பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / வளர்ச்சிக்கான இராணுவ அறிவியலும், தொழில்நுட்பமும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வளர்ச்சிக்கான இராணுவ அறிவியலும், தொழில்நுட்பமும்

வளர்ச்சிக்கான இராணுவ அறிவியலும், தொழில்நுட்பமும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இராணுவ அறிவியல் பல காலங்களாக, மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதனால் கிடைக்கும் இறுதியான பயன்கள் நாட்டின் இராணுவ வலிமைக்கு பயன்படுவதோடு அல்லாமல் சமூகமேம்பாட்டிற்கும், பொது மக்களின் பயன்பாட்டிற்கும் உதவி வந்துள்ளது. முதலாவது இரண்டாவது உலகப்போரின்போது இது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வெளிப்பட்டது. உலகப் போரின் காலத்தில் உயர்தரமான இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் முடக்கி விடப்பட்டதால் பிறகு அது அந்நாடுகளில் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் உற்பத்தித் துறையில் பிரமாதமான மேம்பாட்டை ஏற்படுத்தியது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் போலீஸ்களினால் வான்வழிப்பயணம் / ஜெட் என்ஜின் தொழில்நுட்பம் பெரிதும் முன்னேறியது. தற்போது அதன் பயன்பாடு பரவலாக வியாபித்து இருக்கும் இராணுவ அறிவியல் துறைகளில் மிகச்சிறந்த முன்னேற்றங்களை தந்துள்ளது. பூமியில் ஒரு பொருளின் இடத்தை கண்டறியும் ஜி.பி.எஸ் முறை முதற்கொண்டு, பலதரப்பட்ட தொலை தொடர்பு தொழில்நுட்பங்கள், வீடுகளில் பயன்படும் பாதுகாக்கப்பட்ட பொருட்கள், குளிர்சாதன பானங்கள் மற்றும் தானாக பறக்கும் கருவிகள் ஆகியவைகள் மூலம் இராணுவ ஆராய்ச்சிகளுக்கும் புதியன படைப்புகளுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய சூழ்நிலையில் பார்க்கும் போது, தற்போதுள்ள மத்திய அரசு, பாதுகாப்பு மேம்பாட்டிற்கும், ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஏதுவான ஆராய்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. "இந்தியாவில் பொருள் செய்வோம்" மற்றும் "திறன் மேம்பாட்டு" திட்டங்களோடு இராணுவ ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கும் போது வளர்ச்சியின் வேகமும் உயர்ந்து இராணுவ ஆராய்ச்சிக்கான வளமான போட்டிமிக்க தொழில் முனைவு சூழ்நிலை உருவாகும்.

இராணுவமும், பொருளாதார வளர்ச்சியும்

ஸ்டாக் ஹோமிலுள்ள பன்னாட்டு அமைதி, ஆய்வு நிறுவனத்தின் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது உலகளாவிய இராணுவத்திற்கான செலவீடு $1676 அமெரிக்க பில்லியன்களாக உள்ளது. அது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகிதமாக உள்ளது.  இதில், அமெரிக்கா மட்டுமே, $ 600 பில்லியனும், சீனா $215 பில்லியனும் இந்தியாவின் இராணுவச் செலவு சுமார் $50 பில்லியன்களாகவும் உள்ளது.

பல ஆண்டுகளாகவே, இந்தியாவில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இராணுவ பட்ஜெட்டில் 6 சதவிகிதத்திற்கும் குறைவாகவே செலவிடப்பட்டு வந்தது. உலக நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது அமெரிக்காவில் அது 15 சதவிகிதமாகவும் பிரிட்டனில் 8 சதவிகிதமாகவும், சீனாவில் 15 சதவிகிதமாகவும் இஸ்ரேலில் 9 சதவிகிதமாகவும் உள்ளன.

இதனால், ஒவ்வொரு நாட்டின் இராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் அந்நாட்டு பொருளாதாரம் எப்படி உள்ளது என்பது விளங்குகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பெரும் பங்கு, அந்நாடு எந்த அளவிற்கு சுயமாக இராணுவ தளவாடங்களையும், பொருட்களையும் உற்பத்தி செய்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும். இல்லாவிட்டால், ஒரு நாட்டின் உள் நாட்டு மொத்த உற்பத்தியில் பெரும் பகுதி, இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கே செலவிடப்படும்.

உலகளவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் செலவிடப்படும் நிதி இராணுவ அறிவியல் தொழில் நுட்பத்திற்காகவே செலவிடப்படுகிறது. இதனால், பொதுவான தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக்கப்படுகிறது. இராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் பலதரப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பயன்பட்டிருக்கிறது. அதனால் அந்நாடுகளில் பொதுவான வளர்ச்சி, மேம்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் இதற்கு மாறாக, பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தியின் தொழில்நுட்பத்தை நம்பியே இராணுவம் இருந்துள்ளது. காரணம் தெரியாத வகையில் உலகளவில் உள்ளது போல் இல்லாமல் இந்தியாவின் இராணுவ மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் துறை ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாகவே இயங்கி வந்துள்ளன. இந்தியாவில், துவக்கத்திலிருந்தே இராணுவ தளவாடங்களின் மேம்பாடு மற்ற நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. இந்தியா, அடிமைப்பட்டிருந்தபோது, நாட்டில் தோன்றும் செயல் திட்டங்களும், பொருள் மேம்பாடும் போற்றப்படாமல், இராணுவ அறிவியலும் தொழில்நுட்பமும் மங்கிக்கிடந்தது. ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் நாம் பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டியதாயிற்று. ஆனால், சமீப காலங்களில் இந்தியா சில முக்கியமான துறைகளில் தன்னிறைவு பெறுவதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது நாம் அடைந்துள்ள நிலையில், தொழில் முனைவுக்கும், புதிய கொள்கைகளை உருவாக்குவதற்கும் பஞ்சமில்லை. பொருள் உற்பத்தித் துறை, மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் நாட்டு பல தொழில்கள் மற்ற நாடுகளோடு, போட்டியிடுகின்றன. இறக்குமதியையே நம்பியிருந்த இந்தியா, ஏற்றுமதியில் நிகரத் தன்மை பெறுவது வெகு தூரத்தில் இல்லை.

உள்நாட்டு இராணுவப் பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டதால், விமானத் தயாரிப்பு துறையின் அடித்தளம் உருவாக்கப்பட்டு இந்தியாவின் இராணுவ தொழில்நுட்ப முயற்சிகள் வரும் ஆண்டுகளுக்கு தேவையான வகையில் உயர்ந்துள்ளன.

இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு 1958 முதல் இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் நமக்கு முக்கியமான ஏவுகணைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் கப்பல் மற்றும் சிக்கலான கடல்சார் அமைப்புகள் மற்றும் இலகு ரக போர் விமானங்கள் ஆகியவைகள் கிடைத்துள்ளன. இன்று இந்தியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கொண்ட ஐந்து நாடுகளில் நான்கில் ஒன்றாகவும், போரை எதிர் கொள்ளும் பல தர வல்லமை பெற்ற நாடுகளில் ஒன்றாகவும், தங்கள் நாட்டிலேயே நெடுந்தூர ஏவுகணைகளையும் கடலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் ஐந்து நாடுகளில் ஒன்றாகவும், முதன்மை போர் டேங்குகளையும் நான்காம் தலைமுறை போர் விமானங்களையும் உருவாக்கி தயாரிக்கும் ஏழு நாடுகளில் ஒன்றாகவும், அணுமின் உந்து நீர் மூழ்கி கப்பலை தயாரிக்கும் ஆறு நாடுகளில் ஒன்றாகவும், மின்னணு போர் முறைகள் மற்றும் பல தரம் கொண்ட ரேடார்களை தயாரிக்கும் ஒரு சில நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இராணுவம் சார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களினால் குண்டு துளைக்காத உடைகள், சுவாசக் கருவிகள், உயர் மட்ட பகுதிகளில் விவசாயம், டெங்கு, சிக்கன் குன்யா போன்ற நோய்களை தடுப்பதற்காக பூச்சிகளை விரட்டியடிக்கும் களிம்புகள், உணவில் விஷம் கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகி யவைகள் உற்பத்தி செய்யப்பட்டு, பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அணு, உயிரி மற்றும் இரசாயன தொழில்நுட்பத்துறைகளில் இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், உளவு பார்க்கும் கலன்கள், கதிர்வீச்சைக் கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகியவற்றை உருவாக்கி, அவை பயன்பாட்டில் இருக்கின்றன.

பனிப்பாறை பிரதேசத்தில் மனிதக் கழிவை உருமாற்றும் கருவிகள், இராணுவ பயன்பாட்டிற்காக கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சுத்தமான பாரதம் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உளளது. ஆனால், எதிர்காலத்தில் உலகளவில் தலைமை நிலை பெற எதிர்காலத் தொழில் நுட்பங்களை நாம் கவனிக்க வேண்டும். நமக்கு மறுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை மட்டுமல்லாமல், பலமுனைகளில் நாம் பெருமளவு முன்னேற வேண்டும். இதை அடைய நாம் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு மையங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நவீன உள் கட்டமைப்பு வசதிகளோடு குறிப்பிட்ட துறைகளில், குறிப்பிட்ட தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு மையங்களை அமைக்க வேண்டும். சிறு மற்றும் நடுத்தர மட்ட தொழில் நிறுவனங்கள் புதியனவற்றை கண்டுபிடித்து உருவாக்குவதை போற்றுவித்து ஆதரவளிக்க வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை இணைந்து புதியனவற்றை உருவாக்கி தயாரிக்கும் தொழில் நிலையங்களை நாட்டில் அமைக்க வேண்டும். இவைகளும் அந்நிய செலாவணி ஈட்டும் வகையில் ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும். உயிரி கண்காணிப்புக் கருவிகள், உந்துமவியல், மின் இயந்திர நுண் கருவிகள், மின் இயந்திர குறு கருவிகள், உயர் எரிசக்தி பொருள்கள், எதிர்காலத்திற்கு தேவையான மின் வழங்கு உயர் தொழில்நுட்பங்கள், மறைந்திருந்து செயல்படும் தொழில்நுட்பங்கள், மிக வேகமாக செயல்படும் கணினிகள், ஆகியவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவைகளாக கூறலாம்.

அறிவியல் மனித வளத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலமாகத்தான் எதிர்காலத்திற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வகுக்க முடியும். ஆராய்ச்சிக்குத் தகுந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தாமல், அதிகமான மக்களை அமர்த்துவதாலே மட்டும் இதைச் செய்ய முடியாது.

இராணுவ தொழிற்நுட்ப பலன்கள்

இராணுவ அறிவியல்சார் ஆராய்ச்சிகளால் ஒரு தேசத்தின் பலன் கூடுகிறது. அதனால், இராணுவம் மட்டுமல்லாமல் பொது பொருளாதார துறைகளிலும் மேம்பாடுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் இராணுவத்திற்காக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து பொது மக்களுக்காக பல பொருள்கள் கிடைத்துள்ளன. உயர்தர பொருள்களின் கலவை சார்ந்த ஆய்வுகளின் பயனாக விளைந்த முக்கியமான பொருள்கள்தான் மாற்றுத் திறனாளிகள் நடக்க பயன்படுத்தும் தாங்கிகள் (கேலிபர்ஸ்) மற்றும் ராஜூகலாம் ஸ்டென்டுகளை உதாரணமாகக் கூறலாம். இதேப் போல உயிரி மருத்துவக் கருவிகள், உடம்பிற்குள் பொருத்தப்படும் பாகங்கள், தொற்றுநோயைக் கண்டறியும் கருவிகள், எக்ஸ்ரே இயந்திரங்கள், கதிர் வீச்சைத் தடுக்கும் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கலந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டு பிடிக்கும் கருவிகள் ஆகியவை இராணுவ அறிவியல் ஆராய்ச்சிகளிலிருந்து வெளி வந்தவைதான்.

இந்தியாவில் இராணுவம் மற்றும் பொது மக்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தனித்தனியாகவே செயல்பட்டாலும் ஒரு துறையின் முன்னேற்றத்திலிருந்து அடுத்த துறைக்கும், தேசிய மேம்பாட்டிற்கும் நல்ல பயன்கள் கிடைத்துள்ளன. இராணுவ அறிவியல் தொழில் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பொது மக்களின் பொருட்களுக்காக பயன்படுத்துவதற்கு ஏதுவாக கொள்கைகளை உருவாக்கி இராணுவத் துறையிலுள்ள அறிவு, திறமை மற்றும் சாத்தியங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இராணுவ அறிவியல் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலிடுவதன் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு மிகுந்த பொருளாதார பலன்களும் பொதுவான வளர்ச்சிக்கு வேண்டிய ஊக்கமும் கிடைக்கும். இராணுவ அறிவியல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த திறன் மேம்பாட்டு முயற்சிகள்: ஒரு நிறுவனத்தின் அடிப்படை வலிமை அதன் மனிதவளத்தில்தான் உள்ளது. இது, பாதுகாப்புத் துறைக்கு மிகவும் பொருந்து வதாகும். அந்தத்துறைசார் அறிவுதனித்தன்மை வாய்ந்தது. பல்கலைக்கழகங்களும் மற்ற கல்வி நிறுவனங்களும் இராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பாட திட்டங்களை வகுக்க திட்டமிட வேண்டும். இந்த கல்வி நிறுவனங்கள் தங்களுடைய கல்வித் திட்டங்களில் இராணுவத் துறைக்கு தேவையான அறிவியல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கல்வி பாட திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் இராணுவ அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வேண்டிய திறன்கள் அவர்களுக்கு இருக்கும். உலகளவில், அறிவியல், அதிலும் குறிப்பாக இராணுவ அறிவியல் கூட்டு முயற்சியாகவும் போட்டித்தன்மையுடனும் செயல்படக்கூடியதாகும். பொதுவான பிரச்சினைகளை தீர்க்க பல துறைகளைச் சார்ந்த குழுக்கள் ஒன்றாக செயல்படுவதற்கு ஏதுவாக நிறுவனங்கள், நாடுகள், அமைப்புகள், பல் கலைக்கழகங்கள் மற்றவைகள் இதனை தடுக்கும் சுவர்களை தகர்த்தெறிந்து வருகிறார்கள்.

வளங்களையும், நம் எண்ணங்களையும் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது, நம் செயலில் ஏற்படும் பிரச்சினைகளை அதில் பங்கு பெறும் அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இதனால் தடங்கல்கள் விலகி வளர்ச்சி வேகப்படும். இதுதான் இப்போதைய தேவை. ஒளிமயமான எதிர்காலம் இதுவரை நாம் பார்த்ததெல்லாம் நமக்கு மறுக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பற்றித் தான். நாம் இப்போது அடுத்த 10, 20 ஆண்டுகளில் நமக்கு தேவையான எதிர்கால தொழில் நுட்பத்தை அறிந்து அதற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வகுக்க வேண்டும். பல ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் சென்னை மற்றும் மும்பை போன்ற இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் போன்ற இடங்களில் குறிப்பிட்ட தொழில் நுட்பங்களுக்கான கூர் நோக்கு ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளை அமைத்து அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். சிறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்களில் புதியனவற்றை கண்டு பிடிப்பதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில், பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து இயங்கக்கூடிய புதிது புதிதாக பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அமைய வேண்டும்.

முக்கியமாக, இந்த தொழில்நுட்பங்கள் ஏற்றுமதிக்கு வழி வகுத்து நாட்டிற்கு அந்நிய செலாவணி பெற்றுத்தர வேண்டும். இந்தியா இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்துவந்த நிலை மாறி இப்போது பெரிய ஏற்றுமதி நாடாக தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. ஆனாலும், இராணுவ அறிவியல் துறையில் சில நிலைமைகளை நாம் கவனிக்க வேண்டும். "இராணுவத் துறை தொழில்நுட்பம் மிக்கதாகும். மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்து, நாட்டிற்கு உண்டான மாறி வரும் ஆபத்துக்களுக்கு ஏற்ப நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். இராணுவ அறிவியலுக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பெருமளவில் அரசு சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகளாக உள்ளன. அரசு அல்லாத துறைகளில் சிறிதளவே, இவ்வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுநிறுவனங்கள் அடிப்படை மற்றும் பொருட்களாக / சேவைகளாக மாற்றியமைக்கக்கூடிய ஆராய்ச்சிகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வகையான ஆராய்ச்சிகளிலிருந்து வெளிப்படும் பொருட்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் பொறுப்பை பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளித்து இதில் அவர்கள் முன்னோடியாகவும், இணைப்பாளர்களாகவும் செயல்பட வேண்டும்.

தனியார் துறையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதலீடு செய்து இவ்வகையான பொருட்களின் உதிரிபாகங்களை தயார் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இந்த தனியார் நிறுவனங்களும் முன்னோடி இணைப்பாளர்களாக வளர முடியும். இன்று தனியார் துறையும், மிகப்பெரிய அளவில் பங்களித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் தொழில் நிறுவனங்கள் வெறும் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் என்ற நிலையிலிருந்து உயர்ந்து மிக அதிநவீன முக்கிய பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களாக உயர்ந்துள்ளன. ஆகாஷ் ஏவுகணை திட்டத்திற்கு 70 சதவிகிதத்திற்கும் மேல் தேவைப்படும் பாகங்கள், தனியார் துறையிலுள்ள சில குழுமங்களிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மிகப்பெரிய சவால்களை ஏற்கும் வகையில் தனியார் துறையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய மத்திய அரசின் புதிய கொள்கை களினால், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் பெரிய மூலதனத்தில் தொழில்களை அமைக்க உதவியாக உள்ளது. இதில் மேம்பாட்டிற்கான மிகப்பெரிய உந்துதலாகும். இதனால், வேலை வாய்ப்புகள் உயரும். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற அழைப்புக்கு இது மிகப்பெரிய பதிலாகும். பலகாலமாக கவனிக்கப்படாத தொழில் உற்பத்தித் துறைக்கு சக்தியும், வலிமையும் சேர்ந்துள்ளது. ஆகவே, இந்திய இராணுவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு நல்ல எதிர் காலம் உள்ளது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ் டிசம்பர்

3.01612903226
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top