பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / நிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள்

நிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள்

நிலவியல் தொடர்புடைய முதுகலைப் பட்டப்படிப்புகள், நிலத்தை அளவிட உதவும் அளக்கையியல் (Surveying) மற்றும் முகப்புதல் (Mapping) போன்றவைகளுடன் தொடர்புடைய பல்வேறு பயிற்சிகளையும் ஐதராபாத்திலுள்ள இந்திய அளக்கையியல் மற்றும் முகப்புதல் நிறுவனம் (Indian Institute of Surveying & Mapping) அளித்து வருகிறது.

ஐதராபாத்திலுள்ள இந்நிறுவனம் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிலவியல் முதுநிலை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (M.Tech (Geomatics)) மற்றும் நிலவியல் தொடர்புடைய முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு (M.Sc., (Geospatial)) எனும் இரண்டு வகையான இரண்டாண்டு கால அளவிலான பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது.

நிலவியல் முதுநிலை தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு பொறியியலில் இளநிலை பட்டம் அல்லது பொறியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினர் (A.M.I.E), முதுநிலை கணிதம்/இயற்பியல்/புள்ளியியல்/கணினி அறிவியல்/நில அறிவியல் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். நிலவியல் தொடர்புடைய முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கு ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வியில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பட்டப்படிப்பு ஒவ்வொன்றிலும் உள் வேட்பாளர்கள் (Internal Candidates) ஐந்து இடங்கள், பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் (Sponsored Candidates) நான்கு இடங்கள், தனி வேட்பாளர்கள் (Private Candidates) பதினாறு இடங்கள் என மொத்தம் இருபத்தைந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் (Basic Courses) எனும் பிரிவில் இடம் பெற்றிருக்கும் நான்கு பயிற்சிகளில், அளக்கையியல் பொறியாளர் (Surveying Engineer) எனும் பயிற்சிக்குக் கட்டுமானப் பொறியியலில் பட்டம் அல்லது கணிதப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும், அளக்கையியல் மேற்பார்வையாளர் (Surveying Supervisor) எனும் பயிற்சிக்குக் கணிதப் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும், அளக்கையியல் தொழில்நுட்பப் பணியாளர் (Surveying Technician), வரைபடவியல் தொழில்நுட்பப் பணியாளர் (Cartography Technician) எனும் இரு பயிற்சிகளுக்கு மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்துத் தேர்ச்சி பெற்றவர்களும் சேர முடியும்.

மேம்பட்ட பயிற்சி வகுப்புகள் (Advanced Courses) எனும் பிரிவில் இடம் பெற்றிருக்கும் மூன்று பயிற்சிகளில், மேம்பட்ட எண்ணியல் வரைபடவியல் மற்றும் புவிசார் தகவல் அமைப்புகள் (Advanced Course on Digital Cartography & GIS) எனும் பயிற்சிக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு முடித்து வரைபடவியலாளராகப் பணியிலிருப்பவர்களும், மேம்பட்ட ஒளி அடர்வு அளவியல் மற்றும் தொலையுணர்வு அறிதல் (Advanced Photogrammetry & Remote Sensing) எனும் பயிற்சிக்கு ஏதாவதொரு பட்டப்படிப்புடன் அளக்கையியல் அல்லது வரைபடவியல் பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமுடையவர்களும், மேம்பட்ட புவிமேற்பரப்பியல் (Advanced Geodesy) எனும் பயிற்சிக்குக் கணிதப் பாடத்தில் இளநிலைப்பட்டம் பெற்று நில அளக்கையியல் பணியில் இரண்டாண்டு பணி அனுபவமுடையவர்களும் சேர்ந்திட முடியும்.

புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் (Refresher Courses) எனும் பிரிவில் இரண்டு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. முதல் பிரிவில் உலகளாவிய குறியிட அமைப்பு (Global Positioning System), மொத்த நிலையங்கள் (Total Station), நகரும் வரைபடவியல் (Mobile Mapping), புவிசார் தகவல் அமைப்புகள் (Geographic Information Systems) மற்றும் எண்ணியல் ஒளி அடர்வு அளவியல் (Digital Photogrammetry) போன்ற பாடங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பயிற்சி மூன்று வகைகளாக, மூன்று கால அளவுகளில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பயிற்சிக்கு, இந்திய அளக்கையியல் துறையின் கூடுதல் பொது அளக்கையியலாளர் அல்லது இயக்குநர் அல்லது இவற்றிற்கு இணையான (Additional Surveyor Generals / Directors from Survey of India or equivalent) நிலையிலிருப்பவர்களும், இரண்டாம் பிரிவில் துணை இயக்குநர் மற்றும் மேற்பார்வை அளக்கையியலாளர் நிலையிலிருப்பவர்களும், மூன்றாம் பிரிவில் அளக்கையியலாளர் அதிகாரி மற்றும் அளக்கையியலாளர்களும் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அளக்கையியல் பொறியியலின் அடிப்படைகள் (Fundamentals of Survey Engineering) எனும் பயிற்சிக்கு அளக்கையியலாளர் அதிகாரி மற்றும் அளக்கையியலாளர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

நடுநிலையிலான தொழில் சார்பு மேம்படுத்தல் பயிற்சி வகுப்புகள் (Mid Career Advance Courses) எனும் பிரிவில் உலகளாவிய குறியிட அமைப்பு மற்றும் மொத்த நிலையங்கள் எனும் வழியிலான விளக்கமான அளக்கை மற்றும் கட்டுப்பாடு (Control & Detail Survey by GPS & Total Station), நகரும் வரைபடவியல் அமைப்பில் நாளது வரையிலான வரைபடம் (Map updation using Mobile Mapping System) எனும் பாடங்களுடனான பயிற்சி, புவிசார் தகவல் அமைப்புகளின் பயன்பாடுகள் (GIS Applications) பயிற்சி, எண்ணியல் ஒளி அடர்வு அளவியல் மற்றும் தொலையுணர்வு அறிதல் (Digital Photogrammetry & Remote Sensing) பயிற்சி எனும் மூன்று வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளில் இந்திய அளக்கையியல் துறையில் துணை மேற்பார்வை அளக்கையியலாளர்கள் அல்லது முதல் ஐந்து வருடப் பணி முடித்த அளக்கையியலாளர்கள் போன்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இருமுகத் தொழில் பயிற்சி வகுப்புகள் (Dual Trade Courses) எனும் பிரிவில் பண்டக மேலாண்மை (Store Management), பதிவு மேலாண்மை (Record Management), வரைபடவியல் ஆவணங்களின் எண்ணியல் வடிவங்கள் (Digitization of Cartographic Documents) எனும் மூன்று வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் தொழில்நுட்பப் பணியாளர்களாகப் பணியாற்றி வருபவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கல்விப்புலம் வாரியான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் (Courses Of Faculty-Wise Specialisation) எனும் பிரிவில் புவிமேற்பரப்பியல் (Geodesy) எனும் பிரிவின் கீழ் உலகளாவிய குறியிட அமைப்பு மற்றும் மொத்த நிலையங்கள் எனும் வழியிலான விளக்கமான அளக்கை ( Detail Survey by GPS & Total Station) எனும் தலைப்பிலான இரு கால அளவிலான ப்யிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. நகரும் வரைபடவியல் அமைப்பில் நாளது வரையிலான வரைபடம் (Map updation using Mobile Mapping System) எனும் மற்றொரு பயிற்சியும் உள்ளது. இப்பயிற்சிகளுக்குப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது தொழில் வழியிலான அளக்கையாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

எண்ணியல் வரைபடவியல் மற்றும் புவிசார் தகவல் அமைப்பு (Digital Mapping and Geographical Information System) எனும் பிரிவின் கீழ் வரைபடவியல் ஆவணங்களின் எண்ணியல் வடிவங்கள் (Digitization of Cartographic Documents), எண்ணியல் வரைபடவியல் மற்றும் புவிசார் தகவல் அமைப்புப் பயன்பாடுகள் (Digital Cartography & GIS Applications) எனும் இரு பயிற்சிகள் இரு கால அளவில் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது தொழில்முறையில் வரைவாளர்கள் அல்லது அளக்கையாளர்களாகப் பணியிலிருப்பவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

ஒளி அடர்வு அளவியல் மற்றும் தொலையுணர்வு அறிதல் (Photogrammetry and Remote Sensing) எனும் பிரிவின் கீழ் ஒளி அடர்வு அளவியல் கருவி இயக்குபவர் (Photogrammetric Operator) எனும் பயிற்சி இரு கால அளவில் நட்த்தப்படுகின்றன. இப்பயிற்சிக்கு மேல்நிலைக்கல்வி படித்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். எண்ணியல் ஒளி அடர்வு அளவியல் மற்றும் தொலையுணர்வு அறிதல் (Digital Photogrammetry & Remote Sensing) எனும் பயிற்சி நான்கு கால அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இப்பயிற்சிக்கு கணிதப் பாடத்துடன் மேல்நிலைக்கல்வி படித்த ஒளி அடர்வு அளவியல் கருவி இயக்குபவர்களாகப் பணியாற்றி வருபவர்கள், அல்லது இந்நிறுவனத்தில் ஒளி அடர்வு அளவியல் கருவி இயக்குபவர் பயிற்சி பெற்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

நில எல்லை அளக்கை மற்றும் நிலத் தகவல் அமைப்பு (Cadastral Survey and Land Information System(LIS)) எனும் பிரிவின் கீழ் நில எல்லை அளக்கை மற்றும் நிலத் தகவல் அமைப்பு (Cadastral Survey and Land Information System(LIS)), நில எல்லை அளக்கையில் மொத்த நிலையங்கள் பயன்படுத்தல் (Use of Total Station in Cadastral Survey) எனும் இரு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் அரசுத் துறையினால் பரிந்துரைக்கப்படும் அலுவலர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

நிர்வாக மேலாண்மை (Administrative Management) எனும் பிரிவின் கீழ் அலுவலக நடைமுறை (Office Procedure) எனும் பயிற்சிக்கு கீழ்நிலை மற்றும் மேல்நிலையிலான எழுத்தர் பணியிலிருப்பவர்களும், அலுவலக மேலாண்மை (Office Management) எனும் பயிற்சியில் மூத்த மேல்நிலை எழுத்தர், உதவிப் பண்டகக் காப்பாளர், பதிவுக் காப்பாளர் போன்ற பணியிலிருப்பவர்களும், நிர்வாக மேலாண்மை (Administrative Management) எனும் பயிற்சிக்கு அலுவலக மேற்பார்வையாளர் பணியிலிருப்பவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இந்நிறுவனத்தில் இந்தப் பயிற்சிகள் தவிர, மேலும் சில குறுகிய காலப் பயிற்சிகளும், நில அளக்கை தொடர்புடைய கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்றவைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

நில அளக்கைப் பணி மற்றும் அத்துடன் தொடர்புடைய பணியில் சேர விரும்புபவர்களுக்கும், இத்துறைகளில் பணியாற்றி வருபவர்களில், தங்கள் நிலையினை மேலும் உயர்த்திக் கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும் படிப்புகளும், பயிற்சிகளும் பயனுடையதாய் இருக்கின்றன.

ஆதாரம் : உ. தாமரைச்செல்வி

2.88524590164
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top