பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / வட்டார வள மையம் மற்றும் குறுவள மையத்தின் பணிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வட்டார வள மையம் மற்றும் குறுவள மையத்தின் பணிகள்

வட்டார வள மையம் (BRC) மற்றும் குறுவள மையத்தின் (CRC) பங்குகளும் பணிகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் பொறுப்புகள்

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திட்டமிடல், செயல் படுத்துதல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகள் அனைத்தையும் மேற்கொள்கிறார். அவர் பின்வரும் பொறுப்புகளை, தொடக்கக் கல்வியில் நிறைவு செய்ய வேண்டும்.

 • குழந்தைகளின் கற்றலுக்கான உரிமைகளை உணரும் சூழ்நிலையை உருவாக்கி தருதல். அனைத்து குடியிருப்பு வாழிடங்களிலும் தொடக்க (ம) உயர் தொடக்க நிலை பள்ளி வசதிகள் உள்ளதை உறுதி செய்தல்.
 • பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் அருகாமையில் உள்ள பள்ளிக்கு எளிதில் செல்வதை உறுதி படுத்துதல். அனைத்து குழந்தைகளின் சேர்க்கை (ம) தக்கவைத்தலுக்கு PRIs சிறப்பான உள்ளார்ந்த முயற்சி எடுத்து ஈடுபட வேண்டும்.
 • பள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம்பெயர்வு/தெருவோரக் குழந்தைகள்/SC/ST/நாடோடி, மலைவாழினக் குழந்தைகள், தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டிய சிறப்பு தேவையுடைய குழந்தைகள்) பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
 • மேலும் அவர்கள் கல்வி வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய தங்குவதற்கான விடுதிகள் (மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது போன்ற வாஸ்தி ஷாலா - Vasthi Shala) மற்றும் மாற்றுப் பள்ளிகளை ஏற்படுத்துதல் வேண்டும்.
 • பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு தொடர்ச்சியாக அவர்களைப் பற்றிய பதிவேடுகளை பராமரித்தல் வேண்டும்.
 • உயர்கல்வி அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் காலிப் பணியிடம் மற்றும் ஆசிரியர் தேவை குறித்து கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும். ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் மற்றும் தேவைப்படும் குறிப்பு இடங்களில் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருதலை கண்காணித்தல்.
 • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஆசிரியர் வருகைப்பதிவேடு, மாணவர்கள் வருகைப்பதிவேடு, கல்வியின் தரம், கற்றல்-கற்பித்தல் கருவிகள் இருப்பு ஆகியவற்றை கண்காணிக்கத் தேவையான திறனை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும்.
 • பெண் குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு (CWSN) இலவசக் கல்வி மற்றும் இலவச போக்குவரத்து வசதிகள் வழங்குவதை உறுதி செய்தல்.
 • வசிப்பிடத்திற்கு அருகாமையில் பள்ளிகள் அற்ற குழந்தைகளுக்கு உண்டு உறைவிட வசதிகள் அமைத்தலை உறுதி செய்தல். கிடைக்கக்கூடிய கற்றல்-கற்பித்தல் பொருள்கள், கருவிகள் மற்றும் குழந்தைகள் விருப்பமுடன் தடைகளற்று பள்ளியை அணுகும் சூழலை உறுதி செய்தல்.
 • சமூகத்தில் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினரான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/நாடோடி மலைவாழ் மக்கள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரின் குழந்தைகள், பெண்கள், நகர்ப்புற ஒதுக்கப்பட்ட குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள்,  குழந்தைத் தொழிலாளர்கள், குடிபெயர்ந்த குடும்பங்கள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பற்ற குமரப்பருவ குழந்தைகள் போன்றோரின் பாதுகாப்பினை பல்வேறு துறைகள் சார்ந்த மாவட்ட அதிகாரிகளோடு இணைந்து ஒத்துழைத்து உறுதி செய்தல்.
 • PRI அமைப்பின் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளூர் சுய ஆட்சி குழுவின் தலைவர் தலைமையிலான குறைதீர் குழுக்களை அமைத்தல்.
 • பாலின சிக்கல்கள் மற்றும் சமூக ஒதுக்கம் சார்ந்த பிரச்சனைகளை சமூக தணிக்கை சார்ந்த நடைமுறைகள் மூலம் தீர்த்தலை உறுதிப்படுத்துதல்.

அருகாமையில் உள்ள குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பங்கேற்றல் சாத்தியமாகும். அதைப்போலவே ஒரு பள்ளியில் பங்கேற்கும் குழந்தைகள் பல்வேறு இடங்களில் வசிப்பவர்களாகவும் இருப்பர். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையும், கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்பதையும் உறுதிப்படுத்துவதற்கு பள்ளிகளை அருகாமையில் அமைத்துத் தருதல் மட்டுமே போதுமானது இல்லை. குழந்தைகளின் இருப்பிடத்திற்கு அருகே பள்ளி அமைந்திருக்கலாம், ஆனால் குழந்தைகள் வருகைபுரியாமல் இருக்கலாம், சில மாதங்களுக்குப் பிறகு பள்ளியை விட்டு விலகலாம்; அல்லது பல நாள்கள் பள்ளிக்கு வருகைபுரியாமல் இருக்கலாம். இதன் காரணமாக கற்றல் சுமையினை எதிர்கொள்ள அவர்களால் இயலாது.

பள்ளி வரைபடம் தயாரித்தல்

சமூக, கலாசார, பொருளாதார மற்றும் தளவாடங்கள் போன்ற அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளியை அணுக முடியாத குழந்தைகளை அடையாளம் காணல். கல்வி அமைப்புகள் மாறக்கூடிய தொலைநோக்கு பார்வையுடன் அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான உபகரணங்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பினை உருவாக்கி சாதி, மதம், பாலினம் அல்லது தொலைவு போன்ற வேறுபாடுகளின்றி நியாயமான தரமான கல்வி வழங்க வேண்டும். பள்ளி வரைபடம் தயாரித்தலில் கீழ்க்காணும் செயல்முறைகள் உள்ளடங்கியுள்ளன.

 • பள்ளி வரைபடத்திற்கான கிராம கல்விக் குழுக்களை உருவாக்குதல்.
 • கிராம் கல்விக் குழுக்களுக்கு பள்ளி வரைபடத்திற்கான பயிற்சியினை வழங்குதல்.
 • கிராமத்தின் தோராய இடம்சார்ந்த வரைபடத்தினை தயாரித்தல்.
 • வீடுகள்தோறும் ஆய்வுகள் நடத்துதல்.
 • பல்வேறுபட்ட குடும்பங்கள் இருப்பிடம் சார்ந்த இறுதி வரைபடத்தினை ஒவ்வொரு குடும்பத்தை சார்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சேர்க்கை நிலையை குறிக்கும் வகையில் தயாரித்தல்.
 • கிராம / பள்ளிக்கல்வி பதிவேட்டினை தயாரித்தல்.
 • மக்களுக்கு வரைபடங்களின் பகுப்பாய்வை வழங்கி அதை பகுத்தாய்ந்து சரிபார்த்தல் மற்றும் மக்களிடம் ஆலோசனைகள் பெறுதல்

பள்ளி வரைபடம் தயாரிப்பதற்கான தேவையான ஆதரவை மாவட்ட வளமையம் விரிவுபடுத்துகிறது. மேற்கண்டவையிலிருந்து இத்திட்டமானது அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற இலக்கை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட இடைவினைகளின் எண்ணிக்கையை குறிக்கும் கூற்றாகவோ அல்லது வரவு செலவு புள்ளி விவரங்களை தருவதாகவோ அமையாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இத்திட்டங்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வியின் முன்னேற்றத்தை மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கான வழிகாட்டியாக செயல்படுகின்றன.

திட்டமிடலுக்கான வளமையங்கள்

DIET மற்றும் DPEPக்கள் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான அலகினை கொண்டுள்ளன. மாவட்ட அளவிலான வருடாந்திர திட்டங்களை தயாரிப்பதில் இவ்வலகு முக்கியப்பங்கு வகிக்கிறது. வருடாந்திர கல்வி வளர்ச்சி திட்டங்களை தயாரிப்பதில், பள்ளி அளவில் ஆசிரியர்கள், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து சமிதியை சார்ந்தோர்களுக்கு தேவையான உதவியை வட்டார மற்றும் குறுவளமையங்கள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகள் எம்மாதிரியானவை?

மாநில அரசாங்கம், கல்வி, நிதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறைகள் திட்ட வரைவுகளை நேர்மையான தர மதிப்பீட்டிற்கு உட்படுத்துகின்றன. மாநில அரசுத் துறைகள் பகுதி/ஒட்டுமொத்த மாவட்டத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, தெளிவுகளைக் கோரவோ, இலக்குகளை பகுத்தறியவோ இயலும். மாற்றங்களை சேர்த்து மீண்டும் சமர்ப்பித்த பின்பு மாவட்டத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்த அனுமதிக்கப்படலாம். மாவட்ட வருடாந்திர திட்டம் மற்றும் பள்ளி வரைபடத்தை சார்ந்த முன்னுரிமை திட்டங்களைத் தயாரிப்பதை தவிர, மாவட்டக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

நடைமுறைப்படுத்துதல்

மாவட்ட மற்றும் மாவட்டத்திற்கும் கீழ்நிலை அளவில் அனைவருக்கும் தொடக்கக் கல்வியின் திட்டமிடல் என்பது ஓர் ஆரம்பம் மட்டுமே. கல்வி வளர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட கல்விக் குழு, வட்டார கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு போன்றவை நடைமுறையில் உள்ள பழைய வழிமுறைகளை மாற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குழுக்களின் பிரதிநிதிகள் போன்றோர் பங்கேற்று முடிவெடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்துதல் வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் RTE என்பது ஏட்டளவில் இன்றி நடைமுறையிலும் செயல்படுத்தப்படுகிறது. பள்ளியானது முதன்மை நிறுவனமாக விளங்க அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதில் சமுதாயப் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும் என்பதை திட்டமிடல் செயல்பாட்டில் ஆசிரியர்களின் பங்கேற்பின் மூலம் அறியலாம்.

ஒன்றியக் கல்வி அலுவலர் மற்றும் அவர்களின் தொடர்புடைய அலுவலர்கள் ஒன்றிய வள மையமாக செயல்படுகிறார்கள். வட்டார வள மைய பணியாளர்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் புதிய கற்றல், கற்பித்தல் பொருள்கள் இருப்பதற்கு உதவி புரிய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான குறு வள மையங்கள் இருப்பினும் ஒவ்வொரு 15 கிராமங்களுக்கும் ஒரு குறுவள மையம் அமைதல் வேண்டும். வட்டார வள மையம் மற்றும் குறுவள மையப் பணியாளர்களுக்கு இடையே பின்வருபவை சாத்தியமானதாக அமையும். மாதம் ஒருமுறை ஒவ்வொரு பள்ளியையும் பார்வையிடல் மற்றும் கலைத்திட்டம் சார்ந்த உதவிகளை ஆசிரியர்களுக்கு அளித்தல்.

பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை

கல்வியினை சிறப்பாக அளிக்க வேண்டும் என்ற தேவை அதிகரிக்க அதிகரிக்க அரசாங்கத்திற்கே இது கடினமாகிறது. இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி தனியார் நிறுவனங்களும் அரசுடன் இணைந்து பங்காற்றும் வகையில் தனியார் பள்ளிகளை அரசு திறக்க அனுமதி அளிக்கிறது. இது முன்பிருந்த நடைமுறையில் இருந்து ஒரு மாற்றமாகும். மாநில அரசு மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து வெவ்வேறு வகையிலான திட்டங்களின் வாயிலாக தொடக்கக் கல்வியினை சிறப்பாக வழிநடத்த உதவுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.72727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top