பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உலக புற்றுநோய் தினம்

உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலக புற்றுநோய் தினமானது ஒவ்வொரு ஆண்டிலும் பிப்ரவரி மாதம் 04 ஆம் தேதியன்று தனக்கென ஒரு இடத்தினைப் பெறுகின்றது. உலக புற்றுநோய் தினமானது உலகில் உள்ள அனைத்து மக்களையும் புற்றுநோய்க்கு எதிராக போராட ஒன்று திரட்டுகின்றது.

இது பல மில்லியன் கணக்கிலான உயிர்களை மரணத்திலிருந்து பாதுகாக்கின்றது. இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வுகளினை ஏற்படுத்தல், நோய் பற்றிய கல்வியினை வழங்குதல் மற்றும் நாட்டு அரசாங்கங்களுக்கும் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நோய் தடுப்பு பற்றிய அழுத்தங்களை பிரயோகித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

ஏன் இந்த நாள் முக்கியமானது

தற்போது 8.2 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயினால் மரணமடைகின்றனர். அதிலும் 04 மில்லியன் மக்கள் உரிய வயதினை (30 தொடக்கம் 69 வயது) அடையும் முன்பே (எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம்) இந்நோயினால் மரணம் அடைகின்றனர்.

உலக புற்றுநோய் தினமானது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதிலும் மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் புற்றுநோய் பற்றிய தெளிவினையும், விளக்கத்தினையும் ஏற்படுத்தவும் புற்றுநோய் பற்றியும் நோய்தடுப்பு பற்றிய விழிப்புணர்வுச் செய்திகளையும் தகவல்களையும் பரப்பவும் சிறந்ததொரு வாய்ப்பாகும்.

உலக புற்றுநோய் தினம்

17.9 பில்லியன் மக்கள் புற்றுநோய் பற்றி பார்க்கவும், கேட்கவும் அல்லது வாசிக்கவும் வாய்ப்புக்களைப் பெற்றிருந்தனர். இது 2012 இல் 3.8 பில்லியனாகக் காணப்பட்டது. 98,000 புற்றுநோய் பற்றிய குறிப்புக்களும், வளங்களும் தரவிறக்கம் செய்யப்பட்டு இருந்தன. www.worldcancerday.org இணையத்தளத்திற்கு 180,000 பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். இது 2012 இல் வெறுமனே 8,930 ஆக இருந்தது. 906 இற்கும் மேற்பட்ட விழிப்புணர்வுச் செயற்பாடுகள் 129 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இது 2012 இல் 456 விழிப்புணர்வுச் செயற்பாடுகளாக இருந்ததுடன் 80 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. 10,269 ஊடகங்கள் புற்றுநோய் பற்றிப் பேசி இருந்தன. இது 2012 இல் வெறுமனே 524 ஆக இருந்தது.

சமூக வலைத்தளங்களினைப் பொறுத்தவரை #World Cancer Day டுவிட்டர் பக்கத்தில் 355,905 டுவீட்ஸ் இடப்பட்டு இருந்தன. முகப்புத்தகத்தில் 2,500,000 நபர்கள் பங்குபற்றியிருந்தனர். சமூக வலைத்தளங்களுடைய கருத்துப்பதிவு அல்லது விருப்புக்கள் (Likes) 3.9 பில்லியனாக காணப்பட்டதுடன் இது 2012 இல் 20 மில்லியன் ஆகும்.

புற்றுநோய் அனைவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றது. அனைத்து மக்களும் புற்றுநோய்க்கு எதிராக தனிநபராகவோ, குழுவாகவோ அல்லது சமூகமாகவோ பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க அதிகாரம் கொண்டுள்ளனர்.

உலக புற்றுநோய் தினமானது உங்களால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆகவே புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவோம் என ஒவ்வொருவரும் வாக்குறுதி எடுங்கள். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவோம்.

நாம் செய்ய வேண்டியவை

  • உங்களது பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுடனோ அல்லது அமைப்புக்களுடனோ பேசி அவர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தி புற்றுநோய்க்கு எதிரான செயற்பாடுகளையோ அல்லது நிகழ்வுகளையோ குறித்த நாள் முழுவதும் ஏற்பாடு செய்து புற்றுநோய்க்கு எதிரான அல்லது தடுப்பதற்கான செய்திகளையோ அல்லது தகவல்களையோ பரப்புங்கள்.
  • உங்களது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் அவர்களது மனுவில் அவர்களது வாடிக்கையாளருக்காக ஆரோக்கியமான உணவுத்தெரிவுகளை வழங்குவதோடு புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்களை காட்சிப்படுத்துங்கள். அவர்களால் முடிந்தளவு பணத்தினை சேகரித்து புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரத்திற்கோ அல்லது புற்றுநோய்த்தடுப்புக்கோ பயன்படுத்துமாறு அறிவுறுத்துங்கள்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.94444444444
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top