பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / புதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகள்

புதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எரிசக்தி பயன்பாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இயற்கையிலேயே நமக்கு கிடைக்கும் எரிசக்திகளைப் பயன்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிய புதுப்பிக்கதக்க மற்றும் மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகளை பெற வேண்டியது அவசியமாகும்.

தண்ணீர், பெட்ரோல், நிலக்கடி, மரம் போன்றவற்றின் மூலம் நாம் எரிசக்தியை உற்பத்தி செய்து அதனை வீடுகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை பயன்படுத்தி வருகிறோம். இவை எத்தனை ஆண்டுகளுக்கு நமக்குக் கிடைக்கும் என்பது தெரியாது. இத்தகைய எரிசக்தி மூலப் பொருட்கள் அனைத்தும் கிடைக்காமல் போனால் அதற்கு மாற்றாக நமக்கு இயற்கையாக கிடைக்கக் கூடிய எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டிய நிலைதான் ஏற்படும்.

சூரிய சக்தி, காற்று, பயோ கேஸ் போன்றவை மூலம் தான் நாம் எரிசக்தியை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும். தற்போது இவை குறைந்த அளவுக்கு தான் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது, காற்றாலை மூலம் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, மாட்டுச் சாணம், அழுகிய காய்கறிகள், வீணாகும் விவசாய விளை பொருட்கள் ஆகியவற்றிலிருந்து பயோ கேஸ் தயாரிப்பது, அந்த பயோ கேஸைப் பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிப்பது, உணவு சமைக்க எரிபொருளாக பயோ கேஸ் பயன்படுத்துவது என பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் பெரிய அளவில் எல்லாரும் பயன்படுத்தத் தக்கதாக இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகளை சில நிறுவனங்கள் அளித்து வருகின்றன. புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் இத்துறை மிகவும் முக்கியத்துவம் பெறும்.  அதனால் இது சம்பந்தமான பயிற்சி பெற்று தொழில் துவங்கி நல்ல வருவாய் ஈட்டலாம்.

இத்துறை சம்பந்தமான பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள்

1. Biogas Develeopment & Training Center

School of Bio technology

KIIT University, Campus-XI

Bhubaneswar-751024,

Odisha, INDIA

http:kiitbiotech.kiit.ac.inbdtccentercontact_us.html

2. NATIONAL INSTITUTE OF WIND ENERGY

Velachery - Tambaram Main Road

Pallikaranai, Chennai - 600 100.

http:niwe.res.ininformation_reti.php

3. BIOTECH INDIA

Biotech Tower, M.P. Appan nagar

Thaycaud P.O, Vazhuthacaud

Thiruvananthapuram-14

http:biogascourse.com

4. National Institute of Solar Energy,

Post Box No.2 , Sector 45,

Gurgaon, 122003, Haryana.

http:nise.res.in

மேலும் சில நிறுவனங்கள்

  • GLOBAL SUSTAINABLE ENERGY SOLUTIONS -  http://www.gses.in/
  • NATIONAL CENTRE FOR PHOTOVOLTAIC RESEARCH AND EDUCATION - http://www.ncpre.iitb.ac.in/
  • RENEWABLE ENERGY CENTRE MITHRADHAM -  http://www.mithradham.org
  • GUJARAT ENERGY RESEARCH &MANAGEMENT INSTITUTE -  http://www.germi.org/
  • PROMOTERS AND RESEARCHERS IN NON-CONVENTIONAL ENERGY -http://www.princeindia.org/

ஆதாரம் : தினமணி – இளைஞர்மணி வார இதழ்

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top