பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள்

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலக மொத்த இளைஞர்களின் மக்கள் தொகையில் இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் மிக அதிக அளவிலான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை தொழிற் சந்தையில் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்தியா உயர் அளவு பொருளாதார வளர்ச்சி அடைய முடியும். இந்தியாவில் மொத்த மக்கட்தொகையில் பாதிக்கும் மேல் 60.3 சதவிகிதம் 15-59 வயது தொகுப்பில் உள்ளனர். கால் பங்கு (27.5 சதவிகிதம்) 15 முதல் 25 வயது கொண்ட இளைஞர்களாக உள்ளனர் (இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011) இந்தியாவின் இளைஞர் ஜனத்தொகை ஆண்டொன்றிற்கு 2 சதவிகிதம் என்ற உயர் அளவில் உள்ளது. 2001-2011 மக்கள்தொகை வளர்ச்சியில் ஒட்டு மொத்தமாக 1.6 சதவிகிதம் இருந்தது.

ஆகவே, இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ஒரு கோடி புதிய இளைஞர்கள் தொழிற் சந்தைக்கு வருகிறார்கள். இந்தியாவில் இந்த இளைஞர்களின் அதிகரிப்பு வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புக்கள் இவர்களை தொழிற்சந்தையில் ஈடுபடுத்தப் போதுமானதாக இல்லை. இந்தப் பிரச்சினையை சமாளிக்க இந்திய அரசு, பல புதிய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், ஸ்வர்ண ஜெயந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டம், ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம், “இந்தியாவில் பொருள் செய்வோம்” மற்றும் “திறன் மிகு இந்தியா” என்ற திட்டங்களாவன அவை.

இந்தக் கட்டுரையில் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பற்றிய சவால்களும் அதனை போக்க அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களையும் பார்க்கலாம். இதற்கான தகவல்கள் 2015-16இல் இந்திய அரசின் தொழிலாளர் வாரியம் மேற்கொண்ட ஐந்தாவது ஆண்டுக்கொரு முறையான வேலை வாய்ப்பு ஆய்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 15-29 வயதிலானவர்களையே இளைஞர்கள் என்று கொள்ளும் நிலையில் இந்தக் கட்டுரையில் 18-29 வயதினரை இளைஞர்களாக கருதுகிறோம். இதற்கு காரணம் 15-17 வரையிலான இளைஞர்கள் மிகக் குறைந்த அளவிலேயே தொழிற்சந்தைக்கு வருகிறார்கள். ஆகவே, முக்கிய வேலை வாய்ப்பு சார்ந்த சவால் 18-29 வயதினருக்கு மட்டுமே.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது மொத்த ஜனத்தொகையில் வேலையாட்களின் எண்ணிக்கையாகும். 2015-இல் இந்த விகிதம் இளைஞர்களிடையே 30.2 ஆக இருந்தது. 30 வயதினருக்கும் மேற்பட்டவர்களின் விகிதம் 573ஆக இருந்தது. ஏனெனில் 18-29 வயதினர் பலர் இன்னும் கல்வி நிலையங்களில் உள்ளனர். இது அல்லாமல், 18-29 வயது பெண்களைவிட ஆண்கள், 3.5 மடங்கு அதிகமாக உள்ளனர்.

ஆகவே, சமீபத்தில் புதிதாக தொழில் துவங்குவோம், குறு தொழில்கள் மேம்பாடு மற்றும் மறு நிதி வழங்கு அமைப்பு, நிமிர்ந்து நில் இந்தியா, எளிதாக வியாபாரம் செய்யும் இயக்கம், கிராமப்புறங்களில் தொழில் முனைவு திட்டங்கள் போன்ற தொழில் முனைவு திட்டங்களை ஊக்குவிக்கிறது. அவைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

புதிதாகத் தொழில் துவங்குவோம் மற்றும் நிமிந்து நில் இந்தியா

ஜனவரி 2016இல் இந்திய அரசு, புதிய தொழில் துவங்குவோம் மற்றும் நிமிர்ந்து நில் இந்தியா என்ற இரண்டு தொழில் முனைவு ஊக்குவிப்பு திட்டங்களின் அடிப்படையில் வரிச்சலுகைகள் அளிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வியாபாரத்தை எளிதாகத் துவங்க அரசு அதற்கான சூழ்நிலைகளில் பெரிய மாறுதல்களை செய்துள்ளது. அவைகள், பதிவு செய்தல், சட்ட நடவடிக்கைகள், ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு, வரி சலுகை, ஆகியவை சார்ந்தவைகளாகும். டிசம்பர் 2016வரை இந்தியாவில் 4700 புதிய தொழில் முனைவுகள் ஏற்பட்டன. ஆனால், இவைகளால், பெரிய நற்பயன்கள் ஏற்படவில்லை.

ஏனெனில் துவங்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே 200க்கும் மேற்பட்டவைகள் மூடப்பட்டுவிட்டன. துவங்கப்பட்ட புதிய வியாபாரங்களில் இயல்பாகவே, 20 சதவிகிதம் மட்டுமே போட்டிமிக்க இந்த சந்தைகளில் நிலைக்க முடியும் என்றிருந்தாலும் (இந்தியா ஸ்டாட்அப் அவுட்லுக் அறிக்கை, 2017). இந்த அமைப்புகள் விரைவில் நலிந்து போவதை தவிர்க்க வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும். ஜனவரி 2016இல், நிமிர்ந்து நில் இந்தியா என்ற திட்டம் துவக்கபட்டது. இந்த திட்டத்தில் நலிந்த வகுப்பினர்களான ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவு மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். டிசம்பர் 2016வரை நிமிர்ந்து நில் இந்தியாவின் திட்டத்தின் கீழ் 2055 பெண்கள், 2568 ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் 718 பேர் உட்பட மொத்தம் 11341 பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டது. (நிதி அமைச்சகம், இந்திய அரசு 2017)

பிரதம மந்திரி முத்ரா திட்டம்

சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு அமைப்பு சார்ந்த நிதி உதவி வழங்க ஏப்ரல் 2015இல் பிரதம மந்திரி முத்ரா திட்டம் துவங்கப்பட்டது. ஒரு வியாபார நிறுவனத்தின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மூன்று வகையான கடன்கள் அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலை (ரூ.50,000) இளம் நிலை (ரூ.50,000 முதல் ரூ.5,00,000 வரை) முதிர்ந்த நிலை (ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சம் வரை) இந்த திட்டத்தின் கீழ் மார்ச் 2016 வரை 1,25,000 கோடி வழங்கப்பட்டது. மொத்தம் 3,27,00,000 கடன் வாங்கியவர்களில் 3,03,00,000 பேர் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்.

கிராமப்புற தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டம்

கிராமப்புறங்களில் தொழில் முனைவை ஊக்குவிக்க அரசு கிராமப்புற தொழில் முனைவு ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. நிலைத்து நிற்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க கிராமப்புறங்களில் இருந்து துவங்கி புதிய தொழில்களை உருவாக்க இந்தத் திட்டம் முற்படுகிறது. இதனால் 24 மாநிலங்களில் உள்ள 125 ஊராட்சி ஒன்றியங்களில் 2015-2019 ஆண்டுகளில் 182 இலட்சம் கிராமப்புறத் தொழில் முனைவுகளை உருவாக்கி வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 3.78 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால், கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் முனைவும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

முடிவுரை

இந்தியாவில் தற்போது ஏற்பட்டு வரும் மக்கட்தொகை மாற்றங்களினால் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெரும்பான்மையான இளைஞர்களுக்கு நல்ல கல்வியும், தொடர்ந்து நல்ல வேலை வாய்ப்பும் தேவை. நாம் ஏற்கனவே பார்த்தபடி படித்த இளைஞர்களுக்கான சவால்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக, படித்த இளைஞர்களுக்கு துரதிஷ்டவசமாக ஒரு புறம் இந்தியாவில் பெண்கள் பணி செய்வது உலத்திலேயே மிகக்குறைந்த அளவு உள்ள நிலையில் அவர்களுக்கு வேலையின்மையும் மிக அதிகமாக உள்ளது. ஆகவே, அரசு எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் சரியான பாதையில் உள்ளது. ஆனால், மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்குவது என்பது மேல் மட்ட கொள்கைகளில் அங்கமாக இருக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் போதுமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதில்லை.

ஆகவே வேலைவாய்ப்புக்களை உருவாக்க எல்லா அமைச்சகங்களும் தங்களுடைய எல்லா திட்டங்களிலும், கொள்கைகளிலும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களைப் போல மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் வேலை வாய்ப்பு அதிகமாக உருவாவதில்லை. இப்படிப்பட்டப் பகுதிகளுக்கிடையேயான ஏற்றத் தாழ்வுகளை நீக்கி மக்களுக்கு அவர்களுடைய பகுதிகளிலேயே வேலை கிடைக்கும் வண்ணம் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். மகளிருக்கு மேலும் மேலும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க ஏதுவான கொள்கைகளும், திட்டங்களும் அவசியம். ஜனத்தொகையின் நற்பயன்களை நாம் பெற வேண்டுமானால் நாடு வேகமாக முன்னேற வேண்டும். இதில் நாம் தோல்வி அடைந்தால் ஜனத்தொகையின் நற்பயன்களுக்கு பதிலாக ஜனத்தொகை சார்ந்த கேடுகளே அதிகமாக விளையும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.34375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top