பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / திறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்புகள்

திறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்புகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தொலைத் தொடர்புத் துறை, தகவல் தொழில் நுட்பம், வங்கி நிதிசேவை மற்றும் காப்பீடு, ரீடெயில் அன்ட் சேல்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் திறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்பு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஐசிடி அகாடெமி மூலம் நடத்தப்படுகிறது.

சான்றிதழ் படிப்புகள்

Certificate Program in Employability Skills in Telecom Sector

தொலைத் தொடர்பு என்பது அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.  தொலைத் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தாதவர்களே இல்லையென்ற நிலை நிலவுகிறது.  இப்போது தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. அந்த வேலை வாய்ப்புகளைப் பெற அதற்கான பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் படிப்புகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஐசிடி அகாடெமியும் இணைந்து இலவசமாக 200 மணி நேர பயிற்சியை அளித்து வருகின்றன.  பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இச்சான்றிதழ் படிப்பில் சேரலாம். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைனில் அடிப்படை தேர்வு நடத்தப்படுகிறது.  அதில் தேர்ச்சி அடைபவர்கள் சான்றிதழ் படிப்பு பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

Certificate Course in Advanced IT infrastructure & services

இதே போல தகவல் தொழில்நுட்பத் துறையிலும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.  கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் பன்னாட்டுச் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் அடிப்படைத் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.  வெற்றிகரமாக பயிற்சி முடிப்பவர்களுக்கு பன்னாட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Certificate Program in  Banking Finance Services & Insurance (ADVANCED BFSI)

வங்கி நிதிச்சேவை மற்றும் காப்பீடு துறை சம்பந்தமான சான்றிதழ் படிப்பும் நடத்தப்படுகிறது.  பி.காம், பிபிஏ, பிபிஎம், எம்பிஏ பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.  அடிப்படை ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

Certificate Program in  Employability Skills in Retail  Sales & Management

கலை, அறிவியல், வணிகவியல், வணிக மேலாண்மை பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் இச்சான்றிதழ் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் அடிப்படைத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தகவல்களுக்கு

ICTACT

ELCOT Complex, 2-7 Developed Plots,

Industrial Estate, Perungudi,

Chennai  600 096

Phone : 91- 044 42906800

http:www.ictact.in

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.1320754717
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top