பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாதிரி வினா-விடை - 37

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்
 2. 'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்
 3. கம்பர் தாம் இயற்றிய காப்பியத்திற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
 4. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்
 5. கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர் - வரத நஞ்சையப் பிள்ளை
 6. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு
 7. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் - பதினொன்று
 8. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு
 9. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65
 10. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்
 11. பரிபாடல் என்னும் நூல் - அக, புறப் பொருள் பாடல்களைக் கொண்டது.
 12. அகநானூறு மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 180
 13. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை - 13 முதல் 31 அடி வரை
 14. நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
 15. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை - 9 - 12 அடி வரை
 16. கபிலரை "வாய்மொழிக் கபிலர்" எனப் போற்றியவர் - நக்கீரர்
 17. குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்
 18. குறட்பா என்பது - ஈரடி வெண்பா
 19. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38
 20. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9
 21. கொண்டாடப்பெறும் திருவள்ளுவர் ஆண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.13
 22. பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஒழிபியல்
 23. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை
 24. வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்
 25. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று
 26. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை
 27. சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்
 28. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
 29. தேனிலே ஊறிய செந்தமிழின் ... தேறும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 30. வரி என்பது எந்த வகையைச் சார்ந்தது - இசைப்பாடல்
 31. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு - 96
 32. உத்தர காண்டத்தைப் பாடியவர் - ஓட்டக்கூத்தர்.
 33. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 6
 34. சுந்தர காண்டம் இராமாயணத்தில் - ஐந்தாம் காண்டம்
 35. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுவபர் - அனுமன்
 36. "சிறிய திருவடி" என்று அழைக்கப்படுபவர் - அனுமன்
 37. தனயை என்ற சொல்லின் பொருள் - மகள்
 38. இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியது - கணையாழி
 39. சீதாபிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் - ஒருதிங்கள்
 40. வீரமாமுனிவரின் தாய்நாடு - இத்தாலி
 41. கொன்ஸ்டான் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் - அஞ்சாதவன்
 42. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகாதி
 43. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துச் தந்தது - இலத்தீன்
 44. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் - சூசைமாமுனிவர்
 45. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
 46. புரட்சிக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் - பாரதிதாசன்
 47. பாண்டியன் பரிசைக் கைப்பற்ற நினைத்தவன் - நரிக்கண்ணன்
 48. பாரதிதாசன் எழுதிய நூல்களுள் ஒன்று - குறிஞ்சித்திட்டு
 49. சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்ற பாரதிதாசனின் நூல் - பிசிராந்தையார்.
 50. கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சகன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஓட்டக்கூத்தர்.
 51. திவ்விய கவி என்ற பெயரால் அழைக்கப்படுபவர் - பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.
 52. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக் கலம்பகம்
 53. புலன் - என்னும் இலக்கிய வகை - பள்ளு
 54. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் - கலம்பகம்
 55. பிரபந்தம் என்னும் வடசொல் உணர்த்தும் பொருள் - நன்கு கட்டப்பட்டது
 56. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை - சிந்துப்பா
 57. வடமொழியில் பாரதம் பாடியவர் - வியாசர்
 58. அந்தாதிக்கு வழங்கப்படும் வேறு பெயர் - சொற்றொடர் நிலை
 59. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்
 60. "வாழ்வில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு - புதுவை அரசு
 61. பாஞ்சாலி சபதத்திலுள்ள சருக்கங்களின் எண்ணிக்கை - 5
 62. நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்று பாடியவர் - பாரதியார்
 63. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - பாரதியார்
 64. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் - பாரதிதாசன்
 65. பிரெஞ்சுக் குடியரசுத்தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர் - வாணிதாசன்
 66. கவிஞரேறு, பாவலர் மணி முதலிய பட்டங்களைப் பெற்றவர் - வாணிதாசன்
 67. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - வாணிதாசன்
 68. சுரதாவின் நூல்களுள் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசினைப் பெற்ற நூல் - தேன்மழை
 69. உவமைக்கவிஞர் - சுரதா
 70. கிறித்துவக் கம்பர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
 71. "சின்னச் சீறா" என்ற நூலை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்
 72. சுந்தரர் தேவாரம் - ஏழாந்திருமுறை
 73. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் - பெரிய வாச்சான் பிள்ளை
 74. தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் நினைவுப்பரிசினை முதலில் பெற்ற கவிஞர் - சுரதா
 75. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர் - அபதுல் ரகுமான்
 76. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவரா - சுந்தரர்
 77. இரட்சயணிய யாத்திரகம் என்ற நூலை எழுதியவர் - எச்.ஏகிருஷ்ணமூர்த்தி
 78. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - வள்ளல் சீதக்காதி
 79. உமறுப்புலவரின் மற்றொரு நூல் - முதுமொழி மாலை
 80. பாரதிதாசனார் வெளியிட்ட இதழ் - குயில்
 81. கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்பெறும் நூல் - தேம்பாவணி
 82. சிற்றிலக்கிய வகைகள் - 96
 83. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் - வான்மீகி
 84. திருக்குறளில் பொருட்பாலின் அதிகாரங்களின் எண்ணிக்கை - 70
 85. மருகி என்னும் சொல்லின் பொருள் - மருமகள்
 86. கம்பர் பெருமையைச் சுட்டும் தொடர்கள் - கவிசக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன் இவை கம்பரின் பெருமையைச் சுட்டும் தொடர்கள்.
 87. கம்பர் இயற்றிய வேறு நூல்கள்: சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம்.
 88. எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு.
 89. புறநானூற்றால் அறியப்படும் செய்திகள்: முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், படைவீரர்கள், கடையேழு வள்ளல்கள், கடைச்சங்க புலவர்கள், பலருடைய வரலாற்றுக் குறிப்புகள், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, நாகரீகம், அரசியல், போர்த்திறம், சமுதாயப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றைப் புறநானூற்றால் நன்கு அறியலாம்.
 90. அகநானூறு எத்தனை பகுதிகள்? அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. அவையாவன. 1. களிற்றியானை நிரை - 120 பாடல்கள், 2. மணிமிடைப்பவளம் - 180 பாடல்கள், நித்திலக்கோவை - 100 பாடல்கள்
 91. சிலம்பு கூறும் மூன்று உண்மைகள் : அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
 92. தேம்பாவணி பொருள் - தேம்பா + அணி எனப் பிரித்தால் வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்தால் தேன் போன்ற பாக்களை அணியாக உடையது என்றும் பொருள்படும்.
 93. உலா என்பதன் பொருள் -  உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள். தலைவன் வீதியில் உலா வர ஏழு வகை பருவப் பெண்களும் அவன் மீது காதல் கொள்வதாகப் புனைந்து பாடுவது உலாவாகும்.
 94. அந்தாதி விளக்குக? - ஓவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ, சீரோ, அடியோ அதற்கடுத்து வரும் பாடலின் முதலாய் வரும்படி அமைத்துப்பாடுவது அந்தாதி எனப்படும்.
 95. கலம்பகம் - பெயர்க்காரணம்: கலம்பகம் =  கலம் + பகம் எனப் பிரிக்கலாம். கலம் - பன்னிரண்டு பகம் - பாதி ஆறு ஆக 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவதால் கலம்பகம் எனப்பெயர் பெற்றது.
 96. முக்கூடலில் கூடும் ஆறுகள்: தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு.
 97. துன்பம் எவ்வாறு சிதறிப்போகும்? - தந்தை பெரியார் போல அளவாய், தகுதிக்கேற்ப ஒவ்வொரு நாளும் செலவு செய்து வாழ்ந்தால், பாறாங்கல் மீது விழுந்த மழைநீர் உடனே சிதறிவிடுவது போலத் துன்பம் பறந்தோடும்.
 98. தேவார மூவர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
 99. சுந்தரர் தம்பிரான் தோழர் என அழைக்கப்படக் காரணம் - சிவன், சுந்தரரைத் தம் தோழராய்க் கொண்டமையால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கபபட்டார்.
 100. எச்.ஏ கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய வேறு நூல்கள் - இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள், இரட்சணிய சமயநிர்ணயம்,போற்றித் திருவகவல் ஆகியன.
 101. பாவேந்தர் நூல்களுள் நான்கின் பெயர்: குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, பிசிராந்தையார் நாடகம்.
 102. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்: செந்ந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், சதுரகராதி, பரமார்த்த குரு கதை, வேதியர் ஒழுக்கம், கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம்.

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி

3.01369863014
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top