பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / கலைநயமிக்க செராமிக் பொறியியல் துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கலைநயமிக்க செராமிக் பொறியியல் துறை

கலைநயமிக்க செராமிக் பொறியியல் துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பதால், களிமண் இன்றைய உற்பத்தி உலகின் பல அம்சங்களில் பயன்படுத்தப்படுகிறது. படைப்பாக்க வடிவங்களை நிஜத்தில் உருவாக்குவதற்கு, பல புதிய சாதனங்கள் தேவைப்படுகின்றன.

செராமிக் பொறியியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், களிமண் தொடர்பான பண்படுத்துதல், மணல் மற்றும் களிமண் போன்ற உலோகமல்லாத மற்றும் உயிரற்ற பொருட்களை பலவித பயன்பாட்டுப் பொருட்களாக தன்மை மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை பிரதானமாக செய்வார்கள்.

களிமண் பொறியியல் படித்த ஒருவர், தொழில்நுட்ப மேலாண்மையில் பயிற்சி பெறுபவர், நிர்வாகி, திட்ட மேற்பார்வையாளர், விற்பனை பொறியாளர் அல்லது தொழில்நுட்ப ஆலோசகர் போன்ற நிலைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

பணி வாய்ப்புகள்

தனியார் மற்றும் அரசுத் துறைகளில், செராமிக் பொறியாளர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. ஆய்வகம் அல்லது களிமண் பொருள் உற்பத்திக் கூடங்கள் போன்றவைகளில் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்ற முடியும். செராமிக் பொறியியலில், அறிவியல் மற்றும் தயாரிப்பு அம்சங்களில் அனுபவமுடையவர்கள், நிர்வாகிகள், திட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனை பொறியாளர்கள் போன்ற பெரிய நிலைகளிலான பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.

சிவில் நியூக்ளியர் களம், எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், செராமிக் துறையில் அபரிமித பணி வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள், ஓரிடத்தில் ஊதியத்திற்கு பணிபுரிவதைவிட, அத்துறை தொடர்பான புதிய தொழில்களைத் தொடங்கி, வாழ்வின் புதிய உயரங்களை அடையலாம்.

சம்பளம்

புதிதாக படித்து வெளிவருபவர்கள், அரசு மற்றும் தனியார் ஆகிய 2 துறைகளிலும், ஆரம்பத்தில் ரூ.9000 முதல் ரூ.13000 வரையில் ஊதியம் பெறுகிறார்கள். அதேசமயத்தில் அனுபவமுள்ள ஒரு பொறியாளர் மாதம் ரூ.50000 மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறார்.

பயிற்சி மற்றும் மேம்பாடு

செராமிக் துறையில் பி.இ, பி.டெக், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ ஆகியவற்றில் எந்த ஒன்றை படிக்க வேண்டுமென்றாலும், ஒருவர் தனது பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர 60% மதிப்பெண்கள் தேவை.

பெரும்பான்மையான கல்லூரிகளில், மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேசமயம் பணிபுரியும் நபர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன. இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியர்ஸ் அமைப்பின் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி, அதன்மூலம் தொலைநிலைக் கல்வி முறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம்.

கல்வி நிறுவனங்கள்

Alagappa college of technology - Chennai

Andhra university college of engineering - Vishakapattinam

Banaras Hindu university - Varanasi

Central Glass and Ceramic research institute - Kolkatta

College of engineering and technology - Bikaner

Government college of engineering and ceramic technology - Kolkatta

H.K.E. Society&'s P.D.A college of engineering - Gulbarga

NIT - Rourkela

University college of science and technology - Kolkatta

போன்றவை, செராமிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்.

ஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு

3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top