பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / தொழில் நுட்பம் சார்ந்த கல்வி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில் நுட்பம் சார்ந்த கல்வி

தொழில் நுட்பம் சார்ந்த கல்வி பற்றிய தகவல்

இன்றைய கல்வி நிலை

மாணவர்கள் கால வரிசையில் விஷயங்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என்பதையே கல்வி முறை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள உண்மைகளை ஒருவர் எவ்வளவு மனப்பாடம் செய்துள்ளார் என்பதையும் அதை அவரால் எவ்வளவு திரும்ப சொல்ல முடிகிறது என்பதையும் தான் இக்கல்வி முறை பரிசோதிக்கிறது.

பாடப்புத்தகங்களில் இருக்கும் உண்மைகளை நான் மனப்பாடம் செய்வதில்லை. கல்வியின் உண்மையான நோக்கம் நம் மனதை யோசிக்க வைப்பது தான் என புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

காலத்தின் ஓட்டத்தில் புதிது புதிதாக எதுவாவது கண்டு பிடிக்கப்படுவதும் அறியப்படுவதும் சாதாரணமாகி இருப்பதால் நமது பாடப் புத்தகங்களின் அளவு ஊதிக் கொண்டே போகிறது. இதனால் கல்வியின் துவக்கத்திலிருந்தே சுயமாக அறிவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. உயர் கல்விக்குச் செல்லும் போது தான் அப்ளிகேஷன்-ஓரியண்டட் எனப்படும் நடைமுறை பயன்பாட்டிற்கேற்ற திறன்களின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

இந்தப் போக்கில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும் ஆண்டாண்டு காலமாக இருக்கும் கல்வி முறையில் நடைமுறை பயன்பாட்டிற்கேற்ற திறன்கள் ஒரு பகுதியாக பயிற்றுவிக்கப்படுவது அவசியம். இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நம்மால் அனைத்து விஷயங்களையும் தகவல்களையும் பாதுகாத்து வைக்கும் வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. இதை எப்போது வேண்டுமானாலும் அணுகி பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆண்டாண்டு காலமாக கொஞ்சம் கொஞ்சமாக நாம் கற்றுக் கொண்டவைகளை ஒரேயொரு சி.டியில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம். ஒரு கிளிக்கில் அறிந்து கொள்ளக் கூடியதை எத்தனை ஆண்டுகள் எவ்வளவு செலவு செய்தால் மட்டுமே பெற முடியும் நம்மால்?

கல்வியின் பயன்பாட்டை முழுமையாகத் தருவது விரிவுரை, ஆய்வகம், நூலகம் என்னும் 3 தூண்கள் தான். எனினும் இவற்றை நவீன தொழில் நுட்பம் சார்ந்ததாக விரைவாக மாற்றும் அத்தியாவசியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

வீடியோ கான்பரன்சிங்

நேரடி வகுப்புகளை மாற்றி வரும் வீடியோ கான்பரன்சிங் இன்று மிகக் குறைவாகவே பயன்படுகிறது. இதில் மல்டி மீடியா, கம்ப்யூட்டர்கள், டிஜிடல் டிரான்ஸ்மிஷன் ஆகியவை அதிகமாக பயன்படுகின்றன. இது போன்றவற்றை ஒளி/ஒலிபரப்ப பிராட்பேண்ட் பெரிதும் பயன்படுகிறது. இவற்றுக்காக ஆகும் செலவும் குறைந்து கொண்டே வருகிறது.

இன்டர்நெட் சாட்டிங்

அடுத்த நவீன கல்வி முறை உபகரணமாக இருப்பது மாணவர்-ஆசிரியர் கலந்தாய்வு. இதை இன்டர்நெட் சாட்டிங் ஆக தருகிறார்கள். வெறும் டெக்ஸ்ட் முறையில் அல்லாமல் இதிலும் வீடியோ மற்றும் வாய்ஸ் மீடியாக்களும் பயன்படுகின்றன. ஒரு கல்லூரியில் நேரடியாகப் படிக்காமல் ஆனால் வகுப்பறையின் அத்தனை அம்சங்களையும் இது போன்ற கல்வி முறைகள் உறுதி செய்கின்றன.

வர்ச்சுவல் லேப்

இது கம்ப்யூட்டர்களின் துணையோடு சிமுலேட் செய்யப்படும் ஆய்வக முறையாகும். இடம், தகுந்த நபர்கள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் இல்லாத இடங்களிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செலவும் குறைவு. பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக்கும் பேப்பர்-அடிப்படையிலான முறையால் சில படிப்புகள் தரப்படாமல் இருந்து வந்த பிரச்னை இந்த வர்ச்சுவல் லேப் முறையால் களையப்படுகிறது.

தேவை நவீன தொழில்நுட்பம்

மேலே குறிப்பிட்டுள்ள நவீன கல்வி முறைகளை நமது பல்கலைக்கழகங்கள் அதிகமாக கடைப்பிடிப்பதற்கு இன்னமும் அதிக பேண்ட்வித்களைக் கொண்ட நெட்வொர்க் முறை தேவைப்படுகிறது. அப்போது தான் உயர்தரத்திலான மல்டிமீடியா கம்யூனிகேஷன்ஸ் இவற்றுக்கு சாத்தியமாகும். இதற்கு தேசிய அளவிலான கிகாபைட் நெட்வொர்க்கை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை.

இது போலவே தான் டிஜிடல் லைப்ரரிகளும். புத்தகங்கள், செய்தித்தாள்கள், இசை, சினிமா என எதையும் டிஜிடல் வடிவில் பெற உதவுவது டிஜிடல் லைப்ரரிகள் தான். இதனால் இவற்றை உலகில் எங்கிருந்தும் யாரும் அணுக முடிகிறது.

ஒரு கோப்பை காபியை விட இது போல டிஜிடல் லைப்ரரியிலுள்ள புத்தகம் ஒன்றை அணுகும் செலவு மிகக் குறைவாகவே இருக்கும். இப்படி நவீன தொழில் நுட்பம் பயன்படுவது அதிகமாகிக் கொண்டே போவதால் வருங்காலத்தில் ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரமானது அந்த நாட்டில் தகவல்களைப் பெறும் செலவோடு தொடர்புடையதாக அறியப்படும் நாள் தூரத்தில் இல்லை. இதை உணர்ந்து கல்வியில் அதிகமாக பயன்படக் கூடிய தொழில் நுட்பத்தை கிடைக்கச் செய்வது மத்திய அரசின் பொறுப்பு என்பது வலியுறுத்தத்தக்கது.

ஆதாரம் : தினமலர் கல்விமலர்

2.92222222222
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top