பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிசியோதெரபிஸ்ட்

பிசியோதெரபிஸ்ட் படிப்புப் பற்றிய குறிப்புகள்

பிசியோதெரபிஸ்ட்

பிறவியிலேயே ஏற்பட்ட உடல் உறுப்புக் குறைபாடுகள், விபத்து மற்றும் நோயினால் ஏற்படும் உடல் உறுப்புக் குறைபாடுகள் ஆகியவற்றினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து, நோயாளிகள் நிவாரணம் பெற உதவுபவரே பிசியோதெரபிஸ்ட். ஒரு பிசியோதெரபிஸ்ட், மனித உடலமைப்பு, எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் குறித்து விரிவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் பரஸ்பரம் நல்லப் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதுடன், அவர்களின் உறவினர்களுடனும், நல்ல புரிந்துணர்வைக் கொண்டிருப்பது அவசியம்.

இவைத்தவிர, பரிவிரக்கம், பொறுமை, மனிதர்களைப் புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களும் ஒரு பிசியோதெரபிஸ்டுக்கு முக்கியம். மேலும், நல்ல தொழில் திறன், அதிகநேரம் பணியாற்றுவதற்கான உடல்திறன் போன்றவையும் மிகவும் முக்கியம். இவைதவிர, ஒரு பிசியோதெரபிஸ்ட், மருத்துவருடன் சேர்ந்து பணியாற்றும் சூழலும் ஏற்படும். எனவே, அவரின் பணியானது, நேர்த்தியாகவும், அமைப்பாக்கப்பட்ட முறையிலும் இருப்பது முக்கியம். ஏனெனில், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

இத்துறையில் நுழைவது?

ஒருவர் பிசியோதெரபிஸ்ட் என்ற நிலையை அடைய 3 வழிகள் உள்ளன.

* Diploma (DPT)

* B.Sc., Degree

* BPT - Bachelor in Physiotherapy (4.5 years professional course)

ஆகிய 3 படிப்புகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம். கடந்த 1960ம் ஆண்டுகளில், ஒருவர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், மேற்கொள்ளக்கூடிய, ஓராண்டு டிப்ளமோ படிப்பாக இது இருந்தது. ஆனால், காலங்கள் செல்ல செல்ல, பிசியோதெரபிஸ்ட்டுகளின் தேவையும், அவர்களின் பணி முக்கியத்துவத்தின் தேவைகளும் உயர உயர, அப்படிப்பு BPT என்று ஆனது.

பிசியோதெரபிஸ்ட் துறையில் வெறும் டிப்ளமோ படித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காது. அவர்கள், BPT படித்தவர்களுக்கு உதவியாளர்களாகவே பணியாற்றலாம். அரசாங்கத்தைப் பொறுத்தவரை, Degree மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கிடையே வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை என்றாலும், வெளி உலகில் மரியாதை BPT படிப்பிற்குத்தான்.

இத்துறையில் B.Sc., படிப்பும் முன்னேறியதாக இருந்தாலும், 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப் கொண்ட BPT படிப்பையே மேற்கொள்வது மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது.

கல்வித் தகுதி

பள்ளிப் படிப்பில் உயிரியல் பாடத்தைக் கட்டாயம் படித்திருப்பதோடு, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 17 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

தேசியளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் சில...

* Apollo College of Physiotherapy - Hyderabad
* Institute of Physically Handicapped - New Delhi
* Post Graduate Institute of Medical Education and Research - Chandigarh
* Mahatma Gandhi University Medical College - Kottayam
* City College of Physiotherapy - Mangalore

சரியான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்

ஒரு பிசியோதெரபி கல்வி நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயர், அதன் அங்கீகாரம், அது எத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம், கல்வி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை ஆய்வுசெய்வது அவசியம். அக்கல்வி நிறுவனம் இந்திய பிசியோதெரபிஸ்ட்ஸ் அசோசியேஷனின்(IAP) அங்கீகாரம் பெற்றதாக இருப்பது கட்டாயம்.

பணி வாய்ப்புகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான மையம், சமூக சுகாதார நலக் கூடங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், மனநல மருத்துவ மையங்கள், நர்சிங் ஹோம், தனியார் கிளீனிக்குகள், தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள், தனியாக கிளீனிக் வைத்து பயிற்சி செய்தல் அல்லது நோயாளிகளின் இல்லங்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பயிற்சி செய்தல், புனர்வாழ்வு மையங்கள், விளையாட்டு கிளீனிக்குகள் மற்றும் உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் ஆசிரியர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன.

சம்பளம்

பணியாற்றும் இடம், அனுபவம், கல்வித்தகுதி ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் வேறுபடுகிறது. தனியார் துறையை எடுத்துக் கொண்டால், ரூ.5,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் கிடைக்கிறது. நல்ல அனுபவம் பெற்று, உயர்ந்த நிலையில் பணிபுரியும் பிசியோதெரபிஸ்டுகள் மாதம் ரூ.80,000 வரை சம்பளம் பெறுகிறார்கள். தனியாக கிளீனிக் வைத்து தொழில் செய்பவர்கள், தங்களின் பழக்கம் மற்றும் தொழில் நேர்த்தியைப் பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.

ஆதாரம் : கல்விமலர்

3.08695652174
Anonymous May 27, 2015 11:49 AM

குட்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top