பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரி வினா-விடை – 39

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 1. தாவரவியல் என்பது தாவர வாழ்க்கையைப் பற்றி கூறும் அறிவியலாகும்.
 2. தாவரங்களின் அமைப்பு, உருவம், வாழ்க்கை, உணவு முறை, வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவை இதனுள் அடங்குகின்றன.
 3. பல்லுயிர் தன்மை மற்றும் தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களை வகைப்படுத்தும் எண்ணத்தை முதன் முதலில் ஏற்படுத்தியவர் அரிஸ்டாட்டில் ஆவார்.
 4. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி இந்த பூமியில் 10 முதல் 40 மில்லியனுக்கு மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் 1.7 மில்லியன் உயிரினங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 7,50,000 பூச்சிகளும், 2,50,000 பூக்கும் தாவரங்களும், 47,000 முதுகெலும்பு பிராணிகளும் அடங்கும்.
 5. பல்வேறு உயிரினங்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளை பல்லுயிர்த்தன்மை (Bio-diversity) என்கிறோம்.
 6. உயினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பாட்டியல் (Taxonomy) எனப்படும்.
 7. Systematics என்ற இந்த சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் -நூல் Systema Naturae.
 8. ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட இந்திய மருத்துவர் சாரக்(சரகர்) சில தாவரங்களையும், விலங்குகளையும் இனம் கண்டறிந்து விவரித்தார்.
 9. மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த சில உயிரினங்களைப் பட்டியலிட்டவர் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ஹிப்போகிரேட்டஸ் ஆவார்.
 10. ப்ளைனி தி எல்டர் (Pliny the Elder) என்பவர் தன்னுடைய ஹிஸ்டாரியா நாச்சுராலிஸ் (Historia Naturalys) என்ற நூலில் முதன் முறையாக செயற்கை வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார்.
 11. சிற்றினம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜான் ரே.
 12. இரு சொல் பெயரிடும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி கரோலஸ் லின்னேயஸ்.
 13. வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கரோலஸ் லின்னேயஸ்.
 14. அகஸ்டின் பரமாஸேடே கண்டோல் என்ற சுவிட்சர்லாந்து பிரெஞ்சு தாவரவியல் நிபுணர் வகைப்பாட்டியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
 15. கரோலஸ் லின்னேயஸ் எழுதிய ஸ்பீசிஸ் பிளேண்ட்டேரம் என்ற நூலில் 5900 தாவர சிற்றினங்களையும், சிஸ்டமே நேச்சுரே என்ற நூலில் 4200 விலங்கு சிற்றினங்களையும் விவரித்துள்ளார்.
 16. வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் (Species)  ஆகும்.
 17. ஒரு வகைப்பாட்டில் காணப்படும் 7 முக்கிய குடும்பங்களாவன: 1. உலகம் அல்லது பேரரசு 2. ஃபைலம் அல்லது பிரிவு 3. வகுப்பு 4. துறை 5. குடும்பம் 6. பேரினம் 7. சிற்றினம் ஆகியன.
 18. ஒரு குழுமத்தின் பரிணாம வரலாறு ஃபைலோஜெனி எனப்படும்.
 19. இரண்டுலக வகைப்பாட்டு முறையை அறிமுகப் படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார். 1. தாவர உலகம் 2. விலங்குலகம் ஆகியன.
 20. ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் ஆர்.எச்.விட்டேக்கர்.
 21. விட்டேக்கரின் ஐந்து உலகங்களாவன 1.மொனிரா 2. புரோட்டிஸ்டா 3. பூஞ்சைகள் 4. தாவரங்கள் 5. விலங்குகள் ஆகியன.
 22. மொனிரா (Monera) என்பதில் அனைத்து புரோகேரியாட் உயிரினங்களும் அடங்கும். மேம்பாடு அடையாத உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்களே புரோகேரியாட் ஆகும்.
 23. புரோட்டீஸ்டுகள் (Protists) உலகத்தில் ஒரு செல்லால் ஆன நீர் வாழ் யூகேரியாட்டுகள் அடங்கும். மேம்பாடு அடைந்த உட்கரு சவ்வினால் சூழப்பட்ட உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் யூகேரியாட் ஆகும்.
 24. பூஞ்சைகள் (Fungi) உலகத்தில் மோல்டுகள், மஷ்ரூம்கள், நாய்க்குடைகள், நிலக்குடைகள், பஃப் பந்துகள் ஆகியவை அடங்கும்.
 25. தாவர உலகத்தில் மிகப்பெரிய பிரிவுகளான ஆல்காக்கள், பிரையோ ஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் ஆகியவை அடங்கும்.
 26. பல செல்களாலான யூகேரி்யாட் உயிரினங்கள் விலங்குலகத்தில் அடங்கும்.
 27. 1990-ஆம் ஆண்டு இவோஸ், ஒகாண்ட்லர் மற்றும் எம்வீலிஸ் என்ற மூலக்கூறு அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்தனர் அவை: 1. யூகேரியா 2. பாக்டீரியங்கள் 3. ஆர்க்கியா
 28. ஆர்க்கியா என்பது அதிக கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர் வாழும் பாக்டீரியங்கள் ஆக்சிஜனற்ற நிலை, 80 டிகிரி செல்சியஸ் போன்ற மிக அதிக வெப்பநிலை, அதிக உப்புச் செறிவு, அமிலத்தன்மை வாய்ந்த மண் மோன்றவற்றில் இவ்வகை பாக்டீரியங்கள் உயிர் வாழ்கின்றன.
 29. தாவரங்களைப் பற்றிப் படிப்பது ஃப்ளோரா (தாவரவியல்) எனப்படும். தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தியோபிராஸ்டல் ஆவார்.
 30. தாவர உலகத்தைப் பொதுவாக இரண்டாகப் பிரிப்பர். அவை: 1. பூவாத் தாவரம் (ஃபெனரோகேம்ஸ்) 2. பூக்கும் தாவரம் (கிரிப்டோகேம்ஸ்)
 31. பூவாத் தாவரத்தை 1. தாலோபைட்டா (பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா) 2. பிரையோபைட்டா (ரிக்சியா, மார்கன்ஷியா 3. டெரிடோ பைட்டா (பெரணி வகைகள்) என மூன்றாகப் பிரிக்கலாம்.
 32. பூக்கும் தாவரத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் அவை: 1. ஜிம்னோஸ்பெர்ம் (சைகஸ், பைனஸ்) 2. ஆஞ்சியோஸ் பெர்ம்
 33. ஆஞ்சியோஸ்பெர்ம் பிரிவை 1. ஒருவித்திலைத் தாவரம் 2. இரு வித்திலைத் தாவரம் என்று மேலும் பகுக்கலாம்
 34. வைரஸ்கள்
 35. உயிருள்ளவற்றின் பண்புகளையும், உயிரற்றவற்றின் பண்புகளையும் பெற்றுள்ளவை வைரஸ்கள் ஆகும்.
 36. மிக நுண்ணிய எலக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய, நோயை உருவாக்கும், செல்லுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று வைரஸ் வரையறுக்கப்படுகிறது.
 37. வைரசை முதன்முதலில் கண்டறிந்தவர் ரஷ்ய அறிவியலறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி ஆவார்.
 38. புகையிலையில் பல்வண்ண இலை நோயினால் தாக்கப்பட்ட இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை நிரூபித்துக் காட்டியவர் மேயர் ஆவார்.
 39. விரியான் (Virion) என்பது விஷம் என்று பொருள்படும்.
 40. வைரஸ்களைப் படிக வடிவில் பிரித்தெடுத்தவர் W.M .ஸ்டான்லி ஆவார்.
 41. வைரஸ்களின் உயிர் பண்புகளில் ஒம்புயிர் தாவர செல் அல்லது விலங்கு செல்லினுள் மட்டுமே பெருக்கம் அடையும்.
 42. நோயை உருவாக்கும் திறன் வைரஸ்களின் உயிருள்ள தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
 43. வைரஸ் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை உடையவை. வைரஸ் சாதாரண செல் அமைப்பைக் கொண்டிருப்பதில்லை.
 44. வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான அமைப்பை வைரஸ் பெற்றிருப்பதில்லை.
 45. கனசதுர வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு அடினோ வைரஸ்கள், எச்.ஐ.வி.ஆகியன.
 46. சுருள் வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு புகையிலை மொசைக் வைரஸ், இன்புளுயென்சா வைரஸ் ஆகியன.
 47. சிக்கலான அல்லது அசாதாரண வடிவமுடைய வைரசுக்கு எடுத்துக்காட்டு பாக்டீரியோஃபேஜ், பாக்ஸ் வைரஸ் ஆகியன.
 48. வைரஸ்களின் இரு முக்கிய பாகங்கள் 1. கேப்சிட் என்னும் புரத உறை 2. நியூக்ளிக் அமிலம் ஆகியன. டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நியூக்ளிக் அமிலங்களில் ஏதேனும் ஒன்று மட்டுமே வைரசில் காணப்படும்.
 49. கேப்சிட் எனப்படும் புரத உறை கேப்சோமியர்கள் எனப்படும் ஒரே மாதிரியான சிறிய அலகுகளால் ஆனவை.
 50. வைரசின் தொற்றுத் தன்மைக்கு காரணம் நியூக்ளிக் அமிலம். ஒம்புயிர் திட்டவட்டத் தன்மைக்கு வைரசின் புரத உறை காரணமாகிறது.
 51. ஒம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத தொற்றுத் தன்மை வாய்ந்த ஒரு முழுமையான வைரசிற்கு வீரியான் (Virion) என்று பெயர்.
 52. புரத உறையற்ற வட்ட வடிவமான ஒரிலை ஆர்.என்.ஏ.வே வீராய்டுகள் (Viriods)  என்று அழைக்கப்படுகிறது.
 53. பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல புரதத் துகள்களாகும்.
 54. வீராய்டுகளால் உருவாகும் நோய் சிட்ரஸ் எக்சோ கார்ட்டிஸ் ஆகும்.
 55. ஃபிரியான்களால் உருவாகும் நோய் க்ருயிட்ஸ்ஃபெல்ட் ஜேகப் நோய், ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி ஆகியன.

ஆதாரம் : மனிதநேயா அறக்கட்டளை, சென்னை

2.97058823529
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top