பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மொரார்ஜி தேசாய்

திரு. மொரார்ஜி தேசாய் அவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் கல்வி

திரு. மொரார்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29 அன்று குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த கண்டிப்பான மனிதர். குழந்தை பருவத்திலிருந்து மொரார்ஜி தன்னுடைய தந்தையாரிடமிருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மையாக இருப்பதையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டார். புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை முடித்தார். 1918ல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப் பணிப்புரிந்தார்.

சுதந்திர போராட்டம்

1930ல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை அறிவித்தபோது, திரு. தேசாய் ஆங்கிலேயர்களின் நீதி மீது நம்பிக்கை இழந்த அவர் தனது வேலையை இராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். நாட்டின் சுதந்திரமா அல்லது குடும்பப்பிரச்சனைகளை சமாளிக்கும் ஒரு சாதாரன மனிதனா என்ற சூழ்நிலையில் முடிவெடுப்பது திரு. தேசாயிற்கு கடினமாக இருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது திரு. தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் அவர் உறுப்பினராக இணைந்தார். 1937 வரை குஜராத் காங்கிரஸ் குழுவின் செயலராக செயல்பட்டார்.

1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மும்பை மாகானத்தில் திரு. பி.ஜி. கேர் தலைமையிலான வருவாய், வேளாண்மை, வனம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணிபுரிந்தார். மக்களின் ஒப்புதல் இல்லாமல் உலக போரில் இந்தியாவின் பங்கேற்பை கண்டித்து காங்கிரஸ் அமைச்சகர்கள் 1939ம் ஆண்டு சபையிலிருந்து விலகினார்.

மகாத்மா காந்தியால் துவக்கப்பட்ட சத்யாகிரகத்தில் பங்கேற்றத்திற்கு திரு. தேசாய் சிறையில் அடைக்கப்பட்டு அக்டோபர் 1941 விடுதலைப்பட்டார். ஆகஸ்ட் 1942, இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல்

1946ல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அவர் மும்பையில் உள்துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவரின் பணிகாலத்தின் போது, திரு. தேசாயய் நில வருவாய் துறையில் பாதுகாப்பு உரிமை மூலம் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்தார். காவல் துறை நிர்வாகத்தில், மக்களும் காவலர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து, வாழ்க்கை மற்றும் பொருட்களுக்கான பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1952ல் அவர் பம்பாயின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.

ஏழைமக்களும் கிராமங்களில் எந்த வசதிகளும் இல்லாதவர்களுக்கு வாழ்க்கையை வாழ அடிப்படை வசதி கிடைக்கும் வரை சோஷியலிசம் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று அவர் நம்பினார். விவசாயிகள் மற்றும் வாடகைதாரர்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான சட்டங்கள கொண்டுவருவதில் திரு. தேசாய் ஆர்வம் காட்டினார்.

இந்த விஷயத்தில் நாட்டிலுள்ள பிற மாநிலங்களைவிட இந்த அரசு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டது. பம்பாயின் மரியாதைக்குரிய நிர்வாகத்திற்காக நேர்மையாக அவர் சட்டங்களை இயற்றினார்.

மாநிலங்களின் மறு அமைப்புக்குப் பிறகு 1956, நவம்பர் 14-அன்று திரு. தேசாய் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதன்பிறகு மார்ச் 22, 1958 ஆம் ஆண்டு நிதி அமைச்சராகப் பதவியேற்றார்.

நிதித்துறை நிர்வாகத்திலும் பொருளாதார திட்டமிடுதலிலும் அவர் கூறியவாரே செயல்பட்டார். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளைச் சந்திக்க அவர் அதிக அளவில் வருமானம் ஈட்டி தேவையற்ற செலவைக் குறைத்து நிர்வாகத்திற்கான அரசின் செலவை சிக்கனமாக மேற்கொள்வதை ஊக்குவித்தார். நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நிதி ஒழுங்கு முறையை அமுல்படுத்தினார். சமூகத்தின் சிறப்புரிமை பெற்ற பிரிவினரின் ஆடம்பர வாழ்க்கை முறைக்குத் தடை விதித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1963-ஆம் ஆண்டு காமராஜர் திட்டத்தின் கீழ் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பண்டிட் நேரு அவர்களுக்குப் பிறகு பிரதம மந்திரியாக பணிபுரிந்த திரு. லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக முறையில் சீர்திருத்தம் கொண்டுவர திரு. தேசாயை நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராகப் பதவியேற்க வற்புறுத்தினார். பொது வாழ்க்கையில் பல்வேறு துறையில் அவர் கொண்டிருந்த நீண்டகால அனுபவம் அவருடைய சிறப்பான செயல்பாட்டிற்க்கு உதவியது.

1967-ஆம் ஆண்டு திரு. தேசாய், திருமதி. இந்திராகாந்தியின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், நிதித்துறையின் இணை அமைச்சராகவும் பணி புரிந்தார். 1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமதி. காந்தி அவரை நிதித்துறையிலிருந்து நீக்கினார். பிரதம மந்திரிக்கு அவருடன் பணிபுரியும் அமைச்சர்களின் துறைகளை மாற்ற தனியுரிமை இருந்ததை ஒப்புக்கொண்ட திரு. தேசாய், திருமதி. காந்தி பெயரளவில்கூட தன்னிடம் இந்த மாற்றம் குறித்து ஆலோசிக்காதது. தனது சுயமரியாதையை காயப்படுத்துவது போல் உணர்ந்தார். ஆதலால், வேறு வழியின்றி தனது துணைப்பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

1969ல் காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது, திரு. தேசாய் காங்கிரஸ் அமைப்புடனே இருந்தார். எதிர்கட்சி செயல்பாடுகளில் அவர் முன்நின்று செயல்பட்டார். 1971ல் அவர் மறுபடியும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 1975, கலைக்கப்பட்ட குஜராத் சட்டபேரவையின் தேர்தலை நடத்துவது சம்மந்தமாக அவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை மேற்கொண்டார். அவருடைய உண்ணாவிரதத்தின் விளைவாக 1975ல் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. நான்கு எதிர்கட்சிகளையும் சுயேட்சைகளையும் கொண்ட ஜனதா முன்னனி புதிய அவையில் பெரும்பான்மையை பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. காந்தியின் தேர்வு செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் அறிவித்ததையொட்டி ஜனநாயக கொள்கையின் அடிப்டையில் திருமதி காந்தி தனது இராஜினாமாவை சமர்பித்திற்க வேண்டும் என்று தேசாய் கருதினார்.

ஜூன் 26, 1975ல் அவசர கால சட்டம் கொண்டவரப்பட்டபோது திரு. தேசாய் கைதுசெய்யப்பட்டு தனி சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு முடிவில் சிறிது காலத்திற்கு 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். நாடு முழுவதும் சிறப்பாகப் பிரச்சாரம் செய்து 1977-ல் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சிவெற்றிபெற அவர் தூண்டுகோலாக இருந்தார். குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியின் சார்பில் அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் ஜனதா கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 மார்ச் 24-ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.

திரு. தேசாய் கடைப்பிடித்த கொள்கை

1911 ஆம் ஆண்டு திரு. தேசாயும் குஜ்ராபெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். எந்தவொரு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஒரு சாமானிய மனிதர் அதை சுட்டிக்காட்டும் வகையில் இந்தியாவின் மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் திரு. தேசாய் உறுதியாக இருந்தார். பிரதமராக இருப்பினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டினார்.

அவரைப் பொறுத்தவரை உண்மை என்பது சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் நிலையாக இருக்க வேண்டும். அவசர காலங்களில் கூட கொள்கைகளை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கடினமான சூழ்நிலைகளிலும் அவர் தனது கொள்கைகளைக்  கடைபிடித்தார். “வாழ்க்கையில் ஒருவர் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட வேண்டும்” என்ற கொள்கையை அவர் கடைபிடித்தார்.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/

Filed under:
3.30434782609
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top