பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / குழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்

குழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்

நம் அம்மா, தொடர்ந்து வேலைக்குப் போகிறவர்தான் என்ற விஷயத்தை முதலில் அந்தக் குழந்தை சரியாகப் புரிந்து கொண்டால்தான், அந்தக் குழந்தைக்கு, தனிமையால் ஏற்படும் டிப்ரஷன் வராது.

அவர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை, வேலைக்காரர்களின் கண்காணிப்பிலோ, தாத்தா பாட்டி கவனிப்பிலோ செலவிடுவதால், விடுமுறைக் காலத்தில் அம்மா தங்களை விட்டு விட்டுச் செல்வது ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்காது.

உங்கள் குழந்தை என்ன விரும்பும் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, விடுமுறை தினங்களில் உங்கள் குழந்தைக்கு எந்த விளையாட்டுக்களில் ஆர்வமோ, அதை நன்றாக விளையாடும்படி ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டு விளையாடச் செய்யுங்கள். பெயின்டிங், டிராயிங் போன்றவற்றிலும் ஈடுபடச் செய்யலாம். மாலை நேரங்களில் மட்டும் பெற்றோரும் சேர்ந்து கண்டிப்பாக வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஒரு நாள் பார்க், அடுத்த நாள் பீச், உறவினர் வீடு, இல்லாவிட்டால் வாக்கிங் என்று வசதிக் கேற்றபடி வைத்துக் கொண்டால், குழந்தைக்கு, ‘நாம், நம்முடைய விடுமுறையை ஜாலியாக சந்தோஷமாக என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறோம்’ என்ற உற்சாக மன நிலை இருக்கும்.

வேலைக்குச் செல்லும் அம்மாவாயிருந்தாலும் சரி, வீட்டிலிருக்கும் அம்மாவாயிருந்தாலும் சரி, விடுமுறை நாட்களில் குழந்தையின் விருப்பப்படி அம்மா நடந்து கொண்டால்தான், குழந்தையின் மூளை புத்துணர்ச்சி பெற்று, அடுத்து வரும் தினங்களில் படிப்பை மிகச் சுலபமாக எதிர்கொள்ள முடியும்

ஆதாரம் : தினமலர் கல்வி மலர்

3.1
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top