பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில்நுட்ப மேலாண்மைப் படிப்பு

தொழில்நுட்ப மேலாண்மைப் படிப்பு - வாய்ப்புகள் எவை? குறிப்புகள்.

தொழில்நுட்ப மேலாண்மைப் படிப்பு - வாய்ப்புகள் எவை?

வணிகத்துடன், தொழில்நுட்பமும் அதிகளவில் இணைந்து, பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுவரும் இன்றைய உலகில், வணிக நிறுவனங்கள், டேட்டா மற்றும் அனலிசிஸ் ஆகிய அம்சங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த நிபுணர்களையே பணிக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. எனவே, மேற்கூறிய திறன் பெற்ற நிபுணர்களுக்கு அதிக பணி வாய்ப்புகள் உள்ளன.

வணிக செயல்பாடுகள் பற்றிய சிறந்த அறிவு, புரிந்துகொள்ளும் திறன், ஒரு நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும், தொழில்நுட்பங்கள் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மதிப்பிடுதல் மற்றும் யூகித்தல் திறமை, மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆர்வம் போன்றவைகளை, மேற்கூறிய நிபுணர்கள் பெற்றுள்ளார்கள்.

கல்வித் தகுதிகள்

டெக்னாலஜி மேனேஜ்மென்ட் எனும் இந்த எம்பிஏ படிப்பில் சேர, தொழில்நுட்பம் அல்லது சிஸ்டம் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் படிப்பை முடித்திருப்பதும், அதனுடன் சேர்ந்து, டேட்டா தொடர்பான நிறுவனத்தில், பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். புத்தாக்கம் மற்றும் புதிய சிந்தனைகள் கொண்டிருந்து, மேலாண்மைத் துறையிலும் பணிபுரிந்து சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கும் பொறியியல் மாணவர்களுக்கு, இந்த எம்பிஏ படிப்பு ஏற்றது.

இப்படிப்பு எத்தகையது?

இன்றைய இந்தியாவில் பெருகிவரும் உயர்தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிக மனிதவளம் தேவைப்படுகிறது. அத்தகைய மனிதவளமானது, தொழில்நுட்ப அம்சங்கள், அதன் உருவாக்குதல், அளவீடு, கணிப்பு, மாற்றுதல், கிரகித்தல் மற்றும் பரவலாக்குதல் போன்றவைகளை அறிந்திருக்கக் கூடியதாகவும், மேலாண்மை, திட்டமிடுதல், வணிக செயல்பாடுகள் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை தெரிந்திருக்கக் கூடியதாவும் இருத்தல் வேண்டும். இத்தகைய தகுதிகளை அவர்களுக்கு தருவதே எம்பிஏ - தொழில்நுட்ப மேலாண்மைப் படிப்பு.

இப்படிப்பை மேற்கொள்ளும் ஒருவர், தொழில்நுட்ப முன்கணிப்பு, மாறிக்கொள்ளுதல் மற்றும் நடைமுறையாக்கல் போன்ற அம்சங்களை நாம் சிறப்பாக கற்றுக்கொள்ள முடிகிறது. இன்னும் நுட்பமாகப் பார்த்தால், இந்தப் படிப்பின் மூலமாக, ஒரு நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப பரிமாற்ற செயல்பாட்டைப் பற்றிய ஒரு நல்லப் புரிதலை நீங்கள் பெறுவதுடன், புரடக்டிவிடி, எம்ப்ளாய்மென்ட், மனிதவளம் மற்றும் நிறுவன முன்னேற்றம் போன்ற தொழில்நுட்ப மேலாண்மை தொடர்பான அம்சங்களில், ஒரு தெளிவான மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.

மேலும் அறியக்கூடியவை...

Technology road - mapping மற்றும் R&D Management போன்ற படிப்புகளும் உங்களின் ஆர்வத்தை தூண்டக்கூடியவைதான். ஆனால், அவற்றைவிட, இந்த டெக்னாலஜி மேலாண்மை படிப்பானது, தன்னுள் பரந்த அம்சங்களை உள்ளடக்கியதாகும். பலவிதமான மேலாண்மைத் துறைகளில், தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த விளக்கங்களை, இப்படிப்பு கொண்டுள்ளது.

மார்க்கெடிங் அம்சங்களை, சோசியல் நெட்வொர்க்கிங் எவ்வாறு மாற்றுகிறது அல்லது இயக்க குறைபாட்டு சிக்கல்களை, SAP எவ்வாறு மட்டுப்படுத்துகிறது போன்ற விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களும் இந்த எம்பிஏ - தொழில்நுட்ப மேலாண்மை படிப்பில் சேரலாம்.

பாடத்திட்டம்

படிப்பை வழங்குவதில், கல்வி நிறுவனங்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. பொதுவான மேலாண்மைப் படிப்புகளைத் தவிர்த்து, Strategic management, Entrepreneurship, Innovation Management, Intellectual property Rights and Project Management போன்ற முழுநேர படிப்புகள் உள்ளளன.

கூடுதலாக, ஒருவர் தனது விருப்பம் மற்றும் கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தனக்கு விருப்பமான படிப்பை மேற்கொள்ளலாம். இவற்றுள் Sustainable development, Management of change, Economics of Technology, Management information systems, Energy policy, Investment strategy, Global marketing, Public policy theory, Decision support systems, Logistics & supply chain management, Simulation and System dynamics போன்ற படிப்புகள் அடங்கும்.

கோடைகால இன்டர்ன்ஷிப்

இப்படிப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று, கோடைகால இன்டர்ன்ஷிப் திட்டமாகும். இதன்மூலமாக, மாணவர்கள், பொதுத்துறை, தனியார் துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, உயர்தொழில்நுட்ப தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் வாய்ப்பை பெறுகிறார்கள். மாற்றாக, சில மாணவர்கள், பிசினஸ் இன்குபேஷன் யூனிட்டுகளில், ஒரு உலகளாவிய அனுபவத்தையும் பெறுவார்கள்.

மொத்தத்தில், இந்த 5 அல்லது 6 வாரகால, கோடைகால இன்டர்ன்ஷிப்பில், ஒரு வணிக நிறுவனத்தை நடத்த தேவையான அனைத்துவகையான திறன்களைப் பற்றியுமான நடைமுறை விஷயங்கள் குறித்த அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

தொழில்நுட்ப மேலாண்மை நிபுணர்களின் பணிகள்

ஒரு தொழில்நுட்ப மேலாண்மை நிபுணர் என்ற வகையில், நீங்கள், ஒரு அலுவலகத்தின் இயக்கரீதியான சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். உங்களுடைய பணியானது, இயங்குதல் தொடர்பான சில மாற்றங்களை ஏற்படுத்தி, பணியாற்றும் செயல்பாட்டை மேம்படுத்துதலில் முதன்மைப் பெற்றிருக்கும்.

திட்ட மேலாண்மைத் திறன்களைப் பயன்படுத்தி, தொடர்ச்சியான மேம்பாடு, புதிய தயாரிப்பு மேம்பாடு அல்லது செயல்பாட்டு மறுவடிவமைப்பு ஆகியவற்றை செம்மைப்படுத்தும் முக்கியப் பணி உங்களுடையது. எம்பிஏ - தொழில்நுட்ப மேலாண்மை படிக்கும் மாணவர்கள், பிற எம்பிஏ துறைகளைச் சேர்ந்த மாணவர்களைவிட, டெக்னாலஜி மார்க்கெடிங், வியூகம், ஐபி மற்றும் உயர்நிலை மேலாண்மை, R&D மேலாண்மை, நீடித்தப் பொருளாதாரம் மற்றும் புத்தாக்க மேலாண்மை போன்ற விஷயங்களில் திறமையாக செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

உயர்மட்ட பணிகள்

இத்துறையில், மேல்மட்ட நிலையில் பணிபுரியும் ஒருவர், மாறும் தேவைகள் மற்றும் காலகட்டத்திற்கு ஏற்ப, தேவைப்படும் மற்றும் கட்டமைப்பான மாற்றங்களை பரிந்துரை செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணியானது, எப்போதும் சுவாரஸ்யமாகவும், உங்களின் சிந்தனையை மேம்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். ஏனெனில், சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால், புத்தாக்க சிந்தனைகள் தேவைப்படுகின்றன.

பணி வாய்ப்புகள்

உற்பத்தி, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப சேவைகளில், பன்னாட்டு கம்பெனிகளின் பெருக்கம், அதன் விளைவாக, அத்துறைகளில், உள்நாட்டு நிறுவனங்களின் அதிகரிப்பு போன்றவை, எம்பிஏ - தொழில்நுட்ப மேலாண்மை படித்தவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன. இப்படிப்பை முடித்ததும், அரசுத்துறை, தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பரவலான பணிவாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன.

இப்படிப்பை முடித்த பல பட்டதாரிகள், கார்பரேட் உலகில், அனலிஸ்டுகள், ஆலோசகர்கள் அல்லது பார்பரேட் நிர்வாகிகள் மற்றும் மேனேஜர்கள் போன்ற பணி நிலைகளில் வாய்ப்புகளைப் பெற விரும்பும் நிலையில், அரசுத் துறையில், திட்டமிடல், கொள்கை பகுப்பாய்வு மற்றும் வடிவமைத்தல் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பணிவாய்ப்புகள் உள்ளன.

தொழில்நுட்ப மதிப்பாய்வு மற்றும் பரிமாற்ற பணிகள், IP நடவடிக்கைகளில், பேட்டன்ட் filing செய்தல், பேட்டன்ட் துறையை பராமரித்தல், ஆராய்ச்சி மற்றும் IP தொடர்பான நிறுவனங்களில் பணி ஆகிய பணி வாய்ப்புகளை தொழில்நுட்ப மேலாளர்கள் பெறுகிறார்கள். கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்கு இடையிலான உள்ளார்ந்த தொடர்புகளை, நன்கு புரிந்த நபர்கள், குறைவாகவே இருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில், எம்பிஏ - தொழில்நுட்ப மேலாண்மைப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் நாட்டில் குறைவாகவே இருந்தாலும், எதிர்காலத்தில் நிலைமை வெகுவாக மாறும் என்று கூறப்படுகிறது.

முன்னோக்கிய பார்வை

இன்றைய நிலையில், அதிகளவு பணிவாய்ப்புகள், நிதி சேவைகள், ஐடி, பொதுத்துறை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில், அதிகளவிலான பணி வாய்ப்புகள் இருக்கின்றன. இது, தொழில்நுட்ப மேலாண்மை படித்தவர்களுக்கு மிகவும் நல்ல செய்தி. தொழில்நுட்ப மேலாண்மைத் துறையில் எம்பிஏ படித்த ஒரு பட்டதாரி, அனைத்து வகையான தொழில்துறையிலும், முன்னுரிமை பெறுகிறார். அவருக்கான பணிவாய்ப்புகள் எங்கும் நிறைந்துள்ளது.

இத்துறை தொடர்பான படிப்புகள் மற்றும் அவற்றை வழங்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்

 1. MBA in Technology Management(part - time) - 36 months - DMS, Indian Institute of Technology, Delhi(60 seats)
 2. MBA in Technology Management(full - time) - 24 months - DMS(Indian Institute of Science, Bangalore (15-20 seats)
 3. MBA in Technology Management(full - time) - 24 months - Bangalore Institute of Management(Affiliated to Bangalore university)
 4. MBA with specialisation in TM(full - time) - 24 months - Centre for Entrepreneurship and Innovation, Central university of HP
 5. MBA with one specialisation in TM(full -time) - 24 months - DoMS, Indian Institute of Technology, Madras
 6. MBA with one specialisation in TM(full - time) - 24 months - VGSOM, Indian Institute of Technology, Kharagpur
 7. MBA Technology management(full - time) - 24 months - Faculty of TM, CEPT University, Ahmedabad

இத்துறை தொடர்பான படிப்புகள் மற்றும் அதை வழங்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்

 1. Technology Management MBA(work compatible) - 18 months - Michael G Foster school of business, University of Washington, USA
 2. ENPC MBA in Technology & Entrepreneurship - 10 months - The ENPC school of international management, Paris, France
 3. Global MBA(specialisation - innovation & TM) - 15 months - London School of Business & Finance, UK
 4. Management of innovation and technology(MIT) - 12 months - ESMT European school of management and technology, Berlin, Germany
 5. MBA full - time (Technology & innovation) - 21 months - Jenkins Graduate school of management, NC state university, USA
 6. MBA in technology management - 22 months - SJTU Antai college of management, Shanghai, China.

ஆதாரம் : தினமலர்

2.92307692308
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top