பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத் துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத் துறை

ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த படிப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பம் அல்லது ஜியோமேடிக்ஸ் என்பது, பயன்பாட்டை, தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் ஓர் அறிவியலாகும்.

வான்வெளி ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்போதைய முனைப்பு மற்றும் முன்னேற்றமானது, ஜியோஸ்பேஷியல் துறையில் பல வேலைவாய்ப்புகளை, ஆர்வமுள்ளவர்கள் பெறும் நிலையை உருவாக்கியுள்ளது.

பயன்கள்

பலவிதமான துறைகள் மற்றும் பயனர்களிடத்தில், முடிவெடுக்க உதவும் ஒரு கருவியாக இந்த ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கையால் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை, உயர்தொழில்நுட்ப பயன்பாடுகளாக மாற்றி, அதன்மூலம் குறிப்பிட்ட இடங்களை கண்டுபிடிக்க, பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

மேற்குலகைப் பொறுத்தவரை, இந்த தொழில்நுட்பமானது, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிகாட்டவும், மாற்று போக்குவரத்து முறைகளை கண்டறியவும், தேர்தலுக்கான வாக்காளர் வரையறை பகுதிகளை மாற்றியமைக்கவும், விவசாயம் மற்றும் வறட்சி நிலைகளைக் கண்டறியவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மேலே கூறப்பட்ட பயன்பாடுகளுள், சிலவற்றுக்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

சவால்கள்

மேற்குலக நாடுகளைப்போல், இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் பிரபலமாகவில்லை. இந்த தொழில்நுட்ப பயன்பாடானது, இந்தியாவில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருக்கும் இந்த காலகட்டத்தில், இத்துறை சார்ந்த நிபுணர்கள், இதற்கான புதிய மென்பொருள், வன்பொருள் (hardware) மற்றும் மேலாண்மை பயிற்சிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

வசதிகளை நகலாக்குதல், ஒருங்கிணைப்பு குறைபாடு, ஒத்திசைவற்ற தரவு கட்டமைப்புகள், நிலையற்ற தரக் கட்டுப்பாடு, வலைப் பயன்பாடுகளின் நீடித்த மேம்பாடு போன்ற அம்சங்கள், இப்பணியை சவாலானதாகவும், திறன்மிக்கதாகவும் ஆக்கியுள்ளன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

Assam engineering college - Gwahati

Indian Geoinformatics centre - Kolkatta

Symbiosis Insititute of Geoinformatics - Pune

Jiwaji iniversity - Gwalior

Dept. of Geoinformatics(Mangalore univeristy) - Mangalore

போன்றவை இத்துறை சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்.

தகுதிகள்

புவியியல், சுற்றுசூழல் அறிவியல், பொறியியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற பிரிவுகளில் படித்த மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். மேலும், ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத்தில், 2 அல்லது 4 வருட பட்டப்படிப்பில், ஏதேனும் ஒன்றில் ஒருவர் சேரலாம்.

அதேசமயம், இத்துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் பல நிறுவனங்கள், நடைமுறை அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றன. இன்டர்ன்ஷிப், வாலன்டியர் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் பகுதிநேர பணிகளின் மூலமாக, இத்துறை ஆர்வலர்கள் சிறந்த நடைமுறை அனுபவங்களைப் பெறலாம்.

வேலை வாய்ப்புகள்

இத்துறையில், பெருமளவிலான பணி வாய்ப்புகள் அரசுத் துறைகளிலேயே உள்ளன. மேலும், இத்துறை சார்ந்த ஒருவர், மென்பொருள் மேம்பாட்டு நிறுவனங்களிலும் பணிக்கு சேரலாம். இந்த தொழில்நுட்பத்தில், 3 முக்கிய பணி நிலைகள் உள்ளன. அவை,

ஜி.ஐ.எஸ் டெக்னீஷியன் - data conversion, digitising, data processing போன்றவை இப்பணி நிலையில் அடங்கும்.

ஜி.ஐ.எஸ் அனலிஸ்ட்

ஜி.ஐ.எஸ் ஸ்பெஷலிஸ்ட்

ஜி.ஐ.எஸ் கன்சல்டன்ட்

ஜி.ஐ.எஸ் டெவலப்பர்.

சம்பளம்

ஒரு நபரின் அனுபவம், கல்வி, பதவிநிலை, பணிபுரியும் நிறுவனம் மற்றும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் வேறுபடுகிறது. இத்துறையில் ஒரு வருட அனுபவம் கொண்ட ஒருவர், ரூ.1,20,669 முதல் ரூ.9,82,635 வரை சம்பாதிக்க முடியும்

ஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு

2.81818181818
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top