பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / ஹிந்து தர்ம ஞானம் படிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஹிந்து தர்ம ஞானம் படிப்பு

ஹிந்து தர்ம ஞானம் - அஞ்சல் வழியில் சான்றிதழ் படிப்பு

ஹிந்து தர்ம ஞானம் என்னும் ஓராண்டு சான்றிதழ் படிப்பை அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பிக்கலாம்.

பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் இயங்கும் தர்ம ரக்ஷண சமிதியின் ஓர் அங்க பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம் சார்பில் இப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது.

பாரதீய தத்துவம், பாரதீய காலக் கணிதம், ஆலயங்களின் அற்புதம், மந்திரங்களின் மகத்துவம், கடவுளின் திருவுருவங்கள், புண்ணிய ஸ்தலங்கள், அருளாளர்களின் வாழ்வும், வாக்கும், தத்துவ நுணுக்கம், தர்ம சாஸ்திர விளக்கம், போகம் என்றால் என்ன, தியானம் செய்வது எப்படி பூஜை செய்யும் முறை, பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி, பிரார்த்தனையின் அவசியம், காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை உள்ள கடமைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் வேண்டுவோர்  87544-23524 என்ற செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம், சுத்தானந்த ஆஸ்ரமம், 38, கிரிவலப் பாதை, அடி அண்ணாமலை, திருவண்ணாமலை-606604 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொலைபேசி எண்கள்: 04175-232153, 233830.

ஆதாரம்: தினமணி

3.10144927536
TASNA Dec 10, 2015 10:42 AM

பாரதீய அறநெறிப் பண்பாட்டுக் கல்வி மையம், சுத்தானந்த ஆஸ்ரமம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலேசனை பெறவும்.
தொலைபேசி எண்கள் : 04175-232153, 233830.

ஏகா. சண்முகம் Dec 10, 2015 08:44 AM

ஹிந்து தர்ம படிப்புக்கான தொலைத்தொடர்பு வாய்ப்புக்கள் உள்ளனவா?
தயவு செய்து தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் விழைகிறேன்.
நன்றி

MUTHURAJA N Oct 31, 2015 06:33 PM

நல்ல படிப்பு வாழ்க வளமுடன் ....

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top