பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெற்றோர்கள் கவனத்திற்கு

பள்ளி செல்லும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை பற்றிய தகவல்.

  1. தினந்தோறும் குழந்தைகளின் நாட்குறிப்பேட்டைத் தவறாமல் பார்த்துக் கையொப்பமிட வேண்டும்.
  2. குழந்தைகள் பள்ளிக்கு தினந்தோறும் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
  3. வீட்டுப் பாடங்களைச் சரிவர செய்ய குழந்தைகளுக்கு உதவிட வேண்டும்.
  4. குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  5. பள்ளியில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  6. குழந்தையின் உடல்நலம் தொடர்பான விவரங்களை வகுப்பாசிரியர் / தலைமை ஆசிரியரிடம் தவறாமல் தெரிவித்தல் வேண்டும்.
  7. குழந்தைகள் நன்கு கல்வி பயிலவும், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் பெற்றோர்கள் உதவிட வேண்டும்.
  8. தங்கள் குழந்தைகளின் கற்றல் திறனை அவ்வப்போது வகுப்பாசிரியரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
  9. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு மட்டுமின்றி மற்ற விருப்பமான துறைகளிலும் முன்னேற ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்க வேண்டும்.

ஆதாரம் : தமிழக அரசு - பள்ளிக் கல்வித் துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top