பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / தனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்

தனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்

ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்

ஸ்டாக் மார்க்கெட் துறையின் அம்சங்களை தனிமனிதர்களுக்கு கற்பிக்க மற்றும் அத்துறையில் அவர்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள, EIFS (Edge Institute of Financial Studies) கல்வி நிறுவனம், ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Investing in Stock Market என்ற பெயரிலான இந்தப் படிப்பு, செயல்படுத்தும் திறன், லாபம், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளின் விதிமுறைகள் ஆகியவைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும்.

இந்தப் படிப்பின் மூலமாக, வணிகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையில் புதிதாக நுழைவோர், பைனான்ஸ் மாணவர்கள் அல்லது போர்ட்போலியோ மேலாளர்கள் ஆகியோர் அனைவரும் சமஅளவில் பயன்பெறுவார்கள்.

இப்படிப்பின் காலஅளவு

மொத்தம் 32 மணிநேரங்களைக் கொண்டது இப்படிப்பின் காலஅளவு. ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படிப்பு நடத்தப்படும்.

தகுதி

ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக ஆர்வம்கொண்ட, அதேசமயம், 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட அனைவரும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

விரிவான விபரங்களுக்கு www.eifs.in

ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பு

நியூயார்க் பல்கலையும், பாரிஸ் நகரிலுள்ள HEC கல்வி நிறுவனமும், ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பை வழங்குகின்றன.

சில தேர்வுசெய்யப்பட்ட NGOs இணைந்து செயல்படுவதன் மூலமாகவும், லாபநோக்கமற்ற சட்ட ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும், நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஐரோப்பிய யூனியன் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள்.

பொது கலந்துரையாடல், ஆவணங்களைப் பெறுதல், ஐரோப்பிய குடிமகன்களின் முன்முயற்சிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலமாக அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட அறிவை, இப்படிப்பின் மூலம் பெரியளவில் வளர்த்துகொள்வதே இப்படிப்பின் நோக்கம்.

என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக, ஐரோப்பிய யூனியன் கலந்துரையாடல்கள் மற்றும் வரைவு சமர்ப்பித்தலில் பங்கேற்பார்கள்.

தகுதி

நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகிய கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் அனைவரும் இப்படிப்பை மேற்கொள்ள தகுதியுடையவர்கள்.

வலைதளம் - www.hec.edu.

மும்பை பல்கலையில் தோட்டக்கலை படிப்பு

மும்பை பல்கலையின் வெளிப்புற படிப்புகளுக்கான மையம், 3 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கார்டனிங், நர்சரி மற்றும் பண்ணை மேலாண்மை ஆகிய படிப்புகள் மராட்டிய மொழியிலும், சிறிய மற்றும் அலங்கார தோட்டக் கலைக்காக, கார்டன் கிராப்ட் படிப்பும் அவற்றில் அடக்கம். இந்த மையம், அலங்கார மீன் வளர்ப்பு துறையில் ஒரு புதிய படிப்பையும் வழங்குகிறது.

இப்படிப்பின் மூலம், ஒரு மாணவர், Aquarium அமைத்தல், அதைப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், நீரில் வளரும் தாவரங்கள் மற்றும் அலங்கார மீன்களை தேர்வு செய்வதற்கும், கடல்சார் மீன்வளர்ப்பை உருவாக்கி பராமரிக்கவும், மீன் உணவு தயாரிக்கவும் மற்றும் பல்வேறான மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.

காலஅளவு

மொத்தம் 6 மாதங்கள் இப்படிப்பிற்கான காலஅளவாகும்.

தகுதி

இப்படிப்பை மேற்கொள்ள, வயது வரம்பு அல்லது கல்வித் தகுதி என்று எதுவுமில்லை.

விரிவான விபரங்களுக்கு www.extramural.org.

லவ்லி புரபஷனல் பல்கலையில், உணவு தொழில்நுட்ப படிப்பு

உணவு அறிவியலைப் பயன்படுத்தி, உணவு செயல்முறை, உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி, இப்படிப்பு, மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.

உணவின், ரசாயன, பெளதீக மற்றும் மைக்ரோபயாலஜிகல் அம்சங்கள் மற்றும் அது எப்படி புராசஸ் செய்யப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது, pack செய்யப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுகிறது ஆகியவைப் பற்றியும் கற்றுக் கொள்ளலாம்.

உணவு தொழில்நுட்பம் அல்லது food processing படிப்பை முடித்தவர்கள், உணவு தொடர்பான தொழில் துறையில் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெற முடியும். உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள், உணவகங்கள், குளிர்பான தொழிற்சாலைகள், தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், ரைஸ் மில்ஸ், உற்பத்தி தொழிற்கூடங்கள், ஆல்கஹால் பானங்கள் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

மேலும், பேக்கேஜிங் டெக்னாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி மற்றும் அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளிலும் மேற்படிப்பை மேற்கொள்ள முடியும்.

காலஅளவு

செமஸ்டர் சிஸ்டம் முறையில், மொத்தம் 2 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது இப்படிப்பு.

தகுதி

லவ்லி புரபஷனல் பல்கலை, உணவுத் தொழில்நுட்ப படிப்பை, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் ஆகியோருக்கு வழங்குகிறது.

விரிவான விபரங்களுக்கு www.lpu.in.

ஆதாரம் தினமணி கல்விமலர்

2.93939393939
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top