களை ஓட்டிப் பழகினார். பாவியாப் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார். அறிவியல், புவியியல், நீர்வழிச்செலவு போன்றவற்றில் அதிகமான ஈடுபாடு கொண்டார். உலகம் உருண்டையானது என்னும் எண்ணம் கொண்ட கொலம்பஸ் கீழ்த்திசை நாடுகளை மேற்றிசை வழியாகச் சென்றடையலாம் என எண்ணினார்.

கி.பி. 1485-ல் கொலம்பஸ் ஸ்பெயினுக்குச் சென்று பெர்டினாண்ட் அரசனிடமும் அரசி இசபெல்லாவிடமும் உதவி கேட்டார். அச்சமயத்தில் அரசன் மூர்களையும் முஸ்லிம்களையும் அடக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எனவே அவரால் உதவி செய்ய முடியவில்லை. இறுதியில் அரசி இசபெல்லா தம் விலையுயர்ந்த நகைகளை விற்றுக் கொலம்பசுக்கு உதவ முன்வந்தார். கி.பி. 1492-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

பெர்டினாண்ட் மெகல்லன்

போர்த்துக்கீசிய மாலுமியான மெகல்லன் உலகைச் சுற்றி வந்த முதல் பயணி ஆவார். இந்தியாவிலும் ஆப்பரிக்காவிலும் முகம்மதியர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார். பசிபிக் கடல் அமைதியாக இருந்ததால் அக்கடலை 'அமைதிக்கடல்' என அழைத்தார்.

அவருடைய கப்பல்களில் ஒன்றான விக்டோரியா, மொலுக்கஸ், போர்னியா தீவுகள் வழியாக இந்துமாக் கடலை அடைந்து, பிறகு ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு இறுதியாகச் செப்டம்பர் 1522-ல் செர்விலை அடைந்தது. அதுவே உலகைச் சுற்றிய முதல் கடல் பயணமாகும். கடல் பயண வரலாற்றில் அப்பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். ஸ்பெயின் நாட்டினர் மேற்குத்திசை வழியாக இந்தியாவுக்குப் புதிய வழி கண்டுபிடித்தனர்.

இபன் பதூதா

இபன் பதூதா முகம்மதிய மதத்தைச் சேர்ந்த மூர் இனத்தவர் ஆவார். ஓய்வின்றி ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டவர். அவர் கி.பி. 1300-ல் டாஞ்சியரில் பிறந்தார். அவர் தம்முடைய 22 ஆம் வயதில் சொந்த ஊரை விட்டுப் புறப்பட்டு அடுத்து 30 ஆண்டுக் காலம் ஓயாது பயணம் செய்து கொண்டே இருந்தார்.

இபன் பதூதா இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருந்தார். இந்திய நாட்டின் இயற்கை வளங்கள், பயிர்த் தொழில், மக்களின் பழக்கவழக்கங்கள், ஆப்கானிய ஆட்சியில் அவர்களுடைய அரசியல், சமுதாய அமைப்புகள், வரலாறு போன்ற செய்திகளை எழுதி வைத்துள்ளார். இபன் பதூதா இந்தியாவில் இருந்த காலத்தில் முகம்மது துக்ளக் டில்லி சுல்தானாக இருந்தார். கி.பி. 1342-ல் முகம்மது துக்ளக் சீனாவுக்கு அனுப்பிய தூதுக்குழுவுடன் அவரும் சென்றார்.

பார்த்தலோமியோ டயசு

அவர் ஒரு போர்த்துக்கீசியக் கப்பல் தலைவர் ஆவார். அவர் நன்னம்பிக்கை முனையைக் கண்டு பிடித்தார். அவர் போர்த்துக்கீசிய அரசர் இரண்டாம் ஜானின் உதவியுடன் பயணத்தை மேற்கொண்டார். அவர் கி.பி. 1478-ல் இலிசுபன் துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்களுடன் புறப்பட்டார். ஆப்பிரிக்கக் கடற்கரைகளைக் காண்பதும் இந்தியாவிற்குப் புதுவழி காண்பதும் அவருடைய பயண நோக்கமாகும். அவர் 3-2-1488 இல் மோசல் வளைகுடாவை அடைந்தார். பின் நன்னம்பிக்கை முனையை அடைந்து அங்கொரு தூணை நிறுவி அதில் 'புயல்முனை' என்று எழுதினார். பின்னர் அது 'நன்னம்பிக்கை முனை' என்று இரண்டாம் ஜானினால்  வழங்கப் பெற்றது. அவர் பிரேசில் கடற்கரையிலிருந்து திரும்பும் பொழுது சூறைக்காற்றில் அகப்பட்டு, கி.பி. 1500 இல் மாண்டார்.

ஆதாரம் : இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top