பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / நீர் மேலாண்மைப் படிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர் மேலாண்மைப் படிப்புகள்

நீர் மேலாண்மைப் படிப்புகள் பற்றிய விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நீர் மேலாண்மையின் அவசியம்

தற்போதைய கால சூழ்நிலையில் நீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சில பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கிறது. பயன்பாட்டுக்கு போக மீதி உள்ள நீர் வீணாகப் போகின்றது. சில பகுதிகளில் தண்ணீர் அறவே கிடைக்காமல் வறட்சி காணப்படுகிறது. அதே போல மழைக்காலங்களில் அதிக அளவு கிடைக்கும் தண்ணீர் சேமிக்கப்படாமல் வீணாக கடலில் சென்று கலக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் நீர் மேலாண்மை மிகவும் அவசியமாகும். இந்த நீர் மேலாண்மை என்பது அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட நபர்கள் அனைவரும் நீர் மேலாண்மை குறித்து அவசியம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு துளி தண்ணீர் சேமித்தாலும் அது நாட்டுக்கு செய்யும் நன்மையாகும். தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி போன்ற காரணங்களால் விவசாயம் கடுமையாகப்பாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் அத்தகைய விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதனால் தற்காலத்தில் மாணவர்கள் நீர் மேலாண்மை குறித்த கல்வியை கற்க வேண்டியது அவசியமாகின்றது.

நீர் மேலாண்மை குறித்த படிப்புகளும், கற்பிக்கும் கல்வி நிலையங்களும்

  1. டிப்ளமோ இன் வாட்டர் செட் மேனேஜ்மென்ட் - இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகம்
  2. சர்டிபிகேட் இன் வாட்டர் ஹார்வெஸ்டிங் அன்ட் மேனேஜ்மென்ட் - இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகம்.
  3. எம்.எஸ்சி., என்ஜினியரிங் இன் ஹைடராலிக் என்ஜினியரிங் - சென்டர் பார் வாட்டர் ரிசோர்சஸ் - அண்ணா பல்கலைக் கழகம்.
  4. எம்இ இன் இரிகேஷன் வாட்டர் மேனேஜ்மென்ட் - சென்டர் ஃபார் வாட்டர் ரிசோர்சஸ் - அண்ணா பல்கலைக்கழகம்.

நீர் மேலாண்மை குறித்த படிப்புகளை நடத்தும் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் குறித்த மேலும் தகவல்களுக்கு:

http:www.msubaroda.ac.in

http:www.pec.ac.in

http:shiats.edu.in

http:www.mpuat.ac.in

ஆதாரம் : முற்றம் நாளிதழ்

3.16326530612
க.மாரியப்பன் Jul 15, 2019 10:53 AM

ஒவ்வொரு வீட்டிலும் நீர் மேலாண்மை தொட்டி ௮மைத்தி௫ந்தால் மட்டுமே வீட்டு ரசிதை கொடுக்க வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top