பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாவேந்தர் பாரதிதாசன் விருது

பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

விருதை பெற்றவர்கள்

 • 1978 - கவிஞர் சுரதா
 • 1979 - எஸ்.டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன்
 • 1980 - கவிஞர் முத்துலிங்கம்
 • 1981 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
 • 1982 - கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
 • 1983 - கவிஞர் வகாப்
 • 1984 - கவிஞர். நா. காமராசன்
 • 1985 - கவிஞர் ஐ. உலகநாதன்
 • 1986 - கவிஞர். மு. மேத்தா
 • 1987- கவிஞர் முடியரசன்
 • 1988- கவிஞர் பொன்னிவளவன்
 • 1989 - கவிஞர் அப்துல் ரகுமான்
 • 1990 - பாவேந்தர் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் 21 பேர் விருது பெற்றனர்.
 • 1991 - பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 23 பேர் விருது பெற்றனர்.
 • 1992 - கவிஞர் முத்துராமலிங்கம்
 • 1993 - புலவர். பெ. அ. இளஞ்செழியன்
 • 1994 - கவிஞர். கரு. நாகராசன்
 • 1995 -கவிஞர் மறைமலையான்
 • 1996 - கவிஞர். இரா. வைரமுத்து
 • 1997 - முனைவர். சரளா இராசகோபாலன்
 • 1998 - முரசு நெடுமாறன் (மலேசியா)
 • 1999 - சிலம்பொலி சு. செல்லப்பன்
 • 2000 - பாவலர் மணிவேலன்
 • 2001 - கவிஞர் மணிமொழி
 • 2002 - முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
 • 2003 - பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
 • 2004 - பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன்
 • 2005 - விருது வழங்கப்படவில்லை
 • 2006 - முனைவர் கா. செல்லப்பன்
 • 2007 - திருச்சி எம்.எஸ். வெங்கடாசலம்
 • 2008 - தமிழச்சி தங்கபாண்டியன்
 • 2009 - கவிஞர் தமிழ்தாசன்
 • 2010 - முனைவர் இரா. இளவரசு
 • 2011 - கவிஞர். ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன்
 • 2012 - முன்னவர் சே. நா. கந்தசாமி
 • 2013 - முனைவர் இராதா செல்லப்பன்
 • 2014 - கண்மதியன்
 • 2015 - டாக்டர்.வி.ரேனுகா தேவி
 • 2016 - கோ பாரதி
 • 2017 - திரு.க. ஜீவபாரதி
 • 2018 - கவிஞர் தியாரூ
 • 2019 - திரு.த.தேனிசை செல்லப்பா

ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை

2.96551724138
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top