பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சரண் சிங்

திரு. சரண் சிங் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் கல்வி

திரு. சரண் சிங் 1902 ல் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். 1923 ல் அவர் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1925 ல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்ற அவர் காசியபாத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். 1929 மீரட் சென்ற அவர் காங்கிரஸ்சில் இணைந்தார்.

அரசியல்

1937 ல் முதன்முதலாக சாபிராளி தொகுதியிலிருந்து சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946, 1952, 1962 மற்றும் 1967 ஆண்டுகளில் அவர் மீண்டும் இத்தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ல் பண்டிட் கோவிந்த் பல்லப் பன்ட் அரசில் நாடாளுமன்ற செயலராக இருந்த அவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல் ஆகிய பல துறைகளில் பணிபுரிந்தார். 1951 ஜூன் மாதம் அவர் மாநில அமைச்சரவையில் நீதி மற்றும் தகவல் துறை அமைச்சரானார். 1952ல் டாக்டர் சம்பூர் ஆனந்த் அமைச்சரவையில் அவர் வருமானம் மற்றும் வேளாண்மை துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். ஏப்ரல் 1959ல் அவர் இராஜினாமா செய்தபோது அவர் வருவாய் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

1960ல் திரு. சிபி குப்தாவின் அமைச்சரவையில் உள் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1962-63ல் திருமதி. சுச்சேதா கிருபளானியின் அமைச்சரவையில் திரு. சரண் சிங் வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1965 ல் வேளாண் துறையிலிருந்து விலகி 1966ல் உள்ளாட்சி அரசு முறை துறையின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.

காங்கிரஸ் பிரிந்தபோது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1970ல் இரண்டாவது முறையாக உத்திர பிரதேசத்தின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அக்டோபர் 2, 1970ல் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரப்பிக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

திரு. சரண் சிங் உத்திர பிரதேசத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடும் உழைப்பாளியான இவர் நிர்வாகத்தில் ஊழல், திறமையில்லாமை அல்லது தெரிந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுதல் ஆகியவற்றை சிறிதும் அனுமதிக்கமாட்டார் என்ற பெருமை உடையவர். புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரும் நடைமுறைவாதியுமான திரு. சரண் சிங் அவரது பேச்சுத் திறனுக்கும், தவறுகளைத் தட்டி கேட்கும் தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்.

உத்திர பிரதேசத்தின நிலச் சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. துறைகள் மீட்பு மசோதா, 1939 யை உருவாக்கி இறுதி செய்வதில் இவர் முன்னிலை வகித்தார். இந்த மசோதா கிராமத்தில் உள்ள கடனாளிகளுக்கு பெறும் நிவாரணம் அளித்தது. அது மட்டும் இன்றி உத்திர பிரதேச மந்திரிகளின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளைக் குறைப்பதற்கான முக்கிய முயற்சியாக இது அமைந்தது. ஒரு முதலமைச்சராக நிலக் கையிருப்பு சட்டம் 1960-யை கொண்டுவருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி நிலம் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாகும்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலம் கீழ்தட்டு மக்களிடையே மாற்றத்தை உருவாக்கும் தலைவர் திரு. சரண் சிங் இவருக்கு நிகராக வேறு சில அரசியல் தலைவர்கள் நாட்டில் உள்ளனர். பொது பணிக்காகத் தன்னை முழுதும் அற்பணித்தவர், சமூக நீதியைப் பெரிதும் நம்புபவர். லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியவர்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு. சௌத்ரி சரண் சிங் தனது ஓய்வு நேரத்தை படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செலவிட்டார். “ஜமீன்தாரி முறை ஒழிப்பு”, “கூட்டுறவு பண்ணை முறை”, “இந்தியாவில் வருமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்”, “வேலை செய்பவர்களக்கு நிலம்”, “ஆஃப் ஹோல்டிங்க் பிலோ ஏ செர்டெய்ன் மினிமம்” உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் மற்றும் துண்டுப் பிரச்சுரங்களை அவர் எழுதியுள்ளார்.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top