பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / விளையாட்டு பொறியியல் படிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விளையாட்டு பொறியியல் படிப்பு

விளையாட்டு பொறியியல் படிப்பின் அம்சங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

விளையாட்டு உபகரணங்கள் தொடர்பான வடிவமைப்பு, சோதனைகள் மற்றும் மேம்பாடு ஆகியவைத் தொடர்பான தொழில்துறைதான் ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் எனப்படும் விளையாட்டுப் பொறியியல். விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படும் விளையாட்டு உபகரணங்கள், அப்போதைய அறிவு மற்றும் புரிந்துணர்வுக்கேற்ப, எப்போதுமே, தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு உட்படும்.

விளையாட்டுப் பொறியியல் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் சர்வதேச விளையாட்டுப் பொறியியல் சங்கம் ஆகியவை, ஷெபீல்டு பல்கலையில் ஏற்படுத்தப்பட்ட பிறகுதான், ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் அலுவல் ரீதியாக மாறியது. அதுமுதற்கொண்டு, இத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து, பல்கலைகள், விளையாட்டு நிறுவனங்கள், விதிமுறைகளை வகுக்கும் அமைப்புகள் ஆகியவற்றில் பிரபலமடைந்தது.

விளையாட்டுப் பொறியாளர்கள், பின்வரும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவை,

உபகரண வடிவமைப்பு - விளையாட்டு வீரர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப, புதிய உபகரணங்களை, கட்டமைப்பது மற்றும் வடிவமைப்பது.

ஆய்வக செயல்முறைகள் மற்றும் சோதனை - ஒரு உபகரண பண்புகள், ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களுக்கிடையிலான தொடர்புகளை அளவிடுதல்.

  • கம்ப்யூடேஷனல் மாடலிங் - விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் உபகரணங்கள் மீது செயல்படும் ஆற்றல்களை உருவாக்குதல் அல்லது உபகரணத்தை சுற்றி காற்றுப்போக்கினை உருவாக்குதல்
  • கள சோதனை - போட்டி சூழலில், விளையாட்டு உபகரணத்தின் பண்பை பதிவுசெய்தல்.
  • நிர்வாக அமைப்புகளுடன் பணிபுரிதல் - விதிமுறைகளை மாற்றுவதின் விளைவுகளை மதிப்பிடல் அல்லது காயமேற்படும் வாய்ப்புகளை புரிந்துகொள்ளுதல்
  • விளையாட்டு வீரர்களுடன் பணிபுரிதல் - தங்களின் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில், விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து இயங்குதல்.

விளையாட்டுப் பொறியாளர்கள், விளையாட்டுடன் தொடர்புடைய பல்வேறான பின்னணிகளில் இருந்து வருகிறார்கள். இதில், அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகள் அடங்கும். வரலாற்று ரீதியாக, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் என்ற படிப்பை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களில் பலர், அத்துறையில் பிஎச்.டி., படிப்பை நோக்கி செல்கிறார்கள். மேலும், விளையாட்டுத் துறையானது நாளுக்கு நாள் நவீனமாகி வருவதால், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களும் இத்துறையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் படிப்பை, உலகளவில் பல கல்வி நிறுவனங்களை வழங்கி வருகின்றன. அவற்றுள் முக்கியமானது பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகம். இப்பல்கலையில், விளையாட்டு பொறியியல் தொடர்பாக,

* B.Sc (Hons.) Sport technology - 4 years, full time (including 1 yr work placement) or 3 yr degree programme.

* M.Sc., Sports Engineering - 12 months, full time

* M.Sc., / PG Dip / PG Cert. sports and exercies science - 12 months, full time

* M.Sc., / PG Dip / PG Cert sports business management - 12 months, full time

போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியா

இந்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த 2008ம் ஆண்டில், ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் டிகிரி படிப்பானது, அடிலெய்டு பல்கலையில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, 2009ம் ஆண்டில், கிரிபித்(Griffith) பல்கலையில், க்வின்ஸ்லாந்து ஸ்போர்ட்ஸ் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து, எலக்ட்ரானிக்ஸ் அடிப்படையிலான விளையாட்டுப் பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.

அடுத்ததாக, 2011ம் ஆண்டில், விக்டோரியா பல்கலையானது, எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் அடிப்படையிலான ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் படிப்பை தொடங்கியது. இளநிலை இன்ஜினியரிங் பொறியியல் என்ற புதிய படிப்பின் ஒரு பகுதிதான் இது.

அமெரிக்கா

தெற்கு மிசிசிபி பல்கலைக்கழகம், கடந்த 2006ம் ஆண்டில், ஸ்போர்ட்ஸ் மற்றும் உயர் செயல்பாட்டு மெட்டீரியல்கள் பட்டப்படிப்பை தொடங்கியது. மனித செயல்பாடுகளுடன், மெட்டீரியல் அறிவியலை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இப்படிப்பு துவக்கப்பட்டது.

இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை, விளையாட்டுத் துறை தொடர்பாக, விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு பிசியோதெரபி மற்றும் விளையாட்டு உளவியல் உள்ளிட்ட பல்வேறான படிப்புகள் பல நிலைகளில் வழங்கப்பட்டாலும், விளையாட்டுப் பொறியியல் என்ற படிப்பானது, அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு

2.8
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top