பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளி முன்பருவக் கல்வி

பள்ளி முன்பருவக் கல்விப் பற்றிய தகவல்.

எல்லாக் குழந்தைகளும் கற்கும் திறனுைடன் தான் பிறக்கின்றனர். அவ்வலிமையான அடித்தளத்தின் மீது சமுதாயம் கட்டமைத்துக் கொள்ள முடியும். "கருவிலேயே கற்றல் தொடங்குகிறது" எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். அண்மைக்கால மூளைசார் ஆய்வாளர்கள், ஒருவாின் வாழ்நாள் முழுமைக்குமான உடல் மற்றும் நடத்தை சார்ந்த வழித்தடங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மூளயின் வலது/இடது அரைக்கோளங்களின் வளர்ச்சி ஆறு வயதிற்குள் நிறைவடைகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். 0 முதல் 6 வயதிற்குட்பட்ட சிறாாின் மூளை செல்கள் மிகவும் செயல்திறன் மிக்கவையாகும். எனவே, இளம் சிறாாின் முழுமையான வளர்ச்சியைச் செதுக்குவதில் பள்ளி முன்பருவக்கல்வி இன்றியமையாததாகும்.

பள்ளி முன்பருவக் கல்வியின் நோக்கங்கள்

பள்ளி முன்பருவக் கல்வியின் நோக்கங்கள் கீழ்க்காண்பவைகளை உறுதிசெய்யளவண்டும்.

  • மழலையர் மற்றும் பள்ளிமுன் பருவத்தினரிடம் அறிவாற்றல் மற்றும் உளப்பாங்கு சார்ந்த அனைத்துப் பரப்புகளிலும் பொருத்தைான வகையிலான முழுமையான வளர்ச்சி.
  • விளையாட்டு அடிப்படையிலான கலைத்திட்டம், திறன் வளர்ச்சிக்கான மகிழ்ச்சியான செயல்பாடுகள்.
  • ஒவ்கவாரு குழந்ததைக்கும் தனிப்பட்ட கவனம் மற்றும் சாியான கால அவகாசம் வழங்குவதன் வாயிலாக அவர்களிடம் பள்ளி செல்வதற்கான திறன்களின் தயார் நிலையை வளர்த்தல்.

பள்ளிமுன்பருவக் கல்விப் பாடத்திட்டம்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பள்ளி முன்பருவக் கல்விக்கான கலைத்திட்டத்தினை வடிவமைத்து, அதனடிப்படையில் Pre KG, LKG மற்றும் UKGக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்ய, இங்கே கிளிக் செய்யவும்.

ஆதாரம் : மாநிலக் கல்வியியல் ஆராய்சசி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு

3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top