অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

புவியியல் தகவல் தொகுதி - GIS

புவியியல் தகவல் தொகுதி - GIS

முன்னுரை

GIS இன் வளர்ச்சியினை அவதானிக்கின்றபோது 1960 களின் முற்பகுதியில் அணுஆயுத ஆராய்ச்சி உத்வேகம் பெற்றதனால் ஏற்பட்ட கணனி வன்பொருள் வளர்ச்சிகள் படவரைகலையியலின் வளர்ச்சிக்கு வித்திட்டது. 1960 ஆம் அண்டில் கனடாவின் காடு மற்றும் கிராம அபிவிருத்தி தினைக்களமானது உலகில் முதன்முதலாக GIS நுட்பத்தை செயற்படுத்தி காட்டியது.

இந்த GIS நுட்பமானது கனடா புவியியல் தொகுதி (CANADA GEOGRAPHIC INFORMATION SYSTEM - CGIS) என அழைக்கப்பட்டதுடன், இதனை கலாநிதி. றொகர் தொம்லின்சன் (DR. ROGER TOMLINSON) என்பவரால் உருவாக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டில் கவாட் ரி. பிசர் (HOWARD T. FISHER) என்பவர் கணனி வரைகலை மற்றும் இடம்சார்ந்த பகுப்பாய்வுகளுக்குமான ஆய்வுகூடமொன்றை உருவாக்கினார்.

1977 இல் மேற்கத்தேய சக்தி மற்றும் நிலப்பயன்பாட்டு குழுவினதும் அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை அமைப்பினதும் மேற்பார்வையில் போர்ட் கொலின்ஸ் (FORT COLLINS) எனுமிடத்தில் வரைபட மேற்பரப்பு மற்றும் புள்ளியில் தொகுதி  (THE MAP OVERLAY AND STATISTICAL SYSTEM - MOSS)  செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1981 களில் அமெரிக்காவின்  ESRI  என்னும் நிறுவனம் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தக்கூடியளவுக்கு GIS  மென்பொருட்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

1982 இல் ஐக்கிய அமெரிக்காவின் பொறியியல் ஆராய்சி ஆய்வுகூட இராணுவத்துறையானது நிலமுகாமைத்துவம் மற்றும் சூழல் திட்டமிடல் என்பவற்றுக்காக GRASS GIS எனும் மென்பொருளை தயாரித்தது.

1987 இல் முதன்முதலாக ESRI நிறுவனமானது ARC INFO எனும் மென்பொருளினை வெளியிட்டது. 1990 களின் பின்னர் பல மென்பொருட்கள் GIS நுட்பத்திற்காக வெளிவந்ததுடன், GIS இன் வளர்ச்சியும் உலகில் பரவத்தொடங்கியது. 1999 இல் ESRI நிறுவனமானது முதன்முதலாக GIS தினத்தை தேசிய புவியில் சமூகம் எனும் அமைப்புடன் இணைந்து நடத்தியது. GIS தினமானது வருடத்தில் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் கொண்டாடப்படுகின்றது.

GIS இன் கூறுகள்

புவியியல் தகவல் முறைமை என்பது கணனியின் உதவியுடன் இடம்சார்ந்த தரவுகளைக் கையாளுகின்ற ஒரு முறைமையாகும். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கூறுகளின் இணைப்பு மற்றும் இடைத் தொடர்பினால் உருவானவையே தொகுதி அல்லது முறைமை எனப்படுகின்றது.

அந்தவகையில் புவியியல் தகவல் முறைமையானது வன்பொருள் (HARDWARE), மென்பொருள் (SOFTWARE), தரவு (DATA), பயனாளர் (USER), முறை (METHOD) ஆகிய ஐந்து கூறுகளின் இடைத்தொடர்பினால் உருவாகியதாகும்.

வன்பொருள் (HARDWARE)

வன்பொருட்களாக கணனி மற்றும் உள்ளீட்டுச் சாதனங்கள், வெளியீட்டுச் சாதனங்கள், தரவுசேகரிப்பு சாதனங்கள் என்பனவும் பிரதானமாக அடங்குகின்றன.

INPUT DEVICE – KEYBOARD,  MOUSE,  DIGITIZER, SCANNER,   DIGITAL TAPE READEROUTPUT DEVICE – PRINTER, PLOTTER,  DIGITAL DATA STORAGE DEVICE – HARD DISK,  EXTERNAL HARD DISK,  DVD, CD, WEB SERVER

மென்பொருள் (SOFTWARE)

GIS  நுட்பத்தில் பல மென்பொருட்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றபோதிலும், ESRI  எனும் நிறுவனமே GIS  மென்பொருள் உற்பத்தியில்  முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது.  இவை தவிர வேறு பல மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களினது மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ESRI PRODUCTS – ARC GIS,  ARC VIEW,  ARC INFO, ARC DESKTOP,  ARC MAP

OTHERS –GLOBAL MAPPER , ERDAS,  UDIG GIS, , MAP WINDOW GIS, SAGA GIS, QGIS

மக்கள் அல்லது பயனாளர்கள் (PEOPLE OR USER)

தொழிநுட்ப நிபுணர்களிலிருந்து தமது அன்றாட தேவைகளுக்காக புவியியல் தகவல் முறைமையைப் பயன்படுத்துகின்றவர்கள் வரை பயனாளர்களாக இருக்கின்றனர்.  இன்றைய தொழில் சந்தையில் GIS  பயனாளர்கள் பலவித நன்மைகளைப் பெற்று வருவதனால் கல்வித்துறையில் மாணவர்களுக்கு இவற்றினுடைய அடிப்படை இன்று போதிக்கப்பட்டு வருகின்றது.

முறை (METHOD)

ஒரு வெற்றிகரமான புவியியல் தகவல் தொகுதி ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தினதும் நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டம் மற்றும் வியாபார விதிகளின் அடிப்படையில் செயற்படுகின்றது.  புவியியல் தகவல் தொகுதியில் தரவு உள்ளீடு, முகாமைத்துவம், பகுப்பாய்வு, காட்சிப்படுத்தல் ஆகியவற்றிக்கான முறைகள் காணப்படுகின்றன.

தரவு (DATA)

புவியியல் தகவல் தொகுதியின் முக்கிய கூறாக தரவு விளங்குகின்றது. புவியியல் தகவல் முறைமையைப் பொறுத்தவரையில் பிரதானமாக இடம் சார்ந்த தரவுகளும் (SPATIAL DATA),  பண்பு சார்ந்த தரவுகளும் (ATTRIBUTE DATA) பயன்படுத்தப்படுகின்றன.

இடம் சார்ந்த தரவுகள் எனும்போது தேசப்படங்கள் மற்றும் செய்மதி விம்பங்களுடன் சம்பந்தப்பட்ட தரவுகளைக் குறிக்கும். இடம் சார்ந்த தரவுகளும் மேலும் பிரதானமாக (VECTOR DATA),  நெய்யரித்தரவுகள் (RASTER DATA) என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

புள்ளிகள், கோடுகள், மூடியஉருக்கள் மூலம் காணப்படும் படைகள் காவித்தரவுகள் எனப்படும்.  செய்மதி விம்பங்கள், தரைத்தோற்ற வரைபடங்கள் என்பவற்றிலிருந்து SCAN செய்யப்பட்ட வரைபடங்களை நெய்யரித் தரவுகள் எனப்படும்.

பண்பு சார்ந்த தரவுகள் எனும்போது இடங்களுடன் தொடர்புடைய ஏணைய தகவல்கள் இதில் அடங்கும். குறிப்பாக சனத்தொகை தரவுகள், பிரதேச வெப்பநிலை. மழைவீழ்ச்சி போன்ற விடயங்களைக் குறிக்கும்.

புவியியல் தகவல் தொகுதியின் தரவு மூலங்கள் (DATA SOURCE OF GIS)

 • செய்மதிப்படங்கள் ; (SATELLITE IMAGES)
 • விமான ஒளிப்படங்கள் (AERIAL PHOTOGRAPHS)
 • நிலவளவை தேசப்படங்கள் (SURVEYED MAPS)
 • ஜிபிஎஸ் தரவுகள் (GPS DATAS)
 • எண்ணியல் உயர மாதிரிகள் – ( DEMS - DIGITAL ELEVATION MODELS )
 • சனத்தொகை  (DEMOGRAPHIC DATAS)
 • பெயரிடப்பட்ட வீதிப் பிரிவுகள் (ADDRESSED STREET SEGMENTS)

GIS இனுடைய செயற்பாடுகள்

புவியுடன் தொடர்புடைய தேசப்படங்களை வரைவதற்கான ஒரு முறைமையாகக் காணப்படுகின்றன.  புவியியல் தகவல் முறைமையானது, படம் வரைதல் மற்றும் அதனுடன்   தொடர்புடைய செயற்பாடுகளாக (Main Task of GIS) பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது. பொதுவாக தேசப்படம் ஒன்றுக்கான தரவு சேகரிப்பிலிருந்து கணினினைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தல் வரையிலான படிமுறைகளை இது குறித்து நிற்கின்றது.

 • தரவு உட்செலுத்துதல்  (Input of data)
 • வரைபடம் தயாரித்தல் (Map making)
 • தரவுகளைக் கையாழுதல் (Manipulation of data)
 • கோப்பு முகாமைத்துவம் (File management)
 • கேள்வி மற்றும் பகுப்பாய்வு (Query and analysis)
 • பெறுபேற்றினை காட்சிப்படுத்தல்(Visualization of results)

தரவு உட்செலுத்துதல் (Input of data)

GIS இல் தரவுகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அத்தரவுகள் பொருத்தமான டிஜிட்டல் வடிவமாக (Digital Format) மாற்றப்படவேண்டும்.

தாள் வரைபடம் (Sheet Map) அல்லது தொலையுணர்வு படம் (RS map) ஒன்றை கணனிக்குள் மாற்றப்படுகின்ற செயற்பாடு டிஜிடைசிங் (Digitizing) என அழைக்கப்படுகின்றது.

நவீன GIS தொழிநுட்பமானது பெரிய செயற்றிட்டத்திற்காக Digitizing செயற்பாட்டை தானியக்கமுறையில்  செய்கின்றது.

சிறிய வேலைகளுக்கு Digitizing Table ஐ பயன்படுத்துகின்றபோது சில கைகளால் செய்யப்படுகின்ற (Manual) செயற்பாடுகள் தேவைப்படுகின்றன.

இன்று பல வகையான புவியியல் தரவுகள் ஏற்கனவே GIS இற்கு பொருந்தக் கூடியவாறான வடிவத்தில் உள்ளன. இந்த தரவுகள் GIS இற்குள் நேரடியாக உட்செலுத்தப்பட முடியும்.

வரைபடம் தயாரித்தல் (Map making)

GIS இல் வரைபடங்கள் முக்கிய இடத்தை கொண்டுள்ளன. பாராம்பரியமாக கைகளால் செய்யப்படுகின்ற (Manual) மற்றும் தானியங்கி படவரைகலையியல் அணுகுமுறைகளைவிட GIS இல் வரைபடங்களை உருவாக்கும் செயற்பாடானது மிக இலகுவானதாக உள்ளது.

இது தரவுத்தள உருவாக்கத்துடன் செயற்படத் தொடங்குகின்றது. வரைபட தாளில் உள்ளவற்றை டிஜிடைஸ் செய்யப்படுவதுடன், கணினிக்கு பொருத்தமான தகவல்களாக மாற்றப்பட்டு GIS இற்குள் சேர்க்கப்படுகின்றது.

GIS அடிப்படையிலான படவரைகலை தரவுத்தளமானது தொடர்ச்சியானதாகவும், அளவுத்திட்ட எல்லையற்றதாகவும் இருக்கின்றது.

குறிப்பிட்ட விசேடமான பண்புகளை மையப்படுத்தி எந்த அமைவிடத்தையும்,  அளவுத்திட்டத்திலும் மற்றும் தெரிவுசெய்ப்பட்ட தகவல்களையும் சிறப்பாக வெளிப்படுத்துவதாக படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

வரைபட இறுதி உற்பத்தி வேளையின்போது அற்லஸ் மற்றும் வரைபடத் தொடர்கள் கணினியினுள் மாற்றப்பட்டு கணினி தரவுத்தளத்துடன் ஒப்பீடு செய்யப்படும்.

GIS இல் ஏணைய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான டிஜிடல் உற்பத்திகளை  தரவுத்தளத்திலிருந்து சாதாரணமாக பிரதி செய்து கொள்ளலாம்.

ஒரு பெரிய நிறுவனத்தில், இடவிளக்கவியல் தரவுத்தளங்கள்; குறிப்பு கட்டமைப்புகளில் பிற தினைக்களங்களால் பயன்படுத்தப்படலாம்.

தரவுகளைக் கையாழுதல் (Manipulation of data)

 • GIS இல் ஒரு குறிப்பிட்ட செயற்றிட்டத்திற்காக சில வகைத் தரவுகள் தேவைப்படுகின்றபோது, கணினித் தொகுதிக்குப் பொருத்தமானதாக அதனை மாற்றவேண்டும்.
 • உதாரணமாக புவியியல் தரவுகள் பல்வேறு அளவுத்திட்டத்தில் இருக்கின்றபோது அவற்றை ஒருங்கிணைப்பதற்கு முதல் அவை ஒரே அளவுத்திட்டத்தில் மாற்றவேண்டும்.
 • அளவுத்திட்டத்தை ஒரே அளவில் மாற்றுதலானது காட்சிப்படுத்தும் நோக்கத்திற்காக தற்காலிகமாகவோ அல்லது ஒரு தேவைப்படுகின்ற பகுப்பாய்வக்காக நிரந்தரமான மாற்றமாகவோ இருக்கும்.
 • GIS தொழிநுட்பமானது இடம்சார்ந்த தரவுகளை கையாள்வதற்கும், தேவையற்ற தரவுகளை களைவதற்கும் பல கருவிகளை வழங்குகின்றது.

கோப்பு முகாமைத்துவம் (File management)

 • சிறிய GIS செயற்றிட்டத்திற்காக சாதாரண கோப்புகளாக புவியில் தகவல்களை சேமிப்பதற்கு  போதுமானதாக இருக்கின்றது.
 • தரவு தொகுதிகள் அதிகமாக உருவாகும்போதும், தரவு பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றபோதும் தரவுத்தள முகாமைத்துவ தொகுதியானது (Database management System – DBMS)  தரவுகளை சேமிப்பதற்கும், ஒழுங்கபடுத்துவதற்கும், முகாமைத்துவம் செய்வதற்கும் உதவி புரிகின்றது.
 • பல்வேறுபட்ட DBMS's  உடைய வடிவங்கள் காணப்பட்ட போதிலும், GIS உடன் தொடர்புபட்ட வடிவமைப்புக்கள் மிகப் பயனுடையதாகக் காணப்படுகின்றது.

கேள்வி மற்றும் பகுப்பாய்வு (Query and analysis)

 • GIS இல் புவி சார்ந்த கேள்விகளை இலகுவாக கேட்க முடியும். உதாரணமாக, இரண்டு இடங்களுக்கிடையிலான தூரம் எவ்வளவு?, குறிப்பிட்ட பகுதியில் மிக்க சனத்தொகை அடர்த்தி கொண்ட பகுதி எது? போன்றதான வினாக்களை வினாவ முடியும்.
 • GIS இல் வடிவம், போக்கு போன்ற பல்வேறு விதமான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • நவீன GIS பல திறமைவாய்ந்த பகுப்பாய்வுக்கான கருவிகளைக் கொண்டு காணப்படுகின்றது. ஆனால் இவற்றில் குறிப்பாக இரண்டு கருவிகள் முக்கியம் பெறுகின்றன.
 • அண்மை பகுப்பாய்வு (Proximity Analysis) – அம்சங்களுக்கிடையிலான அண்மைய தொடர்பினை ஆய்வு செய்வதனால், இடம்சார்ந்த  தொடர்புடைமையைக் கண்டறிவதற்கு அண்மை பகுப்பாய்வு பயன்படுகின்றது.
 • மேற்பரப்பு பகுப்பாய்வு (Surface Analysis) – அம்சங்களுக்கிடையிலான வடிவமைப்பு மற்றும் தொடர்பினை பார்ப்பதற்காக வேறுபட்ட படைகளை ஒன்றிணைப்பதாக மேற்பரப்பு பகுப்பாய்வு அமைகின்றது.

பெறுபேற்றினை காட்சிப்படுத்தல் (Visualization of results)

 • பலவகையான புவி சார்ந்த நடவடிக்கைகளுக்காக  இடவிளக்கவியல் படங்களாகவோ (Map) அல்லது வரைபுகளாகவோ (Graph) சிறந்த காட்சிப்படுத்தலினுடைய இறுதி முடிவாக இருக்கின்றது.
 • புவிசார்ந்த தகவல்களினுடைய தொடர்பு மற்றும் சேமித்தலில் இடவிளக்கவியல் படங்கள் மிகவும் திருப்திகரமானதாக இருக்கின்றன.
 • வரைபடவியலாளர்கள் நூற்றாண்டுகளாக வரைபடங்களை உருவாக்கிய போதும், படவரைகலையியலினுடைய கலை மற்றும் அறிவியல் என்பவற்றை விரிவாக்குவதற்கு புதிய பொலிவுமிக்க கருவிகளை GIS தொழிநுட்பம் வழங்குகிறது.
 • அறிக்கைகள், முப்பரிமாண காட்சிகள், புகைப்பட படங்கள், மற்றும் மல்டிமீடியா என்பவற்றோடு வரைபடக் காட்சிகள் ஒன்றிணைக்கப்படுகின்றன.

புவியியல் தகவல் முறைமையின் பிரயோகங்கள் (APPLICATION OF GIS)

 • படவரைகலையியல் (Cartography)
 • புவியின் மேற்பரப்பு சார்ந்த அறிவியல் ஆய்வுகள் (Earth surface-based scientific investigations)
 • சூழல் தாக்க மதிப்பீடு (Earth surface-based scientific investigations)
 • சூழல் முகாமைத்துவம் (Environmental management)
 • வள முகாமைத்துவம் (Resource management)
 • இயற்கை அனர்த்த முகாமைத்துவம்(Natural Disaster management)
 • புள்ளிவிபர பகுப்பாய்வு (Statistical analysis)
 • சொத்து முகாமைத்துவம் மற்றும் அமைவிட திட்டமிடல் (Asset management and location planning)
 • மக்கள் மற்றும் மக்கள் தொகை ஆய்வுகள் (population and demographic studies
 • நிலப்பரப்பு புலனாய்வு (Geospatial intelligence)
 • GIS தரவு விருத்தி (GIS data development)
 • உட்கட்டமைப்பு மதிப்பீடு மற்றும் அபிவிருத்தி (Infrastructure assessment and development)
 • நகர திட்டமிடல் (Infrastructure assessment and development)
 • இராணுவத் திட்டமிடல் (Military planning)
 • குற்றவியல் (Criminology)
 • புவியியல் வரலாறு (Geographic history)
 • தொல்லியல் (Archaeology)
 • சந்தைப்படுத்தல் (Marketing)
 • பொருட்பரிமாற்றம் (Logistics)
 • பொது சுகாதார திட்டமிடல் (Public health planning)
 • எதிர்கால நோக்கு வரைபடங்கள் (Prospectivity mapping)
 • நோய் கண்காணிப்பு (Disease surveillance)
 • தொலைபேசி வலையமைப்புக்கள் (Telephone Network)

ஆதாரம் : National Institute Remote Sensing (NIRS)© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate